search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெஃப் பெசோஸ்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 197.7 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
    • ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 200.3 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

    உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவனரும், தலைவருமான எலான் மஸ்க் முதல் இடத்தை இழந்துள்ளார். நேற்று பங்குச் சந்தையில் டெஸ்லா நிறுவனத்தின் பங்கு 7.2 சதவீதம் சரிவை சந்தித்த நிலையில் அவரின் நிகர சொந்த மதிப்பு 197.7 பில்லியன் அமெரிக்கா டாலராக குறைந்துள்ளது.

    இதனால் அமேசான்  நிறுவனர் பெசோஸ் 200.3 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    60 வயதாகும் பெசோஸ் ப்ளூம்பெர்க்கின் தரவரிசையில் முதன்முறையாக உலக கோடீஸ்வரரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    ஒரு கட்டத்தில் எலான் மஸ்க்- பெசோஸ் இடையிலான சொத்து மதிப்பு வித்தியாசம் 142 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

    2022-ல் இருந்து ஏறக்குறைய அமேசானின் பங்குகள் இரண்டு மடங்கு அதிகரித்தது. டெஸ்லாவின் பங்கு 2021-ல் அதன் உச்சத்தில் இருந்து சுமார் 50 சதவீதம் அளவிற்கு குறைந்ததாக கூறப்படுகிறது. இந்த பங்கு சந்தையின் விளைவு காரணமாக அமேசான் டாம் காம் நிறுவனர் பெசோஸ் தற்போது நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    ஷாங்காயில் இருந்து ஏற்றுமதியாகும் டெஸ்லா காரின் எண்ணிக்கை கடந்த ஓராண்டாக குறைந்து வந்த காரணத்தால் பங்கு சந்தையில் சரிவை கண்டுள்ளது. அதேவேளையில் கொரோனா தொடங்கிய காலத்தில் இருந்து ஆன்லைன் விற்பனையில் அபரித வளர்ச்சியை பெற்றுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கன்சி ஸ்காட் தம்பதி 25 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
    • கையில் இதய வடிவ மோதிரம் இருப்பதை தொடர்ந்து, இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரின் தோழி லாரென் சன்செஸ் இடையே நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இந்த தம்பதி ஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

    கடந்த சில மாதங்களாகவே ஜெஃப் பெசோஸ் மற்றும் லாரென் சன்செஸ் இடையே திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில், சன்செஸ் கையில் இதய வடிவம் (ஹார்டின்) மோதிரம் இருப்பதை தொடர்ந்து, இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

     

    முன்னாள் செய்தியாளரான லாரென் சன்செஸ் மற்றும் ஜெஃப் பெசோஸ் ஜோடி, கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் டேட்டிங் செய்து வருகின்றனர். எனினும், இதுபற்றிய தகவல்கள் 2019 ஆண்டு ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கன்சி ஸ்காட் இடையே விவாகரத்து நடக்கும் வரை வெளியில் தெரியாத ரகசியமாக இருந்து வந்தது.

    ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கன்சி ஸ்காட் தம்பதி 25 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். விவாகரத்து வழங்குவதற்காக மெக்கன்சி 38 பில்லியன் டாலர்களை ஜீவனாம்சமாக பெற்றுக் கொண்டார். இதன் மூலம் அவர் உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர் என்ற பெருமையை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் உருவாக்கும் புகைப்படங்கள் சமீப காலங்களில் வைரலாகி வருகின்றன.
    • இவ்வாறு ஏஐ நிபுணர் ஒருவர் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கிய டெக் தலைவர்களின் படங்கள் வெளியாகி உள்ளன.

    செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் பயன்பாடு உலகளவில் பெருமளவில் அதிகரித்து வருகிறது. பலர் ஏ.ஐ. தொழில்நுட்பம் கொண்டு தங்களுக்கு தேவையான பல வேலைகளை சுலபமாக முடிக்க கற்றுக் கொண்டு வருகின்றனர். மேலும் பலர் ஏ.ஐ. டூல்களை கொண்டு தங்கள் கற்பனைக்கு தீனிப்போடும் வகையில் வித்தியாசமான படங்களை உருவாக்கி வருகின்றனர்.

    இவ்வாறு சிலர் உருவாக்கிய படங்கள் வைரலானதோடு, சர்ச்சைகளுக்கும் உள்ளானது. டெனால்ட் டிரம்ப் கைது செய்யப்படுவது போன்ற புகைப்படம், போப் பிரான்சிஸ் பஃபர் ஜாக்கெட் அணிந்து இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி அனைவரையும் அதிர செய்தது. இதில் டொனால்ட் டிரம்ப் புகைப்படத்தை வெளியிட்ட நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியது.

    பலர் ஏ.ஐ. உருவாக்கிய படங்கள் உண்மை என்றே நம்பிவிட்டனர். இந்த அளவுக்கு மக்களை குழப்பும் வகையில் ஏ.ஐ. தொழில்நுட்பம் தனது பணியை சிறப்பாக செய்து அசத்துகிறது. இந்த வரிசையில் ஏ.ஐ. நிபுணரான கோகுல் பிள்ளா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கிய டெக் துறை தலைவர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

    இவர் உருவாக்கிய புகைப்படங்கள் டெக் துறை தலைவர்கள் ஏழையாக இருந்தால், எப்படி காட்சியளிப்பர் என்பதை தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளன. இவற்றை உருவாக்க கோகுல் பிள்ளா மிட்ஜர்னி (Midjourney) எனும் ஏ.ஐ. மென்பொருளை பயன்படுத்தி இருக்கிறார். இவர் உருவாக்கி இருக்கும் புகைப்படங்கள் டெக் தலைவர்கள் உண்மையில் ஏழையாக இருப்பதை போன்றே காட்சியளிக்கின்றன.

    கோகுல் புள்ளா உருவாக்கிய ஏ.ஐ. புகைப்படங்களை கீழே காணலாம்...

     

    ஏ.ஐ. மூலம் உருவான பில் கேட்ஸ்-இன் படம்
    ஏ.ஐ. மூலம் உருவான பில் கேட்ஸ்-இன் படம்
    ஏ.ஐ. மூலம் உருவான ஜெஃப் பெசோஸ்-இன் படம்

    ஏ.ஐ. மூலம் உருவான ஜெஃப் பெசோஸ்-இன் படம்

    ஏ.ஐ. மூலம் உருவான எலான் மஸ்க்-இன் படம்

    ஏ.ஐ. மூலம் உருவான எலான் மஸ்க்-இன் படம்

    ஏ.ஐ. மூலம் உருவான மார்க் ஜூக்கர்பர்க்-இன் படம்

    ஏ.ஐ. மூலம் உருவான மார்க் ஜூக்கர்பர்க்-இன் படம்

     

     

     

    ×