search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "case"

    கிராமிய பாடகரை தாக்கிய 4 பேர் மீது வன்கொடுமை வழக்கு

    கறம்பக்குடி,  

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையுர் ஆயிப்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது27). கிராமிய பாடகர்.

    இவர் அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் கபிலனை அழைத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    மோலுடையான்பட்டி பிரிவு சாலையில் சென்ற போது, அதிரான்விடுதியை சேர்ந்த தேவா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் பிரகாஷ் வந்த வாகனத்தை வழிமறித்து நிறுத்தினர்.

    அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் பிரகாஷையும், கபிலனையும் தாக்கியுள்ளனர்.

    இதில் காயம் அடைந்த இவர்கள் இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்ைச பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் மழையூர் போலீசார் 4 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    • வேலாயுதம்பாளையத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த விவசாயி மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது
    • காலை 8 மணிக்கு மேல் பட்டாசுகளை வைத்து நீண்ட நேரமாக வெடித்துக் கொண்டிருந்ததால் போலீசார் நடவடிக்கை

    கரூர், 

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம்போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் நொய்யல்-வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கந்தம்பாளையம் பகுதியில் உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்த நேரத்திற்கு பிறகும் காலை 8 மணிக்கு மேல் பட்டாசுகளை வைத்து நீண்ட நேரமாக வெடித்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த போலீசார் நீண்ட நேரமாக அரசு அனுமதியின்றி பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்த கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்த குணசேகரன் (59) என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • செல்வக்குமார் உசிலம்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 2-ந்தேதி சரணடைந்தார்.
    • விசாரணைக்கு பிறகு மீண்டும் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் நகர தெற்கு தி.மு.க செயலாளராக இருந்தவர் செல்வக்குமார். இவரது மனைவி சுனோதா. இவர் கம்பம் நகர்மன்ற தலைவியாக உள்ளார். செல்வக்குமார் நியோமேக்ஸ் தனியார் நிறுவனத்தில் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வந்து கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்களிடம் அதிகளவில் முதலீடுகளை பெற்றார்.

    மேலும் தனியார் பல்பொருள் அங்காடி, பேஷன்ஸ் கடை ஆகிய நிறுவனங்களையும் கம்பத்தில் நடத்தி வந்தார். இந்நிலையில் நியோமேக்ஸ் நிறுவனம் பொதுமக்களிடமிருந்து பெற்ற வைப்புத்தொகையை திருப்பித்தராமல் இழுத்தடிப்பு செய்வதாக தேனி, மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன.

    இதனிடையே செல்வக்குமார் உசிலம்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 2-ந்தேதி சரணடைந்தார். இவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நவம்பர் 8-ந்தேதி விசாரித்து வாக்குமூலம் பெற்று அதனடிப்படையில் கம்பத்தில் உள்ள அவரது வீட்டில் துணை கண்காணிப்பாளர் மணிஷா தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ரூ.5.50 லட்சம் ரொக்கம், 46.200 கிராம் தங்கம், 139.800 கிராம் வெள்ளி ஆகியவற்றை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.5.80 லட்சமாகும். விசாரணைக்கு பிறகு மீண்டும் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • 6 பேர் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த மாதம் 30 -ந் தேதி கல் குவாரி உரிமம் கோரி ஏலம் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், அரசு அலுவலர்கள், காவல்துறையினரை தாக்கியும், அரசு அலுவலகங்களில் உள்ள தளவாடப் பொருள்களை அடித்து, உடைத்து சேதப்படுத்திய தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    போலீசாரிடம் உரிய அனுமதி பெறாமல், போக்குவரத்துக்கு இடையூறாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், கட்சியின் அமைப்புச் செயலாளர் அருணாசலம், எம்ஜிஆர் அணி மாவட்டச் செயலாளர் எம்.என். ராஜாராம், முன்னாள் அமைச்சர் மோகன், நகரச் செயலாளர் ராஜபூபதி உள்பட 16 பேர் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    • சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோவில் வழக்கு
    • சிறுமி தற்போது, 3 மாத கர்ப்பமாக உள்ளார்.

    கரூர்,நவ. 9-

    க.பரமத்தி அருகே, சிறுமியை திருமணம் செய்து கொண்டு, கர்ப்பமாக்கிய வாலிபர் மீது, போக்சோ சட்டத்தின் கீழ், மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கரூர் மாவட்டம், க.பரமத்தி காருடையாம்பாளையம் பகுதியை சேர்ந்த அழகிரி என்பவரது மகன் மணிகண்டன் (வயது 23). இவர் 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த சிறுமி தற்போது, 3 மாத கர்ப்பமாக உள்ளார்.

    இதுகுறித்து, க.பரமத்தி பஞ்., யூனியன் பெண்கள் நல அலுவலர் பத்மாதேவி கொடுத்த புகார்படி, கரூர் ரூரல் மகளிர் போலீசார், மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி ஜவுளி கடையில் வாடிக்கையாளரிடம் திருடப்பட்டது.
    • தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    மதுரை

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால் பொதுமக்கள் புத்தாடைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள ஜவுளி கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனை பயன்படுத்தி சமூக விரோதிகள் திருடுவது அதிகரித்துள்ளது.

