search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Applications"

    • தமிழகத்தில் அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் உள்ளன.
    • இவற்றில் தொழில்நுட்ப பட்டய படிப்புகளுக்கு 19120 இடங்கள் உள்ளன.

    சேலம்:

    தமிழகத்தில் அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தொழில்நுட்ப பட்டய படிப்புகளுக்கு 19120 இடங்கள் உள்ளன.

    விண்ணப்பதிவு தொடங்கியது

    இதில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர படிப்புக ளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இணைய வழியில் நேற்று தொடங்கியது.

    இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 நிர்ணயிக்கப்ப ட்டுள்ளது. எஸ்.சி.,எஸ்.டி. பிரிவின ருக்கு கட்டண மில்லை. விருப்பமுள்ள வர்கள் http://www.tnpoly.in/ எனும் வலைதளம் வரியாக வருகிற ஜூன் 9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதி பெற்ற மாணவர்களுக்கான தர வரிசைப் பட்டியல், அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரி களில் தயார் செய்யப்பட்டு வெளியிடப்படும்.

    கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணைய தளத்தில் அறிந்து கொள்ள லாம் என்று தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

    • விழுப்புரம் மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் வரும் 24-ந்தேதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது.
    • கடைசி நாள் 23-ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பபிக்க வேண்டும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி, கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் தனித்தனியே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து படிப்பதற்கு மாணவ, மாணவியர்களுக்கான விழுப்புரம் மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் வரும் 24-ந்தேதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது. தமிழகம் முழுவதும் மாணவ, மாணவியர்கள் விளையாட்டில் சாதனைகள் படைக்க ஏதுவாக தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய சிறப்பு விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. அதன்படி விழுப்புரம், கடலூர் விளையாட்டு விடுதியில் மாணவ, மாணவியர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டா, கையுந்துபந்து, கபடி, மேசைப்பந்து, டென்னிஸ், ஜீடோ, ஸ்குவாஷ், வில்வித்தை மற்றும் பளுதூக்குதல் ஆகிய விளையாட்டுகள் இருக்கின்றன. இந்த விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கு 6,7,8,9 மற்றும் பிளஸ்-1 வகுப்புகளுக்கான மாவட்ட அளவிலான தேர்வுகள் வரும் 24-ந்தேதி காலை 7 மணி அளவில் மாவட்ட விளையாட்டரங்கம், அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி அருகில், கீழ்பெரும்பாக்கம், விழுப்பு ரத்தில் நடைபெறவுள்ளது.

    மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பூர்த்திசெய்வதற்கான கடைசி நாள் 23-ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பபிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தேர்வு போட்டிகளில் கலந்துகொள்ள 24-ந்தேதி வரும் மாணவ மாணவியர்கள் இணையதளத்தில் பதிவு மேற்கொண்ட விண்ணப்பம், ஆதார் அட்டை, போனேபைய்டு சான்றிதழ், ஆகிய படிவங்கள் கொண்டு வர வேண்டும். மேற்கண்ட தேர்வு போட்டிகள் தொடர்பான இதர விபரங்களை விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலக முகவரியில் அலுவலக வேலை நாட்களில் நேரிலோ, அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு விவரம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • தொழில் நிறுவனங்களின் 721 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.
    • இறுதி ஒப்புதல் இணைய வழியிலேயே பதிவிறக்கம் செய்யலாம்.

