search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anand Mahindra"

    • எலான் மஸ்க் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
    • 2-வது இடத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் உள்ளார்.

    டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் போன்ற பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் எலான் மஸ்க் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 233 பில்லியன் டாலராக உள்ளது.

    2-வது இடத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு 202 பில்லியன் டாலராக உள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக எலான் மஸ்க் அங்கு சென்றிருந்தார். அங்கு அவரை பெர்னார்ட் அர்னால்ட் சந்தித்தார். இருவரும் மதிய உணவு விருந்தில் ஒன்றாக பங்கேற்றனர். இந்த சந்திப்பு பல்வேறு விவாதங்களை எழுப்பி இருந்த நிலையில், மகேந்திரா குழும தலைவர் ஆனந்த் மகிந்திராவின் மனைவிக்கு ஒரு வித்தியாசமான சந்தேகம் கிளம்பி உள்ளதாக அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மகிந்திராவின் பதிவில், பெர்னார்ட் அர்னால்டும், எலான் மஸ்கும் சந்தித்து மதிய உணவு அருந்தி இருந்தாலும், இந்த விருந்துக்கான செலவை யார் ஏற்பது என தனது மனைவிக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை பார்த்த வலைதள பயனர்கள் தங்களது கற்பனை பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

    • கட்டிடத்தில் சர்தார் வல்லபாய் படேல், அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் மற்றும் ஏராளமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.
    • குமாவத் தனது வலைதள பதிவில், ‘புதிய இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் 2 பெரிய தூண்கள் என்னால் செதுக்கப்பட்டவை’. இந்த பெருமையை நான் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை என குறிப்பிட்டிருந்தார்.

    சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கும் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திராவின் ஒவ்வொரு பதிவும் ஏராளமான லைக்குகளை பெற்று வருகிறது.

    இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். கட்டிடத்தில் சர்தார் வல்லபாய் படேல், அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் மற்றும் ஏராளமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.

    இவற்றை செதுக்கிய சிற்பி மூர்த்திகர் நரேஷ் குமாவத்தை தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா வாழ்த்தி உள்ளார். குமாவத் தனது வலைதள பதிவில், 'புதிய இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் 2 பெரிய தூண்கள் என்னால் செதுக்கப்பட்டவை'. இந்த பெருமையை நான் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை என குறிப்பிட்டிருந்தார்.

    அவரது இந்த பதிவை ஆனந்த் மகிந்திரா மறு பதிவு செய்து, 'அற்புதமான பணி, அற்புதமான மரியாதை, வாழ்த்துக்கள்' என பதிவிட்டுள்ளார். 'கம்பீரமான கலை படைப்பு' என்ற தலைப்பில் பகிரப்பட்ட இந்த பதிவு ஆயிரக்கணக்கான பார்வைகளையும், கருத்துக்களையும் பெற்று வருகிறது.

    • தினாநாத்சாகு என்பவர் தனது குடும்பத்தினருடன் கார் டெலிவரி பெற சென்றுள்ளார்.
    • 23-வது திருமண நாளன்று கார் டெலிவரி கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்த சாகு தனது மனைவி, மகன், மகளுடன் சேர்ந்து அந்த கார் முன்பு நடனமாடி மகிழ்கிறார்கள்.

    புதிய கார் வாங்க வேண்டும் என்பது சிலருக்கு கனவாக இருக்கும். அந்த கனவு நிறைவேறிய மகிழ்ச்சியை ஆனந்தமாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டுள்ள டுவிட்டில், ஒரு வீடியோ பதிவிட்டு இருந்தார். அதில், ஒரு குடும்பத்தினர் புதிய கார் வாங்கிய மகிழ்ச்சியை ஷோரூமிலேயே நடனமாடி கொண்டாடிய காட்சிகள் இருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அதன்படி தினாநாத்சாகு என்பவர் தனது குடும்பத்தினருடன் கார் டெலிவரி பெற சென்றுள்ளார். அவரது 23-வது திருமண நாளன்று கார் டெலிவரி கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்த சாகு தனது மனைவி, மகன், மகளுடன் சேர்ந்து அந்த கார் முன்பு நடனமாடி மகிழ்கிறார்கள்.

