search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Actor Vijay"

    • இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு லியோ படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியிடப்படும் என தகவல்.
    • படத்தின் போஸ்ட்டரை நடிகர் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளனர்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் 19ம் தேதி லியோ திரைப்படம் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டு தேதி நெருங்க.. நெருங்க இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே வருகிறது.

    இந்நிலையில், லியோ படத்தின் தெலுங்கு போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

    இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு லியோ படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியிடப்படும் என பட நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இன்று வெளியிட்ட தெலுங்கு போஸ்டரில் "அமைதியாக இருந்து சண்டையை தவிருங்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த போஸ்டரை படக்குழு எக்ஸ் பக்கத்திலும், நடிகர் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளனர்.

    • சிஎஸ்கே அணிக்காக அதிரடியாக விளையாடினார்.
    • ஒரு வார்த்தையில் கேட்ட கேள்விக்கு இந்திய வீரர் பதிலளித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ரகானே. இவர் இந்திய டெஸ்ட் அணியில் மட்டும் விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் சிஎஸ்கே அணிக்காக அதிரடியாக விளையாடி மீண்டும் இந்திய டெஸ்ட் அணியின் இடம் பிடித்தார்.

    இந்நிலையில் யூடிப்பர் மதன் கவுரியுடன் வீடியோ காலில் பேசிய ரகானே, தமிழ் நடிகரான விஜய் தனக்கு பிடித்த நடிகர் என தெரிவித்துள்ளார். மதன் கவுரி கேட்ட சில கேள்விகள் ரகனே தமிழ் மட்டும் ஆங்கிலத்தில் பதில் அளித்தார்.

    ஒரு வார்த்தையில் மதன் கேட்ட கேள்விக்கு ரகானே பேசியது பின்வருமாறு:-

    மதன்: வணக்கம் ப்ரோ நல்ல இருக்கீன்களா

    ரகானே : நல்லா இருக்கேன். சாப்பிடீங்களா? (என தமிழில் பதில் அளித்தார்)

    மதன்: சிஎஸ்கே

    ரகானே: குடும்பம்

    மதன்: டோனி

    ரகானே: தல

    மதன்: ஜடேஜா

    ரகானே: நல்ல நண்பன் (என தமிழில் பதில் அளித்தார்)

    மதன்: தோசை

    ரகானே: ருசி

    மதன்: தமிழ் நடிகர் பற்றி தெரியுமா?

    ரகானே: ஆமா தெரியும்

    மதன்: யார் உங்களுக்கு பிடித்த நடிகர்

    ரகானே: விஜய்

    இவ்வாறு அவர் பதிலளித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் 48.90 கோடி விவசாயிகளுக்கு ரூ.6000 உதவித் தொகை மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
    • நடிகர்கள் மட்டுமல்ல, எந்த துறையில் இருப்பவரும் அரசியலுக்கு வரலாம்.

    நெல்லை:

    பாரதிய ஜனதா சட்டமன்ற குழு தலைவரும், நெல்லை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதலமைச்சர் மத்திய அரசு ஒன்றும் செய்யவில்லை, செய்யவில்லை என சொல்லி வருகிறார். இலவச வீடு கட்டும் திட்டம், சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டம், மகளிருக்கான வேலைவாய்ப்பு திட்டம், 59 லட்சம் கழிவறை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

    ஆயூஸ்மான் பாரத் திட்டத்தில் ரூ.28 லட்சத்து 75 ஆயிரம் பயனாளிகள் தமிழகத்தில் பயன்பெற்றுள்ளனர். சுமார் 1.43 கோடி வங்கி கணக்குகள் மத்திய அரசால் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. முத்ரா திட்டத்தில் தமிழகத்தில் ரூ1.32 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. மலிவு விலை மருந்தகம் தமிழகத்தில் 820 கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 48.90 கோடி விவசாயிகளுக்கு ரூ.6000 உதவித் தொகை மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு தமிழகத்திற்கு அதிகமான திட்டத்தை தந்துள்ளது. விலைவாசி உயர்வை மாநில அரசுகள் தான் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

    பெட்ரோல், டீசல் விநியோகத்திற்கான புதிய திட்டங்கள் உருவாக்குவதற்கான செலவுகளும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கும் காரணம். அமலாக்கதுறை தனி நிர்வாகம்.

    அடுத்த முதலமைச்சர் என நடிகர் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அவர் ரசிகர்கள் ஆசைப்படுவது தவறில்லை. பா.ஜனதா எந்த மதத்தையும் விமர்சனம் செய்வதில்லை. நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவர்களுடைய விருப்பம்.

