search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rain"

    • தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்று காலையில் இருந்து மழை பெய்து வருகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கோடை மழை பரவலாக பெய்யத் தொடங்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு இலங்கை கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் 19-ந் தேதி வரை தொடர்ந்து 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தில் மிக அதிக அளவாக தஞ்சை அதிராம்பட்டினத்தில் 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. மயிலாடுதுறை, அருப்புக்கோட்டையில் தலா 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. மதுரையில் 4.7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்று காலையில் இருந்து மழை பெய்து வருகிறது.

    காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    • தமிழகத்தில் வானிலை குறித்து துல்லியமாக கணிப்புகளை கூறுபவராக அறியப்படுபவர் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.
    • நாளை முதல் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வெதர் மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    தமிழகத்தில் வானிலை குறித்து துல்லியமாக கணிப்புகளை கூறுபவராக அறியப்படுபவர் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான். இவர் தமிழகத்தின் வெதர் மேன் என்றே மக்கள் மத்தியில் அழைக்கப்படுகிறார். முந்தய காலங்களில் மழை, வெள்ளம் குறித்த இவரின் கணிப்புகள் அப்படியே நடந்துள்ளது. வானிலை தொடர்பான தகவல்களுக்கு வானிலை மையத்தின் அறிக்கைக்கு அடுத்தபடியாக இவரின் அறிக்கையையும் கருத்தில் கொள்ளும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    அதன்படி நாளை முதல் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வெதர் மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், சென்னையில் மழை பெய்யும், நாளை (மே 16) வியாழக்கிழமை ரெயின் கோட் எடுத்துட்டு போக மறந்துராதீங்க என்று தெரிவித்துள்ளார்.

    சென்னை வானிலை மைய அறிக்கைபடி நாளை (மே 16) தமிழகத்தில் அநேக இடங்களில் மற்றும் மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் , சிவகங்கை, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக இன்று நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கொட்டித்தீர்த்த கனமழையால் வீடுகள் மற்றும் வாகனங்கள் நீரில் மூழ்கியதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

    • இ-பாஸ் நடைமுறையால் கொடைக்கானலுக்கும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
    • கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நாளை மறுநாள் மலர் கண்காட்சி தொடங்க உள்ளது.

    ஊட்டி:

    தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களிலேயே ஊட்டி, கொடைக்கானல் என்பது மிகவும் முக்கியமானது.

    இங்குள்ள இயற்கை காட்சிகள், அருவிகள், எண்ணற்ற சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும், இங்கு நிலவும் குளு, குளு கால நிலையை அனுபவிக்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

    குறிப்பாக, ஏப்ரல், மே மாதங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அப்படி வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஊட்டி, கொடைக்கானலில் கோடைவிழா என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டு மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்பட பல்வேறு வகையான கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    ஒரே நேரத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பசுமையான சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்படி கடந்த 7-ந் தேதி முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் அனைவருமே இ-பாஸ் பெற்று சென்று வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த 10-ந் தேதி மலர் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சி தொடங்கியது. மலர் கண்காட்சியையொட்டி பூங்காவில் மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள 65 ஆயிரம் மலர் தொட்டிகளில் மலர்கள் பூத்து குலுங்கி அங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுத்து வருகிறது.

    இதுதவிர 2 லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு மலைரெயில், டிஸ்னி வேர்ல்டு, மற்றும் பல்வேறு மலர் அலங்காரங்களையும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகிறார்கள்.

    வழக்கமாக கோடை மாதம் மற்றும் மலர் கண்காட்சியை பார்ப்பதற்காக லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். குறிப்பாக ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனால் இந்த மாதம் முழுவதும் நீலகிரி மாவட்டமே களைகட்டி காணப்படும். வியாபாரமும் படுஜோராக நடந்து வரும்.

    ஆனால் இந்த ஆண்டு இ-பாஸ் நடைமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்து விட்டது. கண்காட்சி தொடங்கி இன்றுடன் 5 நாட்கள் ஆகிறது. ஆனால் மலர் கண்காட்சியை பார்வையிட ஒவ்வொரு நாளும் குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளே வருகின்றனர். அதிகபட்சமாக கடந்த 12-ந் தேதி 21 ஆயிரம் பேர் வந்திருந்தனர். மற்ற நாட்களில் அதனை விட மிகவும் குறைவாகவே வந்துள்ளனர்.

