search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amazon"

    • அமேசான் தற்போது சலுகை விவரங்களை டீசர் வடிவில் வெளியிட்டு வருகிறது.
    • ஐபோன் 13 மாடல் ரூ. 40 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் கிடைக்கும்.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 விலை அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் விற்பனையில் அதிரடியாக குறைக்கப்படுகிறது. அமேசான் சிறப்பு விற்பனை அக்டோபர் 7-ம் தேதி பிரைம் சந்தா வைத்திருப்போருக்கும், அக்டோபர் 8-ம் தேதி அனைவருக்கும் துவங்குகிறது. இது அமேசான் தளத்தில் நடைபெறும் மிகப்பெரும் விற்பனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    இந்த விற்பனையில் பல்வேறு பொருட்களுக்கும் அசத்தல் சலுகைகள் வழங்கப்படும் நிலையில், ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்பட இருக்கும் சலுகை விவரங்களை அமேசான் தற்போது டீசர் வடிவில் வெளியிட்டு வருகிறது. அதில் ஐபோன் 13 மாடலுக்கு வழங்கப்படும் சலுகை பற்றிய விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது.

     

    அமேசான் வெளியிட்டு இருக்கும் டீசரின் படி கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்-இன் போது ஐபோன் 13 மாடல் ரூ. 40 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 13 சரியான விலை பற்றி எந்த தகவலும் இல்லாத நிலையில், இதற்காக உருவாக்கப்பட்டு இருக்கும் பிரத்யேக வலைப்பக்கத்தில் ஐபோன் 13 விலை ரூ. 40 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

    ஐபோன் 13 தற்போது ரூ. 59 ஆயிரத்து 900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 15 சீரிஸ் அறிமுகத்தை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட விலை குறைப்பில், ஐபோன் 13 விலை குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலை குறைப்பு தவிர, அமேசான் தளத்தில் சிறப்பு தள்ளுபடி, வங்கி சார்ந்த தள்ளுபடி, எக்சேன்ஜ் சலுகை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    இவை அனைத்தையும் சேர்க்கும் போது ஐபோன் 13 விலை ரூ. 40 ஆயிரத்திற்கும் குறைவாக கிடைக்கும். இதில் ஐபோன் 13 மாடலுக்கு வழங்கப்படும் சலுகை விவரங்கள், வங்கி தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் பற்றிய தகவல்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

    • அமேசான் கிரேட் இந்தியன் சிறப்பு விற்பனையில் அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
    • தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    அமேசான் வலைதளத்தில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை அடுத்த சில வாரங்களில் துவங்க இருக்கிறது. இதே போன்ற சிறப்பு விற்பனை ஃப்ளிப்கார்ட் வலைதளத்திலும் துவங்க இருக்கிறது. இந்த நிலையில், அமேசான் தளத்தில் வழங்கப்பட இருக்கும் சிறப்பு சலுகைகள் பற்றிய தகவல்கள் டீசர்களாக வெளியிடப்பட்டு உள்ளன.

    அந்த வகையில், தற்போதைய அமேசான் சிறப்பு விற்பனையில் மொபைல் போன் மாடல்களுக்கு அதிகபட்சம் 40 சதவீதம், அலெக்சா, ஃபயர் டி.வி. மற்றும் கின்டில் போன்ற சாதனங்களுக்கு 55 சதவீதம், வீட்டு உபயோக, சமயலறை சாதனங்களுக்கு 70 சதவீதம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    இதே போன்று லேப்டாப், ஸ்மார்ட்வாட்ச், இயர்போன், டி.வி., மின்சாதனங்களுக்கு 75 சதவீதமும், புத்தகங்கள், விளையாட்டு பொருட்கள், அழகு சாதனங்கள் மற்றும் இதர பொருட்களுக்கு 80 சதவீதம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது.

    இதுதவிர கிராண்ட் ஒபனிங் டீல், கிக்ஸ்டார்டர் டீல், பிளாக்பஸ்டர் டீல், 8 மணி டீல், ரூ. 999-க்கு குறைந்த விலை டீல், ரொக்க பரிசு, கூப்பன் தள்ளுபடி, கேஷ்பேக் வழங்குவதோடு, பல்வேறு போட்டிகளும் நடைபெற உள்ளன.

    இத்துடன் எஸ்.பி.ஐ. வங்கியுடன் இணைந்து கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் மாத தவணை சலுகை பயன்படுத்தும் போது 10 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    • ஐபோன் 14 மாடல் மொத்தத்தில் ஆறு விதமான நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
    • சிறப்பு விற்பனையின் கீழ் ஐபோன் 14 மாடலுக்கு அசத்தல் விலை குறைப்பு அறிவிப்பு.

    இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 மாடல் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. அமேசான் கிரேட் பிரீடம் பெஸ்டிவல் சேல் விற்பனையின் கீழ் ஐபோன் 14 மாடலுக்கு அசத்தல் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அமேசான் பிரைம் சந்தா வைத்திருப்போர் மட்டுமின்றி அனைவரும் இந்த விற்பனையில் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும்.

    பல்வேறு பிரிவுகளில் கிடைக்கும் ஏராளமான பொருட்களுக்கு வழங்கப்படும் சலுகை விவரங்களை அமேசான் ஏற்கனவே அறிவித்துவிட்டது. அந்த வகையில் ஐபோன் 14 மாடலுக்கான சலுகை அனைவரையும் கவரும் வகையில் அமைந்து இருக்கிறது. ஐபோன் 14 மாடலுக்கு அமேசான் வலைதளத்தில் ரூ. 13 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

     

    அமேசான் கிரேட் பிரீடம் பெஸ்டிவல் சேல் விற்பனையின் கீழ் ஐபோன் 14 மாடலுக்கு 16 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி ஐபோன் 14 மாடலின் 128 ஜிபி மெமரி கொண்ட பேஸ் வேரியன்ட் விலை ரூ. 79 ஆயிரத்து 900-இல் இருந்து தற்போது ரூ. 66 ஆயிரத்து 999 என்று குறைந்திருக்கிறது. ஐபோன் 14 மாடலின் 256 ஜிபி மெமரி மாடலுக்கு 13 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அந்த வகையில், இதன் விலை ரூ. 89 ஆயிரத்து 900-இல் இருந்து ரூ. 77 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. ஐபோன் 14 மாடலின் 512 ஜிபி வேரியன்ட் விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 900-இல் இருந்து ரூ. 94 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இத்துடன் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கு ரூ. 1000 ஆயிரம் தள்ளுபடி மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை சலுகையும் வழங்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 மாடல்- புளூ, மிட்நைட், பர்பில், பிராடக்ட் ரெட், ஸ்டார்லைட் மற்றும் எல்லோ என ஆறு வித நிறங்களில் கிடைக்கிறது. அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 14 மாடலில் ஏ15 பயோனிக் சிப்செட், 12MP டூயல் பிரைமரி கேமரா, 12MP செல்பி கேமரா, 6.1 இன்ச் OLED டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

    • அமேசான் பிரைம் சந்தா ஒரு மாதத்திற்கான கட்டணம் ரூ. 299 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    • சிறப்பு விற்பனையில் மின்சாதன பொருட்களுக்கு அதிக தள்ளுபடி வழங்கப்பட்டு இருக்கிறது.

    அமேசான் பிரைம் டே சேல் 2023 பிரைம் டே சேல் துவங்கி நடைபெற்று வருகிறது. அமேசான் பிரைம் சந்தா வைத்திருப்போர், இந்த சிறப்பு விற்பனையில் ஏராளமான பொருட்களுக்கு அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இன்று (ஜூலை 15), நாளை (ஜூலை 16) அமேசான் பிரைம் டே சேல் பிரைம் சந்தா வைத்திருப்போருக்கு நடைபெற்று வருகிறது.

    இந்த சிறப்பு விற்பனையில் மின்சாதன பொருட்களான ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவி, வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் ஸ்மார்ட் சாதனங்களுக்கு அதிக தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் ஐபோன் 14 மாடலின் விலை ரூ.65 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இத்துடன் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு, ஐசிஐசிஐ டெபிட், கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

     

    தற்போது துவங்கி இருக்கும் விற்பனை 48 மணி நேரம் மட்டுமே நடைபெறுகிறது. பிரைம் சந்தா சேவையை பெறாதவர்கள், தற்போது அமேசான் பிரைம் சேவையை பெற்று, விரும்பிய பொருட்களை சலுகை விலையில் வாங்கிட முடியும். அமேசான் பிரைம் சந்தா ஒரு மாதத்திற்கான கட்டணம் ரூ. 299 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    மூன்று மாதத்திற்கான அமேசான் பிரைம் சந்தா கட்டணம் ரூ. 599, ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தாவுக்கான கட்டணம் ரூ. 1,499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முதல் முறை அமேசான் பிரைம் சந்தாவில் இணைய இருப்பவர்கள், ஒரு மாத காலத்திற்கு சோதனை அடிப்படையில் இலவசமாக வழங்கப்படுகிறது.