    மதுரை

    மதுரை கோர்ட்யாட் மேரியாட் விடுதியில் இன்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில், தொழில் மற்றும் வர்த்த கத்துறை கூடுதல் ஆணையர் கிரேஸ் பச்சாவ் முன்னி லையில் மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங் களைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களின் பிரிதிநிதி கள் பங்கேற்ற தொழில் நிறுவ னங்களுக்கான இணையவழி ஒற்றை சாளர முனையம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலெக்டர் அனீஷ்சேகர் பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசு தொழில் முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பதற்காகவும், தொழில் நிறுவனங்களின் வணிக மேம்பாட்டிற்காகவும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் தொழில் தொடங்குவதை எளிமையாக்க இணையவழி ஒற்றை சாளர முனையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஒற்றை சாளர முனையத்தில் 200-க்கும் மேற்பட்ட அனுமதிகள் 25-க்கும் மேற்பட்ட அரசுத்து றை நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப் பட்டு வருகிறது. இந்த ஒற்றை சாளர முனையத்தின் மூலம் விண்ணப்பத்தில் உள்ள குறைகளை களைய ஒரே முறை குறைநிவர்த்தி வினவல் அனுப்பப்பட்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுகின்றன.

    இறுதி ஒப்புதல் இணைய வழியிலேயே பதிவிறக்கம் செய்யலாம். உரிய கால வரம்பிற்குள் வழங்க ப்படாத ஒப்புதல்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட கால அளவிற்கு பிறகு ஒப்புதல் வழங்கப்பட்டதாக கருதப் படும்.

    ஒற்றை சாளர முனை யத்தின் செயலாக்கத்திற்கு பிறகு தமிழ்நாட்டின் வணிக வசதியாக்கல் எளிமைப் படுத்தப்பட்டுள்ளது. அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இடையே ஒப்புதல் பெறும் நடைமுறை கள் தெளிவுபடுத்த ப்பட்டுள் ளது. இணைய வழியில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதால் கால விரையம் தவிர்க்கப்படு கிறது.

    ஒற்றை சாளர முனை யத்தின் மூலம் தமிழ்நாட்டில் 18 ஆயிரம் விண்ணப்பங்கள் துரிதமாக பரிசீலிக்கப்பட்டு 15 ஆயிரம் விண்ணப்பங் களுக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் 865 விண்ணப்பங்கள் துரிதமாக பரிசீலிக்கப்பட்டு 771 விண்ணப்பங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டுள் ளன. தொழில் நிறுவனங்கள் வசதிக்காக செயல்படுத்தப் பட்டு வரும் இந்தத் திட்டத்தை தொழில் முனை வோர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்கள் கணேசன் (மதுரை) மாரிமுத்து (ராமநாதபுரம்) உள்பட அரசு அலுவலர்கள், மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சார்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • இ-சேவை வழங்கும் இத்திட்டம் படித்த இளைஞர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
    • கிராமப்புற பகுதிகளில் இசேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இத்திட்டம் வழிவகை செய்கிறது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது ;-

    தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் சார்பில் அனைவருக்கும் இ-சேவை வழங்கும் இத்திட்டம் படித்த இளைஞர்கள், தொழில்முனைவோர் போன்றவர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    மேலும் இ-சேவை மையங்கள் இல்லாத தொலைதூரப் பகுதிகளில் இசேவை மையங்கள் அமைக்க உதவுகிறது.

    மாநிலம் முழுவதும் உள்ள கிராமப்புற பகுதிகளில் இசேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கவும், பொதுமக்கள் அனைவரும் அவர்களின் வீட்டின் அருகாமையிலையே விரைவான மற்றும் சிறந்த சேவையை வழங்க இத்திட்டம் வழிவகை செய்கிறது.

    இத்திட்டத்திற்கு கீழ் விண்ணப்பிக்க, கணினி, அச்சுப்பொறி, வருடி சாதனம், கைரேகை அங்கீகார சாதனம், இணைய வசதி போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை அமைத்திருக்க வேண்டும் மற்றும் குடிநீர் வசதி, பார்வையாளர் அமரும் நாற்காலி, சாய்வுதளம் போன்ற குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும்.

    மேலும் மைய ஆப்ரேட்டர் கணினி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தின் தகுதி நிபந்தனைகளை அனைத்தும் அறிய கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தை பயன்படுத்தவும்.

