search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "alcohol"

    • உடையாளூர் தபால் அலுவலகத்தில் தபால் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.
    • கடந்த 31-ந் தேதி வினோத், வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை மதுவில் கலந்து குடித்தார்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள கோவிந்தகுடி கம்மாள தெருவை சேர்ந்தவர் மணி.

    இவரது வினோத் (வயது 33).

    இவர், உடையாளூர் தபால் அலுவலகத்தில் தபால் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.

    அவர் பணிபுரிந்த காலத்தில் வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் வந்தன. இதையடுத்து தபால் அலுவலக மேலதிகாரிகள் அஞ்சலக கணக்கு மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

    அதில் முறைகேடு நடந்தது தெரியவந்தது.

    கடந்த 31-ந் தேதி வினோத், வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை மதுவில் கலந்து குடித்தார்.

    இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் மருத்து வக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இந்த நிலையில் வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் மணி புகார் கொடுத்தார்.

    அதில், எனது மகன் வினோத், அஞ்சலக கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    ேமலும் அதிகாரிகள் மூன்று தவணைகளாக ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்தை வாங்கி சென்று விட்டனர்.

    மேலும் அவர்கள் எனது வீட்டில் இருந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் எடுத்து சென்றுவிட்டனர்.

    இது தவிர எனது மகன் உடையாளூரை சேர்ந்த 2 பேரிடம் ரூ.14 லட்சம் வட்டிக்கு வாங்கியுள்ளதாக அவர்களும் வட்டியுடன் பணத்தை தருமாறு கேட்டு மிரட்டுவதாக எனது குடும்பத்தினரிடம் வினோத் தெரிவித்துள்ளார்.

    தபால் அதிகாரிகள் எனது மகனை அழைத்து சென்று பணம் கேட்டு மிரட்டி அடித்து துன்புறுத்தி உள்ளனர்.

    இதனால் மனமுடைந்த அவர் மதுவில் விஷம் கலந்து குடித்து இறந்து வி்ட்டார்.

    எனவே எனது மகனின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் விரியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் விரியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அதே ஊரை சேர்ந்த ஜோசப்(40) ர் தனது வீட்டின் அருகே சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • டாஸ்மாக் கடையில் பத்து ரூபாய் கூடுதலாக கேட்பதாக கேள்வி எழுப்பிய நபர் தாக்கப்பட்ட விவகாரம்.
    • சம்பவம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் ராஜா விளக்கம் அளிக்கவும் உத்தரவு.

    செங்கல்பட்டில் டாஸ்மாக் கடை ஒன்றில் கூடுதலாக பத்து ரூபாய் கேட்பதாக கூறி மதுப்பிரியர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

    அப்போது அங்கு வந்த எஸ்.ஐ ராஜா மதுப்பிரியர் மீது தாக்குதல் நடத்தினார். இதன் வீடியோ நேற்று இணையத்தளத்தில் வைரலானது.

    இதையடுத்து, டாஸ்மாக் கடையில் பத்து ரூபாய் கூடுதலாக கேட்பதாக கேள்வி எழுப்பிய நபர் தாக்கப்பட்ட விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் ராஜா ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    காவல் உதவி ஆய்வாளர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் சம்பவம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் ராஜா விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

    • குளத்தூர்,புதுப்பாலப்பட்டு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்ட னர்.
    • 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 31 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ேபாலீஸ் சப்- இன்ஸ்ரபெக்டர் நரசிம்ம ஜோதி தலைமையிலான போலீசார் குளத்தூர், புதுப் பாலப்பட்டு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்ட னர். அப்போது வீட்டின் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த குளத்தூர் கிராமத்தை சேர்ந்த சி.ஏழுமலை(41), ஆர்.ஏழு மலை (42), புதுப்பாலப் பட்டு கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 31 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • 2 மதுபான பாட்டில்கள் ,ரொக்கம் ரூ. 500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
    • ஆனந்த் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது, கணபதிபாளையம் பகுதியில் உள்ள ஒரு கடையில், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 2 மதுபான பாட்டில்கள் ,ரொக்கம் ரூ. 500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    மேலும் விற்பனை செய்த பாக்கியநாதன், பெரிய ராஜ் ஆகியோரை கைது செய்தனர். இதே போல பல்லடம் அருகே உள்ள அருள்புரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ஆனந்த் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் வழியை்த தவிர டெல்லி மெட்ரோவில் மது பாட்டில்கைள எடுத்துச் செல்லவே அனுமதி இல்லை.
    • மெட்ரோ பயணிகள் பயணத்தின் போது சரியான ஆவணங்களை பராமரிக்க வேண்டும்.

