search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadhaar number"

    • மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தென்திருப்பேரையில் நடைபெற்றது.
    • தி.மு.க. சார்பில்வீடு வீடாக சென்று ஆதார் எண் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    தென்திருப்பேரை:

    தமிழக அரசின் மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தென்திருப்பேரையில் நடைபெற்றது. பேரூர் பகுதியில் 100 சதவீதம் முழுமையடையச் செய்ய தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனைப்படி தென்திருப்பேரை பேரூர் தி.மு.க. சார்பில் தன்னார்வலர்களை கொண்டு வீடு வீடாக சென்று மின்இணைப்பு எண்ணோடு ஆதார் எண் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    இந் நிகழ்ச்சி ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன்குமார் தலைமையில் நகர செயலாளர் முத்து வீரப்பெருமாள், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் ஆனந்த், ஆழ்வை மத்திய ஒன்றிய அவைத்தலைவர் மகரபூஷணம் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. ஒன்றிய துணை செயலாளர் கோட்டூர் கோயில்துரை, மாவட்ட பிரதிநிதி செங்கோட்டையன், பேரூராட்சி கவுன்சிலர்கள் மாரியம்மாள், சீதாலெட்சுமி, சண்முகசுந்தரம், வார்டு செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பர்கத் நகர் அங்கன்வாடி மையத்தில் மின்னட்டை ஆதார் எண்ணுடன் இணைக்கும் முகாம் நடந்தது. முகாமை கோட்டக்குப்பம் நகர் மன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி தொடங்கி வைத்தார்.
    • முகாமில் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.

    புதுச்சேரி:

    கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பர்கத் நகர் அங்கன்வாடி மையத்தில் மின்னட்டை ஆதார் எண்ணுடன் இணைக்கும் முகாம் நடந்தது. முகாமை கோட்டக்குப்பம் நகர் மன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி தொடங்கி வைத்தார்.

    கோட்டக்குப்பம் மின்வாரிய இளமின் என்ஜினீயர் ஆதிமூலம் தலைமை வகித்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை 22-வது வார்டு உறுப்பினர் நாசர் அலி, மற்றும் வார்டு செயலாளர் கமால் ஹசேன் செய்திருந்தனர்.

    முகாமில் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.

    • வங்கிக்கு சென்று ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்த வேண்டும்.
    • ஆதார் எண் விவரங்களை கேட்கவோ, ஆதார் நகலை பெறவோ கூடாது.

    ரேஷன் அட்டைதாரர்களில் வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் புதிய வங்கிக் கணக்கை தொடங்க தேவையான அறிவுறுத்தல்களை வழங்குமாறும் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை சார்பில் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. அதில் ரேசன் அட்டை தாரர்களிடம் ஆதார் எண்ணை இணைக்க சொன்னால் மட்டும் போதும் என்று அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டிருந்தது

    இந்த நிலையில் இன்று உணவுத்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையில், வங்கிக் கணக்கு இல்லாத ரேசன் அட்டைதாரர்கள், புதிய வங்கி கணக்கு தொடங்க அருகில் உள்ள கூட்டுறவு வங்கியின் விண்ணப்பத்தை நியாய விலைக் கடையில் பெற்றுக் கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    அதே சமயம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே வங்கிக் கணக்கு உள்ளது என்றால், அந்த வங்கிக்கு சென்று அவர்களது ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கு இல்லையென்றால், அருகில் உள்ள கூட்டுறவு வங்கி அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் புதிய கணக்கு தொடங்கி அதை ஆதார் எண்ணுடன் இணைத்து, அந்த விவரங்களை அவரவர் ரேஷன் கடைகளில் தெரிவிக்க அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    ரேஷன் அட்டைதாரர்களின் ஆதார் எண் விவரங்களை எக்காரணம் கொண்டு கேட்கவோ, ஆதார் நகலை பெறவோ கூடாது என சார் நிலை அலுவலர்களை அறிவுறுத்துமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வங்கிக் கணக்குகளை பெறுவது தொடர்பாக வெளியிடப்பட்ட கடிதத்திற்கு மாற்றாக இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டும் எனவும் உணவுத்துறை அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணிக்காக ஏற்கனவே தச்சநல்லூர் பிரிவு அலுவலகத்தில் சிறப்பு மையம் செயல்பட்டு வருகிறது.
    • பொதுமக்கள் அனைவரும் முகாமிற்கு வருகை புரிந்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தச்சநல்லூர் பிரிவு அலுவலகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணிக்காக ஏற்கனவே தச்சநல்லூர் பிரிவு அலுவலகத்தில் சிறப்பு மையம் செயல்பட்டு வருகிறது.

