search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "E-Service Centre"

    • சுவாமிமலையில் சட்டமன்ற உறுப்பினர் துணை அலுவலகத்தில் இ-சேவை மையம் திறக்கபட்டது.
    • மையத்தை பாபநாச சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா திறந்து வைத்தார்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சட்டமன்ற உறுப்பினர் துணை அலுவலகத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பின்படி இ-சேவை மையத்தை மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் பாபநாச சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துசெல்வம், சுவாமிமலை பெருந்தலைவர் வைஜெயந்தி சிவகுமார், திமுக பேரூர் செயலாளர் பாலசுப்பிர மணியன், திமுக நிர்வாகிகள் நெடுஞ்செழியன், கோபால், குணாளன், ஜெமினி, சிவதாஸ், பெரிய பள்ளிவாசல் ஜமாத்தார்கள் ஜாபர் அலி, சாலிக், யாசின், ஷாஜகான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, மாவட்ட செயலாளர் முகமது மைதீன், மாநில செயற்குழு உறுப்பினர் ரிபாஃய், மாவட்ட மகளிர் அணி பொருளாளர் ஷஃபானா ஃபுர்க்கான், மாவட்ட துணை செயலாளர் வீரமணி, பேரூர் தலைவர் ஃபுர்க்கான், பேரூர் செயலாளர் அசாருதீன், நிர்வாகிகள் இம்ரான், இக்பால், ஷாஜகான், ஷேக் அப்துல்லா, ஹாஜாமைதீன், முகமது அலி, பாபநாசம் ஜாகிர், அப்துல் ஹசன் ஹுசைன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தமிழக அரசு 6 மாதங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தம் மேற்கொண்டு நிதி வழங்குகிறது.
    • இ-சேவை மையங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறது.

    சென்னை:

    அரசு அலுவலகங்களை, மாநில தரவு மையத்துடன் இணைப்பதற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளை டி.சி.எஸ் நிறுவனம் செய்து கொடுத்து வருகிறது. இ.சேவை மையங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறது.

    இதற்காக தமிழக அரசு 6 மாதங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தம் மேற்கொண்டு நிதி வழங்குகிறது.

    இப்போது இதன் ஒப்பந்தம் முடிவடையும் நிலையில் டி.சி.எஸ்.நிறு வனத்துக்கு மேலும் 6 மாத காலத்துக்கு ஒப்பந்தத்தை நீட்டித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது. இதற்காக டி.சி.எஸ் நிறுவனத்துக்கு அரசு ரூ.12.56 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

    • படித்த, கணினி பயிற்சி பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
    • தடையற்ற இணையதள இணைப்பை உறுதி செய்ய வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் தனியார் இ-சேவை மையம் அமைக்க https://tnesevai.in.gov.in மற்றும் http://tnega.tn.gov.in. என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பிக்க விரும்பும் மாற்றுத்திறனாளி ஆபரேட்டர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், கணினியில் நல்ல அறிவும் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழியை படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

    இ-சேவை மைய கட்டிடம் 100 சதுர மீட்டருக்குள் இருக்கவும், மையத்தில் கணினி, பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பயோமெட்ரிக் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் இருத்தல் அவசி யமாகும்.

    குறைந்தபட்சம் 2 mbps அலைவரிசையுடன் தொடர்ச்சியான மற்றும் தடையற்ற இணையதள இணைப்பை உறுதி செய்ய வேண்டும்.

    தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடத்தில் இ-சேவை மையம் அமைக்க வேண்டும்.

    விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வருவாய் பகிர்வு முறையின் விதிகளின்படி இயக்குதல் வேண்டும் என தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.

    தேர்வு செய்யப்பட்டு உரிமம் வழங்கப்படும் மாற்றுத்திறனாளி ஆபரேட்டர்களுக்கு அடையாள அட்டை எண் வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு இ-சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கப்படும்.

    படித்த கணினி பயிற்சி பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் தனியார் இ-சேவை மையம் வைத்து வருமானம் ஈட்டிக்கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆவின் பாலகம் அமைத்திட நிதி உதவியும் இலவச தையல் எந்திரமும் வழங்கப்பட்டு வருகிறது.
    • இணைய தளங்களில் வரும் 28-ந் தேதி வரை விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது -

    தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வாயிலாக அவர்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தும் வகையில் மாற்றுத்திறனா ளிகள் சுயதொழில்புரிந்து முன்னேற்றம் அடைய மானியத்துடன் கூடிய வங்கி கடனும் மத்திய கூட்டுறவு வங்கியில் வட்டியில்லா கடனும் ஆவின் பாலகம் அமைத்திட நிதி உதவியும் இலவச தையல் எந்திரமும் வழங்கப்பட்டு வருகிறது. 

