என் மலர்
உள்ளூர் செய்திகள்

குட்கா விற்பனை செய்த மூன்று பேர் மீது வழக்கு பதிவு
- வேலாயுதம்பாளையத்தில் குட்கா விற்பனை செய்த மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது
- பான் மசாலா, குட்கா, பான் பராக் ,ஹான்ஸ் மற்றும் பல்வேறு வகையான புகையிலைப் பொருட்கள் பறிமுதல்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம்- நொய்யல் செல்லும் சாலையில் உள்ள ஆலமரத்து மேடு பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஒரு டீக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, பான் பராக் ,ஹான்ஸ் மற்றும் பல்வேறு வகையான புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட டீக்கடைக்கு சென்று ஆய்வு செய்தபோது அங்கு பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது .அதன் அடிப்படையில் அவற்றை பறிமுதல் செய்து விற்பனை செய்த வேலாயுதம்பாளையம் வள்ளுவர் நகர் பகுதியில் சேர்ந்த ராஜூ (51) என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதேபோல் புகளூர் நான்கு ரோடு பகுதியில் மளிகை கடையில் பான் மசாலா, குட்கா விற்பனை செய்த புகழூர் நான்கு ரோடு பகுதியை சேர்ந்த இளங்கோவன் (67) ,அதே பகுதியில் உள்ள மளிகை கடையில் பான் மசாலா, குட்கா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த ராமசாமி (75) ஆகியோர் கடைகளில் விற்பனை செய்து வந்த பான் மசாலா, குட்காவை பறிமுதல் செய்து இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