    நடிகர்கள் மட்டுமல்ல, எந்த துறையில் இருப்பவரும் அரசியலுக்கு வரலாம். அவர்கள் அரசியல் இருக்கையில் அமர்ந்த பின்னர் அவர்களது திறமை வெளிப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நடிகர் விஜயை பா.ஜ.க.வுடன் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுப்பீர்களா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதில் அளித்த நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தேர்தல் நேரத்தில் பா.ஜ.க.வுடன் இணைந்து பணியாற்ற அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் மனுக்கள் வாங்கப்படுகிறது.
    • படிவத்தில் சம்பந்தப்பட்ட தொகுதியில் 3 முறை வெற்றி பெற்ற வேட்பாளர் யார்? எதிர்த்து போட்டியிட்டவர் எவ்வளவு வாக்குகள் வாங்கினார்.

    சென்னை:

    நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் இயக்கமாக மாறும் என்ற எதிர்பார்ப்பு சில ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.

    இதுபற்றி விஜய் வெளிப்படையாக எதுவும் கூறாமல் இருந்து வந்தார். ஆனால் இப்போது அரசியலில் இறங்குவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

    இதற்கான பிள்ளையார் சுழி கடந்த தமிழ் புத்தாண்டு தினத்தில் போடப்பட்டது. அதாவது விஜய் மக்கள் இயக்கத்தினர் அம்பேத்கர் பிறந்த நாளை அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்து சிறப்பாக கொண்டாடினார்கள்.

    அதை தொடர்ந்து இப்தார் விருந்து நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தார்கள். இவையெல்லாம் அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டம் என்பதை விஜய் மக்கள் இயக்கத்தினர் உறுதிப்படுத்தினார்கள்.

    இதற்கிடையில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு சர்வே நடத்தி வருகிறார்கள். இதற்காக தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் மனுக்கள் வாங்கப்படுகிறது. அவர்களுக்கு தனி விண்ணப்பப்படிவம் வழங்கப்பட்டுள்ளது. அந்த படிவத்தில் சம்பந்தப்பட்ட தொகுதியில் 3 முறை வெற்றி பெற்ற வேட்பாளர் யார்? எதிர்த்து போட்டியிட்டவர் எவ்வளவு வாக்குகள் வாங்கினார். நீங்கள் வேட்பாளர் என்றால் உங்களுக்கு மாற்று யார்?

    தொகுதியில் கட்சி வாரியாக இருக்கும் வாக்கு வங்கி நிலவரம்? உங்களால் வெற்றி பெற முடியும் என்றால் என்ன காரணம்? தொகுதியில் இருக்கும் பூத்களின் எண்ணிக்கை, வார்டு விபரம் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் கேட்கப்பட்டுள்ளது.

    அடுத்த மாதம் இந்த விண்ணப்பங்களை அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று சேகரிப்பார்கள். அதன் பிறகு மாவட்ட வாரியாக நேரில் அழைத்து விஜய் விசாரிப்பார் என்று கூறப்படுகிறது.

    இப்போதைய நிலையில் அடுத்த ஆண்டு வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதா? அல்லது 2026-ல் நடத்தப்படும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதா? என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்கள்.

    விஜய்யின் இந்த அறிவிப்பு மூலம் அவர் அரசியலில் குதிக்கப் போவது உறுதியாகிவிட்டது.

    • அவரோட வெற்றியால் நானும் வேகமா ஓட வேண்டியிருந்தது.
    • அவரை விட அதிகமா ஜெயிக்கணும்னு நினைச்சேன்.

    நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று இரவு நடைபெற்றது. 

    விழாவில் படத்தின் இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு, இசையமைப்பாளர் தமன், நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்டு நடிகர் விஜய் மேடையில் ரஞ்சிதமே பாடலை பாட, அவருடன் ரசிகர்களும் கூட சேர்ந்து பாடினார்கள். பின்னர் பேசிய விஜய் கூறியுள்ளதாவது: 

    1990 களில் எனக்கு ஒரு நடிகர் போட்டியாளரா வந்தாரு. கொஞ்ச நாள்ல அவரு எனக்கு சீரியசான போட்டியாளரா ஆனாரு. அவரோட வெற்றியால நானும் வேகமா ஓட வேண்டியிருந்தது. அவரை விட அதிகமா ஜெயிக்கணும்னு நினைச்சேன். எல்லாருக்கும் அப்படி ஒரு போட்டியாளர் தேவை.

    அந்த போட்டியாளர் பேரு ஜோசப் விஜய். உங்க கூட நீங்க போட்டி போடுங்க. தேவையான விமர்சனமும் தேவையற்ற எதிர்ப்பும்தான் நம்மல ஓட வைக்கும். வாழ்க்கைல முன்னேறனும்னா உங்களுக்கு ஒரு போட்டியாளர் இருக்கணும். ஆனா, அந்த போட்டியாளர் நீங்களாதான் இருக்கணும். இவ்வாறு நடிகர் விஜய் தெரிவித்தார்.

    • கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி பெயர் பலகை திறந்து கொடியேற்றி கொண்டாடப்பட்டது.
    • மாணவ - மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், பேனா,பென்சில் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

    திருப்பூர் :

    நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸிஆனந்த்ஆலோசனைப்படி திருப்பூர் மாவட்ட விஜய் இளைஞர் அணி மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஜி.கே. சங்கர் தலைமையில் இடுவம்பாளையம் இடும்பன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    காலை மணி 11 மணியளவில் இடுவம்பாளையம் நடுநிலைப்பள்ளி மாணவ - மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், பேனா ,பென்சில் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட பொருளாளர் ராம்குமார் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக சுபத்ரா தேவி ஆனந்தன் , மாவட்ட ஆலோசகர் மாதேவன் ,அவிநாசி ஒன்றிய தலைவர் கனகராஜ் ,மேற்கு மாநகர இளைஞரணி தலைவர் கிருஷ்ணன் ,மேற்கு மாநகர தொழில் நுட்ப அணி தலைவர் கௌதம், விழாவை ஏற்பாடு செய்த இடுவம்பாளையம் பகுதி தலைவர் முத்துக்குமார், பகுதி செயலாளர் காமராஜ் ,மற்ற பகுதி நிர்வாகிகள் தியாகராஜன், ரங்கநாதன் , பிரபாகரன் ,தமிழ் விஜயகுமார், சரவணன், விக்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேலும் விஜய்பிறந்தநாளையொட்டி ஓடக்காடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகங்கள், பேனா, பென்சில், பள்ளிக்கு தேவையான மாணவர்கள் அமரும் வகையில் பாய்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. மேலும் பல்வேறு பகுதிகளில் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி பெயர் பலகை திறந்து கொடியேற்றி கொண்டாடப்பட்டது .விழாவில் மாவட்ட, நகர ,ஒன்றிய ,கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நடிகர் விஜய்க்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    • வாரிசு படத்தின் போஸ்டர்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி:

    நடிகர் விஜயின் பிறந்தநாளையொட்டி அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர். விஜயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் அவரது புதிய படமான வாரிசு படத்தின் போஸ்டர்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

    அவ்வகையில், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், தனது சமூக வலைத்தள பக்கத்தல் வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் படத்தை பதிவிட்டு வாழ்த்து கூறி உள்ளார்.

    "இன்று பிறந்த நாள் காணும் அன்பு அண்ணன் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார் விஜய் வசந்த்.

    அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி 63 படத்தில் அவருடன் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். #Vijay63 #Thalapathy63 #Vijay #Nayanthara
    சென்னை:

    தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து விஜய் - அட்லி மூன்றாவது முறையாக புதிய படத்தில் இணையவிருக்கின்றனர். மேலும் இந்த படத்தில் விவேக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம்.

    ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். 

    ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு தீபாவளிக்கு படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார் என படக்குழுவினர் இன்று தெரிவித்துள்ளனர். #Vijay63 #Thalapathy63 #Vijay #Nayanthara
    நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். #ActorVijay #SAChandrasekhar #Vijaypolitics
    சிங்கை:

    இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் இன்று காலை பாபநாசம் வந்தார்.

    அங்கு நடைபெற்ற தாமிரபரணி புஷ்கர விழாவில் அவர் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் பிறப்பால் கிறிஸ்தவனாக இருந்தாலும் இந்து தத்துவத்தை பின்பற்றுகிறேன். இந்தியாவில் பிறந்த அனைவருமே இந்துக்கள் தான். தற்போது ஆன்மீக பயணமாக நான் வந்துள்ளேன்.

    நான் இந்த நிலைக்கு வருவதற்கு 45 ஆண்டுகள் கஷ்டப்பட்டுள்ளேன். ஊழலற்ற நிர்வாகத்தை அமைக்க யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். டாக்டர்கள், வக்கீல்கள் அரசியலுக்கு வருவது போல நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை.


    நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும். இதை நான் அவரது தந்தையாக கூறவில்லை. பொதுமக்களில் ஒருவராக கூறுகிறேன். விஜய் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறார். அவர் நல்லது செய்ய வேண்டும்.

    இந்த புகழ் எல்லாம் தமிழக மக்களால் வந்தது. நான் மட்டும் சந்தோ‌ஷமாக இருப்பதை விட தன் அருகில் இருப்பவர்களையும் மகிழ்வோடு வைத்து கொள்ள வேண்டும் என்பதால் தான் ஆன்மீகத்தில் ஈடுபட்டுள்ளேன்.