    தற்போது, வருவாய் கிராமத்திற்கு ஒரு தனியார் இ-சேவை மையம் அமைக்க அரசு உத்திரவி ட்டதை தொடர்ந்து, கிராம தொழில்முனைவோர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ஆகியோர்களுக்கு முன்னுரிமை அளித்து உரிய உரிமம் பெற இணைய தளங்களில் வரும் 28-ந் தேதி வரை விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இ-சேவை அமைக்க விருப்பமுள்ள மற்றும் தகுதி உள்ள மாற்றுத்தி றனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பு பெறுவ தற்கான மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்படும். இது தொடர்பான கூடுதல் தகவலுக்கு (விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்) மா வட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கடலூர் அனுகலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

    • ஆப்ரேட்டர்களுக்கு ஐ.டி.எண் மற்றும் பயிற்சி அளிக்கப்படும்
    • கலெக்டர் அறிவிப்பு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வருவாய் கிராமங்கள் தோறும் தனியார் இ-சேவை மையம் அமைக்க மாற்றுத் திறனா ளிகள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு, மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் தனியார் இ-சேவை மையம் அமைக்க உரிமம் வழங்குகிறது.

    எனவே மாவட்டத்தை சேர்ந்த விருப்பம் உள்ள மாற்றுத் திறனாளிகள் https://tnesevai.tn.gov.in மற்றும் https://tnega.tn.gov.in ஆகிய இணையதங்களில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சியும், கணினி பயன்படுத்தவும், தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழி படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

    100 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இ-சேவை மைய கட்டி டத்தில் கணினி, பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பயோ மெட்ரிக் கருவிகள் உபகரணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 2 எம்.பி.பி.எஸ். இ-சேவை மையம் அமையும் இடத்தில் அதிவேக அலைவரி சையுடன் தொடர்ச்சியான தடையற்ற இண்டர்நெட் இணைப்பு இருக்க வேண்டும்.

    தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இடத்தில் இ-சேவை மையம் அமையப்பெற வேண்டும்

    விண்ணப்பங்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாற்றுத் திறனாளி ஆப்ரேட்டர்களுக்கு ஐ.டி.எண் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டு இ-சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கப்படும்.

    மாவட்டத்தில் படித்த கணினி பயிற்சி பெற்றுள்ள மாற்றுத் திறனாளிகள் இ- சேவை மையம் அமைத்து தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் அதில் ெதரிவித்துள்ளார்.

    • கலெக்டர் தகவல்
    • 30-ந் தேதி கடைசி நாள்

    ராணிப்பேட்டை:

    தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின், தலைமை செயல் அலுவலரால் "அனைவருக்கும் இ-சேவை" மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையங்களை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி இந்த திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆர்வமுள்ள மற்றும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    விண்ணப்பங்களை இணையவழி முறையில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். இந்த திட்டத்தைப் பற்றி கூடுதல் தகவல் பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் கீழ்கண்ட "https://tnesevai.tn.gov.in (அல்லது) https://tnega.tn.gov.in" என்ற இணைய முகவரிகளை பயன்படுத்திக்கொள்ளவும் விண்ணப்பங்களை வருகிற 30-ந் தேதி வரை காலை 11.30 முதல் மாலை 6 மணி வரை பதிவு செய்துக்கொள்ளலாம்.

    கிராமப்புறங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.3ஆயிரம்/- மற்றும் நகர்ப்புறத்திற்கு ரூ.6 ஆயிரம்/- செலுத்த வேண்டும். மேலும் அருகிலுள்ள இ-சேவை மைங்களின் தகவல்களை "முகவரி ஆண்ட்ராய்டு மொபைல் செயலியைப் பயன்படுத்திக் காணலாம் அல்லது https://tnega.tn.gov.in இணையதளத்தின் மூலம் காணலாம்.

    இந்த திட்டத்தில் தகுதியான மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் பயனடைய வேண்டும்

    என கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • பெயர் திருத்தம், ஆதார் கார்டு மாற்றுவது உள்ளிட்டவைகளுக்காக இசேவை மையத்திற்கு அதிக அளவில் வருகின்றனர்.
    • பெற்றோர்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.

