search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stabbed"

    • ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • வழிவிட்டான் மீது ஏற்கனவே பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கோவை,

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உல்லா குடியை சேர்ந்தவர் மச்சராஜா(வயது27).

    இவர் கோவை டி.கே. மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதையடுத்து அவர் தனது மனைவியுடன் கோவையில் வசித்து வந்தார்.

    மச்சராஜாவும், மதுரையை சேர்ந்த வழிவிட்டான் (31), என்ற வாலிபரும் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர்.இதனால் வழிவிட்டான் அடிக்கடி மச்சராஜா வீட்டிற்கு வந்து சென்றார். அப்போது மச்சராஜாவின் மனைவியுடன் வழிவிட்டானுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி பேசி வந்ததாகவும் தெரிகிறது. இதனை அறிந்த மச்சராஜா தனது மனைவியை கண்டித்தார்.

    இந்தநிலையில், மச்சராஜாவின் மனைவி, தனது கணவரை திடீரென பிரிந்தார். பின்னர் அவர், வழிவிட்டானை 2-வதாக திருமணம் செய்து 2 பேரும் ராமநாதபுரத்தில் வசித்து வருகின்றனர்.இதுதொடர்பாக மச்சராஜாவுக்கும், வழி விட்டானு க்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மச்சராஜா டி.கே மார்க்கெ ட்டில் பழ கமிஷன் மண்டியில் வேலை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த வழிவிட்டானுக்கும், மச்சராஜாவுக்கும் இடையே மீண்டும் தகராறு எழுந்தது.

    இதில் ஆத்திரமடைந்த வழிவிட்டான் தான் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்தியால் மச்சராஜாவை வெட்டினார். இதில் அவருக்கு கழுத்து முதுகு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இது குறித்து போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து மனைவியின் முதல் கணவரை அரிவாளால் வெட்டிய வழிவிட்டானை கைது செய்தனர்.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். வழிவிட்டான் மீது ஏற்கனவே பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி வெள்ளகரடு பகுதியை சேர்ந்தவர் முத்து. இவர் கம்ப்ரசர் வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார்.
    • ஆத்திர மடைந்த சுந்தரம் கடையில் பழம் வெட்டுவதற்காக வைத்திருந்த சூரி கத்தியால் கண்ணம்மாளை கை, மார்பு, வயிறு பகுதியில் சரமாரியாக குத்தினார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி வெள்ளகரடு பகுதியை சேர்ந்தவர் முத்து. இவர் கம்ப்ரசர் வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கண்ணம்மாள் (37). இவர் தாரமங்கலம் அருகே பவளத்தானூரில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    கண்ணம்மாளின் கடைக்கு அருகே சின்னப்பம் பட்டியை சேர்ந்த சுந்தரம் என்பவரும் பழக்கடை வைத்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியது.

    இந்த நிலையில் கண்ணம்மாளிடம் இருந்து முத்துவின் கம்ப்ரசர் வாகனத்தின் ஆர்.சி. புக்கை வாங்கிய சுந்தரம் அதை அடமானம் வைத்து பணம் வாங்கியுள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் ஆர்.சி. புக்கை திரும்ப தராததால் கண்ணம்மாள் புக்கை திரும்ப வாங்கி தரும்படி சுந்தரத்திடம் வற்புறுத்தி வந்துள்ளார்.

    பலமுறை கேட்டும் புக்கை திருப்பு தராததால் கோபமடைந்த கண்ணம்மாள் நேற்று நங்வள்ளி பகுதிக்கு வந்த சுந்தரத்திடம் ஆர்.சி. புக்கை திரும்ப தரவில்லை என்றால் இதுகுறித்து தாரமங்கலம் போலீசில் புகார் அளிக்க போவதாக மிரட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    அப்போது ஆத்திர மடைந்த சுந்தரம் கடையில் பழம் வெட்டுவதற்காக வைத்திருந்த சூரி கத்தியால் கண்ணம்மாளை கை, மார்பு, வயிறு பகுதியில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த கண்ணம்மாள் அலறியபடி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால் சுந்தரம் அங்கி ருந்து தப்பியோடிவிட்டார்.

    பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கண்ணம்மாளை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நங்கவள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய சுந்தரத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • வெவ்வேறு சம்பவங்களில் விவசாயி உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பேகம்பூர் ஜின்னா நகரை சேர்ந்தவர் சம்சுதீன் (52). பூச்சி நாயக்க ன்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, ஜாபர் என்பவர் கத்தியால் குத்தியதில் படுகாய மடைந்தார் .

    இவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் . அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதேபோல் திண்டுக்கல் அடுத்த மயிலாப்பூர் வடக்கு தோட்டத்தை சேர்ந்தவர் செபஸ்தியார் (62). விவசாயி. இவரை ஸ்டீபன் என்பவர் கத்தியால் குத்தியதில், படுகாயமடைந்த இவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக அனுமதிக்கப்பட்டார்.

    இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று சதீஷ்குமார், மோகன்குமார் ஆகியோர் விக்னேஷின் வீட்டிற்கு சென்று பாக்கி தொகையை கேட்டுள்ளனர்
    • ஆத்திரமடைந்த விக்னேஷ் வீட்டில் இருந்த சூரி கத்தியை எடுத்து வந்து சதீஷ்குமாரை தலை மற்றும் கையில் வெட்டினார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பாப்பம்பாடி கிராமம் நத்தியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன்கள் சதீஷ்குமார் (27), மோகன்குமார் (24). இருவரும் தறிதொழில் செய்து வருகின்றனர்.

    இவர்கள் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு துட்டம்பட்டி பைபாஸ் அருவங்காடு பகுதியை சேர்ந்த மார்க்கண்டன் மகன் விக்னேஷ் (24) என்பவருக்கு ரூ.10 ஆயிரத்துக்கு சேலை கொடுத்துள்ளனர். அதில் ரூ.8 ஆயிரத்து 500-ஐ பெற்றுக்கொண்டு ரூ.1500 பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று சதீஷ்குமார், மோகன்குமார் ஆகியோர் விக்னேஷின் வீட்டிற்கு சென்று பாக்கி தொகையை கேட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த விக்னேஷ் வீட்டில் இருந்த சூரி கத்தியை எடுத்து வந்து சதீஷ்குமாரை தலை மற்றும் கையில் வெட்டினார். இதை மோகன்குமார் தடுக்க முயன்றபோது அவரையும் கத்தியால் தலை மற்றும் கை பகுதியில் வெட்டி காயப்படுத்தினார்.

    இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுபற்றி தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • பணத்தகராறில் விவசாயியை 2 பேர் கத்தியால் குத்தியதில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி அருகே ஜீவாநகரை சேர்ந்தவர் நாராயணன் (வயது57). விவசாயி. இவர் பெரியகுளத்தில் உள்ள ராஜபாண்டி என்பவரிடம் வியாபாரம் தொடர்பாக பணம் வாங்கி இருந்தார்.

    இதனை திருப்பிதராததால் இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று மேல்மங்கலம் மேலத்தெருவை சேர்ந்த புல்லட் நாகராஜ் (54) மற்றும் முருகன் ஆகிய 2பேரும் நாராயணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்த தகராறில் நாராயணனுக்கு கத்திக்குத்து ஏற்பட்டு க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அபிமன்னனை அஜித், தர்மராஜ் உள்பட 3 பேர் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக குத்தி, வெட்டினர்.
    • இதில் அபிமன்னன் தலையின் பின்பக்கம், நெற்றி ஆகிய பகுதியில் வெட்டுப்பட்டு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையா புரம் முடுக்குகாடு கிழக்கு தெருவை சேர்ந்தவர் அபிமன்னன் (வயது42). உப்பளத் தொழிலாளி.

    இவர் புதிய துறைமுகம் மதுரை பைபாஸ் சாலை, முடுக்குகாடு விலக்கு எதிரில் உள்ள பங்களா செட் உப்பளத்தில் நேற்றிரவு வரும் போது, அங்கு நின்ற அஜித், தர்மராஜ் உள்பட 3 பேர் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக குத்தி, வெட்டி னர். இதில் அபிமன்னன் தலையின் பின்பக்கம், நெற்றி ஆகிய பகுதியில் வெட்டுப்பட்டு ரத்த காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுந்தர், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சரவண ரமேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு தப்பி ஓடிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • இளவரசன் என்ற ஆஷா அப்பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
    • அங்கு வந்த ஒரு கும்பல் கத்தி மற்றும் கம்பியால் சரமாரியாக அவரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள பேட்டை அசோகர் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் இளவரசன் என்ற ஆஷா (வயது 35). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார்.

