கட்சிக்கொடி வைப்பதில் பிரச்சினை; 4 பேர் மீது வழக்கு

கட்சிக்கொடி வைப்பதில் பிரச்சினை செய்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கட்சிக்கொடி வைப்பதில் பிரச்சினை; 4 பேர் மீது வழக்கு
Published on

விருதுநகர்

விருதுநகர் முத்துராம லிங்கம் நகரை சேர்ந்தவர் ராமலிங்கம், கட்டிட தொழி லாளி. இவர் 4 வருடங்க ளுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளரின் இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருடன் அவருக்கு முன் விரோதம் இருந்தது. இந்த நிலையில் அந்த பகுதியில் நூலக கட்டிட திறப்பு விழா நடந்தது. அப்போது வீட்டு முன்பு வைத்த கட்சிக்கொடியை அகற்றுமாறு அன்புசெல்வம் கூறியுள்ளார். இதையடுத்து ராஜா, டேனியல், மொட்டையசாமி ஆகியோர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதே விவகாரத்தில் ராஜாபாண்டி என்பவர் கொடுத்த புகாரில் கட்சி விழா நடைபெற்ற போது அன்புசெல்வம் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து விலகி நிற்குமாறு கூறி அங்கிருந்த பெண்கள் மற்றும் கட்சியினரை கத்தியை காட்டி மிரட்டியதாக கூறியுள்ளார். இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com