search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Actor Vijay"

    நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். #ActorVijay #SAChandrasekhar #Vijaypolitics
    சிங்கை:

    இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் இன்று காலை பாபநாசம் வந்தார்.

    அங்கு நடைபெற்ற தாமிரபரணி புஷ்கர விழாவில் அவர் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் பிறப்பால் கிறிஸ்தவனாக இருந்தாலும் இந்து தத்துவத்தை பின்பற்றுகிறேன். இந்தியாவில் பிறந்த அனைவருமே இந்துக்கள் தான். தற்போது ஆன்மீக பயணமாக நான் வந்துள்ளேன்.

    நான் இந்த நிலைக்கு வருவதற்கு 45 ஆண்டுகள் கஷ்டப்பட்டுள்ளேன். ஊழலற்ற நிர்வாகத்தை அமைக்க யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். டாக்டர்கள், வக்கீல்கள் அரசியலுக்கு வருவது போல நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை.


    நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும். இதை நான் அவரது தந்தையாக கூறவில்லை. பொதுமக்களில் ஒருவராக கூறுகிறேன். விஜய் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறார். அவர் நல்லது செய்ய வேண்டும்.

    இந்த புகழ் எல்லாம் தமிழக மக்களால் வந்தது. நான் மட்டும் சந்தோ‌ஷமாக இருப்பதை விட தன் அருகில் இருப்பவர்களையும் மகிழ்வோடு வைத்து கொள்ள வேண்டும் என்பதால் தான் ஆன்மீகத்தில் ஈடுபட்டுள்ளேன்.

    25 ஆண்டுகளாக ஈஷா யோகா மையத்தில் சத்குருவின் சீடராக உள்ளேன். இதுவரை 69 படங்கள் இயக்கி உள்ளேன். மன மகிழ்வுக்கு ஜாதி, மத வேறுபாடின்றி ஆன்மீகத்தில் ஈடுபடவேண்டும். 3 முறை காசிக்கு சென்றுள்ளேன். கைலாய யாத்திரையும் மேற்கொண்டுள்ளேன். தினமும் காலையில் யோகா செய்து வருகிறேன்.

    பாபநாசம் மிக முக்கியமான தலம். பாவங்களை போக்கும் அற்புத தீர்த்த கட்டம் இங்குள்ளது. எல்லோரும் 100 சதவீதம் நல்லவர்களாக இருக்க முடியாது. ஏதாவது குறைகள் இருக்கும். அத்தகைய சூழலில் பாவங்கள் போக்கும் பாபநாசத்திற்கு வருவது நல்லது. உலகில் எந்த மூலையில் இருப்பவர்களும் ஒருமுறையாவது பாபநாசம் வரவேண்டும்.

    காசியில் உள்ள கங்கையை போன்றே புனிதமிக்க நதி தாமிரபரணி. 144 ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடக்கூடிய தாமிரபரணி புஷ்கர விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. நம் முன்னோர்கள் ஆன்மீகத்தை அறிவியலுடன் இணைத்தே வகுத்துள்ளனர்.

    இவ்வாறு டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகர் கூறினார்.

    தொடர்ந்து அவர் நாளை கன்னியாகுமரி செல்கிறார். நாளை மறுநாள் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்கிறார்.#ActorVijay #SAChandrasekhar #Vijaypolitics
    நடிகர் விஜய் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று யோசிப்பது உயர்ந்த சிந்தனை என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #thirunavukkarasar #Vijay
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை புகழ்ந்து பாராட்டியவர்கள் இப்போது மகாத்மா காந்தியின் புகழ் பாடுகிறார்கள். இது மனமாறுதல் என்றால் வரவேற்கக்கூடியது. ஓட்டு வாங்குவதற்காக இருக்கக்கூடாது.

    நடிகர் விஜய் முதலமைச்சராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டதில் எந்த தவறும் இல்லை. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அரசியலுக்கு வரலாம். கட்சி தொடங்கிவிட்டு எம்.எல்.ஏ., அமைச்சர் ஆவதை விட முதலமைச்சர் ஆக வேண்டும் என்று யோசிப்பது உயர்ந்த சிந்தனை தான் எல்லா நடிகர்களும் அரசியலுக்கு வரட்டும்.

    ஆனால் மக்கள் அவர்களை எந்த கோணத்தில் பார்க்கிறார்கள். அவர்களின் கருத்துக்களை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று நினைப்பது முக்கியம். மக்களே எஜமானர்கள்.