    மதுரை அனுப்பானடி டீச்சர் காலனி தியாகராஜர் நகரை சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மனைவி தேன்மொழி (33). இவர் சம்பவத்தன்று புத்தாடை வாங்க தெற்குமாசி வீதியில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு சென்றிருந்தார். அங்கு கூட்டம் அலைமோதியது. அதனை பயன்படுத்தி மர்ம நபர்கள் தேன்மொழி வைத்திருந்த பர்சை திருடி சென்றனர். அதில் ரூ.1000 ரொக்கம், 1 ஜோடி வெள்ளி கொலுசு, வெள்ளி நகைகள் இருந்தன.

    இதுகுறித்து அவர் தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 பெண்கள் தேன்மொ ழியிடம் திருடியது தெரிய வந்தது.

    தொடர் விசாரணையில் அவர்கள் ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரத்தை சேர்ந்த சுமதி (35), கோயம்புத்தூர் மதுக்கரையை சேர்ந்த லெட்சுமி (30) என தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • பாஸ்கருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வருவதுண்டு.
    • அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த திருவதிகையை சேர்ந்தவர் பாஸ்கர்(50) பெயிண்டர். இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வருவதுண்டு. இந்நிலையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் பாஸ்கர வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டார். உடனடியாக அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். ஆனால் பாஸ்கரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திருநாவலூர் அருகே விவசாய தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    • இதனை அறிந்த அவரது மனைவி ரத்தினவேலுவை கடுமையாக கண்டித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட ம் திருநாவலூர் அருகே தேவியானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 45). கூலித் தொழிலாளியான இவர், அதே ஊரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனை அவரது மனைவி மற்றும் மகன், மகள் கண்டித்த நிலையில், தான் சேமித்து வைத்திருந்த ரூ.1 லட்சத்தை அந்த பெண்ணிடம் கொடு த்துள்ளார். இதனை அறிந்த அவரது மனைவி ரத்தினவேலுவை கடுமையாக கண்டித்தார்.

    இதனால் மனமுடைந்த ரத்தினவேல், குடிபோதை யில் நிலத்திற்கு போட வை த்திருந்த கலைக்கொள்ளி மருந்தினை குடித்து தற்கொ லைக்கு முயற்சித்தார். இதில் மயங்கி கிடந்த ரத்தினவேலு வை அவரது குடும்பத்தார் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில், திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அனுமதியின்றி வைத்திருந்ததாக ரூ.20 லட்சம் பட்டாசு பறிமுதல் செய்யப்பட்டது.
    • சின்னகாமன்பட்டி கிராம நிர்வாக அதிகாரி ரவிராஜ் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் கிராமம் ஆர்.எஸ்.ஆர். நகரில் சரவணன் என்பவருக்கு சொந்தமான லாரி டிரான்ஸ்போர்ட் நிறு வனம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 526 பெட்டிகளில் பட்டாசுகள் அனுமதியின்றி வைத்திருந்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து சின்னகாமன் பட்டி கிராம நிர்வாக அதிகாரி ரவிராஜ் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் டிரான்ஸ்போர்ட் நிறுவன உரிமையாளர் சரவணன் மீது வழக்குப்பதிவு செய்து, பட்டாசு பெட்டிகளையும் பறிமுதல் செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சம்பவத்தன்று ஜெகதீசன் தனது மகன் ஜெயசீலனிடம் தகராறு தொடர்பாக கூறினார்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த ராமாபுரத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெகதீசன் என்பவருக்கும் முன்விரோத தகராறு இருந்து வந்தது.சம்பவத்தன்று ஜெகதீசன் தனது மகன் ஜெயசீலனிடம் தகராறு தொடர்பாக கூறினார். தொடர்ந்து தந்தை, மகன் என 2 பேரும் மூர்த்தியிடம் சென்று கேட்டனர்.அப்போது இவர்க ளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் மூர்த்தி, ஜெகதீசன் ஆகியோர் காயமடைந்தனர்.

    இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் ஜெகதீசன், ஜெயசீலன் ஆகியோர் மீதும், ஜெகதீசன் கொடுத்த புகாரின் பேரில் மூர்த்தி மீதும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில் ஜெகதீசனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயசீலன் போலீசாக பணிபுரிந்து வருவதும், தற்போது அவர் விடுமுறையில் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

    • புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்கு
    • குழந்தைசாமி (85) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே குறுக்கு சாலை பங்களா நகர் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, பான்பராக், ஹான்ஸ் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வேலாயுதம்பாளையம் போலீசருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பெட்டிக்கடையில் விற்பனைக்காக வைத்திருந்த பான் மசாலா, குட்கா மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து, குழந்தைசாமி (85) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரம்பக்குடியில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது
    • ரொக்க பணம் 33 ஆயிரத்து 930 மற்றும் 3604 லாட்டரி சீட்டுகளும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கரம்பக்குடி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர் இந்நிலையில் கரம்பக்குடி ஆண்டவர் ஜவுளிக்கடை முன்பு சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த சதக்கத்துல்லா முகமது ஆசிக் ராஜதுரை முருகேசன் பிரபு உள்ளிட்ட ஐந்து நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் இருந்த ரொக்க பணம் 33 ஆயிரத்து 930 மற்றும் 3604 லாட்டரி சீட்டுகளும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

    ×