இ-சேவை மையத்தில் பொதுமக்கள் அலைக்கழிப்பு

பெயர் திருத்தம், ஆதார் கார்டு மாற்றுவது உள்ளிட்டவைகளுக்காக இசேவை மையத்திற்கு அதிக அளவில் வருகின்றனர்.பெற்றோர்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

அவினாசி :

அவினாசி தாலூகா அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இ சேவை மையம் உள்ளது.பெயர் திருத்தம் ,ஆதார் கார்டு பெறுதல், போன் நம்பர் மாற்றுவது உள்ளிட்டவைகளுக்காக பொதுமக்கள் இசேவை மையத்திற்கு அதிக அளவில் வருகின்றனர்.

அவ்வாறு வருபவர்களிடம் அலுவலர்கள் இங்கு சர்வர் ரிப்பேராகிவிட்டது ,ஒன்றும் செய்ய முடியாது, இன்னும் 2 நாட்களுக்கு பிறகு வாருங்கள் என்றும், அப்படி அவசரம் என்றால் தாலுகா அலுவலகத்திற்கு வெளியே உள்ள ஒரு குறிப்பிட்ட ஜெராக்ஸ் கடை பெயரை சொல்லி அங்கு சென்று எடுத்துக்கொள்ளுங்கள் என்று அலைக்கழிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நிலையில் அதிகாரிகளின் இந்த செயலால் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com