    அனைவருக்கும் இ-சேவை திட்டத்தின் வலைத்தளம் கடந்த 15.3.2023 முதல் திறக்கப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்க ப்படுகிறது. தற்போது www. tnesevai.tn.gov.in (அல்லது)www. tnega.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக 14.4.2023 வரை 8 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

    மேலும், வலைத்தளத்தில் விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டதும், தமிழ்நாடு மின் ஆளுமை முக மையால் விண்ணப்பத்தை சரிபார்க்க ப்பட்டு, இ-சேவை குறியீடு மற்றும் கடவுச்சொல்லை குறுஞ்செய்தி வாயிலாக அவர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் மூலம் பெற்று கொள்ளலாம். கிராமப்புற பகுதியில் இ-சேவை மையம் அமைக்க ரூ.3000 மற்றும் நகர்ப்புற பகுதியில் இ-சேவை மையம் அமைக்க ரூ.6000- விண்ணப்பம் கட்டணமாக செலுத்த வேண்டும்.

    இதுவரை, 1,369 விண்ணப்பங்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இத்திட்டத்தை ஒரு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டமாக பயன்படுத்திக்கொள்ள படித்த இளைஞர்கள், தொழில்முனைவோர் போன்ற அனைவரையும், இத்திட்டத்தில் விண்ணப்பி த்து பயன் பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரேசன் கடைகள் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.
    • மண்டல இணைப்பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்க ளால் நடத்தப்படும் நியாயவிலைக்கடைகளில் காலிப்பணியிடங்களாக உள்ள 146 விற்பனையா ளர்கள் மற்றும் 18 கட்டுநர்கள் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து https//www.vnrdrb.net என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் மட்டுமே அடுத்த மாதம் (நவம்பர்) 14-ந் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

    விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பான விண்ணப்பதார ர்களுக்கான அறிவுரைகள் மற்றும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது எப்படி? போன்ற விவரங்கள் மேற்கண்ட இணையதள முகவரியிலும், https://youtube/G6c5e2ELJD8 என்ற யூடியூப் சேனலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையிடம் மற்றும் அதன் கிளைகளில் விண்ணப்பக் கட்டணங்கள் செலுத்த தேவையான செலான்களை மேற்காண்ட இணைய வழியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    விண்ணப்பிக்கும் முறை குறித்து எழும் சந்தேகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் www.vnrdrb2022@gmail.com என்ற இ-மெயில் மூலமும், உதவி மைய தொலைபேசி எண்: 04562-290769 வாயிலாகவும் விருதுநகர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தை அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாமக்கல் நகராட்சி பகுதிகளில் சொத்துவரி சீராய்வுப் பணிகள் முடிவுற்றுள்ளன.
    • தற்போது புதிய சொத்துவரி விதிப்புகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சி ஆணையாளா் கி.மு, சுதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் நகராட்சி பகுதிகளில் சொத்துவரி சீராய்வுப் பணிகள் முடிவுற்றுள்ளன. தற்போது புதிய சொத்துவரி விதிப்புகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் புதிதாக சொத்து வரி விதிக்க வேண்டிய இனங்களுக்கான விண்ணப்பங்களை நகராட்சியில் அலுவலக வேலை நாட்களில் பெற்று உரிய ஆவணங்களுடன் சமா்ப்பித்து புதிதாக வரி விதிப்பு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தாலுகா பரமத்தி வட்டாரத்தில் தென்னை வளர்ச்சி வாரியத்தினால் தென்னை பரப்பு அதிகரிக்கும்.
    • உதவி இயக்குநர் அலுவலகத்திலோ விண்ணப்பங்களை கொடுக்கலாம்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் தென்னை வளர்ச்சி வாரியத்தினால் தென்னை பரப்பு அதிகரிக்கும் திட்டத்தின் கீழ் புதிதாக தென்னை நடவு செய்ய விருப்பமுள்ள விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ள பரமத்தி வட்டார விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரிடமோ அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலோ விண்ணப்பங்களை கொடுக்கலாம் என பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.