    ஸ்மார்ட்போனிற்கான சலுகை விவரங்கள்:

    அமேசான் பிரைம் டே சேல் விற்பனையின் போது ஐபோன் 14 மாடலுக்கு ரூ. 65 ஆயிரத்து 999 என்று குறைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஐபோன் 14 மாடல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ. 79 ஆயிரத்து 900 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய விலை குறைப்பு மட்டுமின்றி, எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு, ஐசிஐசிஐ டெபிட், கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஐபோன் மட்டுமின்றி ஐகூ நியோ 7 ப்ரோ 5ஜி, ஒன்பிளஸ் நார்டு 3 5ஜி, ரியல்மி நார்சோ 60 5ஜி மற்றும் சாம்ங் கேலக்ஸி M34 5ஜி மாடல்களுக்கும் விலை குறைப்பு, சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இவை மட்டுமின்றி பல்வேறு இதர மாடல்களுக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ரெட்மி 12 ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது.
    • ரெட்மி 12 பற்றிய விவரங்கள் வரும் நாட்களில் மைக்ரோசைட் மூலம் வெளியாகும்.

    ரெட்மி 12 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஆகஸ்ட் 1-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வெளியீட்டுக்கு முன், இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விவரங்கள் மைக்ரோசைட் மூலம் வெளியாகி உள்ளது.

    அமேசான் மட்டுமின்றி புதிய ரெட்மி 12 ஸ்மார்ட்போன் Mi வலைதளம் மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. ரெட்மி 12 ஸ்மார்ட்போன் அழகிய சாதனம் என்று சியோமி நிறுவனம் விளம்பரப்படுத்தி வருகிறது. இதற்காக பாலிவுட் நடிகை திஷா படானியை விளம்பர தூதராக சியோமி நியமனம் செய்து இருக்கிறது.

     

    புதிய ஸ்மார்ட்போனின் டிசைன் க்ரிஸ்டல் கிளாஸ் கொண்டிருக்கும் என்று மைக்ரோசைட்-இல் தெரியவந்துள்ளது. ரெட்மி 12 பற்றிய இதர விவரங்கள் மைக்ரோசைட் மூலம் வரும் நாட்களில் தெரிவிக்கப்பட இருக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை ரெட்மி 12 மாடலில் 6.79 இன்ச் Full HD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், 8MP செல்ஃபி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ சென்சார், கிளாஸ் பேக், IP53 தர ஸ்பிலாஷ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    • ஏற்கனவே மோட்டோரோலா ரேசர் 40 சீரிஸ் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.
    • அமேசான் தளத்தில் மோட்டோரோலா ரேசர் 40 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் லீக் ஆனது.

    மோட்டோரோலா ரேசர் 40 ஸ்மார்ட்போன் ஜூலை 4-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இத்துடன் மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா மாடலும் அறிமுகமாகிறது. இந்த நிலையில், வெளியீட்டுக்கு ஒருவாரம் காலம் இருக்கும் நிலையில், மோட்டோரோலா ரேசர் 40 விலை விவரங்கள் அமேசான் தளத்தில் தவறுதலாக இடம்பெற்று விட்டது.

    புதிய மோட்டோ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் 6.9 இன்ச் pOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என்று டீசர்களில் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே மோட்டோரோலா ரேசர் 40 சீரிஸ் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. அந்த வகையில், இந்த மாடலின் இதர அம்சங்களும் ஏற்கனவே அறிந்த ஒன்றுதான்.

     

    தற்போது அமேசான் தளத்தில் மோட்டோரோலா ரேசர் 40 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் இடம்பெற்றது. அதன்படி இதன் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்படும் என அமேசான் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. தவறுதலாக இடம்பெற்ற நிலையில், மோட்டோரோலா ரேசர் 40 விலை விவரங்கள் உடனடியாக நீக்கப்பட்டு விட்டது.

    சீன சந்தையில் மோட்டோரோலா ரேசர் 40 மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ. 46 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதன் டாப் எண்ட் மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 54 ஆயிரத்து 500 என்று நிர்ணயம் செய்யப்பட்டது.