    சுற்றுலாபயணிகள் வருகை குறைவு காரணமாக மலர் கண்காட்சிக்கான நுழைவு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ரூ.150 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்போது ரூ.125 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஊட்டி வியாபாரிகள் சங்க மாவட்ட நிர்வாகி பரூக் கூறியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் நீலகிரியில் நடக்கும் கோடைவிழாவை காண அனைத்து பகுதிகளிலும் இருந்து எண்ணற்ற சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள். இதனால் இந்த ஒரு மாதம் முழுவதும் நீலகிரியில் வியாபாரமும் நன்றாக நடக்கும்.

    வழக்கமாக கோடை விழாவின் போது நடக்கும் மலர் கண்காட்சியை பார்க்க ஏராளமானோர் வருவார்கள். ஆனால் இந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட இ-பாஸ் நடைமுறையால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து விட்டது. இங்குள்ளவர்களுக்கு எளிதாக இ-பாஸ் கிடைத்து விடுகிறது. வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு விண்ணப்பித்த உடன் இ-பாஸ் கிடைப்பதில்லை. பலமுறை முயற்சி செய்த பின்னரே இ-பாஸ் கிடைப்பதாகவும், அதானாலேயே பலரும் இங்கு வருவதை தவிர்த்து வருகின்றனர்.

    சுற்றுலா பயணிகள் வருகை குறைவு மற்றும் இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாவை நம்பி நடந்து வரும் அனைத்து தொழில்களும் பாதிப்படைந்துள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இ-பாஸ் நடைமுறையால் கொடைக்கானலுக்கும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதாக உள்ளூர் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறும் போது, இ-பாஸ் நடைமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தை விட குறைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் அதனை நம்பி நடக்கும் வியாபாரம் முற்றிலும் களை இழந்து விட்டது. தொழிலாளர்களும் கடும் பாதிப்படைந்துள்ளனர் என்றனர்.

    கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நாளை மறுநாள் மலர் கண்காட்சி தொடங்க உள்ளது. இதனை பார்வையிட சுற்றுலாபயணி கள் வருகை அதிகம் இருக்கும் என எதிர்பார்த்து வியாபாரிகள் காத்து இருக்கிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுமத்ரா தீவில் வெள்ளத்தோடு நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
    • மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்தோனேசியாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. சுமத்ரா தீவில் வெள்ளத்தோடு நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் எரிமலையும் வெடித்திருப்பதால், சாம்பலும் வெள்ளத்தில் கலந்து, பெரும்பாலான இடங்கள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன.

    சுமத்ரா மாகாணத்தில் 4 மாவட்டங்களில் பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த நிலையில் இந்தோனேசியாவில் கனமழை-வெள்ளத்துக்கு 58 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலரை காணவில்லை என அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    • கேரளாவில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு அதி கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • கேரளாவில் உள்ள பட்டினம்திட்டா மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை

    கேரளாவில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு அதி கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2 மாவட்டமங்களுக்கு அதி கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படிக், இன்று (மே 14) இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் உள்ள பட்டினம்திட்டா மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம்,எர்ணாகுளம், மாலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    அதேசமயம் திருவனந்தபுரம், பட்டினம்திட்டா, கொல்லம் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மே 15 ஆம் தேதியும், பட்டினம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, மாலப்புரம் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மே 16 ஆம் தேதியும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அதைத்தொடர்ந்து திருவனந்தபுரம், பட்டினம்திட்டா, இடுக்கி, மாலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு மே 17 ஆம் தேதி மற்றும் மீண்டும் திருவனந்தபுரம், கொல்லம், பட்டினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு மே 18 ஆம் தேதியும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    • தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சரியான நேரத்தில் பருவமழை தொடங்கும்.
    • தென்மேற்கு பருவமழையின்போது கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பலத்த மழை பெய்யும்.

    சென்னை:

    தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் இறுதியில் முடிவடைவது வழக்கம். இந்தியாவில் ஆண்டு முழுவதுக்கும் தேவையான மழையில் 70 சதவீதம் மழை ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும் தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் பெறப்படுகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளது.

    இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்குகிறது. அடுத்த வாரம் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. வருகிற 19-ந்தேதி தெற்கு அந்தமான் கடல், வங்காள விரிகுடாவின் சில பகுதிகள் மற்றும் நிக்கோ பார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது.

