திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி., பள்ளியில் குழந்தைகள் தின விழா

மாணவர்களை மகிழ்விக்கும் விதமாக நடனம், நாடகம்,பட்டிமன்றம் போன்ற பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பள்ளியின்தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார்.
ஏ,வி.பி. பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்ட காட்சி.
ஏ,வி.பி. பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்ட காட்சி.
Published on

திருப்பூர்:

திருப்பூர் காந்திநகர் பகுதியில் உள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர்செகண்டரி பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது.பள்ளியின் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின்தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார். பள்ளி ஆசிரியை ரஞ்சிதா வரவேற்று பேசினார்.

மாணவர்களை மகிழ்விக்கும் விதமாக நடனம், நாடகம்,பட்டிமன்றம் போன்ற பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்து மாணவர்களை மகிழ்வித்தனர்.குழந்தைகளை கொண்டாடுவோம் என்னும் தலைப்பில் பள்ளியின்முதல்வர் பிரமோதினி சிறப்புரையாற்றினார். பள்ளி மாணவர் மன்றத்தினை சேர்ந்த மாணவி கீர்த்தனா நன்றி கூறினார். இந்நிழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின்ஒருங்கிணைப்பாளர் மோகனா மற்றும் கலை நிகழ்ச்சிஒருங்கிணைப்பாளர் நித்யா ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com