    இந்நிலையில் நேற்று இரவு அசோகர் தெரு பெருமாள் கோவில் அருகே இளவரசன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் கத்தி மற்றும் கம்பியால் சரமாரியாக அவரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த இளவரசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை அப்பகுதியினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்த புகாரின் பேரில் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், இளவரசனுக்கும், அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் குடும்பத்திற்கும் இடத்தகராறு தொடர்பாக ஏற்கனவே போலீசில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக நேற்று அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஏற்பட்ட தகராறில் மாரியப்பன், அவரது மகன்கள் மாதவன், சந்துரு உள்பட 4 பேர் சேர்ந்து கத்தியால் குத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.  

    • வாலிபர் மீது கஞ்சா மற்றும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கத்தியால் குத்திய ஸ்ரீகாந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குனியமுத்தூர்,

    கோவை போத்தனூர் அருகே உள்ள ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் தமிழ் அரசு (வயது 24). இவர் மீது கஞ்சா மற்றம் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்தநிலையில் ஒரு வழக்கில் கைதான தமிழ் அரசு கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் ஜெயிலில் இருந்த வெளியே வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (20) என்வருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று தமிழ் அரசு தனது தம்பியுடன் ஸ்ரீகாந்தை கொலை செய்வதற்காக அந்த பகுதியில் உள்ள காலி இடத்துக்கு சென்றார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஸ்ரீகாந்த் அவர் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து தமிழ் அரசின் வயிறு மற்றும் இடுப்பில் குத்தினார். இதனை தடுக்க சென்ற அவரது தம்பிக்கும் கையில் கத்திக்குத்து ஏற்பட்டது.

    அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் ஸ்ரீகாந்த் அங்கு இருந்து தப்பிச் சென்றார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய தமிழ் அரசை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்தியில் சேர்த்தனர். இது குறித்து சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதத்தில் தமிழ் அரசை கத்தியால் குத்திய ஸ்ரீ காந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • பழனியப்பன், நீங்கள் கிளம்பினால் வசதியாக இருக்கும். கடையை மூட வேண்டும் என்று கூறியுள்ளார்.
    • தொண்டாமுத்தூர் போலீசார் 11 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    வடவள்ளி,

    கோவை தொண்டாமுத்தூர்-புத்தூர் ரோட்டில் மதுபானபார் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 5 பேர் கும்பல் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்தது. அங்கு அவர்கள் ஒன்றாக உட்கார்ந்து மது அருந்தினார்கள். அப்போது அவர்களுக்கு ஊழியர் பழனியப்பன் என்பவர் சப்ளையராக இருந்தார்.

    இந்த நிலையில் அந்த கும்பல் இரவு 10 மணியான பிறகும் அங்கிருந்து புறப்படவில்லை. எனவே பழனியப்பன், நீங்கள் கிளம்பினால் வசதியாக இருக்கும். கடையை மூட வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு அந்த கும்பல் ஒப்புக்கொள்ளவில்லை. பழனியப்பனிடம் மேலும் மதுபாட்டில் கேட்டு தகராறு செய்தது. இதற்கு அவர் மறுத்து விட்டார்.

    எனவே ஆத்திரம் அடைந்த கும்பல் பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கியது. இதில் பழனியப்பனுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. எனவே சக ஊழியர்கள் திரண்டுவந்து நியாயம் கேட்டனர்.

    இதற்கிடையே அந்த கும்பலில் இருந்த ஒருவர் தேவராயபுரத்தை சேர்ந்த சிலருக்கு போன் செய்தார். அடுத்த சில நிமிடங்களில் மேலும் 7 பேர் கும்பல், மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தது. அப்போது அவர்கள் மதுபானகூடத்தில் இருந்த டேபிள், சேரை அடித்து உடைத்து சூறையாடிவிட்டு தப்பி சென்றனர்.