    தற்பொழுது தச்சநல்லூர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக தச்சநல்லூர் மாநகராட்சி வரி வசூல் மையத்தில் மின் இணைப்பு எண்னணுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இதனை இன்று காலை நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு நெல்லை நகர் புறக்கோட்ட செயற்பொறியாளர் முத்துகுட்டி தலைமை தாங்கினார். பழைய பேட்டை உபகோட்ட உதவி செயற் பொறியாளர் சங்கர் முன்னிலை வகித்தார்.

    மேலும் உதவி மின் பொறியாளர்கள் சரவணகுமார், சரவணன், அருணன், மற்றும் பணியாளர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஏற்கனவே நெல்லை மின் பகிர்மான வட்டத்தில் 103 சிறப்பு மையங்கள் செயல்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தியாகராஜநகரில் நெல்லை மத்திய அலுவலகத்திலும், தற்பொழுது தச்சநல்லூர் மாநகராட்சி வரி வசூல் மையத்திலும் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் அனைவரும் முகாமிற்கு வருகை புரிந்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தந்த மின் அலுவலகத்தில் நடைபெறும்.
    • தமிழக அரசு ஆதார் எண் இணைக்கும் தேதியை டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது.

    பெருமாநல்லூர் :

    தமிழக மின் வாரியம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதையடுத்து திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் மற்றும் ஊத்துக்குளி ஒன்றியங்களில் இதற்கான சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது.

    இம்முகாம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தந்த மின் அலுவலகத்தில் நடைபெறும். தற்போது தமிழக அரசு ஆதார் எண் இணைக்கும் தேதியை டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆண்டுக்கு ரூ.6000, மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கி கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது.
    • பி.எம். கிஷான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    பெருமாநல்லூர் :

    தமிழ்நாட்டில் "பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி" திட்டமானது 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்களுக்கு உதவித்தொகையாக நான்கு மாதத்திற்கு ஒருமுறை ரூ.2000 விதம் ஆண்டுக்கு ரூ.6000, மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடி பண பரிமாற்றம் அந்தந்த பகுதியின் ஒன்றியங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    நடப்பாண்டில் 13-வது தவணையாக அதாவது 2022 டிசம்பர் முதல் 2023 மார்ச் முடிய உள்ள காலத்திற்கான தவணைத் தொகை பி.எம். கிஷான் இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது ஊத்துக்குளி வட்டார விவசாயிகள் பொது சேவை மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ தங்கள் ஆதார் எண்ணை கீழ்க்காணும் முறையில் பதிவு செய்து கொள்ளலாம். ஆகவே தங்களது அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு சென்று தனது பெயரை பி.எம். கிஷான் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசியின் எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை பி.எம்.கிஷான் இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை வைத்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். மேலும் விவரங்களுக்கு ஊத்துக்குளி வட்டார வேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என உதவி இயக்குனர் சசிரேகா தெரிவித்துள்ளார்.

    • தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
    • வரும் 28-ம் தேதி முதல் முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறும்.

    சென்னை:

    தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில்,அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

    வரும் 28-ம் தேதி முதல் முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறும்.

    பண்டிகை தினங்கள் தவிர, ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

    • இதுவரை சுமார் 3 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்து உள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
    • ஆதார் இணைக்கும் வரை நுகர்வோர் ஆஃப்லைன், ஆன்லைன் முறைகள் மூலம் பணம் செலுத்த முடியாது.

