குழந்தைகள் தின விழா

இல்லம் தேடி கல்வி மையங்கள் சார்பில் குழந்தைகள் தினவிழா ஊரணிபட்டி நடுநிலைப்பள்ளியில் நடந்தது. மாணவ-மாணவிகளுக்கு மாறுவேடப்போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப் போட்டிகளை நடத்தினர்.
குழந்தைகள் தின விழா
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் செயல்பட்டு வரும் இல்லம் தேடி கல்வி மையங்கள் சார்பில் குழந்தைகள் தினவிழா ஊரணிபட்டி நடுநிலைப்பள்ளியில் நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள 6 குறுவளமையங்களின் கீழ் உள்ள தன்னார்வலர்கள் தங்களது மையங்களுக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு மாறுவேடப்போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப் போட்டிகளை நடத்தினர். முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு ஓட்டு மொத்த அளவிலான போட்டிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்ற ஊரணிபட்டி நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் தலைமையில் நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் முன்னிலை வகித்தார். தன்னார்வலர் முத்துலட்சுமி வரவேற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் கோப்பையும், போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பங்கேற்பாளருக்கான சான்றிதழையும் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக்கோட்ட கண்காணிப்பாளர் சபரிநாதன் வழங்கி பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தன்னார்வர்கள் சூர்யா, சிவரஞ்சனி, மகாலட்சுமி, சிவகாமி, கஸ்தூரி ஆகியோர் செய்திருந்தனர். தன்னார்வலர் சாந்தினி நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com