search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "abhishekam"

    • தேய்பிறை அஷ்டமியை யொட்டி சிறப்பு யாகம் நடந்தது.
    • பைரவருக்கு பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூர் மேலமறைகாடர் கோவிலில் உள்ள காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியை யொட்டி ஆனந்த் சிவச்சாரியர்கள் தலைமையில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

    பின், கடம் புறப்பாடு நடைபெற்று கோவிலை சுற்றி வலம் வந்து பைரவருக்கு பால், சந்தனம், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்க ப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • 5 பிரதோஷ காலத்தில் வழிபாடு செய்தால் எண்ணியவை எண்ணியபடி நிறைவேறும்.
    • நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கரந்தை கருணாசாமி கோவிலில் தொடர்ந்து ஐந்து பிரதோஷ காலத்தில் வழிபாடு செய்தால் எண்ணியவை எண்ணியபடி நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

    இந்த நிலையில் ஆனி மாதம் சனிக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.தொடர்ந்து வசிஷ்டேஸ்வர் , பெரிய நாயகி அம்மன் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

    • சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
    • சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோயிலில் திருநிலைநாயகிஅம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வ ரர்சுவாமி அருள்பாலி க்கிறார்.

    இக்கோயிலில் காஞ்சிபுரத்தை தலைமை யிடமாக கொண்டுள்ள ஆதி சைவாச்சாரியார் தேசிகர் சங்கத்தினை சேர்ந்த 300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற மண்டல அபிஷே கம் நடந்தது.

    முன்னதாக ஆண்டவினாயகர், பிரம்மபுரீஸ்வரர்சுவாமி, திருநிலைநாயகிஅம்பாள், முத்துசட்டைநாதர்சுவாமி, திருஞானசம்பந்தர்சுவாமி உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.பின்னர் நடைபெற்ற சுக்ரவார வழிப்பாட்டில் பலிபீடத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து முத்துசட்டைநாதர்சுவாமி சிறப்பு வழிபாடும், மலைமீது அருள்பாலிக்கும் சட்டைநாதர் சுவாமிக்கு புனுகுசாத்தி, பயர்பாயாசம், வடை நிவேதனம் செய்து தீபாராதனை நடந்தது. இதில் திரளாக ஆதி சைவாச்சாரியார் சங்கத்தினர் பங்கேற்று தரிசனம் செய்தனர். திருவேற்காடு அரிமா முனைவர் .சம்பந்தம் மற்றும் ஆத்மநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • ஆண்டுதோறும் ஆனி திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறும்.
    • நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கரந்தையில் அமைந்துள்ள கருணாசாமி கோவில் என்கிற வசிஷ்டேஸ்வர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலாகும். இது தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆனி திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறும். அதன்படி நாளை

    (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு ஆனி திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.

    இந்த வழிப்பாட்டிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா ,கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • பக்தர்கள் கிருஷ்ணன் புகழ் பாடும் சங்கீர்த்தனம் பாடினர்.
    • பக்தர்கள் தயாரித்த 1008 உணவு பதார்த்தங்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

    கோவை கொடிசியாக அருகே புகழ்பெற்ற இஸ்கான் ஜெகநாதர் கோவில் உள்ளது. இங்கு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஜெக நாதர், பலதேவர், சுபத்ரா தேவியருக்கு திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. இதற்காக கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த பந்தல் மேடையில் ஜெகநாதர், பலதேவர், சுபத்ராதேவி எழுந்தருளினர்.

    அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கிருஷ்ணன் புகழ் பாடும் சங்கீர்த்தனம் பாடினர். அதை்தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர், மலர் களை கொண்டு விக்ரகங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா என்று பக்தி முழுக்கங்களை எழுப்பினர்.

    அதைத்தொடர்ந்து சுவாமிக்கு பக்தியுடன் பக்தர்கள் தயாரித்த 1008 உணவு பதார்த்தங்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. நாட்டின் கலாசாரத்தை பறைசாற்றும் விதமாக பாரம்பரிய தென்னிந்திய மற்றும் வடஇந்திய உணவு வகைகள் ஜெகநாதருக்கு படைக்கப்பட்டன. இதையடுத்து பக்தி வினோத சுவாமி ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.இதுகுறித்து இஸ்கான் அமைப்பினர் கூறுகையில், ஒடிசா மாநிலத் தில் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவிலில் ஆண்டு தோறும் தேரோட்டத்திற்கு முன்பு மூலவருக்கு திருமஞ்சன அபிஷேகம் நடைபெறும். அதை பின்பற்றி கோவை இஸ்கான் கோவிலில் ஜெகநாதருக்கு திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. இஸ்கான் அமைப்பு சார்பில் கோவையில் வருகிற 24-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது என்றனர்.

    • பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி அருகே வெள்ளையாண்டிப்பட்டி சிவபுரத்தில் அகத்தியர் சிவசித்தர் பீடத்தில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு பகவதி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம், குங்குமம், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை அம்மனுக்கு ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, சென்னை, கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • 21 வகையான திரவிய பொருட்களால் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • சண்முகார்ச்சனை செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    வைத்தீஸ்வரன் கோவிலில் தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்திய நாதசுவாமி கோயில் உள்ளது.

    இக்கோயிலில் தனி சன்ன தியில் செல்வமுத்துக்கு மாரசுவாமி, அங்காரகன், தன்வந்திரி ஆகிய சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர்.

    இக்கோயிலில் மண்டலா பிஷேக கிருத்திகையை யொட்டி செல்வமுத்துக்கு மாரசுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

    கிருத்திகை மண்டபத்தில் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்து க்குமார சுவாமிக்கு மஞ்சள், திரவியபொடி, பால்,தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் முதலான 21 வகையான நறுமன திரவிய பொருட்க ளால் சிறப்பி அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து மலர்கள், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு சண்முகார்ச்சனை செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்து பக்த ர்களுக்கு பிரசாதங்களை வழங்கினார்.

    • பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு கிருத்திகையை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு கிருத்திகையை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் கிருத்திகையை முன்னிட்டு கபிலர்மலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி கோவில், பிராந்தகத்தில் 34.5 அடி உயரம் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர்கோவில்,

    பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்ட வர் கோவில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ர மணியர், ராஜா சுவாமி திருக்கோவிலில் உள்ள ராஜா சுவாமி, பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள முருகன், சுள்ளிப்பா ளையம் அருகே அருணகிரி நாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வான சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெ ருமானுக்கு சிறப்பு அபிஷே கமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

    • நந்திக்கு பால், பன்னீர், விபூதி உள்ளிட்ட திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருப்புன்கூ ரில் நந்தனார் வழிபட நந்தி விலகிய சிவலோக நாதனார் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் சவுந்தர நாயகி உடனாகிய சிவலோகநா தர்சுவாமி அருள்பாலிக்கிறார்.

    இக் கோயிலில் தஞ்சைக்கு அடுத்தபடியாக பெரிய நந்தி உள்ளது. பிரதோஷம் தோறும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி வியாழக்கிழமை பிரதோஷத்தையொட்டி நந்திக்கு, பால், பன்னீர், விபூதி ,பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களும் காட்சியளித்தார்.

    தொடர்ந்து தீபாரணை காட்டப்பட்டு அன்னதானம் வழங்கப்ப ட்டது. இதே போல் சீர்காழி சட்டைநாதர்சுவாமி கோவில், தென்பாதி கைவிடலப்பர்சு வாமி கோவில், சீர்காழி தாளபுரீஸ்வரர்கோவில், நாகேஸ்வர முடையார் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சுத்தமான நீரால் செய்யப்படும் தாராபிஷேகத்தால் கஷ்டங்கள் நீங்கும்.
    • நெய் அபிஷேகம் செய்தால் நோய் நீங்கி வம்ச விருத்தி ஏற்படும்.

    சிவனைத் தூய நல்லெண்ணையில் வாசனைத் திரவியங்கள் கலந்து நூறு குடம் அபிஷேகம் செய்தால் வாழ்வில் நோய் நீங்கி நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

    கோமூத்திரம் கலந்த பஞ்சகவ்யத்தைப் பத்துக்குடம் அபிஷேகம் செய்தால் உடலில் உள்ள அழுக்குகள் நீங்கி, மாசு மருவற்ற தேத்தினைப் பெறலாம்.

    சுத்தமானப பசுவின் கறந்த பால் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் தீர்க்காயுசு கிடைக்கும்.

    சுத்தமான தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் மன துக்கமும், இனிய கானம் பாடும் திறமையும், குயிலினும் இனிய குரலும் கிடைக்கும்.

    எலுமிச்சம்பழம் ஆயிரம் கொண்டு அபிஷேகம் செய்தால் அஞ்ஞானம் நீங்கிவிடும்.

    சர்க்கரையினால் நூறு மூட்டை அபிஷேகம் செய்ய வாழ்வில் இல்லாமை நீங்கி, மனநிறைவு உண்டாகும்.

    இளநீர் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் பேரானந்தமும், கைலாசவாசனின் காலடியில் வாழும் பேறும் கிட்டும்.

    பத்தாயிரம் பழங்கள் சேர்த்து செய்த பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் வாழ்வில் வீரத்துடன் எதையும் சாதிக்கும் மனோபலமும், சகல காரியங்களில் வெற்றியும் கிடைக்கும்.

    தயிர் நூறு குடம் அபிஷேகம் செய்தால் மேலான சம்பத்து கிடைக்கும்.

    கரும்புச்சாறு நூறு குடம் அபிஷேகம் செய்தால் தேக ஆரோக்கியம், உடல் வலிமை பெற்று விளங்கும்.

    மஞ்சள் தூளினால் அபிஷேகம் செய்தால் அரசனின் அன்பிற்கு பாத்திரமாகும் நிலை உண்டாகும்.