    தமிழ்நாட்டில் சுமார் 3 கோடி அளவுக்கு மின் இணைப்புகள் உள்ளன. இதில் வீட்டு மின் இணைப்புகள் 2 கோடியே 30 லட்சம் ஆகும். இது தவிர 10 லட்சம் குடிசை மின் இணைப்புகள், 23 லட்சம் விவசாய மின் இணைப்புகள், 1 லட்சத்து 60 ஆயிரம் விசைத்தறி மின் இணைப்புகள் உள்ளன.

    இந்த 4 வகையான மின் இணைப்புகளில் வீட்டு உபயோக மின் இணைப்புக்கும், விசைத்தறி மின் இணைப்புக்கும் 100 யூனிட் மின்சாரம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

    மானியம் பெறும் பயன்பட்டாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதாரை பதிவு செய்ய வேண்டும் என்று மின்வாரியம் கடந்த 16ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

    அதன்படி மின்வாரிய இணையதளம், மின்வாரிய செயலி, கூகுள் பே, போன் பே செயலிகள் மூலம் மின் கட்டணத்தை செலுத்தும் பொதுமக்கள் பலர் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.

    மின் கட்டணம் செலுத்தும் ஒவ்வொரு அலுவலகத்திலும் கூடுதலாக ஒரு பணியாளர் நியமிக்கப்பட்டு ஆதார் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் அட்டையின் நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போதே ஆதார் நகலை கொடுத்தால் உடனே இணைத்து தருகிறார்கள்.

    இப்போது மின் வாரிய அலுவலகங்களில் கூட்டம் அதிகம் வருவதை கருத்தில் கொண்டு ஆதாரை இணைக்க மேலும் 2 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. அதாவது மின் கட்டணம் செலுத்த நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாளில் இருந்து 2 நாட்களுக்குள் ஆதாரை இணைக்க வேண்டும்.

    இது தொடர்பாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக வருவாய் பிரிவு தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் மலர்விழி அனைத்து கண்காணிப்பு பொறியாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    அதில் கூறி இருப்பதாவது:-

    மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து அதை சரி பார்த்த பிறகே இணைய வழியிலும், நேரடியாகவும் மின் கட்டணத்தை வசூலிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பகுதியிலும் மின் கட்டணம் செலுத்த நிர்ணயிக்கப்பட்ட நவம்பர் 24 முதல் 30ம் தேதி வரை இறுதி நாள் உள்ள தாழ்வழுத்த பிரிவு மின் நுகர்வோர் அனைவருக்கும் 2 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்க வேண்டும்.

    உதாரணமாக ஒரு நுகர்வோருக்கு நவம்பர் 28ம் தேதி மின் கட்டணம் செலுத்துவதற்கு இறுதி நாள் என்றால் அவருக்கு நவம்பர் 30ம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும். ஆதாரை இணைக்காமல் உள்ள நுகர்வோருக்கு மட்டுமே இந்த அவகாசம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

    அரசின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் தங்களது வீட்டு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதனால் மின்வாரிய அலுவலகங்கள், இண்டெர் நெட் மையங்களில் வழக்கத்தை விட கூடுதலாக மக்கள் கூட்டம் காணப்படுகிறது.

    அடுக்குமாடி குடியிருப்புகளை பொறுத்தவரை பொது பயன்பாட்டு பகுதிகளில் உள்ள காமன் வராண்டா, மொட்டை மாடி, காம்பவுண்டு பகுதிகளுக்குள் உள்ள மின் விளக்குகளுக்காக தனியாக மீட்டர் வைத்திருந்தால் அது பொதுபயன்பாட்டில்தான் வரும். மானியம் இல்லாமல் முழு தொகையையும் செலுத்துவதால் அதற்கு ஆதாரை இணைக்க தேவை இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

    • பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 410 வாக்குச்சாவடிகள் உள்ளன.
    • 31.3.2023-க்குள் இந்த பணியை முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது.

    பல்லடம் :

    இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் தூய்மையாக்கவும், போலி வாக்காளர்களை ஒழிக்கவும் வாக்காளர் பட்டியலுடன் வாக்காளர்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை கடந்த 1.8.2022 முதல் தொடங்கி உள்ளது. வரும் 31.3.2023-க்குள் இந்த பணியை முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது.

