என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாமக்கல்லில் செல்வமகள் சேமிப்பு திட்ட விழிப்புணர்வு பேரணி
- தபால்துறை சார்பில் செல்வமகள் திட்டம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- பேரணியில் செல்வ மகள் திட்டத்தில் அனை வரும் பயன்பெற வலியுறுத்தப்பட்டன.
நாமக்கல்:
நாமக்கல்லில் தபால்துறை சார்பில் செல்வமகள் திட்டம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நாமக்கல் தலைமை அஞ்சலகம் முன்பு நாமக்கல் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் தொடங்கி வைத்தார்.
பேரணி பி.எஸ்.என்.எல். அலுவலகம், மோகனூர் சாலை, மணிக்கூண்டு, திருச்சி சாலை, ஸ்டேட் பேங்க் வழியாக மீண்டும் அஞ்சல் நிலையம் வந்தடைந்தன.
பேரணியில் செல்வ மகள் திட்டத்தில் அனை வரும் பயன்பெற வலியுறுத்தப்பட்டன. பேரணியில் அஞ்சல அலுவலகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