    இந்த வீடியோவை ஆட்டோ மொபைல் டீலர்கள் சங்க தலைவர் டுவிட் செய்ய அதனை ஆனந்த் மஹிந்திரா ரீ-டுவிட் செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில் அதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரு வீட்டில் மகிந்திரா நிறுவனத்தின் ஜீப் வடிவத்தில் டி.வி. ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது.
    • புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் புகைப்படம் குறித்த கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மகிந்திரா டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அதில் ஒரு வீட்டில் மகிந்திரா நிறுவனத்தின் ஜீப் வடிவத்தில் டி.வி. ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஸ்டாண்டின் மீது எல்.இ.டி. டி.வி. வைக்கப்பட்டுள்ளது. இந்த வித்தியாசமான டிசைனை பார்த்து வியந்து பதிவிட்டுள்ள ஆனந்த் மகிந்திரா, 'நன்றி... நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். நான் பார்த்ததில் மிகப்பெரிய டேஸ்போர்டு ஸ்கிரீன் இதுதான்' என்று பதிவிட்டுள்ளார்.

    அவரது இந்த புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் புகைப்படம் குறித்த கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    • உதவித்தொகை மற்றும் பிற வகையான ஆதரவை வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஒரே நேரத்தில் நாட்டின் முக்கிய தலைவர்கள் 15 பேரின் உருவங்களை ஓவியங்களாக வரைந்து அசத்திய நூர்ஜஹான் என்ற சிறுமியை மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா வெகுவாக பாராட்டியுள்ளார். இது எப்படி சாத்தியமாகும் என்றும் அவர் ஆச்சரியத்தில் மூழ்கினார்.

    இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், "இது எப்படி சாத்தியமாகும். இதன் மூலம் இவர் ஒரு திறமையான கலைஞர் என்பது தெளிவாகிறது. ஆனால் ஒரே நேரத்தில் 15 ஓவியங்களை வரைவது கலையை விட மேலானது- இது அசாத்தியமான ஒன்று! சிறுமி வசிக்கும் இடம் அருகில் உள்ள யாராவது இந்த சாதனையை உறுதிப்படுத்த முடியுமா? இது உண்மை என்றால், அவள் கண்டிப்பாக ஊக்குவிக்கப்பட வேண்டும். அவருக்கு உதவித்தொகை மற்றும் பிற வகையான ஆதரவை வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    மொத்தம் 741 பண்டைய தமிழ் எழுத்துக்களால் உருவான அசத்தலான உருவப்படம். தமிழரை பாராட்டி ஆனந்த் மஹிந்திரா வெளியிட்ட ட்விட் வைரலாகி வருகிறது.


    தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த நபர் வரைந்த ஓவியம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கனேஷ் என்ற நபர் மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திராவின் உருவ படத்தை மிக வித்தியாசமாக வரைந்து அசத்தி இருக்கிறார். 

    ஓவியத்தில் கணேஷ் பண்டைய தமிழ் எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார். இதனை உற்று பார்க்கும் போது உருவப்படத்தில் தமிழ் எழுத்துக்கள் மட்டுமே தெரியும். ஓவியத்தில் ஆனந்த் மஹிந்திரா உருவப்படத்தை வரைய கணேஷ் மொத்தம் 741 பண்டை கால தமிழ் எழுத்துக்களை பயன்படுத்தி இருக்கிறார்.

     ஆனந்த் மஹிந்திரா

    கணேஷ் இந்த உருவப்படத்தை வரைந்த போது எடுத்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு அதில் ஆனந்த் மஹிந்திரா மற்றும் மஹிந்திரா குழும நிறுவனங்களையும் டேக் செய்து இருக்கிறார். இதை கவனித்த ஆனந்த் மஹிந்திரா கணேஷ் ட்விட்-ஐ ரி-ஷேர் செய்தார். மேலும் இந்த வரைபடத்தின் பிரேம் செய்யப்பட்ட நகலை தனக்கு வழங்குமாறு ஆனந்த் மஹிந்திரா கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வரைபடத்தை தனது அறையில் வைத்து அலங்கரிக்க விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார். 

