search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cheranmahadevi"

    • சேரன்மகாதேவி அருகே உள்ள பூதத்தான் குடியிருப்பு கிராமத்தில் லட்சுமி நாராயணசுவாமி கோவில் உள்ளது
    • உண்டியலை உடைத்த அவர்கள் அதில் இருந்து ரூ.40 ஆயிரம் பணத்தை திருடிச்சென்றுள்ளனர்

    நெல்லை:

    சேரன்மகாதேவி அருகே உள்ள பூதத்தான் குடியிருப்பு கிராமத்தில் லட்சுமி நாராயணசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூட்டை உடைத்து நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். அங்கிருந்த உண்டியலை உடைத்த அவர்கள் அதில் இருந்து ரூ.40 ஆயிரம் பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.

    இதேபோல் நேற்று நள்ளிரவில் அதே கிராமத்தில் உள்ள சுடலைமாடசுவாமி கோவில், பிள்ளையார்கோவில் உள்ளிட்ட கோவில்களின் உண்டியல்களும் உடைக்கப்பட்டு திருட்டு நடந்துள்ளது. இதுதொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில்களில் திருடிய மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்கு உட்பட்ட மேலக்கல்லூர் துணை மின்நிலைத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • எனவே அங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி மின் விநியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்கு உட்பட்ட மேலக்கல்லூர் துணை மின்நிலைத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான மேலக்கல்லூர், சேரன்மகாதேவி,சுத்தமல்லி,சங்கன்திரடு, கொண்டாநகரம்,நடுக்கல்லூர், பழவூர்,கருங்காடு,திருப்பணிகரிசல்குளம்,துலக்கர்குளம்,வெள்ளாங்குளம் ,உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் சேரன்மகாதேவி பஸ் நிலையம் அருகே கலைஞர் திடலில் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.
    • பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டு தலின்படி நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் சேரன்மகாதேவி பஸ் நிலையம் அருகே கலைஞர் திடலில் எனது (ஆவுடையப்பன்) தலைமையில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் ஞானதிரவியம் எம்.பி., மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல் முன்னிலை வகிக்கின்றனர். தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் வரவேற்கிறார். கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துபாண்டி என்ற பிரபு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

    கூட்டத்தில் நிர்வாகிகள், மாவட்ட பொருளாளர் ஜார்ஜ்கோசல், மாவட்ட துணை செயலாளர்கள் நம்பி மைக்கேல், தமயந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் சித்திக், மாநில அணி நிர்வாகிகள் ஆவின்ஆறுமுகம், ராஜம்ஜான், எரிக்ஜூடு, கணேஷ்குமார் ஆதித்தன், ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

    மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், கண்ணன், கணேசன், அபுபக்கர், சாந்திசுபாஷ், எட்வின் வளன்அரசு, பரமசிவ அய்யப்பன், கனகராஜ், நகர செயலாளர்கள் கணேசன், சுப்பிரமனியன் என்ற மணிசூரியன், ஒன்றிய பரணி சேகர், முத்துக்கிருஷ்ணன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், கே.எஸ். தங்க பாண்டியன், செல்வ கருணாநிதி, ராஜன், சுடலைக்கண்ணு, ஆரோக்கியஎட்வின், முருகன், கணேசன், சேவியர்ராஜா, ஜோசப்பெல்சி மற்றும் பலர் கலந்து கொள்கன்றனர்.

    எனவே பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • பத்தமடையை அடுத்த மேல உப்பூரணி கோவில் தெருவை சேர்ந்தவர் வேதமணி, கட்டிட தொழிலாளி.
    • வயலுக்கு தெளிப்பதற்காக வீட்டில் வாங்கி வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை வேதமணி குடித்துவிட்டு மயங்கி கிடந்தார்

    நெல்லை:

    சேரன்மகாதேவி அருகே உள்ள பத்தமடையை அடுத்த மேல உப்பூரணி கோவில் தெருவை சேர்ந்தவர் வேதமணி(வயது 30). கட்டிட தொழிலாளி.

    இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். நேற்று, வயலுக்கு தெளிப்பதற்காக வீட்டில் வாங்கி வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை வேதமணி குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். உடனே அவரது உறவினர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர். இதுதொடர்பாக பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேலச்செவல் பேரூராட்சி பகுதியில் கண்ணன் என்ற விவசாயி சமீபத்தில் நெல் அறுவடை செய்துள்ளார்.
    • கிராமத்தின் நிர்வாக அதிகாரி அடங்கல் ஆவணத்தை விரைவாக கொடுக்காததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்ததாக புகார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி வட்டம் மேலச்செவல் பேரூராட்சி பகுதியில் தேசமாணிக்கம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்ற விவசாயி சமீபத்தில் நெல் அறுவடை செய்துள்ளார்.

    அடங்கல் ஆவணம் தாமதம்

    அதனை அப்பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக அவருக்கு அடங்கல் ஆவணம் தேவைப்பட்டுள்ளது. ஆனால் அந்த கிராமத்தின் நிர்வாக அதிகாரி அடங்கல் ஆவணத்தை விரைவாக கொடுக்காமல் காலம் தாழ்த்திவிட்டதாகவும், அதனால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து விட்டதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அந்த விவசாயி கூறுகையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பே அடங்கல் வாங்குவதற்காக எங்களது வயல் பட்டாவை கொடுத்து கிராம நிர்வாக அதிகாரியிடம் மனு அளித்தேன். ஆனால் அவர் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்தார். அதன்பின்னர் வருவாய் ஆய்வாளரிடம் நான் அளித்த புகாரை அறிந்து, தற்போது அடங்கல் ஆவணம் தயார் செய்து கொடுத்துள்ளார்.

    நெல் மூட்டைகள்

    தற்போது நெல் கொள்முதல் நிலையத்தில் அடங்கல் ஆவணம் சமர்ப்பித்துள்ளேன். அவர்களது நடைமுறைகள் முடிக்க 2 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் எனது நெல் மூட்டைகள் முளைத்துவிட்டன. நேற்று பாதிமூட்டைகளை மட்டுமே நெல்லை கொள்முதல் செய்தனர். அதற்குள் மழை வந்து மீதமுள்ள மூட்டைகளை நனைத்துவிட்டது.

    இதனால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தாமதமின்றி நெல்லை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு பணம் வழங்க வேண்டும் என்று கூறிவரும் நிலையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் காலதாமதம் ஏற்பட்டு நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்துவிட்டதாக அவர் வேதனை தெரிவித்தார்.

    • பிச்சையா கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
    • ரெயில்வே கேட் அருகே பிச்சையா இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    நெல்லை:

    சேரன்மகாதேவி சுண்ணாம்பு கால் தெருவை சேர்ந்தவர் பிச்சையா (வயது 67). இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டை விட்டு வெளியே சென்ற பிச்சையா அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

    உடனே அவரது மனைவி சண்முக வடிவு சேரன்மகாதேவி போலீசில் புகார் அளித்தார்.

    இதற்கிடையே அப்பகுதியில் உள்ள ரெயில்வே கேட் அருகே பிச்சையா இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் அங்கே விரைந்து சென்று பிச்சையா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எவ்வாறு இறந்தார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • சேரன்மகாதேவியில் பெண் கொலை தொடர்பாக அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.
    • கொலை தொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாலை.

    இவரது மனைவி மாரியம்மாள் (வயது56). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த போது வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    இதில் மாரியம்மாளை 6 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கொலையில் தொடர்புடைய சேரன்மகாதேவியை சேர்ந்த நடராஜன் மகன்கள் கணேசன் (38), ஆறுமுகம் (40), சுரேஷ் (36), கணபதி மகன் குட்டிபாண்டியன் (50), பண்டாரம் மகன் நெல்லையப்பன் (36) உள்பட 6 பேரை கைது செய்தனர்.

    அவர்கள் வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    சேரன்மகாதேவி ரெயில்வேகேட் பகுதியில் சம்பவத்தன்று நாங்கள் நண்பர்களுடன் மது குடித்து கொண்டிருந்தோம். அவ்வழியாக ராசுக்குட்டி (28) தனது நண்பர்களுடன் சென்று கொண்டிந்தார்.

