என் மலர்

  செய்திகள்

  ஆனந்த் மஹிந்திராவை ஈர்த்த ஷு டாக்டர் - வாட்ஸ்அப் மூலம் கிடைத்த புதுக்கடை
  X

  ஆனந்த் மஹிந்திராவை ஈர்த்த ஷு டாக்டர் - வாட்ஸ்அப் மூலம் கிடைத்த புதுக்கடை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சமீபத்தில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவிய ஷு டாக்டர் நர்ஸி ராமின், மேலாண்மை திறனை கண்டு வியந்த ஆனந்த் மஹிந்திரா புது கடையை அமைத்து கொடுத்துள்ளார். #AnandMahindra
  சண்டிகர்:

  சமீபத்தில் அரியானாவில் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவரின் புகைப்படம் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவிற்கும் இந்த படம் வந்திருந்தது. இந்த படத்தை பார்த்த ஆனந்த் மஹிந்திரா ஆச்சரியத்தில் மூழ்கினார். காரணம், அந்த புகைப்படத்தில் தொழிலாளி  அவரின் கடையில் எழுதியிருந்த வசனம்.

  ‘செருப்புகளின் காயங்களை போக்கும் மருத்துவமனை .. டாக்டர் நர்ஸி ராம்’. இதை பார்த்த ஆனந்த் இந்தப் படத்தில் இருக்கும் தொழிலாளி இந்திய மேலாண்மை நிறுவனங்களில் மார்க்கெட்டிங் பாடம் நடத்துவதற்கு தகுதியானவர் என்றும் குறிப்பிட்டு,  அவரின் முழு விவரம் குறித்து யாருக்கேனும் தெரிந்திருந்தால் தன்னை தொடர்புக் கொள்ளுமாறு கூறியிருந்தார்.  சில மாத தேடலுக்கு பின்னர் செருப்பு தொழிலாளி நரசிம்மனை கண்டுப்பிடித்து நடந்த எல்லாவற்றையும் கூறியுள்ளனர். மேலும், அவரை ஆனந்த் மகிந்த்ரா வேலைக்கு அழைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.பின்பு அவர்கள் நரசிம்மனிடம்  பணத்தொகையை பரிசாக வழங்கியுள்ளனர். ஆனால், நரசிம்மனோ  உழைக்கும் வருமானமே போதும் வேண்டுமென்றால் என்னுடையை கடையை சரிசெய்து தாருங்கள் என்று வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

  அதனைத் தொடர்ந்து அவருக்கு புதிய பணியிடத்தை பரிசாக வழங்க இருப்பதாக அறிவித்துள்ள ஆனந்த் மஹிந்திரா, அந்த பணியிடத்தின் வடிவமைப்பை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு உதவியதற்காக பலரும் ஆனந்த் மஹிந்திராவுக்கு தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
  Next Story
  ×