    திராட்சை ரசம் செல்வத்தினை அளிக்கும்.

    பசு நெய் கொண்டு அபிஷேகம் செய்தால் இகபரசுகங்களில் இருந்து நம்மை விடுவித்து சுவர்க்க நிலையை நமக்கு அளிக்கும்.

    அரிசிமாவினால் அபிஷேகம் செய்தால் எத்தகைய கடன்கள் இருந்தாலும் அவற்றில் இருந்து நம்மை விடுவிக்கும்.

    அன்னாபிஷேகம், பதினொரு மூட்டை அரிசியால் அன்னம் சமைத்து அதனை லிங்கஸ்வரூபமான சிவனுக்கு அபிஷேகம் செய்தால் வயிற்றில் உண்டாகும் சகலவிதமான நோய்களும் பஞ்சாகப் பறந்துவிடும்.

    தூய்மையான மங்களகரமான கங்கை நீர் நூறு குடம் கொண்டு அபிஷேகம் செய்தால் மனத்திலுள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி , பயம் போய், மனநிம்மதி உண்டாகும்.

    சந்தனக்குழம்பினைப் பன்னீரில் கரைத்து அபிஷேகம் செய்தால் இறைவனிடம் மாசற்ற பக்தி உண்டாகி அஞ்ஞானம் விலகும்.

    ருத்ரம் ஜபித்த ஆயிரம் கலசங்களில் வைக்கப்பட்டுள்ள கங்கை நீரால் கங்காதரனைக் குளிர்வித்தால் மந்திரசித்தி ஏற்படும்.

    ஈசனின் திருமேனியில் இருந்து தோன்றிய விபூதியினால் அபிஷேகம் செய்ய சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

    தங்கத்தாமரை மொட்டுகள் செய்து அதனால் அபிஷேகம் செய்தால் சொவர்க்க போகம் கிடைக்கும்.

    மாதுளை - அரச பதவி கொடுக்கும்

    நெய் - மோட்சத்தைக் கொடுக்கும்

    அன்னம் - வயிற்று நோயை நீக்கும்

    நெல்லிக்கனி - பித்தம் நீக்கும்

    பழ ரசங்கள் - வறட்சியைப் போக்கும்

    நெய் அபிஷேகம் செய்தவுடன் ஆறிய வெந்நீர் அபிஷேகம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் வாசனை கலந்த சுத்த தண்ணீரால் அபிஷேகம் செய்து, அடுத்தது தொடங்க வேண்டும்.

    ஒவ்வொரு அபிஷேகத்தின் போதும் வகை வகையான மலர்களை சிவன் தலையில் வைக்க வேண்டும். ஈசனுக்கு அபிஷேகம் செய்யும் பொழுது சல்லடைக்கண்கள் உள்ள தாராபாத்திரத்தில் அபிஷேகம் செய்யதால் நன்மைகள் பல உண்டு.

    சுத்தமான நீரால் செய்யப்படும் தாராபிஷேகத்தால் கஷ்டங்கள் நீங்கும். சுகம், குழந்தை பாக்கியம் ஏற் படும்.

    நெய் அபிஷேகம் செய்தால் நோய் நீங்கி வம்ச விருத்தி ஏற்படும்.

    சர்க்கரை கலந்த பாலாபிஷேகம் செய்ய மந்திர ஏவல்களால் பாதிப்பு ஏற்படாது.

    வாசனைத் திரவியங்களோடு கூடிய தயிர் அபிஷேகம் எதிரிகளை அழிக்கும்.

    தேன், வியாதிகளை நீக்கும், கரும்புச்சாறு துக்கங்களை நீக்கி சந்தோஷத்தை கொடுக்கும்.

    • ராஜகோபாலசாமி கோவிலில் மார்த்தாண்ட பைரவர் அருள்பாலித்து வருகிறார்.
    • பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வடக்கு வீதியில் அமைந்துள்ள ராஜ கோபாலசுவாமி கோயில் அமைந்துள்ளது. தஞ்சையில் இங்கு மட்டுமே மார்த்தாண்ட பைரவர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் வைகாசி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மார்த்தாண்ட பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் , தீபாராதனை நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தார்கள்.

    • சுந்தர விநாயகர் கோவில் வருஷாபிஷேக விழா நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சுந்தரபுரம் தெருவில் சுந்தரவிநாயகர் உள்ளது. இந்த கோவிலில் 19-ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவையொட்டி 108 சங்காபிஷேகம், சிறப்பு கணபதி ஹோமம், மற்றும் கும்ப கலசங்கள் உள்ள புனித நீரால் சிறப்பு அபிஷேகம் ஆகியவை நடந்தது.

    இதை தொடர்ந்து பாலாபிஷேகம், தீபாராதனை நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் தாயமங்கலம் ரோட்டில் உள்ள மயூரநாதர் கோவிலில் பாம்பன்சுவாமி குருபூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ெதாடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×