    அதனை தொடர்ந்து தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சரியான நேரத்தில் பருவமழை தொடங்கும். ஜூன் 1-ந்தேதி கேரளா பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கி விடும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்வதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.

    தென்மேற்கு பருவமழையின்போது கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பலத்த மழை பெய்யும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • தென்தமிழக கடலோரப் பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை மறுநாள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 17-ந் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 18-ந் தேதி நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தென்தமிழக கடலோரப் பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோடை சீசனில் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் குளு குளு சீசன் களைகட்டி உள்ளது.
    • மலர் கண்காட்சி நடைபெற உள்ள நிலையில் தற்போதே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

    கொடைக்கானல்:

    தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி எடுத்ததை போலவே கொடைக்கானலிலும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக தினந்தோறும் 2 மணி நேரத்துக்கு மேலாக இடைவெளி விட்டு விட்டு ஒரு சில இடங்களில் கன மழையாகவும், ஒரு சில இடங்களில் சாரல் மழையாகவும் பெய்து வருகிறது.

    இதனால் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ள வெள்ளி நீர் வீழ்ச்சி அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக தண்ணீர் குறைந்து காணப்பட்ட நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது பெய்த மழையால் வெள்ளி நீர் வீழ்ச்சி அருவியில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் அருவிக்கு வந்த சுற்றுலாப்பயணிகள் மழையில் நனைந்தபடி அருவியை கண்டு ரசித்ததுடன், செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதேபோல் பாம்பார் அருவி, பியர்சோழா உள்ளிட்ட பல்வேறு அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    தற்போது பெய்து வரும் மழையால் குடிநீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கோடை சீசனில் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் குளு குளு சீசன் களைகட்டி உள்ளது.

    வருகிற 17ந் தேதி கோடை விழா, மலர் கண்காட்சி நடைபெற உள்ள நிலையில் தற்போதே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

    • தற்போது நீலகிரியில் வெயில் குறைந்து, குளு, குளு காலநிலை நிலவி வருகிறது.
    • ஊட்டிசேரிங்கிராஸ்-தொட்டபெட்டா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரியில் ஒவ்வொரு ஆண்டும் கோடைவிழாவை யொட்டி சுற்றுலா பயணி களை கவரும் வகையில் கண்காட்சிகள் நடத்தப்ப டும்.

    இந்த ஆண்டுக்கான கோடைவிழா கடந்த 10-ந் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியுடன் தொடங்கியது. இதேபோல் ஊட்டி ரோஜா பூங்காவிலும் ரோஜா கண்காட்சி நடந்து வருகிறது.

    அத்துடன் தற்போது நீலகிரியில் வெயில் குறைந்து, குளு, குளு காலநிலை நிலவி வருகிறது.

    கண்காட்சியினை கண்டு ரசிக்கவும், குளு,குளு சீசனை அனுபவிக்கவும்வெளி மாநிலங்கள், வெளிமா வட்டங்களில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ள னர்.

    வெள்ளிக்கிழமை முதல் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுவும் நேற்றுமுன்தினம் மற்றும் நேற்று விடுமுறை தினங்கள் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்பட்டது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் காலை முதலே ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர்.

    அவர்கள் பூங்காவில் மலர் கண்காட்சியையொ ட்டி, பூங்காவில் மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர் தொட்டிகளில் பூத்து குலு ங்கிய பூக்களை பார்வை யிட்டனர்.மேலும் பூங்காவில் லட்சக்கணக்கான கார்னே சன் மலர்களை கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டி ருந்த மலைரெயில், டிஸ்னி வேர்ல்டு, பல ஆயிரம் மலர்களை கொண்டு வடி வமைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரங்களையும் கண்டு ரசித்ததுடன், அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

    அங்குள்ள புல் மைதான த்தில் சுற்றுலா பயணிகள் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் ஆடி,பாடி தங்கள் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

    ஊட்டி ரோஜா பூங்காவிலும் ரோஜா கண்காட்சியை யொட்டி அங்கு வைக்கப்பட்டுள்ள பல வண்ண ரோஜா மலர்கள், மலர்களால் உருவான யானை, புலி, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளின் உருவங்களையும் கண்டு ரசித்தனர்.