    இதனை தொடர்ந்து பழனியப்பனை சக ஊழியர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தலையில் 6 தையல்கள் போடப்பட்டு உள்ளன. இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இதில் தேவராயபுரத்தை சேர்ந்த நொய்யல் கார்த்திக் என்பவர் தலைமையில் புத்தூர் மதுபான பாருக்கு வந்த கும்பல் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் தேவராயபுரத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் 11 பேர் சிக்கினர். அப்போது அவர்களிடம் 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அதன்பிறகு தொண்டாமுத்தூர் போலீசார் மேற்கண்ட 11 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் தேவராயபுரத்தை சேர்ந்த நொய்யல் கார்த்திக் (வயது 29), புதுக்கோட்டை ஆவுடையார்கோவில் வீரசேகரன் (29), நரசிபுரம் பிரகாஷ் (27), தேவராயபுரம் மகாவிஷ்ணு என்ற சபரி (19), ஹரிஹரன் (19), பாரதி கண்ணன் (22), அருணகிரி (19), வாஞ்சிநாதன் (21), சந்தோஷ்குமார் (21) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து புத்தூர் மதுபான பாரை சூறையாடி, சப்ளையர் பழனியப்பனின் மண்டையை உடைத்ததாக தொண்டாமுத்தூர் போலீசார் மேற்கண்ட 11 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.நொய்யல் கார்த்திக்கிற்கு ஆண் குழந்தை பிறந்து உள்ளது. இதற்கு பார்ட்டி கொடுப்பதற்காக அவர், நண்பர்களுடன் மதுபான பாருக்கு வந்து உள்ளார்.அப்போது தான் மேற்கண்ட சம்பவம் நடந்து உள்ளது. இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுபோதையில் இருந்த மணிமாறன் அருண்குமாரை கத்தியால் குத்தினார்.
    • சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை சூலூர் அருகே உள்ள புளியமரத்து பாளையத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 25). கூலித் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் (40).

    சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள மதுரை வீரன் கோவிலில் கிடா வெட்டு போடுவதற்காக இவர்கள் 2 பேரும் மதுபோதையில் கறி வெட்டிக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த மணிமாறன் தான் வைத்து இருந்த கத்தியால் அருண்குமாரின் வயிற்றில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • குடிபோதையில் நின்ற வாலிபரை உதயபிரகாஷ் கண்டித்துள்ளார்.
    • மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுந்தர்ராஜனை கைது செய்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள மகாதேவபுரத்தை சேர்ந்தவர் உதயபிரகாஷ்(24). டான்ஸ் மாஸ்டர்.

    சம்பவத்தன்று இவரது வீட்டு முன்பு வாலிபர் ஒருவர் குடிபோதையில் நின்ற வாலிபர் ஒருவர் அந்த வழியாக சென்றவர்களிடம் தகராறு செய்தார். இதனை பார்த்த உதயபிரகாஷ் அந்த வாலிபரின் அருகே சென்று அவரை கண்டித்தார். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் தகாத வார்த்தைகளால் பேசினார். அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து உதயபிரகாஷை குத்தினார். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த டான்ஸ் மாஸ்டரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டான்ஸ் மாஸ்டரை கத்தியால் குத்திய பத்திரகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சவுந்தர்ராஜன் (23) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • தனியார் நிறுவன ஊழியருக்கு கத்திக்குத்து விழுந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    தெற்குவாசலில் உள்ள எலக்ட்ரிகல் நிறுவனத்தின் சூப்பர்வைசர் சையது அப்துல் கபூர் (வயது45). இவர் வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு தென்றல் நகரைச் சேர்ந்த சைவம் (59) என்பவரிடம் ரூ.5 லட்சம் கடன் பெற்றார். இவர் தி.மு.க. பிரமுகர் ஆவார். பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். அவர்களுக்குள் கடன்தொகையை கணக்கிட்டு செட்டில் செய்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் முன் விரோதம் இருந்தது.

    சம்பவத்தன்று தெற்கு வாசல் பகுதியில் இருந்த சையது அப்துல் கபூரை, சைவம் அவதூறாக பேசி யதுடன் கத்தியால் குத்தினார். காயமடைந்த சையது அப்துல் கபூர் இதுகுறித்து தெற்குவாசல் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து தி.மு.க பிரமுகர் சைவம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×