என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிராமிய பாடகரை தாக்கிய 4 பேர் மீது வன்கொடுமை வழக்கு
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையுர் ஆயிப்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது27). கிராமிய பாடகர்.
இவர் அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் கபிலனை அழைத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
மோலுடையான்பட்டி பிரிவு சாலையில் சென்ற போது, அதிரான்விடுதியை சேர்ந்த தேவா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் பிரகாஷ் வந்த வாகனத்தை வழிமறித்து நிறுத்தினர்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் பிரகாஷையும், கபிலனையும் தாக்கியுள்ளனர்.
இதில் காயம் அடைந்த இவர்கள் இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்ைச பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் மழையூர் போலீசார் 4 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.






