search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    முழுசா ரூ. 13 ஆயிரம் விலை குறைப்பு.. ஐபோன் 14 வாங்க இதுதான் சூப்பர் சான்ஸ்..!
    X

    முழுசா ரூ. 13 ஆயிரம் விலை குறைப்பு.. ஐபோன் 14 வாங்க இதுதான் சூப்பர் சான்ஸ்..!

    • ஐபோன் 14 மாடல் மொத்தத்தில் ஆறு விதமான நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
    • சிறப்பு விற்பனையின் கீழ் ஐபோன் 14 மாடலுக்கு அசத்தல் விலை குறைப்பு அறிவிப்பு.

    இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 மாடல் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. அமேசான் கிரேட் பிரீடம் பெஸ்டிவல் சேல் விற்பனையின் கீழ் ஐபோன் 14 மாடலுக்கு அசத்தல் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அமேசான் பிரைம் சந்தா வைத்திருப்போர் மட்டுமின்றி அனைவரும் இந்த விற்பனையில் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும்.

    பல்வேறு பிரிவுகளில் கிடைக்கும் ஏராளமான பொருட்களுக்கு வழங்கப்படும் சலுகை விவரங்களை அமேசான் ஏற்கனவே அறிவித்துவிட்டது. அந்த வகையில் ஐபோன் 14 மாடலுக்கான சலுகை அனைவரையும் கவரும் வகையில் அமைந்து இருக்கிறது. ஐபோன் 14 மாடலுக்கு அமேசான் வலைதளத்தில் ரூ. 13 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    அமேசான் கிரேட் பிரீடம் பெஸ்டிவல் சேல் விற்பனையின் கீழ் ஐபோன் 14 மாடலுக்கு 16 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி ஐபோன் 14 மாடலின் 128 ஜிபி மெமரி கொண்ட பேஸ் வேரியன்ட் விலை ரூ. 79 ஆயிரத்து 900-இல் இருந்து தற்போது ரூ. 66 ஆயிரத்து 999 என்று குறைந்திருக்கிறது. ஐபோன் 14 மாடலின் 256 ஜிபி மெமரி மாடலுக்கு 13 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அந்த வகையில், இதன் விலை ரூ. 89 ஆயிரத்து 900-இல் இருந்து ரூ. 77 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. ஐபோன் 14 மாடலின் 512 ஜிபி வேரியன்ட் விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 900-இல் இருந்து ரூ. 94 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இத்துடன் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கு ரூ. 1000 ஆயிரம் தள்ளுபடி மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை சலுகையும் வழங்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 மாடல்- புளூ, மிட்நைட், பர்பில், பிராடக்ட் ரெட், ஸ்டார்லைட் மற்றும் எல்லோ என ஆறு வித நிறங்களில் கிடைக்கிறது. அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 14 மாடலில் ஏ15 பயோனிக் சிப்செட், 12MP டூயல் பிரைமரி கேமரா, 12MP செல்பி கேமரா, 6.1 இன்ச் OLED டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

    Next Story
    ×