search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shutdown"

    • காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது
    • தஞ்சை எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்திற்கு உரிய அளவு காவிரி நீரை உடனடியாக கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். தமிழக அரசு பலமுறை மத்திய அரசிடம் வலியுறுத்தியும் தண்ணீர் திறந்து விட எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும் இன்று டெல்டா மாவட்டங்களில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு இன்று காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன், செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் வக்கீல் கோ. அன்பரசன் மற்றும் பல்வேறு கட்சி , இயக்கத்தினர், அமைப்பினர், தொழில் சங்கத்தினர், வணிகர் சங்க நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் திரண்டனர். பின்னர் அவர்கள் காவிரியில் உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியாக வந்தனர்.

    இதையடுத்து தஞ்சை காந்திஜி ரோடு எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி நீர் திறந்திட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இந்த போராட்டத்தில் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த போராட்டத்திரல் தி.மு.க. மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், துணை செயலாளர் கனகவல்லிபாலாஜ், முன்னாள் கவுன்சிலர் சதாசிவம், நிர்வாகிகள் 48-வது வார்டு பிரதிநிதி செழியன், 49-வது வார்டு சண்முகம், ராஜா, காங்கிரஸ் வட்டார தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் மோகன்ராஜ், வயலூர் ராமநாதன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி, துணை செயலாளர் சக்திவேல், பொருளாளர் பாலசுப்பிரமணியன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் மாவட்ட செயலாளர் நீலமேகம், மாவட்ட செயற்குழு மனோகரன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் ஜெயசங்கர், முன்னாள் மாவட்ட செயலாளர் சொக்காராவி, வெற்றிவேந்தன், ம.தி.மு.க. மாவட்டசெயலாளர் தமிழ்செல்வன், மாநகர செயலாளர் துரைசிங்கம், வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் புண்ணியமூர்த்தி , செயலாளர் முருகேசன், அவைத்தலைவர் திலகர், பொருளாளர் சதீஷ்பாலாஜி, நகர பொருளாளர் செல்வம், நகர தலைவர் வாசுதேவன் , நகர செயலாளர் துரைகந்தமுருகன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் சூரியகுமார், மாநகர அமைப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் ஆனந்த், அண்ணா திராவிடர் மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், துணை செயலாளர் இருதயராஜ், விடுதலை தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் முகிலன், ஏ.ஐ.டி.யூ.சி தேசிய நிர்வாகக்குழு சந்திரகுமார், மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், மாவட்ட தலைவர் சேவையா, சி.ஐ.டி.யூ மாவட்ட துணை செயலாளர் அன்பு, நிர்வாகிகள் ராஜா, பேர்நீதி ஆழ்வார், மக்கள் கலை இலக்கியம் ராவணன், மக்கள் அதிகாரம் காளியப்பன், தாளாண்மை உழவர் இயக்கம் திருநாவுக்கரசு, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஜெய்னூலாப்தீன், மனித நேய மக்கள் கட்சி பாதுஷா, விவசாய சங்க நிர்வாகி சண்முகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தேவகோட்டையில் வருகிற 22-ந்தேதி கடையடைப்பு-ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • தீர்வு எட்டப்படாவிடில் தொடர் போராட்டங்கள் நடத்தப் படும்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி 27 வார்டுகளை உள்ளடக்கியது. 1 லட்சம் வாக்காளர்களை கொண்ட நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை களை கொட்ட ரஸ்தா சாலையில் 4 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் குப்பைகளை கொட்ட அந்தப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக குப்பை களை கொட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த பிரச்சினை தொடர்பாக ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவ லகத்தில் நகர்மன்றத் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்திற்கு பின் தலைவர் சுந்தரலிங்கம் கூறியதாவது:-குப்பைகள் கொட்டும் விவகாரம் தொடர்பாக கலெக்டர், அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த தீர்வும் ஏற்படவில்லை. கடந்த 6 மாதங்களாக தேவகோட்டை நகர் முழுவதும் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு உருவாகி உள்ளது.