    • கடலூர் மாவட்டத்தில் ஜீவன் ரக்ஷா பதாக் தொடர் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
    • தகுதியுடையவர்கள் மாவட்ட சமூகநல அலுவலகம் ,அரசுசேவை இல்ல வளாகம், நெல்லிக்குப்பம் மெயின்ரோடு, கடலூர் என்ற விலாசத்தில் விண்ணப்பங்கள் பெற்று 30 ந்தேதி க்குள் கருத்துருக்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் ஜீவன் ரக்ஷா பதாக் தொடர் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இவ்விருதானது துணிச்சல் மிகுந்த பாராட்டுதலுக்குறிய செயல்கள் செய்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. மனித உயிர்களை காப்பாற்றும் பொருட்டு நீரில் மூழ்கி விபத்தில் சிக்கியவர்கள், தீ விபத்தில் சிக்கியவர்கள், மின்சார விபத்து நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதல் மற்றும் சுரங்க விபத்திலிருந்து மனிதர்களை காப்பாற்றியவர்களுக்கு இவ்விருதானது மூன்று வகைகளாக வழங்கப்படுகிறது. சர்வோட்டம் ஜீவன் ரக்ஷாபதாக், உத்தம் ஜீவன் ரக்ஷாபதாக, ஜீவன் ரக்ஷாபதாக் மேற்கண்ட வகைகள் கொண்ட விருதுகள் பெற தகுதியுடையவர்கள் மாவட்ட சமூகநல அலுவலகம் ,அரசுசேவை இல்ல வளாகம், நெல்லிக்குப்பம் மெயின்ரோடு, கடலூர் என்ற விலாசத்தில் விண்ணப்பங்கள் பெற்று 30 ந்தேதி க்குள் கருத்துருக்களை சமர்ப்பிக்குமாறு கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

    • நாமக்கல் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர்.
    • சேவை துறைகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ள 62 வயதிற்குட்பட்டராக இருக்க வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது-

    நாமக்கல் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்திற்கு பொது பயன்பாட்டு சேவை சம்மந்தமாக பெறப்படும் மனுக்களுக்கு தீர்வுகாண நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதியுடன் சேர்ந்து பணிபுரிய உறுப்பினர் ஒருவர் தேர்வுசெய்யபட இருக்கிறார்.

    அவர் போக்குவரத்து சேவை துறை (பயணிகள் அல்லது பொருட்களை கொண்டு செல்வதற்கான சாலை மற்றும் போக்குவரத்து துறை), அஞ்சல், தந்தி அல்லது தொலைபேசி சேவை துறை, மின்சாரம், ஒளி மற்றும் நீர் வழங்கல் சம்மந்தமான துறை, பொது பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை, மருத்துவமனை மற்றும் மருந்தகத் துறை, காப்பீட்டு துறை, கல்வி மற்றும் கல்வி சார்ந்த நிறுவனங்கள், வீடு, மனை மற்றும் நிலம் சார்ந்த துறை போன்ற பொது பயன்பாட்டு சேவை துறைகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ள 62 வயதிற்குட்பட்டராக இருக்க வேண்டும். எனவே இந்த தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், நாமக்கல் - 637001 என்ற முகவரிக்கு வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பும்படி தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட தேர்தல் மேற்ப்பார்வையாளர் கே.எஸ். ரவிச்சந்திரனிடம் வருகிற 21.7.2022 (வியாழக்கிழமை) காலை 10மணி முதல் மாலை5மணி வரை தாக்கல் செய்து ரசீது பெற்றுக்கொள்ளலாம்.
    • இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திராவிட முன்னேற்றக்கழகத்தின் 15-வது பொது தேர்தல் திருப்பூர் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட , தெற்கு வடக்கு மாநகரத்திற்கு உட்பட்ட பகுதி கழக தேர்தலில் போட்டியிடுபவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட தேர்தல் மேற்ப்பார்வையாளர் கே.எஸ். ரவிச்சந்திரனிடம் வருகிற 21.7.2022 (வியாழக்கிழமை) காலை 10மணி முதல் மாலை5மணி வரை தாக்கல் செய்து ரசீது பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • காலியிடங்களை விட பல மடங்கு விண்ணப்பங்கள் திருப்பூர் கல்வி மாவட்டத்தில் பெறப்பட்டுள்ளன.
    • ஒரு பணியிடத்திற்கு சராசரியாக 10 பேர் வீதம் விண்ணப்பித்துள்ளனர்.