    டெல்லி மெட்ரோவில் நபருக்கு இரண்டு மது பாட்டில்களை எடுத்து செல்ல அனுமதி வழங்கி டெல்லி மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இருப்பினும், டெல்லி மெட்ரோவில் மது குடிப்பது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.

    ஏற்கனவே ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் லைன் வழியைத் தவிர டெல்லி மெட்ரோவில் மது பாட்டில்கைள எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், டெல்லி மெட்ரோவில் நபருக்கு இரண்டு சீல் வைக்கப்பட்ட மது பாட்டில்கள் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் கூறுகையில், "சிஐஎஸ்எஃப் மற்றும் டிஎம்ஆர்சி அதிகாரிகள் அடங்கிய குழு பட்டியலை மதிப்பாய்வு செய்தது. திருத்தப்பட்ட பட்டியலின்படி, ஒரு நபருக்கு சீல் செய்யப்பட்ட இரண்டு மது பாட்டில்கள் டெல்லி மெட்ரோவில் ஏர்போர்ட் எக்ஸ்பிரஸில் உள்ள விதிமுறைகளுக்கு இணையாக கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது" என்று கூறியது.

    மெட்ரோ பயணிகள் பயணத்தின் போது சரியான ஆவணங்களை பராமரிக்குமாறும் மெட்ரோ நிர்வாகம் சார்பில் கேட்கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    மெட்ரோவில் பயணிகள் யாரேனும் குடிபோதையில் அநாகரீகமாக நடந்து கொண்டால், அவர்கள் மீது சட்ட விதிகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் டெல்லி மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலையோர ‘பார்’களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • டாஸ்மாக் நிர்வாகம் நினைத்தால் ரோட்டில் மது அருந்துவது நிச்சயம் குறையும்.

    சென்னை மாநகரில் பார்களை ஏலம் விடுவது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகத்துக்கும் பார் உரிமையாளர்களுக்கும் இடையே நீடித்து வரும் பிரச்சினையால் பார்கள் மூடப்பட்டுள்ளன.

    சென்னையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் மாலை நேரங்களில் பார் களில் கூட்டம் அலை மோதும். குளிர்சாதன வசதிக்கொண்ட பார்கள் மற்றும் சாதாரண பார்கள் என இரண்டிலுமே மதுபிரி யர்கள் நிரம்பி இருப்பார்கள். பல மணி நேரங்களை பார் களிலேயே செலவழித்து... சில பாட்டில்களை உள்ளே தள்ளிவிட்டு 'ரிலாக்ஸ்' ஆக உற்சாகத்தோடு பொழுதை போக்கும் மது பிரியர்கள் பார்கள் மூடப்பட்டுள்ள தால் திண்டாடி வருகிறார் கள்.

    பார்கள் மூடப்பட்டிருந்த போதிலும் டாஸ்மாக் மதுக் கடைகள் எப்போதும் போல திறக்கப்பட்டு வா... வா... என்று அழைப்பதால் குடி மகன்கள் கையில் பாட்டிலை வாங்கி வைத்துக்கொண்டு எங்கே போய் குடிப்பது? என தவிக்கும் நிலையே காணப் படுகிறது.

    இதனால் சென்னையில் பல இடங்களில் சாலையில் நின்று மது குடிப்பது என்பது சர்வ சாதாரணமாகி விட்டது.