    அப்போது எங்களுக்கும், ராசுகுட்டி தரப்பினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இருதரப்பினரும் கலைந்து சென்றோம்.

    அதன்பின்னர் நாங்கள் ராசுக்குட்டி வீட்டுக்கு சென்றோம். அங்கு ராசுக்குட்டியின் தாய் மற்றும் பெரியம்மா மாரியம்மாள் ஆகியோர் இருந்தனர்.

    அவர்களிடம் ராசுக்குட்டி எங்கே என கேட்டோம். அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாங்கள் ராசுக்குட்டியின் தாயை வெட்ட முயன்றோம். அதனை அவரது சகோதரி மாரியம்மாள் தடுத்தார்.

    இதனால் அவரை சரமாரியாக வெட்டினோம். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளனர்.

    • சேரன்மகாதேவியை சேர்ந்த மாரியம்மாளை நேற்று இரவு திடீரென ஒருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றார்.
    • கொலையாளிகளை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    சேரன்மகாதேவி:

    நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாலை. இவரது மனைவி மாரியம்மாள்(வயது 56). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    நேற்று இரவு மாரியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாரியம்மாளை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றார்.

    இதில் கை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த மாரியம்மாள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    தகவல் அறிந்த சேரன்மகாதேவி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுபாஷ் ராஜன், கோகிலா தலைமை யிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் மாரியம்மாள் உடலை மீட்டு சேரன்மகாதேவி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாரியம்மாளை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    மாரியம்மாளின் உறவினர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு தொழிலாளிக்கும் சமீபத்தில் தகராறு ஏற்பட்டதாகவும், அந்த முன்விரோதத்தில் மாரியம்மாளின் உறவினர்களை பழி தீர்க்க வந்த இடத்தில் அவர்கள் இல்லாததால் மாரியம்மாளை அந்த தொழிலாளி வெட்டிக்கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை தேடி வருகின்றனர்.

    • கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் ( வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • சேரன்மகாதேவி துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் சில இடங்களில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    கல்லிடைக்குறிச்சி மின் விநியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் ( வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கரிசல்பட்டி, சேரன்மாகாதேவி துணை மின்நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    அதன்படி கரிசல்பட்டி துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் கரிசல்பட்டி, பிள்ளைகுளம், காணியாளர்குடியிருப்பு,பட்டன்காடு, இடையன்குளம், கங்கணாங்குளம், பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லூர், காடுவெட்டி ஆகிய பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    அதேபோல் சேரன்மகாதேவி துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் சேரன்மகாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், கரிசூழ்ந்த மங்கலம், கேசவசமுத்திரம் பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேரன்மகாதேவி மேற்கு ஒன்றிய பா.ஜ.க. செயற்குழு கூட்டம் கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் வீரவநல்லூர் உதயமார்த்தாண்டபுரம் அரசு பொது கழிப்பறையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கைவிடுக்கபப்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    சேரன்மகாதேவி மேற்கு ஒன்றிய பா.ஜ.க. செயற்குழு கூட்டம் கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் தயாசங்கர், மேற்கு ஒன்றிய தலைவர் ராஜேந்திர பிரசாத் தலைமை தாங்கினர். மாவட்ட துணைத் தலைவர் ராம்ராஜ் பாண்டியன், அரசாங்க பிரிவு மாவட்ட தலைவர் சேகர் பாண்டியன், மாவட்ட மகளிர் அணி தலைவி மீனாட்சி, மகளிரணி துணைத்தலைவர் சந்தானலட்சுமி, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் வீரவநல்லூர் உதயமார்த்தாண்டபுரம் அரசு பொது கழிப்பறையை சீரமைக்க வேண்டும், நெல்லை- பாபநாசம் சாலைப்பணியை துரிதமாக முடித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்க நெடுஞ்சாலைதுறையில் மனு கொடுக்க வேண்டும்.

