search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theft in textile shop"

    • தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி ஜவுளி கடையில் வாடிக்கையாளரிடம் திருடப்பட்டது.
    • தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    மதுரை

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால் பொதுமக்கள் புத்தாடைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள ஜவுளி கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனை பயன்படுத்தி சமூக விரோதிகள் திருடுவது அதிகரித்துள்ளது.

    மதுரை அனுப்பானடி டீச்சர் காலனி தியாகராஜர் நகரை சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மனைவி தேன்மொழி (33). இவர் சம்பவத்தன்று புத்தாடை வாங்க தெற்குமாசி வீதியில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு சென்றிருந்தார். அங்கு கூட்டம் அலைமோதியது. அதனை பயன்படுத்தி மர்ம நபர்கள் தேன்மொழி வைத்திருந்த பர்சை திருடி சென்றனர். அதில் ரூ.1000 ரொக்கம், 1 ஜோடி வெள்ளி கொலுசு, வெள்ளி நகைகள் இருந்தன.

    இதுகுறித்து அவர் தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 பெண்கள் தேன்மொ ழியிடம் திருடியது தெரிய வந்தது.

    தொடர் விசாரணையில் அவர்கள் ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரத்தை சேர்ந்த சுமதி (35), கோயம்புத்தூர் மதுக்கரையை சேர்ந்த லெட்சுமி (30) என தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    ×