சிறப்பு விற்பனையில் இவ்வளவு சலுகைகளா? சூப்பர் டீசர் வெளியிட்ட அமேசான்

அமேசான் கிரேட் இந்தியன் சிறப்பு விற்பனையில் அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சிறப்பு விற்பனையில் இவ்வளவு சலுகைகளா? சூப்பர் டீசர் வெளியிட்ட அமேசான்
Published on

அமேசான் வலைதளத்தில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை அடுத்த சில வாரங்களில் துவங்க இருக்கிறது. இதே போன்ற சிறப்பு விற்பனை ஃப்ளிப்கார்ட் வலைதளத்திலும் துவங்க இருக்கிறது. இந்த நிலையில், அமேசான் தளத்தில் வழங்கப்பட இருக்கும் சிறப்பு சலுகைகள் பற்றிய தகவல்கள் டீசர்களாக வெளியிடப்பட்டு உள்ளன.

அந்த வகையில், தற்போதைய அமேசான் சிறப்பு விற்பனையில் மொபைல் போன் மாடல்களுக்கு அதிகபட்சம் 40 சதவீதம், அலெக்சா, ஃபயர் டி.வி. மற்றும் கின்டில் போன்ற சாதனங்களுக்கு 55 சதவீதம், வீட்டு உபயோக, சமயலறை சாதனங்களுக்கு 70 சதவீதம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இதே போன்று லேப்டாப், ஸ்மார்ட்வாட்ச், இயர்போன், டி.வி., மின்சாதனங்களுக்கு 75 சதவீதமும், புத்தகங்கள், விளையாட்டு பொருட்கள், அழகு சாதனங்கள் மற்றும் இதர பொருட்களுக்கு 80 சதவீதம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது.

இதுதவிர கிராண்ட் ஒபனிங் டீல், கிக்ஸ்டார்டர் டீல், பிளாக்பஸ்டர் டீல், 8 மணி டீல், ரூ. 999-க்கு குறைந்த விலை டீல், ரொக்க பரிசு, கூப்பன் தள்ளுபடி, கேஷ்பேக் வழங்குவதோடு, பல்வேறு போட்டிகளும் நடைபெற உள்ளன.

இத்துடன் எஸ்.பி.ஐ. வங்கியுடன் இணைந்து கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் மாத தவணை சலுகை பயன்படுத்தும் போது 10 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com