search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Applications"

    • தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் 8 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ., படிப்புகள் வழங்கப்படுகின்றன.
    • நடப்பு கல்வியாண்டு முதல் பகுதி நேர பி.இ., படிப்புகள் நான்கு ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது

    திருப்பூர்:

    அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ., படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வருகிற 23-ந் தேதி வரை சமர்ப்பிக்கலாம்.

    தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் 8 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ., படிப்புகள் வழங்கப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டு முதல் பகுதி நேர பி.இ., படிப்புகள் நான்கு ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் 28ந் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் உரிய நேரத்திற்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் விபரங்களுக்கு 0422-2590080,94869-77757 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    • கொல்லிமலை செங்கரையில், அரசு ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது.
    • இந்த பள்ளியில் உள்ள விடுதிக்கு சமையல் செய்திட 6 பணி யாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலி கமாக நியமிக்கப்பட உள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை செங்கரை யில், அரசு ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உள்ள விடுதிக்கு சமையல் செய்திட 6 பணி யாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலி கமாக நியமிக்கப்பட உள்ளனர்.

    சமையல் கலை தெரிந்த பழங்குடியினர் இனத்தி லிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது உச்ச வரம்பு 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    சமையலர் (ஆண்) 2 பணியிடத்திற்கு மாத தொகுப்பூதியம் ரூ. 12 ஆயிரம் வீதம் வழங்கப்ப டும். உதவி சமையலர் (பெண்) 3 பணியிடங்க ளுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 12 ஆயி ரம் வீதம் வழங்கப்படும். துப்புரவா ளர் (ஆண், பெண்) 1 பணியிடத்திற்கு மாத தொகுப்பூதியம் ரூ. 5,200 வழங்கப்படும்.

    இந்த பணியிடங்களுக்கு விருப்பமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை, வருகிற 31-ந் தேதி மாலை 5 மணிக்குள் கொல்லிமலை, தாலுகா அலுவலகத்தில் உள்ள, பழங்குடியினர் நல திட்ட அலுவலகம் அல்லது செங்கரை, ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு வந்துசேருமாறு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • புதிய ஜி.எஸ்.டி., பதிவுக்கு விண்ணப்பிப்போர் உரிய ஆவணங்களை இணைக்க வேண்டும்.
    • சரியாக ரிட்டர்ன் தாக்கல் செய்வது உள்பட எந்த தவறும் செய்யாதபட்சத்தில் நோட்டீஸ் ஏதும் அனுப்ப மாட்டோம்.

    திருப்பூர்:

    திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள வணிக வரி அலுவலகத்தில் ஜி.எஸ்.டி., குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் வணிக வரித்துறை துணை கமிஷனர் முருககுமார் தலைமை வகித்து பேசியதாவது:-

    புதிய ஜி.எஸ்.டி., பதிவுக்கு விண்ணப்பிப்போர் உரிய ஆவணங்களை இணைக்க வேண்டும். அரைகுறை ஆவணங்களுடன் விண்ணப்பிப்பதாலேயே பதிவு எண் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. புதிய பதிவு சார்ந்த கள ஆய்வின்போது சில வணிக நிறுவனங்களை கண்டறிய முடிவதில்லை. அனைத்து வர்த்தகர்களும் குறிப்பிட்ட நாட்களுக்குள் மாதாந்திர ரிடர்ன் தாக்கல் செய்ய வேண்டும். பல்வேறு காரணங்களுக்காக நோட்டீஸ் அனுப்பினால் உடனடியாக பதிலளிக்க வேண்டும். காலம்தாழ்த்தினால் நோட்டீஸ் உத்தரவாக மாறும். அபராதம் செலுத்தவேண்டிய நிலையும் ஏற்படும்.