    இதுகுறித்து ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் பதிவில், “ஆஹா, என் உருப்படம் 741 பழமையான தமிழ் எழுத்துக்களால் வடிவானது, நான் வியக்கிறேன். தமிழ் மொழி பிரம்மாண்டத்தின் பொருட்டு, உருவாக்கியவரின் பாராட்டாக, உருவ படத்தை என் வீட்டில் வைக்க  விருப்பபடுகிறேன்..” என குறிப்பிட்டு இருக்கிறார்.
    இந்திய மக்கள் பயணங்களில் சந்திக்கும் பிரச்சனையை சரி செய்ய ஆனந்த் மஹிந்திராவுக்கு 11 வயது சிறுமி அட்வைஸ் கொடுத்திருக்கிறார். #AnandMahindra
    மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா 11 வயது சிறுமிக்கு ட்விட்டரில் தனது பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார். ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் பதிவில் 11 வயது சிறுமி தனக்கு எழுதியிருந்த கடிதத்தின் புகைப்படத்தையும் இணைத்திருந்தார்.

    இந்திய சாலைகளில் பயணிக்கும் போது அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சனையை சரி செய்ய மிக எளிய வழிமுறையை மும்பையில் வசிக்கும் 11 வயது சிறுமி ஆனந்த் மஹிந்திராவுக்கு தெரிவித்திருக்கிறார். சாலைகளில் செல்லும் வாகனங்களில் ஹாரன் எழுப்பப்படும் போது பெரும்பாலான நேரங்களில் நம்மில் பலரும் பாதிக்கப்பட்டிருப்போம்.



    இதற்கு தீர்வு காண 11 வயதான மஹிகா மிஸ்ரா ஆனந்த் மஹிந்திராவுக்கு கோரிக்கையாக வைத்திருந்தார். சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளில் பலர் தேவையற்ற நிலைகளில் ஹாரன் எழுப்புவதை தடுக்கும் நோக்கில், பத்து நிமிடங்களில் ஐந்து முறை மட்டும் ஹாரன் வேலை செய்யும் படி மாற்றம் கொண்டு வரவேண்டும் என அவர் தெரிவித்திருக்கிறார்.

    இத்துடன் ஹாரன் ஒலிக்கும் நேரம் வெறும் மூன்று நொடிகள் மட்டுமே இருக்க வேண்டும் என மிஸ்ரா தெரிவித்திருக்கிறார். இதுபோன்று மாறும் போது ஹாரன் மூலம் ஏற்படும் ஒலி மாசு பெருமளவு குறைக்கப்படும் என அவர் தனது கடிதத்தில் எழுதியிருக்கிறார்.


    சிறுமியின் கடித்ததை மின்னஞ்சலில் பார்த்த ஆனந்த் மஹிந்திரா கடிதத்தின் புகைப்படத்துடன், சிறுமியின் செயலை பாராட்டி தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். நாள் முழுக்க உழைத்து திரும்பும் போது, இதுபோன்ற மின்னஞ்சலை பார்க்கும் போது களைப்பு முழுமையாக நீங்கிவிடுகிறது. இந்த உலகம் சிறப்பாகவும், அமைதியாகவும் இருக்க நினைக்கும் இச்சிறுமி போன்ற மக்களுக்காக நான் பணியாற்றுகிறேன் என்று எனக்கு தெரியும் என சிறுமியின் செயல் பற்றி தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். #AnandMahindra

    கட்டிலில் இருந்து கீழே இறங்கி விளையாட கால் உயரம் எட்டாத நிலையில், ஒரு வயது கூட நிரம்பாத குழந்தை செய்த அசாத்திய காரியத்தை கண்டு வியந்த பிரபல தொழிலதிபர் அந்த குழந்தைக்கு வேலைவாய்ப்பை இப்போதே உறுதிப்படுத்தியுள்ளார்.
    ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் பல நேரங்களில் அதிகமாக வதந்திகள் பரவினாலும், சில வேளைகளில் வியத்தகு சம்பவங்களும் பதிவிடப்படுகின்றன. அவ்வகையில் சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ நமது பார்வையை தற்போது கவர்ந்துள்ளது.

    யாரும் இல்லாத தனி அறையில் கட்டிலில் அமர்ந்திருக்கும் சுமார் ஒரு வயது குழந்தை கீழே இறங்கி விளையாட நினைக்கிறது. இதற்காக கட்டிலில் இருந்து காலை வெளியே நீட்டி இறங்க முயற்சிக்கையில், அந்த பிஞ்சு பாதம் தரையை தொட முடியாமல் தவிக்கிறது.