    நேற்று மதியம் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. தாவரவியல் பூங்காவில் குவிந்திருந்த சுற்றுலா பயணிகள் சிலர் மழைக்கு அங்கிருந்த மரத்த டிகளில் தஞ்சம் அடைந்த னர். ஒரு சிலர் மழையில் நனைந்தபடி கண்காட்சியை பார்வையிட்டு, மகிழ்ந்தனர்.

    மழையால் அங்கு குளு, குளு காலநிலை நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடந்து வரும் மலர் கண்காட்சியை இது வரை 60 ஆயிரம் பார்வையிட்டுள்ளனர். இதேபோல் ரோஜா கண்காட்சியை கடந்த 3 நாட்களில் 25 ஆயிரம் பேர் பார்வையிட்டு ரசித்துள்ளனர். இன்று 4-வது நாளாகவும் சுற்றுலா பயணிகள் மலர் கண்கா ட்சியை பார்வையிட்டனர்.

    ஊட்டிக்கு ஏராளமானோர் சொந்த வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்களில் வருகின்றனர். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அரசு பஸ்களில் பயணித்தும் ஊட்டிக்கு வருகிறார்கள்.

    இப்படி ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு இடத்தையும் சுற்றிப் பார்ப்பது சிரமமானது.

    சுற்றுலா பயணிகளின் நலன் கருதியும், அவர்கள் அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசிக்கும் வகையில், ஊட்டி பஸ் நிலையத்தில் இருந்து 20 சுற்று பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சுக்கு கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த பஸ் மூலம் படகு இல்லம், பிங்கர் போஸ்ட், அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, ஆவின் வளாகம், தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்படுகிறார்கள்.

    இந்த பஸ்களுக்கு சுற்றுலா பயணிகளிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. ரூ.100 கட்டணத்தில் பஸ் இயக்கப்படுவதும், அனைத்து சுற்றுலா தலங்களையும் பார்ப்பதும் மகிழ்ச்சியாக இருப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.

    இதற்கிடையே ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

    ஊட்டிசேரிங்கிராஸ்-தொட்டபெட்டா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. 

    • தமிழ்நாடு முழுவதுமே நெல் மூட்டைகளை பாதுகாக்க இயலாத ஓர் அவல நிலை நிலவுகிறது.
    • அரசின் தாமதமான நடவடிக்கை காரணமாக தங்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விவசாயிகளிடம் இருந்து நெல் மற்றும் இதர தானியங்களை கொள்முதல் செய்து அவற்றை பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்கும் வகையில், கிடங்குகளை கட்ட வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசிற்கு உண்டு. ஆனால், இதைச் செய்ய தி.மு.க. அரசு தவறிவிட்டது. கடந்த மூன்று ஆண்டு காலமாக, நெல் மற்றும் இதர தானியங்கள் மழையில் நனைவதும், இதன் விளைவாக விவசாயிகளுக்கு குறைந்த விலை கிடைப்பதும் வாடிக்கையாகிவிட்டது.

    அண்மையில், விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் செஞ்சியில் உள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 12,000 நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளதாகவும், நெல் மூட்டைகள் மழையில் நனைவதன் காரணமாக குறைந்த விலைதான் கிடைக்கிறது என்றும், தார்ப்பாய் கூட வழங்கப்பட வில்லை என்றும் மேல்மருவத்தூர், திண்டிவனம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    இந்தச் சுவடு மறைவதற்குள், மறைமலைநகரை அடுத்த கருநீலம் ஊராட்சி யில் செயல்பட்டு வரும் அரசு நேரடி கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைந்த நெல்லினை உதிரியாகவும், 5,000-க்கும் மேற்பட்ட மூட்டைகளிலும் கொண்டு வந்ததாகவும், இரு தினங்களுக்கு முன்பு பெய்த திடீர் மழை காரணமாக அனைத்து நெல் மூட்டைகளும் சேதமடைந்ததாகவும், உடனுக்குடன் எடை போட்டு அரவை நிலையத்திற்கு அனுப்பியிருந்தால் நெல் மூட்டைகள் காப்பாற்றப்பட்டு இருக்கும் என்றும், அரசின் தாமதமான நடவடிக்கை காரணமாக தங்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    தமிழ்நாடு முழுவதுமே நெல் மூட்டைகளை பாதுகாக்க இயலாத ஓர் அவல நிலை நிலவுகிறது. நெல் மூட்டைகளை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டுமென்பதுதான் விவசாயிகளின் எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பு மூன்று ஆண்டுகள் கடந்தும் பூர்த்தி செய்யப்படவில்லை. மழையில் நெல் மூட்டைகள் நனைவது என்பது தொடர் கதையாக விளங்குகிறது.