    ஜி.எஸ்.டி., சார்ந்து எந்த சந்தேகம், விளக்கங்கள் தேவைப்பட்டாலும் வணிக வரி அதிகாரிகள், அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். சரியாக ரிட்டர்ன் தாக்கல் செய்வது உள்பட எந்த தவறும் செய்யாதபட்சத்தில் நோட்டீஸ் ஏதும் அனுப்ப மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.

    திருப்பூர் மாவட்ட வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன் பேசுகையில், காலதாமதமாக செலுத்தப்படும் வரிக்கு 18 முதல் 14 சதவீதம் வரை வட்டி தொகை வசூலிக்கப்படுகிறது. இதை 6 சதவீதமாக குறைக்க ஜி.எஸ்.டி., கவுன்சிலுக்கு கருத்துரு அனுப்பவேண்டும்.

    தொழில்நுட்ப கோளாறுகளால் ஆன்லைனில் பதிவு சான்றுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்படாதவாறு பார்த்து கொள்ள வேண்டும் என்றார். 

    • மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
    • அகில இந்திய அளவிலான கலந்தாய்வு தேதிகள் குறித்து மருத்துவ கலந்தாய்வு கமிட்டி விரைவில் அறிவிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில மாணவர்-பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா கவர்னருக்கு கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    பக்கத்து மாநிலங்களில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்பிற்கு அந்தந்த மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் இதுவரை புதுவை மாநிலத்தில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பங்கள் கூட பெற வில்லை என்பது மாணவர்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சுகாதாரத்துறை செ ன்டாக் மாணவர் சேர்க்கைக்கான வழிமுறைகள் மற்றும் மாணவர் சேர்க்கையின் போது பின்பற்றப்படும் நடைமுறைகளை சென்டாக் நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும். அகில இந்திய அளவிலான கலந்தாய்வு தேதிகள் குறித்து மருத்துவ கலந்தாய்வு கமிட்டி விரைவில் அறிவிக்க வேண்டும்.

    எனவே புதுவை அரசு, சுகாதாரத்துறை, சென்டாக் நிர்வாகம் காலதாமதமின்றி மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்களை பெற்று தரவரிசை பட்டியலை

    வெளியிட்டு கலந்தாய்வை நடத்த வேண்டும். இருமாநிலங்களில் அரசு ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மீது புதுவை அரசு கடுமை யான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2 ஆண்டு இடைநிலை ஆசிரியர் பட்டய பயிற்சி சேர்க்கை நடைபெற இருக்கிறது.
    • அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    ஆடுதுறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும், தஞ்சாவூர் அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான இரண்டு ஆண்டு இடைநிலை ஆசிரியர் பட்டய பயிற்சி சேர்க்கை நடைபெற இருக்கிறது.

    இந்த படிப்பில் சேர விரும்பும் மாணவிகள் வரும் 15-ம் தேதி வரை www.https://scert.tnschool.gov.in

    என்ற இணையதள முகவரியில் விண்ணப்பி க்கலாம்.

    அவ்வாறு இணையத ளத்தில் விண்ணப்பிக்க இயலாதவர்கள், தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் செயல்பட்டு வரும், அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

    மேற்கண்ட தகவலை

    தஞ்சாவூர் அரண்மனை வளாகம் அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சுதந்திர தின விழாவின் போது முதல்-அமைச்சரால் விருதுகள் வழங்கப்ப டவுள்ளன.
    • விண்ணப்பிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள் விண்ணபிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாற்றுத்திற னாளிகள் நலனுக்காக அரும் பணியாற்றிய தொண்டு நிறுவனம், சிறந்த மருத்துவர், வேலைவாய்ப்பு அளிந்த சிறந்த தனியார் நிறுவனம், சிறந்த சமூக பணியாளர் மற்றும் சிறந்த மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய பிரிவுகளில் 15.08.2023 அன்று நடைபெறயிருக்கும் சுதந்திர தின விழாவின் போது முதல்-அமைச்சரால் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

    மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் விண்ணப்பிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள் , நிறுவனங்கள் அதற்கான விண்ணப்பப் படிவத்தினை தஞ்சாவூர் மாவட்ட மாற்றுத்திறனா ளிகள் நல அலுவலகத்தி லிருந்து பெற்று, அனைத்து ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களுடன் (3 நகல்கள்) வருகின்ற 10-ந் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட மாற்றத்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண்.14, தரைதளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தஞ்சாவூர் – 613010 (தொலைபேசி எண். 04362-236791) என்ற முகவரிக்கு அனுப்பி வைத்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மணிமேகலை விருது வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டு நிதிஒதுக்கீடு செய்து அர சாணை வெளியிட ப்பட்டுள்ளது.
    • சமூகநல செயல்பாடுகளில் பங்கேற்றல் போன்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மாநிலம் மற்றும் மாவட் ட அளவில் சிறப்பாக செயல்படும் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளிலுள்ள சுயஉதவிக் குழுக்கள், ஊராட்சி அளவி லான கூட்டமைப்புகள் , வட்டார அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், பகுதி அளவிலா கூட்ட மைப்புகள் ஆகியவற்றிற்கு தமிழக அரசால் வழங்க ப்படும் மணிமேகைல விருது வழங்குவதற்கான அறி விப்பை வெளியிடப்பட்டு நிதிஒதுக்கீடு செய்து அர சாணை வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கி ராம வறுைமஒழிப்புசங்கம், வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் பகுதி அளவிலான கூட்டமை ப்புகள் முறையான கூட்டம் நடத்தல், சேமிப்பு செய்ததை முறையாகபயன்படுத்தல், வங்கிகடன் பெற்று இருத்தல், குழு உறுப்பினர்கள் பொருளாதாரமேம்பாடு அடைதல், உறுப்பினர்கள் திறன் வளர்ப்பு மற்றும் வாழ்வாதார பயிற்சிபெற்றிருத்தல், சமூகநல செயல்பாடுகளில் பங்கேற்றல் போன்ற அடிப்படையில்தேர்வு செய்யப்படுவார்கள்.

    மேலும் மணிமேகலை விருதிற்கு விண்ணப்பி ப்பதற்கான தகுதிகள் மற்றுமதிப்பீட்டு காரணிகள் குறித்த விவரங்களை தொடர்பு டைய கூட்டமைப்புகள் அல்லது வட்டார இயக்க மேலாண்மை அலகில் பெற்றுக்கொ ள்ள லாம். விருதிற்குதகுதியான சமுதாய அமைப்புகள் தொடர்புடைய வட்டார இயக்க மேலாண்மை அலகில்25-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் எனகள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார்தெரிவித்துள்ளார்.

    • அரசு, தனியாா் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா்.
    • ஜூன் 7 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அரசு, தனியாா் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:-

    தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள தஞ்சாவூா், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு இணையதளம் வாயிலாக ஜூன் 7 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இந்த விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும், மாணவா்களுக்கு உதவும் வகையில், தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகத்தில் சோ்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    பள்ளி மாற்றுசான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், 8 அல்லது 10 அல்லது 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ் (மாற்று திறனாளிகள், விதவை, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் முதன்மையானவா், தாய், தந்தை இழந்த ஆதரவற்ற மாணவா்கள்) ஆகியவற்றுடன் 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள், ஆதாா் அட்டை ஆகிய அசல் ஆவணங்கள் மற்றும் விண்ணப்பங்களை இலவசமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