    25 ஆண்டுகளாக ஈஷா யோகா மையத்தில் சத்குருவின் சீடராக உள்ளேன். இதுவரை 69 படங்கள் இயக்கி உள்ளேன். மன மகிழ்வுக்கு ஜாதி, மத வேறுபாடின்றி ஆன்மீகத்தில் ஈடுபடவேண்டும். 3 முறை காசிக்கு சென்றுள்ளேன். கைலாய யாத்திரையும் மேற்கொண்டுள்ளேன். தினமும் காலையில் யோகா செய்து வருகிறேன்.

    பாபநாசம் மிக முக்கியமான தலம். பாவங்களை போக்கும் அற்புத தீர்த்த கட்டம் இங்குள்ளது. எல்லோரும் 100 சதவீதம் நல்லவர்களாக இருக்க முடியாது. ஏதாவது குறைகள் இருக்கும். அத்தகைய சூழலில் பாவங்கள் போக்கும் பாபநாசத்திற்கு வருவது நல்லது. உலகில் எந்த மூலையில் இருப்பவர்களும் ஒருமுறையாவது பாபநாசம் வரவேண்டும்.

    காசியில் உள்ள கங்கையை போன்றே புனிதமிக்க நதி தாமிரபரணி. 144 ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடக்கூடிய தாமிரபரணி புஷ்கர விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. நம் முன்னோர்கள் ஆன்மீகத்தை அறிவியலுடன் இணைத்தே வகுத்துள்ளனர்.

    இவ்வாறு டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகர் கூறினார்.

    தொடர்ந்து அவர் நாளை கன்னியாகுமரி செல்கிறார். நாளை மறுநாள் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்கிறார்.#ActorVijay #SAChandrasekhar #Vijaypolitics
    நடிகர் விஜய் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று யோசிப்பது உயர்ந்த சிந்தனை என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #thirunavukkarasar #Vijay
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை புகழ்ந்து பாராட்டியவர்கள் இப்போது மகாத்மா காந்தியின் புகழ் பாடுகிறார்கள். இது மனமாறுதல் என்றால் வரவேற்கக்கூடியது. ஓட்டு வாங்குவதற்காக இருக்கக்கூடாது.

    நடிகர் விஜய் முதலமைச்சராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டதில் எந்த தவறும் இல்லை. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அரசியலுக்கு வரலாம். கட்சி தொடங்கிவிட்டு எம்.எல்.ஏ., அமைச்சர் ஆவதை விட முதலமைச்சர் ஆக வேண்டும் என்று யோசிப்பது உயர்ந்த சிந்தனை தான் எல்லா நடிகர்களும் அரசியலுக்கு வரட்டும்.

    ஆனால் மக்கள் அவர்களை எந்த கோணத்தில் பார்க்கிறார்கள். அவர்களின் கருத்துக்களை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று நினைப்பது முக்கியம். மக்களே எஜமானர்கள்.



    காங்கிரசில் நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள் ஜனநாயக நாட்டில் கருத்து சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு. எல்லா கருத்துக்களையும் எதிர்க்க வேண்டும். விமர்சிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

    பிரதமர் மோடிக்கு மாற்றாக ராகுல் காந்தி திகழ்கிறார். நம் தேசத்தின் அர்ப்பணிப்பில் இருக்கும் ராகுல் காந்தி மோடியை வீழ்த்தி பிரதமராக வருவார்.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மக்கள் எதிர்க்கிறார்கள். இதே போன்ற திட்டத்தை அரசு செயல்படுத்தக்கூடாது.

    தமிழகத்தில் நடைபெறும் ஊழல் ஆட்சி மற்றும் மதவாத மத்திய அரசை கண்டித்து மக்களிடம் விளக்க பொதுக்கூட்டம் காங்கிரஸ் சார்பாக 234 தொகுதியிலும் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #thirunavukkarasar #Vijay
    எனது தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக வரவேற்பேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். #Kamalhaasan #Vijay
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் சமூக வலைதளமான டுவிட்டரில் ரசிகர்களுடன் இன்று கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா? என கேள்வி எழுப்பியிருந்தார்.



    இதற்கு பதிலளித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
    #Kamalhaasan #Vijay
    நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சர்கார் படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று அதிகாலை வெளியிடப்பட்டது. #Sarkar #HBDThalapathyVIJAY
    விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. 

    ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகும் இந்த படத்திற்கு சர்கார் என தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது முதலே விஜய் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

    சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் அரசியல் தலைவர்களாக ராதாரவி மற்றும் பழ.கருப்பையா நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு பணிகளை மேறகொள்கிறார். இந்த படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நடிகர் விஜயின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, அவரது பிறந்தநாளை முன்னிட்டு சர்கார் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியிடப்பட்டது. #Vijay62 #HBDThalapathyVIJAY #Sarkar
    ×