search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    இஸ்கான் கோவிலில் திருமஞ்சன அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
    X

    திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றதையும், அதில் கலந்து கொண்ட பக்தர்களையும் படத்தில் காணலாம்.

    இஸ்கான் கோவிலில் திருமஞ்சன அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

    • பக்தர்கள் கிருஷ்ணன் புகழ் பாடும் சங்கீர்த்தனம் பாடினர்.
    • பக்தர்கள் தயாரித்த 1008 உணவு பதார்த்தங்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

    கோவை கொடிசியாக அருகே புகழ்பெற்ற இஸ்கான் ஜெகநாதர் கோவில் உள்ளது. இங்கு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஜெக நாதர், பலதேவர், சுபத்ரா தேவியருக்கு திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. இதற்காக கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த பந்தல் மேடையில் ஜெகநாதர், பலதேவர், சுபத்ராதேவி எழுந்தருளினர்.

    அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கிருஷ்ணன் புகழ் பாடும் சங்கீர்த்தனம் பாடினர். அதை்தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர், மலர் களை கொண்டு விக்ரகங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா என்று பக்தி முழுக்கங்களை எழுப்பினர்.

    அதைத்தொடர்ந்து சுவாமிக்கு பக்தியுடன் பக்தர்கள் தயாரித்த 1008 உணவு பதார்த்தங்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. நாட்டின் கலாசாரத்தை பறைசாற்றும் விதமாக பாரம்பரிய தென்னிந்திய மற்றும் வடஇந்திய உணவு வகைகள் ஜெகநாதருக்கு படைக்கப்பட்டன. இதையடுத்து பக்தி வினோத சுவாமி ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.இதுகுறித்து இஸ்கான் அமைப்பினர் கூறுகையில், ஒடிசா மாநிலத் தில் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவிலில் ஆண்டு தோறும் தேரோட்டத்திற்கு முன்பு மூலவருக்கு திருமஞ்சன அபிஷேகம் நடைபெறும். அதை பின்பற்றி கோவை இஸ்கான் கோவிலில் ஜெகநாதருக்கு திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. இஸ்கான் அமைப்பு சார்பில் கோவையில் வருகிற 24-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது என்றனர்.

    Next Story
    ×