    காங்கிரசில் நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள் ஜனநாயக நாட்டில் கருத்து சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு. எல்லா கருத்துக்களையும் எதிர்க்க வேண்டும். விமர்சிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

    பிரதமர் மோடிக்கு மாற்றாக ராகுல் காந்தி திகழ்கிறார். நம் தேசத்தின் அர்ப்பணிப்பில் இருக்கும் ராகுல் காந்தி மோடியை வீழ்த்தி பிரதமராக வருவார்.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மக்கள் எதிர்க்கிறார்கள். இதே போன்ற திட்டத்தை அரசு செயல்படுத்தக்கூடாது.

    தமிழகத்தில் நடைபெறும் ஊழல் ஆட்சி மற்றும் மதவாத மத்திய அரசை கண்டித்து மக்களிடம் விளக்க பொதுக்கூட்டம் காங்கிரஸ் சார்பாக 234 தொகுதியிலும் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #thirunavukkarasar #Vijay
    எனது தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக வரவேற்பேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். #Kamalhaasan #Vijay
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் சமூக வலைதளமான டுவிட்டரில் ரசிகர்களுடன் இன்று கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா? என கேள்வி எழுப்பியிருந்தார்.



    இதற்கு பதிலளித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
    #Kamalhaasan #Vijay
    நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சர்கார் படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று அதிகாலை வெளியிடப்பட்டது. #Sarkar #HBDThalapathyVIJAY
    விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. 

    ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகும் இந்த படத்திற்கு சர்கார் என தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது முதலே விஜய் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

    சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் அரசியல் தலைவர்களாக ராதாரவி மற்றும் பழ.கருப்பையா நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு பணிகளை மேறகொள்கிறார். இந்த படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நடிகர் விஜயின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, அவரது பிறந்தநாளை முன்னிட்டு சர்கார் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியிடப்பட்டது. #Vijay62 #HBDThalapathyVIJAY #Sarkar
    ‘ஒரு மகனை போல் விஜய் எனக்கு ஆறுதல் கூறினார்’ என்று தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான மாணவி ஸ்னோலினின் தாய் கூறினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22-ந்தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பேரணியாக சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

    100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள். இவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து வருகிறார்கள்.

    இதையடுத்து காயமடைந்தவர்களை பார்த்து நலம் விசாரிக்கவும், பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக நடிகர் விஜய் நேற்று நள்ளிரவு விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். பின்னர் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கினார். அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்தார்.

    இது குறித்து மாணவி ஸ்னோலினின் தாய் வனிதா கூறியதாவது:-

    நேற்று நள்ளிரவு 2 மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களிடம் யார் என்று கேட்ட போது நான் விஜய் என்று கூறினார். ஆனால் அவர் நடிகர் என்று சொல்லவில்லை. அவருடன் வந்தவர்கள் தான் நடிகர் விஜய் பலியானவர்கள் குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் கூற வந்துள்ளார் என்றனர்.

    அப்போது விஜய் எனது கைகளை பிடித்து கண்ணீர் மல்க ஆறுதல் கூறினார். பின்னர் நாற்காலியை கொடுத்து அமரச் சொன்னேன் அதற்கு மறுத்த அவர் தரையில் உட்கார்ந்தார். அவர் மிகவும் எளிமையாக இருந்தார். பகலில் வராமல் இரவில் ஏன் வந்தீர்கள் என்று கேட்டதற்கு பகலில் வந்தால் வருவது தெரிந்து கூட்டம் அதிகமாக வருவார்கள் பாதுகாப்பிற்காக போலீசார் வருவார்கள். ஏற்கனவே நீங்கள் மனவேதனையில் உள்ளீர்கள் அது உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். கூட்டம் கூடுவதை நான் விரும்பவில்லை என்றார். ஒரு மகனை போல் விஜய் எனக்கு ஆறுதல் கூறினார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினரை நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறினார். #Thoothukudi $SterliteProtest #ActorVijay
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி தூத்துக்குடியில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டு சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.



    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்ட ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இதையடுத்து நீதிபதி அருணா ஜெகதீசன் நேற்று தூத்துக்குடிக்கு வந்து விசாரணையை தொடங்கினார்.

    இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நடிகர் விஜய் நேற்று நள்ளிரவில் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது அவர் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் கூறியதுடன், நிதியுதவியும் அளித்தார்.
    ×