search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தைகள் தினவிழா விழிப்புணர்வு பேரணி
    X

    நாமக்கல்லில் சமூக பாதுகாப்புத்துறை சார்பில் குழந்தை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் உமா கொடி அசைத்து தொடங்கி வைத்த காட்சி.

    குழந்தைகள் தினவிழா விழிப்புணர்வு பேரணி

    • நாமக்கல்லில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சமுக பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • நாமக்கல் மோகனூர் சாலை அரசினர் தெற்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு நடைபெற்ற பேரணிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சமுக பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாமக்கல் மோகனூர் சாலை அரசினர் தெற்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு நடைபெற்ற பேரணிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார்.

    கலெக்டர் உமா பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி மோகனூர் சாலை, மணிக்கூண்டு, திருச்சி சாலை, ஸ்டேட் பேங்க், டாக்டர் சங்கரன்சாலை வழியாக மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது.

    இதில் சமூக நலத்துறை பணியாளர்கள், செவி லியர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணியாளர்கள், மகளிர் திட்ட பணியாளர்கள், காவல்துறை, பள்ளிக் கல்வித்துறையினர் பங்கேற்று குழந்தை சுயபாதுகாப்பு அளிப்பது, குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது, சமூக ஊடகங்களில் குழந்தைகள் குறித்த ஆபாச பதிவை தவிர்க்க வலியுறுத்தி கோஷமிட்டவாறு விழிப்புணர்வு பதாகை ககளை ஏந்தி சென்றனர்.

    இப்பேரணியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஸ்குமார், தொழிலாளர் உதவி இணை ஆணையர் திருநந்தன், ரெட்கிராஸ் சொசைட்டி செயலாளர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×