    மேலும், விவரங்களுக்கு தஞ்சாவூா் அரசு தொழிற் பயிற்சி நிலைய துணை இயக்குநா் / முதல்வா் அல்லது அருகிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களைத் தொடா்பு கொள்ளலாம். தொடா்பு எண்கள்: 9994043023, 7708709988, 9840950504, 9442220049 ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் தமிழக நீர்வள துறையில் உள்ள 40 பணியிடங்க ளுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • இதில் நீர்வள ஆதார துறையில் உதவியாளர் ஜியால ஜிஸ்ட்-11 பேர், கனிமம் துறையில் உதவியாளர் ஜியாலஜிஸ்ட்- 29 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் தமிழக நீர்வள துறையில் உள்ள 40 பணியிடங்க ளுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் நீர்வள ஆதார துறையில் உதவியாளர் ஜியால ஜிஸ்ட்-11 பேர், கனிமம் துறையில் உதவியாளர் ஜியாலஜிஸ்ட்- 29 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    கல்வி தகுதி ஜியாலஜி, அப்ளைடு ஜியாலஜி, ைஹட்ரோ ஜியாலஜி பிரிவில் எம்.எஸ்.சி. படித்து முடித்திருக்க வேண்டும். வயது 1.7.2023 அடிப்ப டையில் பொதுப்பிரிவினர் 18-32 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயது உச்சவரம்பு இல்லை. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் ேதர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விண்ணப்பிக்க கடைசிநாள் வருகிற 23-ந்தேதி ஆகும். விண்ணப்பதாரர்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சுதந்திர தின விழாவின்போது தமிழக முதலமைச்சர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
    • தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது -

    2023ஆம் ஆண்டிற்கான சுதந்திரதின விருது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மற்றும் மகளிர் நலனுக்காக தொண்டாற்றிய சமூக சேவகர்கள் மற்றும் சமூக சேவை தொண்டு நிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின்போது தமிழக முதலமைச்சர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் இவ்விருது பெறுவதற்கு விண்ணப்பங்கள் அனைத்தும் தமிழக அரசின் விருதுகள் இணையளதத்தில் 10.06.2023 வரை பதிவேற்றம் செய்யலாம். மேற்படி அரசாணையின்படி சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கும் பொருட்டு கருத்துருக்களை அனுப்புவதற்கான விதிமுறைகள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனை சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், மொழி, இனம், பண்பாடு, அறிவியல் மற்றும் நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணிபுரியும் சமூக சேவகர் மற்றும் சமூக சேவை தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சமூக சேவை தொண்டு நிறுவனங்கள் அரசு அங்கிகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும் . இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிக்கு திட்ட உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    சேலம்:

    இந்திய அரசின் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளில்   முதன்மை ப்ராஜெக்ட் அசோசியேட், புராஜெக்ட் அசோசியேட்ஸ், திட்ட உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

    இளங்கலை, முதுகலை பட்டம் பொறியியல் அல்லது தொழில்நுட்பம் அல்லது மருத்துவம் படித்திருக்க வேண்டும்.  8 வருட அனுபவம் ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை மற்றும் கல்வியில் வளர்ச்சி நிறுவனங்கள் அல்லது அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். 

    விண்ணப்பதாரர்கள் விரிவான விண்ணப்பத்துடன் விண்ணப்பிக்குமாறு நவோதயா வித்யாலயா சமிதி பள்ளி கேட்டுக் கொண்டுள்ளது. 
    நாமக்கல் ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்றகப்படுகிறது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

     நாமக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையில், நாமக்கல் பிரிவிற்கு 8 ஆண்கள், 3 பெண்கள், திருச்செங்கோடு பிரிவிற்கு 12 ஆண்கள், 1 பெண் என மொத்தம் 24 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். எவ்வித குற்றப் பின்னணியும் இருக்கக் கூடாது. 

    எந்த அமைப்பையோ, அரசியல் கட்சியையோ சார்ந்தவராக இருத்தல் கூடாது. விருப்பமுள்ளவர்கள், நாமக்கல் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள, ஊர்க்காவல்படை அலுவலகத்தில் விண்ணப்பத்தினைப் பெற்று, பூர்த்தி செய்து, நேரிலோ அல்லது, தபால் மூலமோ வருகிற ஜூன் மாதம் 10-ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேருமாறு ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
    ×