search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காம்பவுண்ட் சுவர்"

    • சம்பவத்தன்று கிட்டுச்சாமி உறவினர்கள் 8 பேர் காம்பவுண்ட் சுவரை இடித்து அப்புறப்படுத்தினர்.
    • குன்னத்தூர் போலீசார் கிட்டு சாமி உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குன்னத்தூர்:

    குன்னத்தூர் அருகே வலையபாளையத்தில் வசிப்பவர் வடிவேலு . இவருக்கும் அருகில் வசிக்கும் கிட்டுச்சாமி என்பவருக்கும் காம்பவுண்ட் சுவர் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று கிட்டுச்சாமி உறவினர்கள் 8 பேர் காம்பவுண்ட் சுவரை இடித்து அப்புறப்படுத்தினர். இது குறித்த புகாரின் பேரில் குன்னத்தூர் போலீசார் கிட்டு சாமி உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • ஏராளமான மாணவர்கள் ஆர்வத்தோடு சேர்ந்து படித்து வருகின்றனர்.
    • போதை ஆசாமிகள் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    உடுமலை :

    தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உடுமலை அருகே எலையமுத்தூர் சாலையில் செயல்பட்டு வருகிறது.

    இங்கு மின்சார பணியாளர், பொருத்துநர், கம்மியார் மோட்டார் வாகனம், கம்பியாள், பற்ற வைப்பவர் உள்ளிட்ட பிரிவுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் நடப்பாண்டில் புதிதாக இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் - டிஜிட்டல் மேணுபேக்ச்சரிங் டெக்னீசியன், மேணுபேக்ச்சரிங் பிராசஸ் கண்ட்ரோல் - ஆட்டோமேஷன், அட்வான்ஸ் சி .என் .சி மெஷின் - டெக்னீசியன் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி அரசு உதவிகளுடன் பயிற்சியின்போது தொழில் நிறுவனங்களில் உதவித்தொகையுடன் பயிற்சி, பயிற்சி முடித்தவுடன் மத்திய மாநில அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு, மாதாந்திர உதவித் தொகையும் வழங்கப்படுவதால் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்தோடு சேர்ந்து படித்து வருகின்றனர். ஆனால் இந்தத் தொழில் பயிற்சி நிலையத்தை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் கட்டப்படவில்லை. இதனால் போதை ஆசாமிகள் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குடிபோதையில் பாட்டில்களை உடைத்து தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் பரவலாக வீசியும் வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் காம்பவுண்ட் சுவர் இல்லாத காரணத்தினால் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. எனவே உடுமலை எலையமுத்தூர் சாலையில் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    • மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • விசாரணையில் சொத்து சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பாகோடு கண்ணன் விளையைச் சேர்ந்தவர் சஜித் ஜி தாஸ் (வயது 48). இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார். தற்போது ஊரில் உள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்திரன் (54), ஆன்சில் பெனின் (19), அக்சில் பெனின் (21), ஷீபா (42) ஆகியோருக்கும் சொத்து சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதை அடுத்த சஜித் ஜி தாசின் காம்பவுண்டு சுவரை சம்பந்தப்பட்ட நான்கு பேரும் சேர்ந்து சுத்தியல், கம்பி, கடப்பாரை ஆகியவற்றை வைத்து உடைத்த தாக கூறப்படுகிறது. இதனால் ரூ.75 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டதாகவும், தட்டி கேட்ட சஜித் ஜி தாசுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து மார்த்தாண்டம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்று காலையில் யாரும் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
    • அதிவேகமாக கல், மண், எம் சான்ட், என் சான்ட் ஏற்றி வரும் கனரக வாகனங்களை போலிசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே புலியிறங்கி பகுதியில் இன்று அதிகாலை கனரக வாகனம் ஒன்று எம்.சான்ட் ஏற்றிக்கொண்டு அதிவேக மாக நாகர்கோவிலில் இருந்து குலசேகரம் வழியாக மார்த்தாண்டம் நோக்கி செல்லும்போது புலியிறங்கி பகுதியில் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து வீட்டின் காம்பவுண்ட் சுவரில் மோதி நின்றது. எப்போதும் பரபரப்பாக மக்கள் சென்றுகொண்டு இருப்பார்கள். இன்று காலை யில் யாரும் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன்தான் இந்த பகுதியில் சொகுசு கார் மோதியதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். எனவே அதிவேகமாக கல், மண், எம் சான்ட், என் சான்ட் ஏற்றி வரும் கனரக வாகனங்களை போலிசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    ×