     

    மோட்டோரோலா ரேசர் 40 அம்சங்கள்:

    6.9 இன்ச் FHD+ 1080x2640 பிக்சல் மடிக்கக்கூடிய pOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட்

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர்

    12 ஜிபி ரேம்

    64MP பிரைமரி கேமரா

    12MP அல்ட்ரா வைடு கேமரா

    32MP செல்ஃபி கேமரா

    ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ்

    டூயல் சிம் ஸ்லாட்

    வைபை, ப்ளூடூத்

    4200 எம்ஏஹெச் பேட்டரி

    33 வாட் டர்போசார்ஜிங்

    • பிரைம் லைட் பயன்படுத்துவோருக்கு வீடியோ தரம் சற்றே குறைந்து இருக்கும்.
    • முன்னதாக இந்த சந்தா முறை தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது.

    அமேசான் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அமேசான் பிரைம் லைட் சந்தா முறையை அறிவித்து இருக்கிறது. இது அமேசான் பிரைம் சேவையின் குறைந்த விலை வெர்ஷன் ஆகும். முன்னதாக இந்த சந்தா முறை தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அனைவருக்கும் வழங்கப்பட்டு உள்ளது.

    பிரைம் லைட் சந்தா ஒற்றை வருடாந்திர திட்டம் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பயனர்கள் 12 மாதங்களுக்கு ரூ. 999 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த சலுகையில் காலாண்டு மற்றும் மாதாந்திர திட்டங்கள் வழங்கப்படவில்லை. வழக்கமான அமேசான் பிரைம் சந்தா விலை ஆண்டுக்கு ரூ. 1499 ஆகும். இதே சலுகை மாதம் ரூ. 299 விலையிலும், காலாண்டு சந்தா விலை ரூ. 599 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    பலன்களை பொருத்தவரை அமேசான் பிரைம் லைட் மற்றும் அமேசான் பிரைம் திட்டங்களில் ஒட்டுமொத்தமாக ஒரே மாதிரியான பலன்களே வழங்கப்படுகின்றன. பிரைம் லட்டா சந்தாவில் பயனர்கள் ஒருநாள் அல்லது இரண்டு நாட்களில் டெலிவரி பெறும் வசதி பெற முடியும். வழக்கமான இலவச டெலிவரிக்கு எந்த விதமான குறஐந்தபட்ச தொகையும் இல்லை என அமேசான் உறுதியளித்துளளது.

    வழக்கமான பிரைம் சந்தாவின் கீழ் அமேசான் மியூசிக் மற்றும் வீடியோ பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது. பிரைம் சந்தா வைத்திருப்போரும், இதே பலன்களை பெற முடியும். எனினும், பிரைம் லைட் பயன்படுத்துவோருக்கு வீடியோ தரம் சற்றே குறைந்திருக்கும். பயனர்கள் அதிகபட்சம் இரண்டு சாதனங்ககளில் HD தரத்தில் வீடியோக்களை பார்க்கலாம்.

    பிரைம் சந்தா வைத்திருப்போர் அிகபட்சம் 4K ஸ்டிரீமிங், அதிகபட்சம் ஆறு சாதனங்களில் ஒரே சமயம் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் வீடியோ விளம்பரங்களை வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. எனினும், எப்படி இது அமலுக்கு கொண்டுவரப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    அமேசான் பிரைம் லைட் பயன்படுத்துவோருக்கு பிரைம் ரீடிங் மற்றும் அமேசான் மியூசிக் சேவைகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்படாது. இதில் அமேசான் பிரைம் மியூசிக் வசதி, வட்டியில்லா மாத தவணை முறை, கேமிங் மற்றும் இலவச இ-புத்தகங்களை பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படவில்லை.

    • ஆப்பிள் நிறுவன ஐபோன் மாடல்களுக்கு அமேசான் தளத்தில் சிறப்பு சலுகைகள் அறிவிப்பு.
    • ஆப்பிள் சேல் டேஸ் பெயரில் அமேசான் வலைதளத்தில் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது.

    அமேசான் வலைதளத்தில் ஆப்பிள் சேல் டேஸ் விற்பனை மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது. ஒரு வார காலம் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ஐபோன் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அமேசான் தளத்தில் அவ்வப்போது ஆப்பிள் சேல் டேஸ் விற்பனை நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தற்போதைய சிறப்பு விற்பனை ஜூன் 11 ஆம் தேதி துவங்கியது. இந்த விற்பனை ஜூன் 17 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. தள்ளுபடி மட்டுமின்றி, வட்டியில்லா மாத தவணை முறை சலுகை, தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதல் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    சலுகை விவரங்கள்:

