search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    குறைந்த விலையில் அறிமுகமானது அமேசான் பிரைம் லைட் - என்ன பலன்கள் தெரியுமா?
    X

    குறைந்த விலையில் அறிமுகமானது அமேசான் பிரைம் லைட் - என்ன பலன்கள் தெரியுமா?

    • பிரைம் லைட் பயன்படுத்துவோருக்கு வீடியோ தரம் சற்றே குறைந்து இருக்கும்.
    • முன்னதாக இந்த சந்தா முறை தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது.

    அமேசான் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அமேசான் பிரைம் லைட் சந்தா முறையை அறிவித்து இருக்கிறது. இது அமேசான் பிரைம் சேவையின் குறைந்த விலை வெர்ஷன் ஆகும். முன்னதாக இந்த சந்தா முறை தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அனைவருக்கும் வழங்கப்பட்டு உள்ளது.

    பிரைம் லைட் சந்தா ஒற்றை வருடாந்திர திட்டம் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பயனர்கள் 12 மாதங்களுக்கு ரூ. 999 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த சலுகையில் காலாண்டு மற்றும் மாதாந்திர திட்டங்கள் வழங்கப்படவில்லை. வழக்கமான அமேசான் பிரைம் சந்தா விலை ஆண்டுக்கு ரூ. 1499 ஆகும். இதே சலுகை மாதம் ரூ. 299 விலையிலும், காலாண்டு சந்தா விலை ரூ. 599 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    பலன்களை பொருத்தவரை அமேசான் பிரைம் லைட் மற்றும் அமேசான் பிரைம் திட்டங்களில் ஒட்டுமொத்தமாக ஒரே மாதிரியான பலன்களே வழங்கப்படுகின்றன. பிரைம் லட்டா சந்தாவில் பயனர்கள் ஒருநாள் அல்லது இரண்டு நாட்களில் டெலிவரி பெறும் வசதி பெற முடியும். வழக்கமான இலவச டெலிவரிக்கு எந்த விதமான குறஐந்தபட்ச தொகையும் இல்லை என அமேசான் உறுதியளித்துளளது.

    வழக்கமான பிரைம் சந்தாவின் கீழ் அமேசான் மியூசிக் மற்றும் வீடியோ பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது. பிரைம் சந்தா வைத்திருப்போரும், இதே பலன்களை பெற முடியும். எனினும், பிரைம் லைட் பயன்படுத்துவோருக்கு வீடியோ தரம் சற்றே குறைந்திருக்கும். பயனர்கள் அதிகபட்சம் இரண்டு சாதனங்ககளில் HD தரத்தில் வீடியோக்களை பார்க்கலாம்.

    பிரைம் சந்தா வைத்திருப்போர் அிகபட்சம் 4K ஸ்டிரீமிங், அதிகபட்சம் ஆறு சாதனங்களில் ஒரே சமயம் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் வீடியோ விளம்பரங்களை வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. எனினும், எப்படி இது அமலுக்கு கொண்டுவரப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    அமேசான் பிரைம் லைட் பயன்படுத்துவோருக்கு பிரைம் ரீடிங் மற்றும் அமேசான் மியூசிக் சேவைகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்படாது. இதில் அமேசான் பிரைம் மியூசிக் வசதி, வட்டியில்லா மாத தவணை முறை, கேமிங் மற்றும் இலவச இ-புத்தகங்களை பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படவில்லை.

    Next Story
    ×