    மாவட்ட தலைவர் தலைமையில் சொத்துவரி அதிகரிப்பு, மின்கட்டணம் உயர்வு ஆகியவற்றை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திடவும், வீரவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பழைய கட்டிடத்தை மகளிருக்கு தனியாக பள்ளி செயல்படுத்தி அதிகாரிகளை கேட்டு கொள்வது,

    பூமிநாதசாமி கோவில் ரதவீதியை தேர் ஓடும் அளவுக்கும் அகலபடுத்திடவும், கல்லிடைக்குறிச்சி குலசேகரபெருமாள் கோவிலை புணரமைத்து, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை மீட்டு, கும்பாபிஷேகம் நடத்திட அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நகரச்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற உள்ளாட்சி அமைப்புகளிடம் மனு செய்து ஆவண செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் கல்லிடைக்குறிச்சி நகர தலைவர் மாரியப்பன், துணைத்தலைவர்கள் ஆதிநாராயணன், முத்துராமன், வீரவநல்லூர் நகர தலைவர் சங்கரலிங்கம், விவசாய அணி ஒன்றிய தலைவர் பண்டாரம், ஒன்றிய துைணத்தலைவர் ராஜகோபாலன், சபரிநாத், அரசாங்க பிரிவு மாவட்ட செயலாளர் முருகேஷ்வரன், அரசாங்க பிரிவு அம்பை நகர தலைவர் ராமர்பாண்டியன், சேரை ஒன்றிய துணைத்தலைவர் மணிகண்டன், ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய தலைவர் மகாராஜன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணை தலைவர் உதயகுமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஒன்றிய பொதுச்செயலாளர்கள் அருணாசலம், சிவபாலன் ஆகியோர் செய்திருந்தனர்.

    பா.ஜ.க. சார்பில் ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்மு வெற்றி பெற்றதால் மாவட்ட தலைவர் தலைமையில் செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வண்ணம் சிறிது தூரம் ஊர்வலம் சென்றனர்.

    • மின்தடை குறித்து கல்லிடைக்குறிச்சி மின்விநியோக பிரிவு செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் அறிககை வெளியிட்டு உள்ளார்.
    • மின்தடை காரணமாக 21-ந் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    நெல்லை:

    கல்லிடைக்குறிச்சி மின்விநியோக பிரிவு செயற்ெபாறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ( வியாழக்கிழமை) கரிசல் பட்டி, சேரன்மகாதேவி, மேலக்கல்லூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் கரிசல்பட்டி துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் கரிசல்பட்டி, பிள்ளைகுளம், காணியாளர்குடியிருப்பு, பட்டன்காடு, இடை யன்குளம், கங்க ணாங்குளம், பத்தமடை, கோபால சமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிர மணியபுரம், சடைய மான்குளம், வெங்கட் ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லூர், காடுவெட்டி பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    மேலும் சேரன்மகாதேவி துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் சேரன்மகாதேவி, பத்தமடை, கோபால சமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம்,கரிசூழ்ந்தமங்கலம், கேசவசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை இருக்கும்.

    இதேபோல் மேலக்கல்லூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான மேலக்கல் லூர், சேரன்மகாதேவி, சுத்தமல்லி, சங்கன்திரடு, கொண்டாநகரம், நடுகல்லூர், பழவூர், கருங்காடு, திருப்பணி கரிசல்குளம், துலுக்கர்குளம், வெள்ளாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தி.மு.க. அலுவலக திறப்பு விழாவிற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி என்ற பிரபு தலைமை தாங்கினார்.
    • விழாவில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், ஞானதிரவியம் எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சியில் சேரன்மகாதேவி மேற்கு ஒன்றிய தி.மு.க. கட்சி அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி என்ற பிரபு தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட பிரதிநிதி சீவலமுத்து குமார் தொகுத்து வழங்கினார். யூனியன் சேர்மன்கள் அம்பை பரணிசேகர், சேரன்மகாதேவி பூங்கோதை குமார், நகர்மன்ற தலைவர்கள் அம்பை பிரபாகரன், வி.கே.புரம் செல்வ சுரேஷ் பெருமாள், நகர செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், ஞானதிரவியம் எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தனர்.

    ×