    திருப்பூர் :

    தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் தொகுப்பூதியத்தின் கீழ் நிரப்பப்பட உள்ளன. இதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பம் கடந்த 3 நாட்களாக பெறப்பட்டன. ஒருவரே பல பள்ளிகளில் பணியாற்ற விண்ணப்பித்துள்ளதால் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    டி.டி.எட்., படித்தவர்கள் துவக்க பள்ளிக்கும், பி.எட்., படித்தவர்கள் நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிக்கும், ஒன்றுக்கும் மேற்பட்ட டிகிரிகளுடன் பி.எட்., மற்றும் எம்.எட்., படித்தவர்கள் உயர்நிலை, மேல்நிலை பள்ளிக்கும் விண்ணப்பித்தனர். ஒருவர் எத்தனை பணியிடங்களுக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்பதால், காலியிடங்களை விட பல மடங்கு விண்ணப்பங்கள் திருப்பூர் கல்வி மாவட்டத்தில் பெறப்பட்டுள்ளன.

    திருப்பூர் தெற்கு, வடக்கு, அவிநாசி மற்றும் ஊத்துக்குளி ஒன்றியங்கள் முறையேஇடைநிலை ஆசிரியர் பணிக்கு ஆயிரத்து 407 விண்ணப்பங்களும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 405 விண்ணப்பங்களும், முதுகலை ஆசிரியர் பணிக்கு 401 விண்ணப்பங்களும் பெறபட்டுள்ளன. ஒரு பணியிடத்திற்கு சராசரியாக 10 பேர் வீதம் விண்ணப்பித்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • காலியிட விபரங்கள் தொடா்பான பட்டியல் அந்தந்த மாவட்ட கல்வி அலு–வலகங்களில் பாா்வைக்கு வைக்கப்பட்டு–ள்ளன.
    • பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நேற்று என்பதால் மாவட்ட கல்வி அலுவலகங்களில், ஏராளமானோா் திரண்டனா்.

    நாமக்கல்:

    தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23-ம் கல்வியாண்டில் ஜூன் 1-ம் தேதி நிலவரப்படி காலியாகவுள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியா் பணியிடங்கள் தற்காலிக முறையில் நிய–மனம் செய்யப்பட உள்ளது.

    காலியிட விபரங்கள் தொடா்பான பட்டியல் அந்தந்த மாவட்ட கல்வி அலு–வலகங்களில் பாா்வைக்கு வைக்கப்பட்டு–ள்ளன. மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியா் 71 பணியிடம், ஆசிரியா் 15 பணியிடம், முதுகலை ஆசிரியா் 14 பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

    கடந்த 3 நாள்கள் நாமக்கல், திருச்செங்கோடு இரு கல்வி மாவட்ட அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தகுதியான விண்ணப்பதாரா்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் உரிய கல்வித் தகுதிச் சான்றிதழ் விவரங்களைத் தெரிவித்திருந்தனா். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நேற்று என்பதால் மாவட்ட கல்வி அலுவலகங்களில், ஏராளமானோா் திரண்டனா்.

    இதில் ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை தான் அதிகம் காணப்பட்டது. இரு கல்வி மாவட்டத்தில் சுமாா் 4,500 போ் விண்ணப்பங்களை சமா்ப்பித்தனா் என கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ×