search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "asylum"

    வில்லியனூர் அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி பதிவு திருமணம் செய்த காதல் ஜோடி இன்று புதுவை கோர்ட்டில் தஞ்சம் அடைந்தனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகள் அபிராமி (வயது 19). இவர் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரியான தினேஷ்குமார்(25) என்பவரும் காதலித்து வந்தனர்.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் இந்த காதலுக்கு அபிராமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறிய அபிராமி தனது காதலன் தினேஷ்குமாருடன் சென்று கடலூரில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் அபிராமி தனது காதல் கணவர் தினேஷ்குமாருடன் இன்று காலை புதுவை கோர்ட்டில் தஞ்சம் அடைந்தார். ஏற்கனவே அபிராமியின் பெற்றோர் தங்களது மகள் மாயமானதாக போலீசில் புகார் தெரிவித்து இருந்ததால் நீதிபதி தலைமையில் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    துறையூரில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் திருமண கோலத்தில் பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    தா.பேட்டை:

    துறையூர் தாலுகா முத்தையம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கமல்பிரகாஷ். பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது உறவினர் மகள் அபிநயா (19). நர்சிங் படித்து விட்டு திருப்பூரில் தனியார் மருத்துவ மனையில் வேலை பார்த்து வருகிறார். இருவரும் காதலித்து நிலையில் அபிநயாவிற்கு திருமணம் செய்வதற்காக அவரது பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். 

    இதையடுத்து கமல் பிரகாசும், அபிநயாவும் கடந்த சிலதினங்களுக்குமுன்பு பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி கொடுமுடி கோவிலில் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர். 

    பின்னர் தா.பேட்டை அடுத்த ஜெம்புநாதபுரம் போலீசில் நேற்று முன்தினம் மணக்கோலத்தில் இருவரும் பெற்றோர்களிடமிருந்து பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த கமல்பிரகாசின் பெற்றோர்கள் இருவரையும் பார்த்து கொள்வதாக போலீசாரிடம் தெரிவித்து அழைத்து சென்றனர். 

    காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் திருமண கோலத்தில் பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    தன் தந்தையின் விருப்பப்படியே தான் திருமணம் செய்து கொண்டதாக காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை தெரிவித்துள்ளார். #KaduvettiGuru #Daughter #Marriage
    கும்பகோணம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெ.குரு. வன்னியர் சங்க தலைவரும், பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இவருடைய மகள் விருத்தாம்பிகை(வயது 20). இவரும், காடுவெட்டி குருவின் தங்கை சந்திரலேகாவின் மகன் மனோஜ்கிரண்(27) என்பவரும் ஒருவரையொருவர் காதலித்தனர்.

    இவர்களது திருமணம் நேற்று கும்பகோணத்தில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. இதனைத்தொடர்ந்து விருத்தாம்பிகையும், மனோஜ்கிரணும் மணக்கோலத்தில் உறவினர்கள் சிலருடன் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்து தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர்.



    கும்பகோணத்தில் செய்தியாளரிடம் பேசிய அவர், தனது திருமணத்திற்கு தாய் எதிர்ப்பு தெரிவித்ததால் தான் அவரிடம் அதுபற்றி கூறவில்லை எனவும் கூறினார். காடுவெட்டியில் உள்ள தனது உறவினர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். #KaduvettiGuru #Daughter #Marriage    
    காதல் திருமணம் செய்த காடுவெட்டி குரு மகள், பாதுகாப்பு கேட்டு மணக்கோலத்தில் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். #KaduvettiGuru #Daughter #Marriage
    கும்பகோணம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெ.குரு. வன்னியர் சங்க தலைவரும், பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இவருடைய மகள் விருத்தாம்பிகை(வயது 20). இவரும், காடுவெட்டி குருவின் தங்கை சந்திரலேகாவின் மகன் மனோஜ்கிரண்(27) என்பவரும் ஒருவரையொருவர் காதலித்தனர்.

    இவர்களது திருமணம் நேற்று கும்பகோணத்தில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. இதனைத்தொடர்ந்து விருத்தாம்பிகையும், மனோஜ்கிரணும் மணக்கோலத்தில் உறவினர்கள் சிலருடன் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்து தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர்.

