search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "13 PEOPLE"

    • மோகனூர் காவிரி ஆற்றுப்பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
    • 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றுப்பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக மோகனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் துர்கைசாமி மற்றும் போலீசார் காவிரி ஆறு பகுதிக்கு சென்றனர்.

    அப்போது போலீசாரை பார்த்தவுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் மோகனூர் பகுதியை சேர்ந்த தமிழ்வாணன் (48), மணிமாறன் (46), ஜெயபால் (38), விவேகானந்தன் (34), சிவக்குமார் (43), கார்த்திக் பார்த்தீபன் (32), வினோத் (23) ஆகிய 8 பேரை போலீசார் பிடித்தனர். மேலும் ரூ.17 ஆயிரம் ரொக்கம், 4 மோட்டார் சைக்கிள்கள், 8 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பிடிப்பட்ட 8 பேர் மற்றும் தப்பியோடிய கிஷோர், தேவராஜ், அரவிந்த், சேகர், ராகுல் ஆகிய 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மோகனூர் காவிரி ஆற்றுப்பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக மோகனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

    • ரவுடி சஞ்சய் ராஜாவுக்கு ஆதரவாக செயல்பட்டது தெரியவந்தது.
    • போலீசார் 13 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை

    கோவையில் கட்டப்பஞ்சாயத்து விவகாரத்தில் ரவுடி சத்திய பாண்டியன் என்பவர் துப்பாக்கியால் சுட்டும் அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராஜா என்பவர் சென்னை எழும்பூர் கோர்டில் சரணடந்தார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தபோது போலீசாரை துப்பாக்கியால் சுட்டு தப்பிக்க முயன்றார். ஆனால் போலீசார் சஞ்சய் ராஜாவின் காலில் துப்பாக்கியால் சுட்டு அவரை பிடித்தனர்.

    இந்த நிலையில் ரவுடி சஞ்சய் ராஜாவுக்கு தியேட்டர் விவகாரத்தில் ஆதரவாக செயல்பட்டு கட்டப்பஞ்சாயத் தில் ஈடுபட்டவர்கள் பட்டியலை போலீசார் தயார் செய்தனர். இதில் 30 பேர் சஞ்சய் ராஜாவுக்கு ஆதரவாக செயல்பட்டது தெரியவந்தது.

    இதனையடுத்து ஆர்.எஸ்.புரம் போலீசார் கட்டப்பஞ்சாயத்து விவகாரத்தில் சஞ்சய் ராஜாவுக்கு ஆதரவாக செயல்பட்ட தெலுங்கு பாளையத்தை சேர்ந்த ஜார்ஜ் (வயது 42), ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த ஜாபர் (43), தெலுங்குபாளையத்தை சேர்ந்த செல்வகுமார் (59), கணுவாயை சேர்ந்த உதயகுமார் (58), போத்தனூரை சேர்ந்த கேசவன் (42), வடவள்ளியை சேர்ந்த சுப்ரமணியன் (60), இடையர்பாளையத்தை சேர்ந்த வாசன் (58), செல்வபுரத்தை சேர்ந்த சூரிய பிரசாத் (26), குனியமுத்தூரை சேர்ந்த சக்திவேல் (48), சபரிராஜ் (31), செல்வபுரத்தை சேர்ந்த சரவணன் (44), காந்திபார்கை சேர்ந்த பிரகாஷ் (43), சாய்பாபா காலனியை சேர்ந்த பிரதீப் குமார் (52) உடபட 13 பேரை கைது செய்தனர்.

    இவர்கள் மீது கொலை மிரட்டல், கட்டப்பஞ்சாயத்து, ஆயுத தடைச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் போலீசார் 13 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • சட்ட விரோத மது விற்பனை 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்

    கரூர்:

    கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார், மாயனூர், வாங்கல், தான்தோன்றிமலை, பசுபதிபாளையம், கரூர் டவுன், வேலாயுதம்பாளையம், தோகைமலை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தந்த பகுதிகளில் சட்ட விரோதமாக மதுபானங்களை விற் பனை செய்ததாக மருதநாயகம்(வயது 73), சுரேஷ்குமார் (42), ஜெகதீஷ்(37), செந்தில் (36), பாலகிருஷ்ணன் ( 45), மற்றொரு பாலகிருஷ்ணன் (46), அம்சவள்ளி (39), செந்தில்குமார்(46), அசோக்குமார் (42), சின்னதுரை (43), ரங்கராஜ்(55), ரத்தினவேல் (64), மற்றொரு செந் தில்குமார் (30) ஆகிய 13 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து, 119 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×