    ஐபோன் 14 (128 ஜிபி) 15 சதவீத தள்ளுபடியின் கீழ் ரூ. 67 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் உண்மை விலை ரூ. 79 ஆயிரத்து 999 ஆகும். இதன் 256 ஜிபி மாடலுக்கு 13 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    அதன்படி இந்த வேரியண்ட் விலை ரூ. 89 ஆயிரத்து 900-இல் இருந்து ரூ. 77 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. 512 ஜிபி மாடல் விலை 1 லட்சத்து 09 ஆயிரத்து 900-இல் இருந்து தற்போது 11 சதவீத தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 97 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    ஐபோன் 14 பிளஸ் (128 ஜிபி) மாடலுக்கு 14 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ. 89 ஆயிரத்து 900-இல் இருந்து தற்போது ரூ. 76 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இதன் 256 ஜிபி மாடல் விலை ரூ. 86 ஆயிரத்து 999 என்று மாறியுள்ளது. இந்த வேரியண்டிற்கு 13 சதீவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என பல்வேறு ஐபோன்களை விறப்னை செய்து வருகிறது. ஐபோன் 14 ப்ரோ மாடலின் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி வேரியண்ட்களின் விலை தள்ளுபடி செய்யப்பட்டு முறையே ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 990 என்று மாறி இருக்கிறது.

    ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலுக்கு 9 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் 128 ஜிபி மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 27 ஆயிரத்து 999 என்றும் 256 ஜிபி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 43 ஆயிரத்து 990 என்றும் மாறி இருக்கின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கன்சி ஸ்காட் தம்பதி 25 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
    • கையில் இதய வடிவ மோதிரம் இருப்பதை தொடர்ந்து, இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரின் தோழி லாரென் சன்செஸ் இடையே நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இந்த தம்பதி ஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

    கடந்த சில மாதங்களாகவே ஜெஃப் பெசோஸ் மற்றும் லாரென் சன்செஸ் இடையே திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில், சன்செஸ் கையில் இதய வடிவம் (ஹார்டின்) மோதிரம் இருப்பதை தொடர்ந்து, இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

     

    முன்னாள் செய்தியாளரான லாரென் சன்செஸ் மற்றும் ஜெஃப் பெசோஸ் ஜோடி, கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் டேட்டிங் செய்து வருகின்றனர். எனினும், இதுபற்றிய தகவல்கள் 2019 ஆண்டு ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கன்சி ஸ்காட் இடையே விவாகரத்து நடக்கும் வரை வெளியில் தெரியாத ரகசியமாக இருந்து வந்தது.

    ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கன்சி ஸ்காட் தம்பதி 25 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். விவாகரத்து வழங்குவதற்காக மெக்கன்சி 38 பில்லியன் டாலர்களை ஜீவனாம்சமாக பெற்றுக் கொண்டார். இதன் மூலம் அவர் உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர் என்ற பெருமையை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • இணைய சேவைகள், மனித வளம் மற்றும் சப்போர்ட் பிரிவுகளில் பணியாற்றி வந்தவர்கள் வேலை இழந்துள்ளனர்.
    • பணிநீக்க நடவடிக்கையின் கீழ் 18 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக ஆண்டி ஜேசி அறிவித்து இருந்தார்.

    அமேசான் ஊழியர்கள் இந்த ஆண்டு துவக்கம் முதலே கடினமான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். கடுமையான பொருளாதார சூழல் காரணமாக அமேசான் நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. உலகளவில் பல்வேறு ஊழியர்கள் வேலையிழந்த நிலையில், இந்தியாவில் உள்ள அமேசான் ஊழியர்களும் பணிநீக்க நடவடிக்கையில் சிக்கித் தவிக்கின்றனர்.

    இந்தியாவில் எத்தனை ஊழியர்களை அமேசான் பணிநீக்கம் செய்தது என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை. எனினும், இதுகுறித்து தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் அமேசான் நிறுவனம் இந்தியாவில் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இணைய சேவைகள், மனித வளம் மற்றும் சப்போர்ட் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்தவர்கள் இந்தியாவில் வேலையிழந்துள்ளனர்.

     

    ஒவ்வொரு பிரிவில் இருந்தும் எத்தனை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை. அமேசான் தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜேசியின் ஆரம்பக்கட்ட பணிநீக்க திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் பணிநீக்க நடவடிக்கையின் கீழ் 18 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக ஆண்டி ஜேசி அறிவித்து இருந்தார்.

    பின் மார்ச் மாதத்தில் அமேசான் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த 9 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று ஆண்டு ஜேசி அறிவித்தார். சீரற்ற பொருளாதார நிலை காரணமாகவே பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். 

