search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "case"

    தடைசெய்யப்பட்ட புகையிலை விற்ற 2 பேர் மீது வழக்கு

    வேலாயுதம் பாளையம், 

    கரூர் மாவட்டம் புகழூர் 4 ரோடு பகுதியில் உள்ள ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று கடையில் ஆய்வு செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா,குட்கா போன்றவை விற்பனை செய்து வருவது தெரியவந்தது . அவற்றை பறிமுதல் செய்து விற்பனை செய்த புகழூர் 4 ரோடு பகுதியை சேர்ந்த சரஸ்வதி (70) என்பவர் மீதும், அதேபோல் தளவா பாளையம் பகுதியில் விற்பனை செய்த கார்த்திக் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு
    • அப்போது மனைவியை பார்த்து ஆத்திரமடைந்து தாக்கியதாக கூறப்படுகிறது

    திருச்சி

    புதுக்கோட்டை விராலிமலை குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 42). இவரது மனைவி சுசீலா (34). இந்த தம்பதியருக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 7 ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து மகன்களுடன் சுசீலா அன்பு நகர் பகுதியில் தனியாக வசித்து வருகிறார். மேலும் விவாகரத்து கேட்டு திருச்சி குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

    இந்த வழக்கு தொடர்பாக கணவன் மனைவி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தனர். அப்போது மனைவியை பார்த்து ஆத்திரமடைந்த சரவணன் அவரை கெட்ட வார்த்தையால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உத்தப்புரத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு முத்தாலம்மன் கோவிலில் திருவிழா நடத்த அனுமதி அளிக்க கோரி வழக்கு டி.எஸ்.பி. பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
    • விசாரணையை நவம்பர் 2-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் உத்தப் புரத்தை சேர்ந்த முருகேசன், மதுரை ஐகோர்ட்டில் தாக் கல் செய்த மனுவில் கூறியி ருந்ததாவது:-

    மதுரை மாவட்டம் பேரை யூர் அருகே உள்ள உத்தப்பு ரம் முத்தாலம்மன் கோவி லில் வருகிற 24 முதல் 26-ந்தேதி வரை திருவிழா நடத்த திட்டமிட்டு, விழாக் குழு தலைமையில் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் இரு சமூகத்திற்கு இடையே ஏற் பட்ட பிரச்சினை காரண மாக இந்தகோவிலில் திரு விழா நடைபெறவில்லை.

    மேலும் மற்றொரு சமூ கத்தை சேர்ந்த நபர்கள் சிலர், கிராமத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டு, கோவிலில் திருவிழா நடக்க விடாமல் செய்தனர். இதனை தொடர்ந்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு சம ரசம் செய்யப்பட்டது.

    சுமார் 7 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு அக் டோபர் 24 முதல் 26-ந்தேதி வரை முத்தாலம்மன் கோவி லில் திருவிழா நடந்த அனு மதி கோரி உயர் அதிகாரிக ளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, உத்தப்பு ரம் முத்தாலம்மன் கோவி லில் திருவிழா நடந்த அனு மதி அளித்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறி யிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசா ரணைக்கு வந்தது. அப் போது வழக்கு குறித்து உசிலம்பட்டி டி.எஸ்.பி. பதி லளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 2-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்கடலூர் வாலிபர் உள்பட 5 பேர் மீது வழக்கு

    அகரம்சீகூர்,  

    கடலூர் மாவட்டம் மேலக்கல்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 25). இவர் கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள கழுதூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திகா( வயது25) என்பவரை காதலித்து திண்டுக்கல்லில் பதிவு திருமணம் செய்து கொண்டார்.

