search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public place"

    • பொது இடங்களில் புகைப்பிடித்தாலோ, புகையிலை சார்ந்த பொருட்களை சுவைத்து உமிழ்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்
    • மூன்று மாதம் வரை ஜெயில் தண்டனையுடன் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

    திருப்பூர்:

    பொது இடங்களில் புகைப்பிடித்தாலோ, புகையிலை சார்ந்த பொருட்களை சுவைத்து உமிழ்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்.அரசு அலுவலர்களின் ஆய்வின் போது கண்டறியப்பட்டாலோ, உறுதி செய்யப்பட்டலோ உடனடி அபராதமாக முதன்முறையாக 100 ரூபாய், மீண்டும் அதே குற்றம் தொடர்ந்தால் 200 ரூபாய், 500 ரூபாய் வரை வசூலிக்கப்படும்.

    மேலும் தொடர்ந்தால் மூன்று மாதம் வரை ஜெயில் தண்டனையுடன் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு சட்டம் இருப்பது குறித்த விழிப்புணர்வை, திருப்பூர் மாவட்டத்தில் சுகாதார துறையினர் ஏற்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சில இடங்களில் போலீசாருடன் சேர்ந்து, அபராத நடவடிக்கைகளை எப்போதாவதுதான் பார்க்க முடிகிறது. இதனால் டீக்கடை, பஸ் நிலையம் என பல்வேறு இடங்களில் பலரும் புகைக்கின்றனர்.

    பொது இடங்களில்

    புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கைகுறிப்பாக பஸ் நிலையத்தில் சிறார்கள் சிலர் எப்போதும் புகைத்தவாறு நிற்கின்றனர். போலீசார் உதவியுடன் சுகாதாரத்துறையினர் களமிறங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக மது அருந்த அனுமதியளித்தது தெரியவந்தது.
    • மது பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    அந்தியூர்:

    சட்டவிரோத மதுவிற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ஈரோடு மாவட்டம் அந்தியூர் போலீசார் தவிட்டுப்பாளையம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (33), தனது மீன் கடைக்கு அருகில் எவ்வித அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக மது அருந்த அனுமதியளித்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவரது கடையின் அருகில் இருந்து மது பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    • பாண்டிகோவில் ரிங் ரோட்டில் பொது இடத்தில் மது குடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பொதுமக்களுக்கு இடையூறு செய்து வந்தனர்.

    மதுரை

    மதுரை பாண்டி கோவில் ரிங்ரோட்டில் சனி, ஞாயிற்று கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். வேண்டுதல் வைத்துள்ளவர்கள் உறவினர்களை அழைத்து வந்து கோவிலில் கிடாய் வெட்டி பூஜை செய்வது வழக்கம். இதனால் எப்போதும் கூட்டம் நிரம்பி இருக்கும்.

    இந்தநிலையில் சிலர் பொது இடங்களில் மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்துவந்தனர். இதனையறிந்த போலீசார் அந்தப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பொது இடத்தில் மது அருந்தி கொண்டிருந்த உத்தங்குடி அய்யணன் நகர் ஸ்ரீராமன்(வயது27), வாடிப்பட்டி கச்சைகட்டி பசும்பொன் நகர் ரமேஷ்(35), சுரேந்தர்(36) ஆகிய 3பேைர போலீசார் கைது செய்தனர். 

    • அன்பழகன் நேற்று முன்தினம் மாலை, பொன்பேற்றி மாரியம்மன் கோவில் செயின்ட் என்ற பொது இடத்தில் மது அருந்தி உள்ளார்.
    • சம்பவ இடத்திற்கு சென்று, பொது இடத்தில், மது அருந்தி ஆபாசமாக பேசிய அன்பழகனை கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நெடுங்காடு பொன்பேற்றி மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன் (வயது50). இவர், நேற்று முன்தினம் மாலை, பொன்பேற்றி மாரியம்மன் கோவில் செயின்ட் என்ற பொது இடத்தில் மது அருந்தி, ஆபசமாக பேசிவந்ததாக, பொதுமக்களிடமிருந்து புகார் வந்தது. அதன்பேரில், நெடுங்காடு போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, பொது இடத்தில், மது அருந்தி ஆபாச மாக பேசிய அன்பழகனை கைது செய்தனர்.

    கரூர் அருகே பொது இடத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கரூர்:

    கரூர் அருகே சணப்பிரட்டி செல்லும் ரோட்டில் தொழிற்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் வாலிபர்கள் ஒன்று கூடி பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருப்பதாக பசுதிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது, சிலர் பொது இடத்தில் மேஜை போட்டு பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். போலீசாரை கண்டதும், அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். போலீசார் விரட்டி சென்று 3 பேரை பிடித்தனர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள், எஸ்.வெள்ளாளப்பட்டி தொழிற்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் (வயது 24), நல்லப்ப நகரை சேர்ந்த அசோக் ஆனந்த் (31), தில்லை நகரை சேர்ந்த கார்த்திக் (28) என்பது தெரியவந்தது. மணிகண்டனின் பிறந்தநாளை பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடினோம் என்று அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும், பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் நீளமான பட்டாக் கத்தியால் கேக் வெட்டியதாக மணிகண்டன், அசோக் ஆனந்த், கார்த்திக் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய சணப்பிரட்டியை சேர்ந்த அசோக் மற்றும் முழியன் என்ற சதானந்தம், தொழிற்பேட்டை நல்லப்ப நகரை சேர்ந்த பாலன், பசுபதிபாளையம் பாரதி நகரை சேர்ந்த பழம் ராஜா உள்ளிட்டவர்களை தேடி வருகின்றனர். அவர்கள் பட்டாக்கத்தியால் கேக் வெட்டுவதை மணிகண்டனின் நண்பர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அதனை போலீசார் ஆதாரமாக வைத்துள்ளனர்.

    அந்த வீடியோவில், பொது இடத்தில் மேஜை போட்டு கேக்கில் மெழுகுவர்த்தி தயாராக இருக்கிறது. அதனை ஊதி அணைக்கின்றனர். பின்னர் வெட்டுடா மச்சான்... என நண்பர்கள் குரல் எழுப்ப, அந்த கேக் பட்டாக்கத்தியால் வெட்டப்படுகிறது. பின்னர் கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது போல் காட்சிகள் பதிவாகியுள்ளன.

    கரூரில் பட்டாக்கத்தியால் இளைஞர்கள் கேக் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீது பசுபதிபாளையத்தில் 3 வழக்குகளும், கரூர் டவுன் போலீசில் ஒரு வழக்கும் உள்ளன. கார்த்திக் மீது மதுபாட்டில் விற்றதாக ஒரு வழக்கு உள்ளது என போலீசார் தெரிவித்தனர். 
    ×