திண்டுக்கல்லில் 2 பேருக்கு கத்திக்குத்து

வெவ்வேறு சம்பவங்களில் விவசாயி உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் பேகம்பூர் ஜின்னா நகரை சேர்ந்தவர் சம்சுதீன் (52). பூச்சி நாயக்க ன்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, ஜாபர் என்பவர் கத்தியால் குத்தியதில் படுகாய மடைந்தார் .

இவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் . அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் திண்டுக்கல் அடுத்த மயிலாப்பூர் வடக்கு தோட்டத்தை சேர்ந்தவர் செபஸ்தியார் (62). விவசாயி. இவரை ஸ்டீபன் என்பவர் கத்தியால் குத்தியதில், படுகாயமடைந்த இவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com