    கடந்த ஒரு மாதமாக ஏராளமான வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து வருகின்றனர்.இதன்படி பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 410 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மற்றும் பச்சாபாளையம் அரசு நடுநிலை பள்ளி வாக்கு சாவடிகளில் நடந்த சிறப்பு முகாமை தாசில்தார் நந்த கோபால் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் படிவம் 6 பி‌-யை வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கும் பணி நடைபெற்றது.
    • இந்த பணியை பேரூராட்சி தலைவர் கருணாநிதி, பேரூ ராட்சி செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூ ராட்சியில் வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் படிவம் 6 பி‌-.யை வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கும் பணி நடைபெற்றது. இந்த பணியை பேரூராட்சி தலைவர் கருணாநிதி, பேரூ ராட்சி செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    வாக்காளர்கள் தாமாக முன்வந்து தங்கள் ஆதார் எண்ணை, வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அறிமுகப்ப டுத்தப்பட்டுள்ள படிவம் 6 பி-யை பூர்த்தி செய்து தாலுக்கா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்க அலுவலர்களிடமும், அந்தந்த பகுதி பேரூராட்சி அலுவலகம் அல்லது கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு சென்று ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

    பொத்தனூர் பேரூ ராட்சிஅலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி யில் பேரூராட்சி துணைத் தலைவர் அன்பரசு, இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், வார்டு கவுன்சிலர்கள் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 2 லட்சத்து 63 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
    • 295 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    உடுமலை :

    வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் படி மத்திய அரசு கூறியுள்ளது. அதன்படி இந்த பணிகள் கடந்த 1 ந்தேதி தொடங்கியது. உடுமலை சட்டமன்ற தொகுதியில் சுமார் 2 லட்சத்து 63 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

    மொத்தம் 295 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு வாக்கு சாவடிக்கு உட்பட்ட பகுதியிலும் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கான சிறப்பு முகாம் உடுமலை நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. முகாமை ஆடியோ ஆர் .ஜஸ்வந்த் கண்ணன் தொடங்கி வைத்தார். உடுமலை நகராட்சி தலைவர் மத்தின், நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், தேர்தல் துணை தாசில்தார் சாந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முகாமிற்கு வந்திருந்த பொதுமக்கள் 50 பேருடைய வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டது.

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 32 மாணவ மாணவிகளின் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கப்பட்டது. உடுமலை சட்டமன்ற தொகுதியில் இதுவரை 20 சதவீத வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அனைத்து வாக்காளர்களின் ஆதார் எண் விவரங்களை படிவம் 6- பி மூலம் பெற வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    • வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் விவரம் தெரிவிக்க இயலாதவர்கள் ஆதார் அட்டை விவரங்களை http://www.nvsp.in என்ற இணையதளத்தில் தாங்களே வாக்காளர் அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம்.

    நெல்லை:

    தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லை,அம்பாசமுத்திரம், பாளை, நாங்குநேரி மற்றும் ராதபுரம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    ஆதார் விபரம்

    அதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள 1,483 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் வீடு, வீடாக சென்று ஆதார் எண் விவரங்களை படிவம் 6 பி-யில் வாக்காளர்களின் விருப்பத்தின் பேரில் பெற நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு கூறியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களின் ஆதார் எண் விவரங்களை படிவம் 6- பி மூலம் பெற வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுகளுக்கு சென்று ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வாக்காளர்கள் இந்த அலுவலர்களிடம் ஆதார் அட்டை விவரங்களை தெரிவித்து ஒத்துழைப்பு தர வேண்டும். ஆதார் அட்டை இல்லாதவர்கள் படிவம் பி-யில் குறிப்பிட்டுள்ள வருமான வரி அட்டை

    ( பான்கார்டு) உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவண விவரத்தை தெரிவித்து அதனை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கலாம்.

    ஆன்லைன் பதிவு

    வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் விவரம் தெரிவிக்க இயலாதவர்கள் ஆதார் அட்டை விவரங்களை http://www.nvsp.in என்ற இணையதளத்தில் தாங்களே வாக்காளர் அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம்.

    இந்த பணியினை சிறந்த முறையில் நிறைவேற்றிட நெல்லை மாவட்ட வாக்காளர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×