search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தபால்துறை"

    • தபால்துறை சார்பில் புதிய இந்தியாவுக்கான டிஜிட்டல் இந்தியா எனும் தலைப்பில் கடிதம் எழுதும் பிரசாரம் மற்றும் போட்டி நடக்கிறது.
    • விவரங்களுக்கு அருகில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தை நாடலாம் என திருப்பூர் தலைமை தபால் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர்:

    தபால்துறை சார்பில் புதிய இந்தியாவுக்கான டிஜிட்டல் இந்தியா எனும் தலைப்பில் கடிதம் எழுதும் பிரசாரம் மற்றும் போட்டி நடக்கிறது.இப்போட்டியில் 'ஏ4' தாளில், கையால் எழுதப்படும் கடிதம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தாளில் அனுப்புவது ஆயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இன்லாந்து லெட்டரில் அனுப்பும் கடிதம் 500 வார்த்தைகளுக்குள் இருத்தல் வேண்டும்.

    கடிதங்களை தமிழ், ஆங்கிலம் இந்திய மொழிகளில் எழுதி அனுப்பலாம். போட்டியில் பங்கு பெறுபவர், பெயர், இருப்பிட முகவரியை கட்டாயம் குறிப்பிட வேண்டும். 18 வயது நிறைவு பெற்றவர், பெறாதவர் என்பதை அறிய நிச்சயம் வயது சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.கடிதங்களை அனுப்ப வேண்டிய முகவரி: முதன்மை தபால் துறைத் தலைவர், சென்னை 600 002. கடிதங்கள் அக்டோபர் மாதம் 31ந் தேதிக்குள் சென்று சேர வேண்டும். அதன் பின் வரும் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

    தேசிய அளவில் முதல் பரிசு பெறுவோருக்கு ரூ. 50 ஆயிரம், இரண்டாவது பரிசு 25 ஆயிரம், மூன்றாவது பரிசு 10 ஆயிரம். மாநில அளவில் முதல் பரிசு ரூ. 25 ஆயிரம், இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசு முறையே 10 ஆயிரம் மற்றும் 5,000 ரூபாய்.மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தை நாடலாம் என திருப்பூர் தலைமை தபால் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்துள்ளார்.

    • தபால்துறை சார்பில் செல்வமகள் திட்டம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பேரணியில் செல்வ மகள் திட்டத்தில் அனை வரும் பயன்பெற வலியுறுத்தப்பட்டன.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் தபால்துறை சார்பில் செல்வமகள் திட்டம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    நாமக்கல் தலைமை அஞ்சலகம் முன்பு நாமக்கல் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் தொடங்கி வைத்தார்.

    பேரணி பி.எஸ்.என்.எல். அலுவலகம், மோகனூர் சாலை, மணிக்கூண்டு, திருச்சி சாலை, ஸ்டேட் பேங்க் வழியாக மீண்டும் அஞ்சல் நிலையம் வந்தடைந்தன.

    பேரணியில் செல்வ மகள் திட்டத்தில் அனை வரும் பயன்பெற வலியுறுத்தப்பட்டன. பேரணியில் அஞ்சல அலுவலகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • ecom.indiapost.gov.in என்ற இணையதளத்தில் தங்களது பொருட்களை விற்று வந்தனர்.
    • வாடிக்கையாளர் வரவேற்பு குறைந்துவிட்டதால் இந்த சேவை நிறுத்திவிட்டது.

    திருப்பூர் :

    தபால்துறை புதிய இ- காமர்ஸ் தளம் ஒன்றை கடந்த 2018ல் துவங்கியது. இதன்கீழ் இந்தியா போஸ்ட் மூலம்தங்களது தயாரிப்புகளை நாடு முழுவதும் விற்பனை செய்ய விரும்புபவர்கள், ecom.indiapost.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து, தங்களது பொருட்களை விற்று வந்தனர்.

    கிராமப்புற வணிகர்கள், கைத்தறி உற்பத்தியாளர்கள், பெண்கள் சுய உதவி குழுக்கள் போன்றவற்றுக்கு இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும் என கருதப்பட்டது.இதற்கு வாடிக்கையாளர் தரப்பில் வரவேற்பு குறைந்துவிட்டதால், இந்த சேவையை நிறுத்திவிட்டது தபால்துறை. தற்போது இணையதளமும் முடக்கப்பட்டுவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை திருப்பூர் தபால்துறை வெளியிட்டுள்ளது.

    ×