    அவினாசி :

    அவினாசி தாலூகா அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இ சேவை மையம் உள்ளது.பெயர் திருத்தம் ,ஆதார் கார்டு பெறுதல், போன் நம்பர் மாற்றுவது உள்ளிட்டவைகளுக்காக பொதுமக்கள் இசேவை மையத்திற்கு அதிக அளவில் வருகின்றனர்.

    அவ்வாறு வருபவர்களிடம் அலுவலர்கள் இங்கு சர்வர் ரிப்பேராகிவிட்டது ,ஒன்றும் செய்ய முடியாது, இன்னும் 2 நாட்களுக்கு பிறகு வாருங்கள் என்றும், அப்படி அவசரம் என்றால் தாலுகா அலுவலகத்திற்கு வெளியே உள்ள ஒரு குறிப்பிட்ட ஜெராக்ஸ் கடை பெயரை சொல்லி அங்கு சென்று எடுத்துக்கொள்ளுங்கள் என்று அலைக்கழிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நிலையில் அதிகாரிகளின் இந்த செயலால் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.

    • மதுைர மாவட்டத்தில் இ-சேவை மையம் அமைக்க 13 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
    • மண்டலத்தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் அனைவருக்கும் இ-சேவை திட்டத்தின் கீழ் 13 ஆயிரத்து 336 இளைஞர்கள் மற்றும் தொழில் முனை வோர்களுக்கு இ-சேவை பயனர் குறியீட்டை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைச் செயலாளர் குமரகுருபரன், தமிழ்நாடு மின் முகமை ஆளுமையின் தலைமை நிர்வாக அலுவலர் பிரவீன் நாயர், கலெக்டர் அனீஸ் சேகர், வருவாய் அலுவலர் சக்திவேல், உதவி ஆட்சியர் (பயிற்சி) திவ்யான்சு நிகம், மாநக ராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங், துணை மேயர் நாகராஜன், மண்டலத்தலைவர் பாண்டிச்செல்வி, மிசா பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • விண்ணப்பங்களை மாணவர்கள் இலவசமாக விண்ணப்பிக்கலாம்

    செய்யாறு:

    செய்யாறு சட்டமன்ற அலுவலகத்தில் பொதுமக்கள் பல்வேறு சான்றுகள் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் வகையில் புதியதாக இ-சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஒ.ஜோதி எம்.எல்.ஏ கலந்து கொண்டு இ-சேவை மையத்தை பொது மக்களின் பயன்பா ட்டிற்காக தொடங்கி வைத்தார்.

    மேலும் பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பங்களை இந்த மையத்தில் இலவசமாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் கார்த்தி, சௌந்தர பாண்டியன் மற்றும் கோபு, ஆறுமுகம், ராம் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட அளவிலான ஆய்வு பணிகளில் முதல்வர் ஈடுபட்டார்.
    • குமார் ஜெயிந்த் ஆய்வின் போது பட்டா மாற்றம், இ-சேவை மையம், சர்டிபிகேட் வழங்கும் பணி ஆகியவைகளை ஆய்வு செய்து அதிகாரிகளை பாராட்டினார்.

    கடலூர்:

    கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆய்வுக்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் நேற்று விழுப்புரத்திற்கு வருகை தந்தார். அவருடன் தலைமைச் செயலக கூடுதல் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் வந்திருந்தனர். மாவட்ட அளவிலான ஆய்வு பணிகளில் முதல்வர் ஈடுபட்டார். வட்ட அளவிலான ஆய்வு பணிகளில் தலைமைச் செயலக கூடுதல் செயலாளர்கள் மேற்கொண்டனர். பண்ருட்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயிந்த் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது பட்டா மாற்றம், இ-சேவை மையம், சர்டிபிகேட் வழங்கும் பணி ஆகியவைகளை ஆய்வு செய்து அதிகாரிகளை பாராட்டினார். ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன், கடலூர் கோட்டாச்சியர்அதியமான் கவியரசு, நில அளவை பதிவேடு துறை உதவி இயக்குனர் திருநாவுக்கரசு, தொடர்பு அலுவலர் தாசில்தார் பூபால சந்திரன், பண்ருட்டி தாசில்தார் ஆனந்தி, துணை தாசிலார்கள் சிவகுமார், கிருஷ்ணா கவுரி, தேவநாதன் ஆகியோர் இருந்தனர்.

    • இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • விண்ணப்பங்களை வருகிற ஏப்ரல் மாதம் 14-ந் தேதி மதியம் 2 மணி வரை மட்டுமே பதிவு செய்ய இயலும்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இ-சேவை மையம் அமைக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையிலும் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத்திடவும் தொடங்கப்பட்டு உள்ளது.

    தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத்துறை, கிராமப்புற தொழில் முனைவோர்கள் ஆகிய நிறுவனங்களின் மூலம் இ-சேவை மையங்களை செயல்படுத்த மக்களுக்கான அரசின் சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்க உள்ளது.

    மேலும் அரசின் இணையதள சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகிறது.

    இதனை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின்ஆளுமை முகமையானது "அனைவருக்கும் இ-சேவை மையம்" திட்டத்தின் மூலம் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்கள் தொடங்கி பொதுமக்களுக்கான அரசின் இணைய வழிசேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்குவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் நோக்கமானது அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத்திடவும், மாவட்டங்களில் இ-சேவை மையங்களின் எண்ணிக்கையினை அதிகரித்து இ-சேவை மையங்களில் பொதுமக்கள் காத்திருக்கும் நேரத்தினை குறைத்து மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்குவதாகும்.

    எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் "அனைவருக்கும் இ-சேவை மையம்" திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இணையமுறையில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். இத்திட்டத்தை பற்றிய கூடுதல் தகவல் பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் https://www.tnesevai.tn.gov.in/, https://tnega.tn.gov.in/ என்ற இணையதள முகவரிகளை பயன்படுத்தலாம்.

    விண்ணப்பங்களை வருகிற ஏப்ரல் மாதம் 14-ந் தேதி மதியம் 2 மணி வரை மட்டுமே பதிவு செய்ய இயலும் கிராமப்புறங்களில் இ-சேவை செயல்படுத்துவதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.3 ஆயிரம் ஆகும்.

    மற்றும் நகரப்புறத்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் ஆகும்.

    இவ்விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் கூறிய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆனது விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இ-சேவை வழங்கும் இத்திட்டம் படித்த இளைஞர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
    • கிராமப்புற பகுதிகளில் இசேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இத்திட்டம் வழிவகை செய்கிறது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது ;-

    தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் சார்பில் அனைவருக்கும் இ-சேவை வழங்கும் இத்திட்டம் படித்த இளைஞர்கள், தொழில்முனைவோர் போன்றவர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    மேலும் இ-சேவை மையங்கள் இல்லாத தொலைதூரப் பகுதிகளில் இசேவை மையங்கள் அமைக்க உதவுகிறது.

    மாநிலம் முழுவதும் உள்ள கிராமப்புற பகுதிகளில் இசேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கவும், பொதுமக்கள் அனைவரும் அவர்களின் வீட்டின் அருகாமையிலையே விரைவான மற்றும் சிறந்த சேவையை வழங்க இத்திட்டம் வழிவகை செய்கிறது.

    இத்திட்டத்திற்கு கீழ் விண்ணப்பிக்க, கணினி, அச்சுப்பொறி, வருடி சாதனம், கைரேகை அங்கீகார சாதனம், இணைய வசதி போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை அமைத்திருக்க வேண்டும் மற்றும் குடிநீர் வசதி, பார்வையாளர் அமரும் நாற்காலி, சாய்வுதளம் போன்ற குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும்.

    மேலும் மைய ஆப்ரேட்டர் கணினி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தின் தகுதி நிபந்தனைகளை அனைத்தும் அறிய கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தை பயன்படுத்தவும்.

    அனைவருக்கும் இ-சேவை திட்டத்தின் வலைத்தளம் கடந்த 15.3.2023 முதல் திறக்கப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்க ப்படுகிறது. தற்போது www. tnesevai.tn.gov.in (அல்லது)www. tnega.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக 14.4.2023 வரை 8 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

    மேலும், வலைத்தளத்தில் விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டதும், தமிழ்நாடு மின் ஆளுமை முக மையால் விண்ணப்பத்தை சரிபார்க்க ப்பட்டு, இ-சேவை குறியீடு மற்றும் கடவுச்சொல்லை குறுஞ்செய்தி வாயிலாக அவர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் மூலம் பெற்று கொள்ளலாம். கிராமப்புற பகுதியில் இ-சேவை மையம் அமைக்க ரூ.3000 மற்றும் நகர்ப்புற பகுதியில் இ-சேவை மையம் அமைக்க ரூ.6000- விண்ணப்பம் கட்டணமாக செலுத்த வேண்டும்.

    இதுவரை, 1,369 விண்ணப்பங்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இத்திட்டத்தை ஒரு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டமாக பயன்படுத்திக்கொள்ள படித்த இளைஞர்கள், தொழில்முனைவோர் போன்ற அனைவரையும், இத்திட்டத்தில் விண்ணப்பி த்து பயன் பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×