    முகப்பேர் சர்ச் ரோடு, சூளைமேடு நெல்சன்மாணிக் கம் ரோடு, பழைய வண்ணா ரப்பேட்டை மேயர் பசுதேவ் தெரு, அடையாறு கெனால் பேங்க் ரோடு மற்றும் எழும் பூர் பகுதியில் உள்ள டாஸ் மாக் மதுக்கடை என சென்னை மாநகரில் அனைத்து கடைகள் முன்பும் நின்று கொண்டு மதுபிரியர்கள் குடித்து கும்மாளமடித்து வருகிறார் கள். கடைகளில் நின்று டீ குடிப்பது போல தெருக் களை பார்களாகவே நினைத்து ஹாயாக அமர்ந்து குடிமகன்கள் மது அருந்தி வருகிறார்கள்.

    டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கிவிட்டு சாலையோரமாக அமர்ந்து கொண்டு ரோட்டில் செல் லும் பள்ளி மாணவ-மாண விகள் மற்றும் குழந்தைகள் என யாரைப் பற்றியும் கவலைப்படாமல் 'சைடிஸ்' சகிதமாக உற்சாக பானத்தை உள்ேள தள்ளிவிட்டு ரோட்டில் போகிறவர்களை பார்த்து "இன்னாப்பா... மொறைக்கிற" என்று கேள்வி கேட்பதால் நமக் கெதுக்கு வம்பு என பலர் ஒதுங்கி செல்வதையும் பார்க்க முடிகிறது.

    ரோட்டில் நின்று பொது மக்களுக்கு இடையூறாக மது அருந்துபவர்களை போலீ சார் எச்சரித்து விரட்டி விடுவது உண்டு. ஆனால் தற்போது அதுபோன்று எந்தவிதமான இடையூறும் செய்யப்படுவதில்லை.

    இதனால் குடிமகன்கள் எந்தவித பயமோ... கூச்சமோ இன்றி பொதுவெளி யில் குடிப்பது அதி கரித்துக் கொண்டே செல்கிறது.இப்படி மதுஅருந்தும் குடி மகன்கள் ஊறுகாய் பாக் கெட், மிக்சர் பாக்கெட், சில்லி சிக்கன் என 'சைடிஸ்' களை உள்ளே தள்ளி விட்டு வெற்று கவர்களை ரோட்டி லேயே வீசிவிட்டு சென்று விடுகிறார்கள்.

    அதேபோன்று காலி மது பாட்டில்களையும் ரோட்டி லேயே போட்டுவிட்டு சென்று விடுவதால் 'பார்' களில் குவிய வேண்டிய குப்பைகள் ரோட்டில் சேர்ந்து கொண்டிருக்கிறது.

    சென்னையில் கடந்த சில நாட்களாகவே டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டு இது போன்ற சாலையோர 'பார்'களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இதனால் குடியிருப்பு வாசிகளும், குடும்பத்தோடு வெளியில் செல்பவர்களும் முகம் சுழிப்பதுடன் இந்த பிரச்சினைக்கு டாஸ்மாக் நிர்வாகத்தினர் தீர்வு காண உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத் தலைவரான அன்ப ரசனிடம் இந்த பிரச்சி னைக்கு தீர்வு தான் என்ன என்று கேட்டபோது, டாஸ் மாக் நிர்வாகம் நினைத்தால் ரோட்டில் மது அருந்துவது நிச்சயம் குறையும் என்றார்.

    இதற்கு முன்பு 2014 மற்றும் 2021-ம் ஆண்டுகளி லும் இதுபோன்ற பிரச் சினை இருந்தது. அப்போது பார்களுக்கு தற்காலிக உரிமம் வழங்கப்பட்டு குடி மகன்கள் பார்களில் போய் குடித்தார்கள். இப்போதும் அதுபோன்று செய்யலாம் என்றார்.

    குடிமகன்களின் திண் டாட்டத்துக்கு டாஸ்மாக் நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

    • மணிகண்டன் சுயநினைவின்றி மயங்கி கிடப்பதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை தட்டாஞ்சாவடி கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் மணிகண்டன்(வயது32). கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. மணிகண்டனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இவர் தினமும் சம்பாதிக்கும் பணத்தை நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்து செலவழித்து வந்தார்.

