search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதம மந்திரி கிசான் திட்டம்"

    • நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 என ஆண்டுக்கு ரூ.6000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
    • விவரங்களை பதிவு செய்தால் தான் 14-வது தவணை ஊக்கத்தொகை வழங்கப்படும்

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்ட பி.எம்.கிசான் திட்ட பயனாளிகள் தங்கள் விவரங்களை வரும் 30-ஆம் தேதிக்குள் பதிவு செய்தால் 14-வது ஊக்கத் தொகை வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

    மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள பி.எம்.கிசான் (விவசாயிகள் கவுரவ நிதி திட்டம்) திட்டத்தில் விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 என ஆண்டுக்கு ரூ.6000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இதுவரை 13 தவணைகள் விவசாயிகளுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 14வது தவணை ஊக்கத்தொகை பெற ஆன்லைனில் விவசாயிகளின் விவரங்களை பதிவு செய்யும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜூன் 30ம் தேதிக்குள் கே.ஒய்.சி பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். இதேபோல் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் தங்களது வங்கியை தொடர்பு கொண்டு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் அல்லது அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களை அணுகி வங்கி கணக்கு தொடங்கி 14வது தவணையை சரியாக பெற்று பயன்பெறாலாம். பி.எம்.கிசான் திட்டத்தில் ஊக்கத்தொகை பெறும் விவசாயிகளுக்கு கே.ஒய்.சி முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வரும் தவணையை பெற ஆதார் விபரங்கள் சரிபார்ப்பது அவசியமாகும். முதல் வழிமுறையாக, ஆதார் எண்ணுடன் கைபேசி எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் வலைதளத்தில் தங்களது ஆதார் எண், விபரங்களை உள்ளீடு செய்து, ஒருமுறை பயன்படுத்தும் கடவு மூலம் சரிபார்க்கலாம். 2 வது வழிமுறையாக ஆதார் எண்ணுடன் கைபேசி எண் இணைக்காதவர்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலம் திட்ட வலைதளத்தில் ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து, விரல் ரேகையை பதிவு செய்து சரிபார்க்கலாம். 3வது வழிமுறையாக பி.எம்.கிசான் செயலி மூலம் முக அடையாளம் கொண்டோ அல்லது அருகில் உள்ள தபால் அலுவலகத்தை அணுகி இ.கே.ஒய்.சி. செய்து கொள்ளலாம். வரும் 30-ஆம் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) இதை செய்தால் தான் 14-வது தவணை ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் பழனி கூறியுள்ளார்.

    • பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு 11 தவணை வரை தொகைகள் வரப்பெற்றுள்ளது.
    • விவசாயிகள் தவணை தொகை பெறுவதற்கு ஆதார் விவரங்களை சரிபார்ப்பு செய்வது அவசியமாகும்.

    புதியம்புத்தூர்:

    ஓட்டப்பிடாரம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருள்கள் வாங்கும் பொருட்டு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் சேர்ந்த தேதியை பொறுத்து விவசாயிகளுக்கு 11 தவணை வரை தொகைகள் வரப்பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தில் விவசாயிகள் இ.கே.ஒய்.சி. என்கிற இணையத்தில் பதிவு செய்து செய்வது கட்டாய மாக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தொடர்ந்து தவணை தொகை பெறுவதற்கு தங்கள் ஆதார் விவரங்களை சரிபார்ப்பு செய்வது அவசியமாகும். எனவே இதுகுறித்து அருகாமையில் உள்ள சேவை மையத்திலோ, அல்லது அஞ்சல் அலுவலகத்தையோ அணுகி இ.கே.ஒய்.சி. செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும் தங்களது ஆதார் எண்ணுடன் கைபேசி எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரி கிசான் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து ஓ.டி.பி. மூலம் சரிபார்ப்பு செய்யலாம்.

    ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பிரதம மந்திரி கிசான் திட்ட பயனாளிகள் மேற்காணும் ஏதேனும் ஒரு முறையில் தங்களது ஆதார் விவரங்களை உடனடியாக பிரதம மந்திரி கிசான் திட்ட வலைதளத்தில் பதிவு செய்து தொடர்ந்து தவணை தொகைகள் பெறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×