திருநாவலூர் அருகே விவசாய தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

திருநாவலூர் அருகே விவசாய தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதனை அறிந்த அவரது மனைவி ரத்தினவேலுவை கடுமையாக கண்டித்தார்.
திருநாவலூர் அருகே விவசாய தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்ட ம் திருநாவலூர் அருகே தேவியானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 45). கூலித் தொழிலாளியான இவர், அதே ஊரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனை அவரது மனைவி மற்றும் மகன், மகள் கண்டித்த நிலையில், தான் சேமித்து வைத்திருந்த ரூ.1 லட்சத்தை அந்த பெண்ணிடம் கொடு த்துள்ளார். இதனை அறிந்த அவரது மனைவி ரத்தினவேலுவை கடுமையாக கண்டித்தார்.

இதனால் மனமுடைந்த ரத்தினவேல், குடிபோதை யில் நிலத்திற்கு போட வை த்திருந்த கலைக்கொள்ளி மருந்தினை குடித்து தற்கொ லைக்கு முயற்சித்தார். இதில் மயங்கி கிடந்த ரத்தினவேலு வை அவரது குடும்பத்தார் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில், திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com