என் மலர்
உள்ளூர் செய்திகள்

முத்தாலம்மன் கோவிலில் திருவிழா நடத்த அனுமதி அளிக்க கோரி வழக்கு ; டி.எஸ்.பி. பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
- உத்தப்புரத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு முத்தாலம்மன் கோவிலில் திருவிழா நடத்த அனுமதி அளிக்க கோரி வழக்கு டி.எஸ்.பி. பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
- விசாரணையை நவம்பர் 2-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.
மதுரை
மதுரை மாவட்டம் உத்தப் புரத்தை சேர்ந்த முருகேசன், மதுரை ஐகோர்ட்டில் தாக் கல் செய்த மனுவில் கூறியி ருந்ததாவது:-
மதுரை மாவட்டம் பேரை யூர் அருகே உள்ள உத்தப்பு ரம் முத்தாலம்மன் கோவி லில் வருகிற 24 முதல் 26-ந்தேதி வரை திருவிழா நடத்த திட்டமிட்டு, விழாக் குழு தலைமையில் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் இரு சமூகத்திற்கு இடையே ஏற் பட்ட பிரச்சினை காரண மாக இந்தகோவிலில் திரு விழா நடைபெறவில்லை.
மேலும் மற்றொரு சமூ கத்தை சேர்ந்த நபர்கள் சிலர், கிராமத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டு, கோவிலில் திருவிழா நடக்க விடாமல் செய்தனர். இதனை தொடர்ந்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு சம ரசம் செய்யப்பட்டது.
சுமார் 7 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு அக் டோபர் 24 முதல் 26-ந்தேதி வரை முத்தாலம்மன் கோவி லில் திருவிழா நடந்த அனு மதி கோரி உயர் அதிகாரிக ளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, உத்தப்பு ரம் முத்தாலம்மன் கோவி லில் திருவிழா நடந்த அனு மதி அளித்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி யிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசா ரணைக்கு வந்தது. அப் போது வழக்கு குறித்து உசிலம்பட்டி டி.எஸ்.பி. பதி லளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 2-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.






