search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடை முன்பு நின்று டீ குடிப்பது போல தெருக்களில் நின்று மது அருந்துகிறார்கள்- முகம் சுழிக்கும் பெண்கள்
    X

    கடை முன்பு நின்று டீ குடிப்பது போல தெருக்களில் நின்று மது அருந்துகிறார்கள்- முகம் சுழிக்கும் பெண்கள்

    • சாலையோர ‘பார்’களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • டாஸ்மாக் நிர்வாகம் நினைத்தால் ரோட்டில் மது அருந்துவது நிச்சயம் குறையும்.

    சென்னை மாநகரில் பார்களை ஏலம் விடுவது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகத்துக்கும் பார் உரிமையாளர்களுக்கும் இடையே நீடித்து வரும் பிரச்சினையால் பார்கள் மூடப்பட்டுள்ளன.

    சென்னையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் மாலை நேரங்களில் பார் களில் கூட்டம் அலை மோதும். குளிர்சாதன வசதிக்கொண்ட பார்கள் மற்றும் சாதாரண பார்கள் என இரண்டிலுமே மதுபிரி யர்கள் நிரம்பி இருப்பார்கள். பல மணி நேரங்களை பார் களிலேயே செலவழித்து... சில பாட்டில்களை உள்ளே தள்ளிவிட்டு 'ரிலாக்ஸ்' ஆக உற்சாகத்தோடு பொழுதை போக்கும் மது பிரியர்கள் பார்கள் மூடப்பட்டுள்ள தால் திண்டாடி வருகிறார் கள்.

    பார்கள் மூடப்பட்டிருந்த போதிலும் டாஸ்மாக் மதுக் கடைகள் எப்போதும் போல திறக்கப்பட்டு வா... வா... என்று அழைப்பதால் குடி மகன்கள் கையில் பாட்டிலை வாங்கி வைத்துக்கொண்டு எங்கே போய் குடிப்பது? என தவிக்கும் நிலையே காணப் படுகிறது.

    இதனால் சென்னையில் பல இடங்களில் சாலையில் நின்று மது குடிப்பது என்பது சர்வ சாதாரணமாகி விட்டது.

    முகப்பேர் சர்ச் ரோடு, சூளைமேடு நெல்சன்மாணிக் கம் ரோடு, பழைய வண்ணா ரப்பேட்டை மேயர் பசுதேவ் தெரு, அடையாறு கெனால் பேங்க் ரோடு மற்றும் எழும் பூர் பகுதியில் உள்ள டாஸ் மாக் மதுக்கடை என சென்னை மாநகரில் அனைத்து கடைகள் முன்பும் நின்று கொண்டு மதுபிரியர்கள் குடித்து கும்மாளமடித்து வருகிறார் கள். கடைகளில் நின்று டீ குடிப்பது போல தெருக் களை பார்களாகவே நினைத்து ஹாயாக அமர்ந்து குடிமகன்கள் மது அருந்தி வருகிறார்கள்.

    டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கிவிட்டு சாலையோரமாக அமர்ந்து கொண்டு ரோட்டில் செல் லும் பள்ளி மாணவ-மாண விகள் மற்றும் குழந்தைகள் என யாரைப் பற்றியும் கவலைப்படாமல் 'சைடிஸ்' சகிதமாக உற்சாக பானத்தை உள்ேள தள்ளிவிட்டு ரோட்டில் போகிறவர்களை பார்த்து "இன்னாப்பா... மொறைக்கிற" என்று கேள்வி கேட்பதால் நமக் கெதுக்கு வம்பு என பலர் ஒதுங்கி செல்வதையும் பார்க்க முடிகிறது.

    ரோட்டில் நின்று பொது மக்களுக்கு இடையூறாக மது அருந்துபவர்களை போலீ சார் எச்சரித்து விரட்டி விடுவது உண்டு. ஆனால் தற்போது அதுபோன்று எந்தவிதமான இடையூறும் செய்யப்படுவதில்லை.

    இதனால் குடிமகன்கள் எந்தவித பயமோ... கூச்சமோ இன்றி பொதுவெளி யில் குடிப்பது அதி கரித்துக் கொண்டே செல்கிறது.இப்படி மதுஅருந்தும் குடி மகன்கள் ஊறுகாய் பாக் கெட், மிக்சர் பாக்கெட், சில்லி சிக்கன் என 'சைடிஸ்' களை உள்ளே தள்ளி விட்டு வெற்று கவர்களை ரோட்டி லேயே வீசிவிட்டு சென்று விடுகிறார்கள்.

    அதேபோன்று காலி மது பாட்டில்களையும் ரோட்டி லேயே போட்டுவிட்டு சென்று விடுவதால் 'பார்' களில் குவிய வேண்டிய குப்பைகள் ரோட்டில் சேர்ந்து கொண்டிருக்கிறது.

    சென்னையில் கடந்த சில நாட்களாகவே டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டு இது போன்ற சாலையோர 'பார்'களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இதனால் குடியிருப்பு வாசிகளும், குடும்பத்தோடு வெளியில் செல்பவர்களும் முகம் சுழிப்பதுடன் இந்த பிரச்சினைக்கு டாஸ்மாக் நிர்வாகத்தினர் தீர்வு காண உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத் தலைவரான அன்ப ரசனிடம் இந்த பிரச்சி னைக்கு தீர்வு தான் என்ன என்று கேட்டபோது, டாஸ் மாக் நிர்வாகம் நினைத்தால் ரோட்டில் மது அருந்துவது நிச்சயம் குறையும் என்றார்.

    இதற்கு முன்பு 2014 மற்றும் 2021-ம் ஆண்டுகளி லும் இதுபோன்ற பிரச் சினை இருந்தது. அப்போது பார்களுக்கு தற்காலிக உரிமம் வழங்கப்பட்டு குடி மகன்கள் பார்களில் போய் குடித்தார்கள். இப்போதும் அதுபோன்று செய்யலாம் என்றார்.

    குடிமகன்களின் திண் டாட்டத்துக்கு டாஸ்மாக் நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

    Next Story
    ×