    பின்னர் மனோஜ்கிரண் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான்(மனோஜ்கிரண்), காடுவெட்டி குருவின் தங்கை மகன். நானும் விருத்தாம்பிகையும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்கள் திருமணத்துக்கு காடுவெட்டி பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். எனவே எங்களுக்கு பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் மனு அளிக்க வந்துள்ளோம். போலீசார் எங்களுக்கு பாதுகாப்பு வழங்குவார்கள் என நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #KaduvettiGuru #Daughter #Marriage

    கல்லூரி மாணவியை திருமணம் செய்து ஆட்டோ டிரைவர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை போலீசில் தஞ்சமடைந்தார்.

    வடமதுரை:

    வடமதுரை அருகே உள்ள பெரியகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்க கருப்பையா (வயது 22). டிப்ளமோ முடித்துள்ள இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். வடமதுரை அருகே உள்ள குளத்தூரைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி (20). பெற்றோரை இழந்த இவர் தனது தாத்தா பராமரிப்பில் இருந்து வந்தார். பி.எட். படித்து வந்த பரமேஸ்வரி கல்லூரிக்கு செல்லும் போது தங்க கருப்பையாவுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

    இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இருவரது குடும்பத்தினரையும் வரவழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் மனு அளித்தனர்.

    ஈரோடு:

    புதுக்கோட்டை மாவட்டம் பரமக்குடி தாலுகா, வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்தவல்லி (வயது 20). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கடந்த 4 வருடமாக பணிபுரிந்து வந்தார்.

    அதே தொழிற்சாலையில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகா தலயநல்லூர் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (22) என்பவரும் பணிபுரிந்து வந்தார்.

    இருவரும் ஒரே நிறுவனத்தில் பணி புரிந்ததால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    எனிலும் காதலில் உறுதியாக இருந்த ஜோடிகள் கடந்த 16-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி சிவகிரியில் உள்ள வேலாயுதம் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    இன்று ஆனந்தவல்லி தனது காதல் கணவர் அஜித்குமாருடன் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அவர்கள் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர். 

    திண்டுக்கல் அருகே பாதுகாப்பு கேட்டு காதலியுடன் போலீஸ்காரர் தஞ்சமடைந்தார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே நல்லமனார்கோட்டை சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் முருகேசன்(வயது35). இவர் திருப்பூர் ஆயுதப்படையில் 2-ம் நிலை போலீசாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சுந்தரராஜபுரத்தை சேர்ந்த தேவிஸ்ரீ(19) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இது காதலாக மாறியது. காதல்ஜோடி பல்வேறு இடங்களுக்கு சென்று தங்கள் காதலை வளர்த்தனர். இந்த விவகாரம் இருவீட்டு பெற்றோருக்கும் தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்வதென முடிவு செய்தனர். அதன்படி திண்டுக்கல் பகுதியில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு வடமதுரை போலீசில் தஞ்சமடைந்தனர்.

    போலீசார் இருதரப்பு பெற்றோரை அழைத்து சமரசம் பேசினர். ஆனால் அவர்கள் இதற்கு உடன்படவில்லை. இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி போலீசார் அனுப்பி வைத்தனர்.

    திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்த இளம்பெண் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.

    வடமதுரை:

    திருச்சி மாவட்டம் வையம்பட்டியைச் சேர்ந்தவர் சண்முக வள்ளி (வயது 22). பி.எஸ்.சி. பட்டதாரி, வேடசந்தூரில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இதே மில்லில் வேலை பார்த்த தென்னம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் (22) என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.

    இவர்கள் காதல் விபரம் சண்முகவள்ளி குடும்பத்துக்கு தெரியவரவே வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாடுகள் செய்தனர். பத்திரிகை அச்சடித்து உறவினர்களுக்கு கொடுத்து வந்த நிலையில் சண்முகவள்ளி வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனிடம் நடந்த விபரங்களை கூறினார்.

    இதனையடுத்து இன்று வேலாயுதம்பாளையத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு ரமேஷ் தனது காதல் மனைவியுடன் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.

    திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி மகன் சாரங்கா (வயது 23). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகள் ஜீவராஜாத்தி (18) என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.