    அதுபோல் சம்பவத்தன்று இரவு அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். ஆனால் சாப்பிடாமல் தூங்கி விட்டார். மறுநாள் காலையில் பார்த்த போது மணிகண்டன் சுயநினைவின்றி மயங்கி கிடப்பதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை ஆட்டோவில் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மணிகண்டன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்ததால் மணிகண்டன் இறந்து போனதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அவரது சகோதரி பார்வதி கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கரூர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு மது விற்றால் நடவடிக்கை எடுக்கபடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்
    • கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 94 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    கரூர்,

    கரூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மதுபானங்கள் கூடுதல் விலை விற்பனை தொடர்பாக துணை ஆட்சியர் தலைமையில் கிடங்கு மேலாளர், தாசில்தார், உதவி மேலாளர் உட்பட அதிகாரிகள் அடங்கிய 5 குழுக்கள் அமைக்கப்பட்டு கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 94 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மது விற்பனையாகும் கடைகளுக்கு பணியிடமாற்றம் செய்ய கோவை முதுநிலை மண்டல மேலாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் கூடுதல் விலை விற்பனை செய்த 15 கடைப்பணியாளர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 800-ம், இந்த மாதத்தில் கூடுதல் விலை விற்பனை செய்த 17 கடைப்பணியாளர்களிடம் இருந்து ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 800-ம் அபராதமாக பெறப்பட்டு அரசுக்கணக்கில் சேர்க்கப்பட்டது. இவ்வாறு அதில்


    • பகண்டை கூட்டுரோடு சப்- இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • மது பாட்டில் விற்றுக்கொண்டிருந்த சங்கர் மனைவி சுதா என்பவரையும் கைது செய்து அவரிடமிருந்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே பகண்டை கூட்டுரோடு சப்- இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இளையனார் குப்பத்தை சேர்ந்த வெங்கடேசன் மனைவி வினிதா (வயது 28) என்பவர், அந்த பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 7 மது பாட்டில்களை பறி முதல் செய்தனர். இதேபோன்று, லாலா பேட்டையில் மது பாட்டில் விற்றுக்கொண்டிருந்த சங்கர் மனைவி சுதா (42) என்பவரையும், கைது செய்து அவரிடமிருந்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • பாண்டிகோவில் ரிங் ரோட்டில் பொது இடத்தில் மது குடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பொதுமக்களுக்கு இடையூறு செய்து வந்தனர்.

    மதுரை

    மதுரை பாண்டி கோவில் ரிங்ரோட்டில் சனி, ஞாயிற்று கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். வேண்டுதல் வைத்துள்ளவர்கள் உறவினர்களை அழைத்து வந்து கோவிலில் கிடாய் வெட்டி பூஜை செய்வது வழக்கம். இதனால் எப்போதும் கூட்டம் நிரம்பி இருக்கும்.

    இந்தநிலையில் சிலர் பொது இடங்களில் மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்துவந்தனர். இதனையறிந்த போலீசார் அந்தப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பொது இடத்தில் மது அருந்தி கொண்டிருந்த உத்தங்குடி அய்யணன் நகர் ஸ்ரீராமன்(வயது27), வாடிப்பட்டி கச்சைகட்டி பசும்பொன் நகர் ரமேஷ்(35), சுரேந்தர்(36) ஆகிய 3பேைர போலீசார் கைது செய்தனர். 

    மதுராவில் தொழில்துறையை புதுப்பிக்கும் வகையில் வணிகா்கள் பால் தொழிலை செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் அயோத்தி, மதுரா கோயில்களை சுற்றியுள்ள பகுதிகளில் மது விற்பனைக்கு தடை விதித்து அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

    உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் அமையவுள்ள ராமர் கோயிலின் கருவறைக்கு அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று அடிக்கல் நாட்டினார்.  அதை தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது:

    அயோத்தி ராமர் கோவில் மற்றும் மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமியை சுற்றி உள்ள பகுதிகளில் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வந்த மதுக்கடைகளின் உரிமங்களும் ரத்து செய்யப்படுகின்றன. 

    அதேபோல மதுரா கோவிலை சுற்றி செயல்பட்டு வந்த 37 மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிக அளவு பாலை உற்பத்தி செய்வதில் பெயர் பெற்ற மதுராவில் தொழில்துறையை புதுப்பிக்கும் வகையில் வணிகா்கள் பால் தொழிலை செய்யலாம்.

    இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
    ×