    இதனை அறிந்த விக்னேஷின் பெற்றோர் அவரை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சொந்த ஊருக்கு திரும்பிய விக்னேஷுக்கு அவரது பெற்றோர் பெரம்பலூரை சேர்ந்த இளம்பெண்ணை வாலி கண்டபுரத்தில் உள்ள சிவன் கோவிலில் 2-வதாக திருமணம் செய்து கொடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கார்த்திகா மங்களமேடு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விக்னேஷ் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று கிட்டுச்சாமி உறவினர்கள் 8 பேர் காம்பவுண்ட் சுவரை இடித்து அப்புறப்படுத்தினர்.
    • குன்னத்தூர் போலீசார் கிட்டு சாமி உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குன்னத்தூர்:

    குன்னத்தூர் அருகே வலையபாளையத்தில் வசிப்பவர் வடிவேலு . இவருக்கும் அருகில் வசிக்கும் கிட்டுச்சாமி என்பவருக்கும் காம்பவுண்ட் சுவர் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று கிட்டுச்சாமி உறவினர்கள் 8 பேர் காம்பவுண்ட் சுவரை இடித்து அப்புறப்படுத்தினர். இது குறித்த புகாரின் பேரில் குன்னத்தூர் போலீசார் கிட்டு சாமி உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • கரூர் தெற்கு காந்தி கிராமம்பெண்ணை ஏமாற்றிய போலீஸ்கார
    • வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,  

    கரூர் தெற்கு காந்தி கிராமம் பகுதியை சேர்ந்தவர் பாரத் (வயது 36) குளித்தலையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இவர் கரூர் திருமாநிலையூரை சேர்ந்த பெண் ஒருவரை, திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த 2012-ம் ஆண்டு ரூ. 3.40 லட்சம், 16 பவுன் தங்க நகையை பாரத் பெற்றுள்ளார். மேலும், இருவரும் ஒன்றாக இருந்த போது எடுத்த வீடியோவை, சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக, அந்த பெண்ணை பாரத் மிரட்டியுள்ளார்.

    இதுகுறித்து, பெண் கொடுத்த புகாரின் பேரில் பசுபதிபாளையம் போலீசார் பாரத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோகனூர் காவிரி ஆற்றுப்பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
    • 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றுப்பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக மோகனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் துர்கைசாமி மற்றும் போலீசார் காவிரி ஆறு பகுதிக்கு சென்றனர்.

    அப்போது போலீசாரை பார்த்தவுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் மோகனூர் பகுதியை சேர்ந்த தமிழ்வாணன் (48), மணிமாறன் (46), ஜெயபால் (38), விவேகானந்தன் (34), சிவக்குமார் (43), கார்த்திக் பார்த்தீபன் (32), வினோத் (23) ஆகிய 8 பேரை போலீசார் பிடித்தனர். மேலும் ரூ.17 ஆயிரம் ரொக்கம், 4 மோட்டார் சைக்கிள்கள், 8 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பிடிப்பட்ட 8 பேர் மற்றும் தப்பியோடிய கிஷோர், தேவராஜ், அரவிந்த், சேகர், ராகுல் ஆகிய 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மோகனூர் காவிரி ஆற்றுப்பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக மோகனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

    • கறம்பக்குடியில் 26-வது நாளாக தொடரும் போராட்டம் பா.ஐ.க.வினர் மீது வழக்கு
    • போதிய டாக்டர்கள் நியமித்து, 24 மணி நேர சிகிச்சை பிரிவு ஏற்படுத்திட வலியுறுத்தியும்

