search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Compound wall"

  • சம்பவத்தன்று கிட்டுச்சாமி உறவினர்கள் 8 பேர் காம்பவுண்ட் சுவரை இடித்து அப்புறப்படுத்தினர்.
  • குன்னத்தூர் போலீசார் கிட்டு சாமி உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  குன்னத்தூர்:

  குன்னத்தூர் அருகே வலையபாளையத்தில் வசிப்பவர் வடிவேலு . இவருக்கும் அருகில் வசிக்கும் கிட்டுச்சாமி என்பவருக்கும் காம்பவுண்ட் சுவர் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று கிட்டுச்சாமி உறவினர்கள் 8 பேர் காம்பவுண்ட் சுவரை இடித்து அப்புறப்படுத்தினர். இது குறித்த புகாரின் பேரில் குன்னத்தூர் போலீசார் கிட்டு சாமி உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

  • பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுற்றுச் சுவரை அகற்றக் வேண்டும்.
  • பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால், கவுன்சிலர்களுடன் சேர்ந்து கோரிக்கை மனு வழங்கினார்.

  தென்காசி:

  ஆலங்குளம் பேரூராட்சி 10-வது வார்டு பகுதியில் பொதுமக்கள் செல்லும் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுற்றுச் சுவரை அகற்றக் வேண்டும். பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த உயர் கோபுர மின் விளக்கை மீண்டும் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி தென்காசி மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால், தெற்கு மாவட்ட முன்னாள் தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் கவுன்சிலர்கள் சுந்தர், ராஜதுரை ஆகியோருடன் சேர்ந்து கோரிக்கை மனு வழங்கினார்.

  அப்போது தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, சேர்வைக்காரன்பட்டி ஊராட்சிமன்ற தலைவரும், பொதுக்குழு உறுப்பினருமான ரவிச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் சங்கர், ஊராட்சி தலைவர் ராம்குமார், முகமது யாகூப் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் அஜய், இளைஞர் அணி அரவிந்த், பூதத்தான் அருணா பாண்டியன், குணா, ராஜபாண்டியன், நவீன் அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் மேசியா ஜெய் சிங் உள்பட பலர் உடனிருந்தனர்.

  • ஏராளமான மாணவர்கள் ஆர்வத்தோடு சேர்ந்து படித்து வருகின்றனர்.
  • போதை ஆசாமிகள் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.

  உடுமலை :

  தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உடுமலை அருகே எலையமுத்தூர் சாலையில் செயல்பட்டு வருகிறது.

  இங்கு மின்சார பணியாளர், பொருத்துநர், கம்மியார் மோட்டார் வாகனம், கம்பியாள், பற்ற வைப்பவர் உள்ளிட்ட பிரிவுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் நடப்பாண்டில் புதிதாக இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் - டிஜிட்டல் மேணுபேக்ச்சரிங் டெக்னீசியன், மேணுபேக்ச்சரிங் பிராசஸ் கண்ட்ரோல் - ஆட்டோமேஷன், அட்வான்ஸ் சி .என் .சி மெஷின் - டெக்னீசியன் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி அரசு உதவிகளுடன் பயிற்சியின்போது தொழில் நிறுவனங்களில் உதவித்தொகையுடன் பயிற்சி, பயிற்சி முடித்தவுடன் மத்திய மாநில அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு, மாதாந்திர உதவித் தொகையும் வழங்கப்படுவதால் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்தோடு சேர்ந்து படித்து வருகின்றனர். ஆனால் இந்தத் தொழில் பயிற்சி நிலையத்தை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் கட்டப்படவில்லை. இதனால் போதை ஆசாமிகள் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குடிபோதையில் பாட்டில்களை உடைத்து தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் பரவலாக வீசியும் வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் காம்பவுண்ட் சுவர் இல்லாத காரணத்தினால் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. எனவே உடுமலை எலையமுத்தூர் சாலையில் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

  • ஜெயங்கொண்டம் அருகே மாளிகை மேடு மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியில் அரண்மனை காலத்து மதில் சுவர் கண்டுபிடிக்கபட்டது
  • தமிழ்நாட்டில் 202-21 ஆம் ஆண்டிற்கான தொல்லியல் துறை மூலம் அகழாய்வு பணிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

  ஜெயங்கொண்டம்,

  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மாளிகை மேட்டில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மீண்டும் வாய்க்கால் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் 202-21 ஆம் ஆண்டிற்கான தொல்லியல் துறை மூலம் அகழாய்வு பணிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் கீழடி, ஆதிச்சநல்லூர் போன்று கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் அகழாய்வு பணிகள் நிதி ஒதுக்கப்பட்டு முதற்கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது.

  அந்த வகையில், கங்கைகொண்ட சோழபுரம் அருகே உட்கோட்டை கிராமத்தில் சோழ பேரரசனால் முதலாம் ராஜேந்திர சோழன் மற்றும் அவருக்குப் பின்னால் ஆண்ட சோழ மன்னர்களின் அரண்மனை இருந்ததாக கூறப்படும் மாளிகை மேடு பகுதியில் கடந்த 2021 மார்ச் மாதம் முதற்கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கின.இந்த பணியின் போது பழங்கால கூரை ஓடு, பானை, சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தினால் ஆன ஓடுகள், இரும்பிலான ஆணிகள், சீனக் கலை நயமிக்க மணிகள் போன்ற பொருள்கள் மற்றும் சிறிய கட்டிடங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன.