    • ரியல்மி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் டீசரை வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
    • நார்சோ N53 ஸ்மார்ட்போன் இரண்டுவித நிறங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    ரியல்மி நிறுவனத்தின் மிகமெல்லிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது நார்சோ சீரிசில் புதிய ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. புதிய நார்சோ ஸ்மார்ட்போன் N53 எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

    அமேசான் மட்டுமின்றி ரியல்மி நிறுவனமும் புதிய ஸ்மார்ட்போன் டீசரை தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. ரியல்மி நார்சோ N53 மாடலில் அதிகபட்சம் 16 ஜிபி டைனமிக் ரேம், 33 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த விவரங்கள் நார்சோ N53 என்ற இணைய தேடலில் தெரியவந்துள்ளது.

     

    நார்சோ N53 மாடலின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இதற்கான டீசர் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

    ரியல்மி நார்சோ N53 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    புதிய நார்சோ ஸ்மார்ட்போனிற்கான முதற்கட்ட டீசர்களில் அம்சங்கள் பற்றி எவ்வித தகவலும் இடம்பெறவில்லை. இந்த மாடலில் 6.72 இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ G88 பிராஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 2MP பிளாக் அண்ட் வைட் லென்ஸ், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    எனினும் பட்ஜெட் ரக மாடல் என்ற வகையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 13 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    இதில் வழங்கப்படும் 16 ஜிபி டைனமிக் ரேம் தேவைக்கு ஏற்ப ஸ்மார்ட்போனின் ரோம் -(ரேண்டம் அக்சஸ் மெமரி) ரேம் போன்று பயன்படுத்தப்படும். புதிய ரியல்மி நார்சோ N53 ஸ்மார்ட்போன் ஃபெதர் பிளாக் மற்றும் ஃபெதர் கோல்டு என இரண்டுவிதமான நிறங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    • கூகுள் பிக்சல் டேப்லட் பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
    • அமேசான் ஸ்கிரீன்ஷாட்களின் படி பிக்சல் டேப்லட் மாடல் இரு நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

    கூகுள் பிக்சல் டேப்லட் மாடல் இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கும் கூகுள் I/O 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதே நிகழ்வில் பிக்சல் 7a, பிக்சல் ஃபோல்டு மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஒஎஸ் சார்ந்த அறிவிப்புகளும் வெளியாக இருக்கின்றன. கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு நடைபெற்ற I/O 2022 நிகழ்வில் டேப்லட் மாடலின் டிசைன் விவரங்களை வெளியிட்டது.

    இதைத் தொடர்ந்து கூகுள் பிக்சல் டேப்லட் பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. புதிய டேப்லட் விலை பற்றிய தகவல்கள் ரகசியமாக இருந்து வந்தது. புதிய டேப்லட் மாடல் ஆப்பிள், சாம்சங் மற்றும் பல்வேறு மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்த இருக்கிறது. இந்த நிலையில், கூகுள் பிக்சல் டேப்லட் விலை விவரங்கள் அமேசான் ஜப்பான் வலைதளத்தில் தவறுதலாக லீக் ஆகியுள்ளன.

     

    அமேசான் வலைதள ஸ்கிரீன்ஷாட்களின் படி பிக்சல் டேப்லட் மாடல் ஜப்பான் நாட்டில் ஹசல் மற்றும் போர்சிலைன் நிற ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. இதன் விலை 79 ஆயிரத்து 800 யென்கள் இந்திய மதிப்பில் ரூ. 48 ஆயிரத்து 331 என்று நிர்ணயம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இதன் மூலம் பிக்சல் டேப்லட் மாடல் குறைந்த விலை பிரிவில் இருக்காது என்று தெரியவந்துள்ளது. அமேசான் வலைதள ஸ்கிரீன்ஷாட்டில் இந்த பிக்சல் டேப்லட் மாடல் ஜூன் 20 ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    பிக்சல் டேப்லட் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    10.9 இன்ச் 1600x2560 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே

    கூகுள் டென்சார் 2 சிப்செட்

    8 ஜிபி ரேம்

    128 ஜிபி, 256 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ்

    7000 எம்ஏஹெச் பேட்டரி

    அமேசான் ஜப்பான் வலைதளத்தில் பிக்சல் டேப்லட் உடன் சார்ஜிங் ஸ்பீக்கர் டாக் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இது பிக்சல் டேப்லட்-ஐ ஸ்மார்ட் டிஸ்ப்ளேவாக மாற்றுகிறது. இதுபற்றிய விவரங்கள் இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

    ×