    நகராட்சிக்கு ஒதுக்கப் பட்ட தேவகோட்டை ரஸ்தா பகுதிகளில் குப்பைகளை ஒதுக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் அந்த இடத்தை தயார் செய்து தரவில்லை.

    இதை கண்டித்து தேவகோட்டையில் வருகிற 22-ந்தேதி (வியாழக்கிழமை) கடையடைப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதன் பின்பும் தீர்வு எட்டப்படாவிடில் தொடர் போராட்டங்கள் நடத்தப் படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • அவிநாசி, வீரபாண்டி, பல்லடம், பனப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

    அவிநாசி :

    பல்லடம், பனப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 5-ந்தேதி (சனிக்கிழமை) மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளா் ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா்.

    மின்விநியோகம் தடைபடும் பகுதிகள் : பல்லடம் துணை மின் நிலையம்( காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை): பல்லடம் நகரம், வடுகபாளையம், வடுகபாளையம்புதூா், அனுப்பட்டி, சித்தம்பலம், பணிக்கம்பட்டி, மாதப்பூா், ராசாகவுண்டன்பாளையம், ராயா்பாளையம், மாணிக்காபுரம், மகாலட்சுமி நகா், அம்மாபாளையம், பனப்பாளையம், சின்னூா், கொசவம்பாளையம், வெங்கிட்டாபுரம்.

    பனப்பாளையம் துணை மின் நிலையம் (காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை):பனப்பாளையம், சேரன் நகா், ராயா்பாளையம், நல்லாகவுண்டம்பாளையம், எல்லங்காடு, மாதப்பூா், மெஜஸ்டிக் சா்க்கிள், செந்தில் நகா், பெத்தாம்பாளையம், மாதேஸ்வரன் நகா், சிங்கனூா்.

    உடுமலையை அடுத்துள்ள பாலப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் டி.மூா்த்தி அறிவித்துள்ளாா் மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: உடுமலை காந்தி நகா், அண்ணா குடியிருப்பு, நேரு வீதி, நகராட்சி அலுவலகம், பாா்க், ரயில் நிலையம், போலீஸ் குடியிருப்பு, சந்தை, எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கண்ணமநாயக்கனூா், குரல்குட்டை, மடத்தூா், மலையாண்டிப்பட்டிணம், மருள்பட்டி, உரல்பட்டி, சாளரப்பட்டி, பாப்பான்குளம், சாமராயபட்டி, பெருமாள்புதூா், குமரலிங்கம், கொழுமம், ருத்திராபாளையம், வீரசோழபுரம்.

    அவிநாசி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா். மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூா், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்துசெட்டிபாளையம், காமராஜ் நகா், சூளை, மடத்துப்பாளையம், சேவூா் சாலை, வ.உ.சி.காலனி, கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், அவிநாசி கைகாட்டிபுதூா், சக்தி நகா், எஸ்.பி.அப்பேரல், குமரன் காலனி, ராக்கியாபாளையம்.

    வீரபாண்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா். மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: வீரபாண்டி, பாலாஜி நகா், முருகம்பாளையம், சுண்டமேடு, நொச்சிபாளையம் (வாய்க்கால்மேடு), குளத்துப்பாளையம், கரைப்பாளையம், குப்பாண்டம்பாளையம், எம்.ஏ.நகா், லட்சுமி நகா், சின்னக்கரை, முல்லை நகா், டி.கே.டி.மில்.

    • காலை 9 முதல் மாலை 5 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.
    • பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது.

    திருப்பூர் :

    வீரபாண்டி மற்றும் உடுமலை ஆகிய துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 1-ந்தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: வீரபாண்டி துணைமின் நிலையம்: தந்தை பெரியாா் நகா் பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள எம்.எஸ்.டையிங் பகுதிகள், ஆா்.ஆா்.டையிங் சுற்றியுள்ள பகுதிகள், நத்தகாடு தோட்டம் பகுதிகள்.