    ஒரு காரியத்தை அடைய நமது உடல் அமைப்புகள் ஒத்து வராத போது அதற்கு ஏற்ப இட்டுக்கட்டி நினைத்ததை முடித்துக் கொள்ள பெரியவர்களாகிய நாம் சில நேரங்களில் சரியான முடிவெடுக்க தெரியாமல் திணறுவதுண்டு. ஆனால் இந்தச் சுட்டிக் குட்டியின் மூளை சில வினாடிகளில் மின்னல் வேகத்தில் செயலாற்றியது.

    கட்டில் மற்றும் தரைக்கான இடைவெளியை குறைக்க அங்கிருந்த தலையணைகளை தனது பலம் கொண்டு மட்டும் இழுத்து கீழே போட்ட அந்த குழந்தை தனது விளையாட்டுத் தோழனான பொம்மையையும் சேகரித்துக் கொண்டு அடிப்படாமல் கட்டிலில் இருந்து தலையணையின் மேல் விழும் வீடியோ காட்சி தான் நம்மை கவர்ந்தது. இந்த வீடியோ நிச்சயம் உங்களையும் கவரும்.



    ஏனெனில் இந்த வீடியோ கண்டு வியப்படைந்து போன மஹிந்திரா தலைவர் ஆனந்த் மஹிந்திரா, "இந்த குழந்தை கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வந்தால், அதற்கு எங்கள் நிறுவனத்தில் நிச்சயமாக நல்ல வேலை காத்திருக்கிறது" என தனது ட்விட்டர் பக்கத்தில் இப்போதே உறுதிமொழி அளித்துள்ளார்.

    ட்விட்டரில் ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டிருக்கும் வீடியோவை கீழே காணலாம்..,


    சமீபத்தில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவிய ஷு டாக்டர் நர்ஸி ராமின், மேலாண்மை திறனை கண்டு வியந்த ஆனந்த் மஹிந்திரா புது கடையை அமைத்து கொடுத்துள்ளார். #AnandMahindra
    சண்டிகர்:

    சமீபத்தில் அரியானாவில் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவரின் புகைப்படம் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவிற்கும் இந்த படம் வந்திருந்தது. இந்த படத்தை பார்த்த ஆனந்த் மஹிந்திரா ஆச்சரியத்தில் மூழ்கினார். காரணம், அந்த புகைப்படத்தில் தொழிலாளி  அவரின் கடையில் எழுதியிருந்த வசனம்.

    ‘செருப்புகளின் காயங்களை போக்கும் மருத்துவமனை .. டாக்டர் நர்ஸி ராம்’. இதை பார்த்த ஆனந்த் இந்தப் படத்தில் இருக்கும் தொழிலாளி இந்திய மேலாண்மை நிறுவனங்களில் மார்க்கெட்டிங் பாடம் நடத்துவதற்கு தகுதியானவர் என்றும் குறிப்பிட்டு,  அவரின் முழு விவரம் குறித்து யாருக்கேனும் தெரிந்திருந்தால் தன்னை தொடர்புக் கொள்ளுமாறு கூறியிருந்தார்.



    சில மாத தேடலுக்கு பின்னர் செருப்பு தொழிலாளி நரசிம்மனை கண்டுப்பிடித்து நடந்த எல்லாவற்றையும் கூறியுள்ளனர். மேலும், அவரை ஆனந்த் மகிந்த்ரா வேலைக்கு அழைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.பின்பு அவர்கள் நரசிம்மனிடம்  பணத்தொகையை பரிசாக வழங்கியுள்ளனர். ஆனால், நரசிம்மனோ  உழைக்கும் வருமானமே போதும் வேண்டுமென்றால் என்னுடையை கடையை சரிசெய்து தாருங்கள் என்று வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

    அதனைத் தொடர்ந்து அவருக்கு புதிய பணியிடத்தை பரிசாக வழங்க இருப்பதாக அறிவித்துள்ள ஆனந்த் மஹிந்திரா, அந்த பணியிடத்தின் வடிவமைப்பை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு உதவியதற்காக பலரும் ஆனந்த் மஹிந்திராவுக்கு தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
    ×