search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயங்கொண்டம் அருகே மாளிகை மேடு மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியில் அரண்மனை காலத்து மதில் சுவர் கண்டுபிடிப்பு
    X

    ஜெயங்கொண்டம் அருகே மாளிகை மேடு மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியில் அரண்மனை காலத்து மதில் சுவர் கண்டுபிடிப்பு

    • ஜெயங்கொண்டம் அருகே மாளிகை மேடு மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியில் அரண்மனை காலத்து மதில் சுவர் கண்டுபிடிக்கபட்டது
    • தமிழ்நாட்டில் 202-21 ஆம் ஆண்டிற்கான தொல்லியல் துறை மூலம் அகழாய்வு பணிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மாளிகை மேட்டில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மீண்டும் வாய்க்கால் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் 202-21 ஆம் ஆண்டிற்கான தொல்லியல் துறை மூலம் அகழாய்வு பணிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் கீழடி, ஆதிச்சநல்லூர் போன்று கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் அகழாய்வு பணிகள் நிதி ஒதுக்கப்பட்டு முதற்கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது.

    அந்த வகையில், கங்கைகொண்ட சோழபுரம் அருகே உட்கோட்டை கிராமத்தில் சோழ பேரரசனால் முதலாம் ராஜேந்திர சோழன் மற்றும் அவருக்குப் பின்னால் ஆண்ட சோழ மன்னர்களின் அரண்மனை இருந்ததாக கூறப்படும் மாளிகை மேடு பகுதியில் கடந்த 2021 மார்ச் மாதம் முதற்கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கின.இந்த பணியின் போது பழங்கால கூரை ஓடு, பானை, சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தினால் ஆன ஓடுகள், இரும்பிலான ஆணிகள், சீனக் கலை நயமிக்க மணிகள் போன்ற பொருள்கள் மற்றும் சிறிய கட்டிடங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன.

    அவை தொல்லியல் துறையினரால் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பாகத்தின் சுற்றுச்சுவரும், பின்னர் அரண்மனையின் தொடர்ச்சியாக வடிகாலமைப்பு போன்ற மதில் சுவர் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 8 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த பணியில் நாள் ஒன்றுக்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். முதற்கட்ட பணியில் 30-க்கு 20 என்ற சதுர மீட்டர் அளவில் இந்த அகழாயவு பணி தொடங்கி கடந்த ஆண்டு 2021 செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது.

    மூன்றாம் கட்ட அகழாய்வு பணியை உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் கடந்த 6-ந்தேதி துவங்கி வைத்தார். இந்த பணி செப்டம்பர் மாதம் இறுதி வரை நடைபெறவுள்ளது. மூன்றாம் கட்ட அகழாய்வு பணிக்கு ரூ.30 லட்சம் நிதி தமிழக அரசால் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.இந்நிலையில் நேற்று மீண்டும் வாய்க்கால் போன்ற மதில் சுவர் அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்காக 315 சென்டிமீட்டர் நீளமுள்ள 45 சென்டிமீட்டர் அகலம் உள்ளது. மீண்டும் தோண்ட தோண்ட இதனுடைய நீளம் முழுமைாக தெரியக்கூடும் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×