     கறம்பக்குடி 

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போதிய டாக்டர்கள் நியமித்து, 24 மணி நேர சிகிச்சை பிரிவு ஏற்படுத்திட வலியுறுத்தியும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் கறம்பக்குடி சீனி கடை முக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கறம்பக்குடி வடக்கு ஒன்றிய தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட துணைதலைவர் ஜீவானந்தம் தெற்கு ஒன்றிய தலைவர் பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். தேசிய தென்னை வாரிய உறுப்பினர் பண்ண வயல் இளங்கோவன் மாவட்ட தலைவர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். மேலும் மாநில சுற்றுச்சூழல் பிரிவு செயலாளர் அருண், மாவட்ட பொது செயலாளர் ஸ்ரீ குருராம், மாவட்டத் துணைத் தலைவர்கள் தியாகராஜன், செல்லத்துரை, கந்தர்வகோட்டை ஒன்றிய தலைவர் தவமணி உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் உரிய அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பாஜகவினர் மீது கறம்பக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • வேலாயுதம்பாளையத்தில் குட்கா விற்பனை செய்த மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது
    • பான் மசாலா, குட்கா, பான் பராக் ,ஹான்ஸ் மற்றும் பல்வேறு வகையான புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம்- நொய்யல் செல்லும் சாலையில் உள்ள ஆலமரத்து மேடு பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஒரு டீக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, பான் பராக் ,ஹான்ஸ் மற்றும் பல்வேறு வகையான புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட டீக்கடைக்கு சென்று ஆய்வு செய்தபோது அங்கு பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது .அதன் அடிப்படையில் அவற்றை பறிமுதல் செய்து விற்பனை செய்த வேலாயுதம்பாளையம் வள்ளுவர் நகர் பகுதியில் சேர்ந்த ராஜூ (51) என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதேபோல் புகளூர் நான்கு ரோடு பகுதியில் மளிகை கடையில் பான் மசாலா, குட்கா விற்பனை செய்த புகழூர் நான்கு ரோடு பகுதியை சேர்ந்த இளங்கோவன் (67) ,அதே பகுதியில் உள்ள மளிகை கடையில் பான் மசாலா, குட்கா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த ராமசாமி (75) ஆகியோர் கடைகளில் விற்பனை செய்து வந்த பான் மசாலா, குட்காவை பறிமுதல் செய்து இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்கு சாலை தடை செய்யப்பட்ட புகையிலை விற்றவர் மீது வழக்கு
    • கோபால் (வயது 48) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

      வேலாயு தம்பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்கு சாலை பகுதியில் உள்ள ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய ப்படு வதாக வேலாயுத ம்பாளை யம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் ரமேஷ் தலைமையி லான போலீசார் சம்பந்த ப்பட்ட கடைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது தமிழக அரசு தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அவற்றை பறிமுதல் செய்த போலீசார் விற்பனை செய்த நொய்யல் குறுக்குச்சாலை பகுதியை சேர்ந்த கோபால் (வயது 48) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வாதி மற்றும் பிரதிவாதிகளை அழைத்து வழக்கினை விரைவாக முடிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டனர்.
    • பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளார்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் காவல் நிலையத்தில் நீண்ட காலமாக தேங்கி இருக்கக்கூடிய வழக்குகளை எல்லாம் தீர்வு காணும் விதமாக வலங்கைமானில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெட்டி ஷன் மேளா நிகழ்வு நடைபெற்றது. இதில் நன்னிலம் டி.எஸ்.பி. தமிழ்மாறன், வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ரங்கராஜன், சப் இன்ஸ்பெக்டர் வில்வநாதன், காமராஜ், மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு, தேங்கி நிற்கும் மனுக்களை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட வாதி மற்றும் பிரதிவாதிகளை அழைத்து வழக்கினை விரைவாக முடிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளார்.

    • கட்சிக்கொடி வைப்பதில் பிரச்சினை செய்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் முத்துராம லிங்கம் நகரை சேர்ந்தவர் ராமலிங்கம், கட்டிட தொழி லாளி. இவர் 4 வருடங்க ளுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளரின் இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருடன் அவருக்கு முன் விரோதம் இருந்தது. இந்த நிலையில் அந்த பகுதியில் நூலக கட்டிட திறப்பு விழா நடந்தது. அப்போது வீட்டு முன்பு வைத்த கட்சிக்கொடியை அகற்றுமாறு அன்புசெல்வம் கூறியுள்ளார். இதையடுத்து ராஜா, டேனியல், மொட்டையசாமி ஆகியோர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதே விவகாரத்தில் ராஜாபாண்டி என்பவர் கொடுத்த புகாரில் கட்சி விழா நடைபெற்ற போது அன்புசெல்வம் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து விலகி நிற்குமாறு கூறி அங்கிருந்த பெண்கள் மற்றும் கட்சியினரை கத்தியை காட்டி மிரட்டியதாக கூறியுள்ளார். இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×