    உடுமலை துணை மின் நிலையம்: உடுமலை நகரம், பழனி பாதை, தங்கம்மாள் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம்பாளையம், ஆா்.வேலூா், கணபதிபாளையம், வெனசுப்பட்டி, தொட்டம்பட்டி, பொட்டயம்பாளையம், பொட்டிநாயக்கனூா், சோமவாரபட்டி, ஆா்.பி.நகா், பெதப்பம்பட்டி, ஏரிப்பாளையம், புக்குளம், குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, சங்கா் நகா், காந்தி நகா்-2, ஸ்ரீராம் நகா், ஜீவா நகா், அரசு கலைக் கல்லூரி, போடிபட்டி, பள்ளபாளையம், கொங்கல் நகரம், குறிச்சிக்கோட்டை.

    • ecom.indiapost.gov.in என்ற இணையதளத்தில் தங்களது பொருட்களை விற்று வந்தனர்.
    • வாடிக்கையாளர் வரவேற்பு குறைந்துவிட்டதால் இந்த சேவை நிறுத்திவிட்டது.

    திருப்பூர் :

    தபால்துறை புதிய இ- காமர்ஸ் தளம் ஒன்றை கடந்த 2018ல் துவங்கியது. இதன்கீழ் இந்தியா போஸ்ட் மூலம்தங்களது தயாரிப்புகளை நாடு முழுவதும் விற்பனை செய்ய விரும்புபவர்கள், ecom.indiapost.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து, தங்களது பொருட்களை விற்று வந்தனர்.

    கிராமப்புற வணிகர்கள், கைத்தறி உற்பத்தியாளர்கள், பெண்கள் சுய உதவி குழுக்கள் போன்றவற்றுக்கு இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும் என கருதப்பட்டது.இதற்கு வாடிக்கையாளர் தரப்பில் வரவேற்பு குறைந்துவிட்டதால், இந்த சேவையை நிறுத்திவிட்டது தபால்துறை. தற்போது இணையதளமும் முடக்கப்பட்டுவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை திருப்பூர் தபால்துறை வெளியிட்டுள்ளது.

    • நிலக்கோட்டையில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது
    • எனவே சுற்றுவட்டார கிராமங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை 26-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் நிலக்கோட்டை, நூத்துலா புரம், கோடாங்கிநாயக்கன்பட்டி, மைக்கேல் பாளையம், புதூர், குளத்துப்பட்டி, செங்கோட்டை, வீலீநாயக்கன்பட்டி, சுட்டிக் காலடிப்பட்டி, அவையம்பட்டி, மணியகாரன்பட்டி, பங்களாபட்டி, சீத்தா புரம், தோப்புபட்டி, சின்னமநாயக்கன் கோட்டை, கோட்டூர் மற்றும்

    அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது என வத்தலக்குண்டு மின் செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    • கொடைக்கானல் துணை மின் நிலையத்தில் நாளை 8-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • மின் வினியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் துணை மின் நிலையத்தில் நாளை 8-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கொடைக்கானல் அட்டுவம்பட்டி, பள்ளங்கி, வில்பட்டி, பூம்பாறை, மன்னவனூர்,

    பழம்புத்தூர், கவுஞ்சி, பெரும்பள்ளம், கிளாவரை, பெருமாள்மலை, பேத்துப்பாறை, பண்ணைக்காடு, சவரிக்காடு, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    • துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • சிந்தலவாடம்பட்டியில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    பழனி:

    பழனியை அடுத்துள்ள சிந்தலவாடம்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை (7-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் சத்திரபட்டி, கணக்கன்பட்டி, பச்சலநாயக்கன்பட்டி, கோம்பைபட்டி, எரமநாயக்கன்பட்டி, போடுவார்பட்டி, வீரலபட்டி, ராமபட்டிணம்புதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாைல 4 மணிவரை மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாவட்டத்தில் மாதந்தோறும் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
    • அதன்படி நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (29-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் நிலக்கோட்டை பேரூராட்சி, நூத்து லாபுரம், கோடாங்கிநாயக்கன்பட்டி, மைக்கேல் பாளையம், கோ-புதூர், குளத்துப்பட்டி, செங்கோட்டை, சுட்டிக்காலாடி பட்டி, அவயம்பட்டி, சீத்தாபுரம், தோப்புபட்டி,

    என்.ஊத்துப்பட்டி, சின்மைநாய க்கன்கோட்டை, கோட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது என வத்தலக்குண்டு மின் செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    • மாதந்தோறும் துணைமின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • அதன்படி செங்குறிச்சி மற்றும் கொசவட்டியில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே செங்குறிச்சி துணைமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை ராஜக்காபட்டி, சிலுவத்தூர், புகையிலைப்பட்டி, வி.எஸ்.கோட்டை, மார்க்கம்பட்டி, வி.மேட்டுப்பட்டி, தேத்தாம்பட்டி, கம்பிளியம்பட்டி, காட்டுப்பட்டி, செங்குறிச்சி, எஸ்.குரும்பபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் கொசவபட்டி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கொசவபட்டி, செம்மடைப்பட்டி, சட்டக்காரன்பட்டி, எமக்கலாபுரம், பஞ்சம்பட்டி, வீரசின்னம்பட்டி, தவசிமடை, விராலிப்பட்டி, நொச்சிஓடைப்பட்டி, வடகாட்டுப்பட்டி, குரும்பபட்டி, கூவனூத்து மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் காளிமுத்து தெரிவித்துள்ளார்.

    • பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதயம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
    • கருவலூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    திருப்பூர் :

    தெற்கு அவினாசிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிழக்கு பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கொடுவாய், வெள்ளியம்பாளையம், வினோபா நகர், கொசவம்பாளையம், கருணைபாளையம் பிரிவு, செங்கோடம்பாளையம், அய்யம்பாளையம், பள்ளிபாளையம், கோவில்பாளையம், தொட்டிபாளையம், பொல்லிக்காளிபாளையம், தெற்கு அவினாசிபாளையம், வடக்கு அவினாசிபாளையம் ஒரு பகுதி, அலகுமலை ஒரு பகுதி மற்றும் உகாயனூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளர் ரத்தினகுமார் தெரிவித்துள்ளார்.

    இதுபோல் அவினாசியை அடுத்த கருவலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை இந்த துைண மின்நிலையத்தில் மின்சாரம் நிறுததம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின்நிலையத்துக்குட்பட்ட கருவலூர், அரசப்பம்பாளையம், நைனாம்பாைளையம், ஆரியக்கவுண்டம்பாளையம், அனந்தகிரி, எலச்சிபாளையம், மருதூர், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்கால்பாளையம், முறியாண்டம்பாளையம், குரும்பாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் விஜயஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • துணை மின்நிலையங்களில் மாதந்தோறும் ஒரு நாள் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.
    • அதன்படி வேடசந்தூரில் நாளை பராமரிப்பு காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேடசந்தூர் :

    ரங்கநாதபுரம் துணைமின்நிலையத்தில் நாளை 16-ந்தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை சரளப்பட்டி, காசிபாளையம், மேட்டுப்பட்டி, வி.ஜி.புதூர், வெள்ளையம்பட்டி, எல்லப்பட்டி, கல்வார்பட்டி, கோலார்பட்டி, ராஜாகவுண்டனூர், விருதலைப்பட்டி, சீத்தப்பட்டி, பூதிப்புரம், நல்லபொம்மன்பட்டி, தேவிநாயக்கன்பட்டி, கன்னிமார்பாளையம் மற்றும் அதனைசார்ந்த கிராமங்களில் மின்வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

    ×