    இவர் தற்போது திண்டுக்கல் தாலுகா அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் காதல் விபரம் வீட்டுக்கு தெரிய வரவே 2 பேரும் திண்டுக்கல்லில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் அவர்களது பெற்றோர்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    வடமதுரை போலீஸ் நிலையத்தில் கல்லூரி மாணவியை திருமணம் செய்த காதலன் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள ஆர்.வெள்ளோடு நொச்சிபட்டியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 25). சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் நதியா (23). எம்.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி கோவையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பெற்றோருக்கு பயந்து நண்பர் வீட்டில் தங்கி இருந்த காதல் ஜோடி இன்று வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்ச மடைந்தனர். போலீசார் இரு தரப்பு பெற்றோரையும் வரவழைத்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதால் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் காதலனுடன் கல்லூரி மாணவி தஞ்சம் அடைந்தார்.
    குலசேகரம்:

    குலசேகரம் அருகே சுருளோடு பகுதியைச் சேர்ந்தவர் சுபின் பிராங்க் (வயது 21). கூலித்தொழிலாளி. இவரும், பொன்மனை பெருவள்ளிக்கடவு பகுதியைச் சேர்ந்த அனிஷா (19) என்பவரும் காதலித்து வந்தனர். அனிஷா கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு பஸ்சில் செல்லும்போது சுபின் பிராங்குடன் அனிஷாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள் 2 பேரும் தீவிரமாக காதலித்தனர். 

    இந்த விவகாரம் அனிஷாவின் பெற்றோருக்கு தெரியவந்ததும் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நேற்று முன் தினம் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து சென்ற அனிஷா, தனது காதலன் சுபின் பிராங்குடன் மாயமானார். 

    இதுகுறித்து அனிஷாவின் பெற்றோர் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரில் கல்லூரிக்கு சென்ற தங்கள் மகள் அனிஷா மாயமாகி விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தருமாறும் கூறி இருந்தனர். புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அனிஷாவை தேடி வந்தனர். 

    போலீசார் தேடுவதை அறிந்து அனிஷாவும், அவரது காதலன் சுபின் பிராங்கும் நேற்று இரவு குலசேகரம் போலீஸ் நிலையம் வந்து தஞ்சம் அடைந்தனர். போலீசார் 2 பேருடைய பெற்றோரையும் போலீஸ் நிலையம் வரவழைத்து சமரசப்பேச்சு நடத்தினர். அப்போது சுபின் பிராங்கை, அனிஷாவின் உறவினர்கள் தாக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து போலீசார் சுபின் பிராங்கை மீட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அனிஷாவிடம் அவரது தாயார் பேசினார். தங்களுடன் வந்து விடும்படி கூறி அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார். ஆனால் அனிஷா தாயின் கண்ணீரை பெரிதுபடுத்தவில்லை. காதலனுடன் செல்வேன் என பிடிவாதமாக இருந்தார். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனிஷாவை காதலன் சுபின் பிராங்குடன் அனுப்பி வைத்தனர்.
    ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்று ஒரே நாளில் 3 காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்தன.
    ஈரோடு:

    அந்தியூர் அருகே உள்ள பட்லூர் பகுதியை சேர்ந்தவர் கவுசல்யா (வயது 21). பி.இ. பட்டதாரி. ஈரோட்டை சேர்ந்தவர் ஆனந்தன் (23). பட்டதாரி.

    இவர்கள் 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்தனர். இவர்கள் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிந்தது. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து காதல் ஜோடி ஆனந்தன், கவுசல்யா வீட்டை விட்டு வெளியேறி சேலம் மாவட்டம் மேட்டூர் முனியப்பன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். மேலும் அவர்கள் இன்று ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். பிறகு அங்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    இதே போல மேலும் 2 காதல் ஜோடிகள் இன்று ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்களும் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    ஒரே நாளில் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் 3 காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு நிலவியது.
    நங்கவள்ளியில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
    நங்கவள்ளி:

    நங்கவள்ளி போலீஸ் நிலையம் அருகில் வசித்து வருபவர் குமார் (வயது 34). இவர் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். 

    திருநெல்வேலி மாவட்டம், இலாங்காட்டை சேர்ந்தவர் மகேஸ்வரி (19). இவர் அங்குள்ள தனியார் கல்லூரி யில் பி.காம், 3-ம் ஆண்டு படித்து வருகிறார். முகநூலில் அறிமுகமான இருவரும் கடந்த 2 அண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறிய மகேஸ்வரி நங்கவள்ளியில் உள்ள குமார் வீட்டுக்கு சென்றார். நேற்று காலை லட்சுமி நரசிம்மர் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு நங்வள்ளி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். 

    இதுகுறித்து மகேஸ்வரியின் பெற்றோரிடம் போலீசார் தொடர்பு கொண்டபோது அவர்கள் மகளை பார்க்க விருப்பம் இல்லை என்று கூறிவிட்டனர். இதனால் புதுமண தம்பதிக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
    ×