என் மலர்
நீங்கள் தேடியது "வரைபடம்"
- 16 கால் மண்டபம், கோவில் ராஜகோபுரம் ஆகியவற்றை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பார்வையிட்டார்.
- கோவிலின் வரைபடத்தை வைத்து மின்விளக்குகள் பொருத்துதல் தொடர்பாக ஆய்வு செய்தார்.
மன்னார்குடி:
மன்னார்குடி ராஜகோபா லசாமி கோவிலில் குடமு ழுக்கு திருப்பணி ஆயத்த பணிகளை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது நுழைவு வாயிலில் உள்ள 16 கால் மண்டபம், கோவில் ராஜகோபுரம், மற்றும் செங்க மலத்தாயார், ராஜ கோபாலசாமி சன்ன திகள் ஆகியவற்றை பார்வையி ட்டார்.
தொடர்ந்து, கோவிலின் வரைபடத்தை வைத்து கோவிலில் மின்விளக்குகள் பொருத்துதல் தொடர்பாக ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, கோவில் நிர்வாக அலுவலர் மாதவன், இந்து சமய அறநிலையத்துறை மின்சார பிரிவு செயற்பொறியாளர் வெங்கட சுப்பிரமணியன், தொல்லியல் துறை சேகர், மாவட்ட வன அலுவலர் ஸ்ரீதர், மன்னார்குடி நகர்மன்ற தலைவர் மன்னை சோழராஜன், கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளவரசன், தி.மு.க. நகர செயலாளர் வீரா கணேசன், ஒன்றிய செயலாளர் முத்துவேல் சிவா, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் பாக்கியசாமி, பைங்காநாடு இளையராஜா உள்பட பலர் உடன் இருந்தனர்.
- வேளச்சேரி பகுதியில் உள்ள மக்கள் தங்களது கார்களை பாதுகாப்பாக மேம்பாலத்தில் நிறுத்தி இருந்தனர்.
- புதிதாக இடம் வாங்குபவர்கள் அந்தந்த பகுதிகளுக்கு சென்று இங்கு தண்ணீர் தேங்குமா? என்று அடுத்தவர்களிடம் கேட்பது வழக்கம்.
சென்னை:
சென்னையில் ஒவ்வொரு பருவமழையின் போதும் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதப்பது வாடிக்கையாக உள்ளது. சென்னை மாநகரம் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் வெள்ளம் தேங்குவதும் அதை மக்கள் எதிர்கொள்வதும் தொடர்கதையாகவே உள்ளது.
கடந்த வாரம் மழை வந்தபோது சென்னையில் 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததால், வேளச்சேரி பகுதியில் உள்ள மக்கள் தங்களது கார்களை பாதுகாப்பாக மேம்பாலத்தில் நிறுத்தி இருந்தனர்.
ஏனென்றால் அவர்கள் வசிக்கும் வீடுகளில் முட்டளவுக்கு மேல் தண்ணீர் தேங்கும் என்பதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதேபோல் பல பகுதிகளிலும் மக்கள் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைக்க தொடங்கினார்கள்.
இதை கருத்தில் கொண்டு மழை காலங்களில் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு மழைநீர் தேங்கும் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள சென்னை சி.எம்.டி.ஏ. இப்போது புதிதாக வரைபடம் தயாரித்துள்ளது. இதற்கு அரசு அனுமதி அளித்ததும் மாநகராட்சிக்கு வரைபடம் வழங்கப்படும்.
சென்னை சி.எம்.டி.ஏ.வின் பழைய எல்லைக்குட்பட்ட அதாவது, சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சி பகுதிகளை உள்ளடக்கிய 1189 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கான பகுதிகளில் (வண்டலூர் வரை) புதிதாக யாரேனும் வீடு கட்ட மாநகராட்சியில் விண்ணப்பிக்கும்போது அவர்களுக்கு இந்த வரைபடம் காண்பிக்கப்படும். அந்த பகுதியில் எவ்வளவு தண்ணீர் தேங்கும் என்ற விவரங்களை தெரிவித்து அதிகாரிகள் ஆலோசனை வழங்குவார்கள்.
2 அடி தண்ணீர் தேங்குமா? அல்லது 5 அடி தண்ணீர் தேங்குமா? 10 அடிக்கு தண்ணீர் நிற்குமா? போன்ற விவரங்களின் அடிப்படையில் அதற்கேற்ப கட்டுமானங்களை மேற்கொள்ள தேவையான தகவலை கொடுப்பார்கள்.
இதன் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வீடு கட்ட முடியும். புதிதாக இடம் வாங்குபவர்கள் அந்தந்த பகுதிகளுக்கு சென்று இங்கு தண்ணீர் தேங்குமா? என்று அடுத்தவர்களிடம் கேட்பது வழக்கம்.
ஆனால் இப்போது சி.எம்.டி.ஏ. வரைபடம் (மேப்) தயாரித்துள்ளதால் அதனை பார்த்து தண்ணீர் தேங்கும் பகுதிகளை மக்கள் தெரிந்து கொண்டு அதற்கேற்ப முடிவெடுக்க வாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. விரைவில் இது நடைமுறைக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.