  அவை தொல்லியல் துறையினரால் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பாகத்தின் சுற்றுச்சுவரும், பின்னர் அரண்மனையின் தொடர்ச்சியாக வடிகாலமைப்பு போன்ற மதில் சுவர் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 8 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த பணியில் நாள் ஒன்றுக்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். முதற்கட்ட பணியில் 30-க்கு 20 என்ற சதுர மீட்டர் அளவில் இந்த அகழாயவு பணி தொடங்கி கடந்த ஆண்டு 2021 செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது.

  மூன்றாம் கட்ட அகழாய்வு பணியை உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் கடந்த 6-ந்தேதி துவங்கி வைத்தார். இந்த பணி செப்டம்பர் மாதம் இறுதி வரை நடைபெறவுள்ளது. மூன்றாம் கட்ட அகழாய்வு பணிக்கு ரூ.30 லட்சம் நிதி தமிழக அரசால் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.இந்நிலையில் நேற்று மீண்டும் வாய்க்கால் போன்ற மதில் சுவர் அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்காக 315 சென்டிமீட்டர் நீளமுள்ள 45 சென்டிமீட்டர் அகலம் உள்ளது. மீண்டும் தோண்ட தோண்ட இதனுடைய நீளம் முழுமைாக தெரியக்கூடும் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

  • ஊரணியின் கரைகளில் கட்டப்பட்டிருந்த சுற்றுச் சுவர்கள் இடிந்து 2 வருடங்கள் ஆகிறது.
  • விபத்துக்கள் ஏற்படும் முன் சுற்றுச்சுவரை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

  தென்காசி:

  பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் அருகே உள்ள ஊரணியின் கரைகளில் கட்டப்பட்டிருந்த சுற்றுச் சுவர்கள் இடிந்து 2 வருடங்கள் ஆகிறது. இதனை அதிகாரிகள் அனைவரும் பார்த்துவிட்டு உடனே சரி செய்து தருவதாக உறுதி அளித்து சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு எந்த ஒரு தீர்வும் காணப்படவில்லை.

  ஆவுடையானூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மாணவ- மாணவிகள், பள்ளி குழந்தைகள் இதன் அருகே செல்லும் சாலை வழியாக சென்று வருகின்றனர். எனவே மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதியும் வாகனங்கள் அவ்வழியே அதிகம் செல்வதால் பெரும் விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்பாக உடனடியாக ஊரணியின் சுற்றுச்சுவரை புதிதாக கட்டிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ராம்குமார் என்பவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

  ஊட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரியின் சுற்றுச்சுவரில் திடீரென்று விரிசல் ஏற்பட்டு உள்ளதால் நோயாளிகள் பீதி அடைந்து உள்ளனர்.
  ஊட்டி:

  நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நகராட்சி அலுவலகம் அருகே அரசு தலைமை ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரி ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இருந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இங்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சை, பொது சுகாதாரம், அறுவை சிகிச்சை மற்றும் பிரசவம், கண் மருத்துவம், காது, மூக்கு தொண்டை, எலும்பு முறிவு உள்பட மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

  ஆஸ்பத்திரியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய கட்டிடங்கள் தற்போதும் பொலிவுடனும், வலிமையுடனும் காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பிரிவுக்கு செல்லும் நுழைவுவாயில் பகுதியில் உள்ள சுற்றுச்சுவரில் திடீரென விரிசல் ஏற்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக விரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரிசல் ஏற்பட்ட பகுதியை தற்காலிகமாக சிமெண்டு பூசி சரிசெய்ய நடவடிக்கை எடுத்தனர். ஆனால், மீண்டும் அந்த சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.

  இதனால் தினமும் ஆஸ்பத்திரிக்கு வந்து செல்லும் பொதுமக்கள் விரிசல் ஏற்பட்ட பகுதியை பார்த்துக்கொண்டே செல்கிறார்கள். அந்த பகுதியை விரைவில் கடந்து செல்ல வேண்டும் என்று வேகமாக செல்வதை காண முடிகிறது. எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில் அந்த சுவர் வாயை பிளந்து இருக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் ஆஸ்பத்திரிக்கு வந்து செல்லும் நோயாளிகள் பீதி அடைந்து உள்ளனர். இதுகுறித்து ஊட்டி நகர பொதுமக்கள் கூறியதாவது:-

  ஊட்டியில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆங்காங்கே சாலையோரங்களில் மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன. இந்த நிலையில் பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் ஊட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரியின் சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டு இருப்பது மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மழை தீவிரம் அடையும் முன்பு விரிசல் ஏற்பட்ட சுற்றுச்சுவரை சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசு பள்ளி சுற்றுச்சுவர்கள் மற்றும் நடைபாதை ஓரங்களில் உள்ள விரிசல் ஏற்பட்ட சுவர்களை முன் எச்சரிக்கையாக பாதுகாக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
  ×