    எனவே தானியங்களை பாதுகாப்பான முறையில் வைத்திருக்கத் தேவையான கிடங்குகளை கட்டிட முதலமைச்சர் உத்தர விட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஏற்காடு அடிவாரம், கோரிமேடு, ஓமலூர், குப்பனூர், அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பேளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டியது.
    • மழையினால் குமாரபாளையம் நகராட்சி மின் மயானத்திற்கு எதிரே இருந்த நாகராஜன்- லட்சுமி தம்பதிக்கு சொந்தமான ஓட்டு வீடு இடிந்து விழுந்தது.

    சேலம்:

    தமிழகத்தில் தற்போது கோடை காலம் நிலவி வருகிறது. அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயிலும் கொளுத்தி வருவதால், பொதுமக்கள் யாரும் பகல் நேரத்தில் வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு வெப்பம் அதிகமாக இருக்கிறது.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பல நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் அளவு பதிவானது. காலை 7 மணிக்கு தொடங்கும் வெயில் மாலை 4 மணி வரை அனலாக கொளுத்தியது. இரவிலும் காற்று குறைந்து வெப்ப அலை வீசியது. இதனால் இரவில் தூக்கமின்றி பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

    இந்த நிலையில் சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. சேலம் மாநகரில் நேற்று 1.30 மணி அளவில் இடியுடன் கூடிய கன மழை பெய்த தொடங்கியது. இந்த மழை மதியம் சுமார் 2 மணி நேரம் நீடித்தது. கன மழையால் சேலம் 4 ரோடு, கலெக்டர் அலுவலகம், சாரதா கல்லூரி சாலை, செவ்வாய்ப்பேட்டை, நெத்திமேடு உள்ளிட்ட மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    புறநகர் பகுதிகளான எடப்பாடி, கொங்கணாபுரம், பூலாம்பட்டி, தேவூர், செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, அரசிராமணி, கல்வடங்கம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பல்வேறு இடங்களில் காற்றினால் வாழை மரங்கள், பப்பாளி மரங்கள் முறிந்து விழுந்தது.

    ஏற்காடு, ஏற்காடு அடிவாரம், கோரிமேடு, ஓமலூர், குப்பனூர், அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பேளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டியது.

    பல நாட்களுக்கு பிறகு பெய்த இந்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை உருவானது. வெப்ப சலனம் நீங்கி இரவில் வீடுகளில் குளிர்ச்சி நிலவியது.

    மேட்டூரில் நேற்று சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. இதில் மாலை 3 மணிக்கு மேட்டூர், ஆர்.எஸ்.புரம், பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் உள்ள 60 ஆண்டு பழமையான பெரிய வேப்பமரம் ஒன்று சாய்ந்து சாலையில் சென்ற அரசு பஸ் மீது விழுந்தது. இந்த பஸ் சேலத்தில் இருந்து மாதேஸ்வரன் மலை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் ஆகும்.

    மரம் சாய்ந்து விழுந்ததில் பஸ்சின் முன்புற கண்ணாடிகள் உடைந்தன. 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். சாலையோரம் மின் கம்பத்தில் உள்ள மின் கம்பி மீதும் வேப்பமர கிளைகள் விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அருகில் இருந்த பொதுமக்கள் பஸ்சில் சிக்கிய பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

    நடுரோட்டில் பஸ்சின் மீது இந்த வேப்பம் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேட்டூரில் இருந்து சேலம், தர்மபுரி செல்லும் வாகனங்கள் தங்கமாபுரி பட்டணம், சிட்கோ, கருமலைக்கூடல் வழியே உள்ள மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. மேட்டூர் தீயணைப்பு குழுவினர் மரத்தை வெட்டி அகற்றினர். ஒரு மணி நேரத்திற்கு பின் போக்குவரத்து சீரானது.

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, பள்ளிப்பாளையம், சேந்தமங்கலம், எருமப்பட்டி, ராசிபுரம், புதுச்சத்திரம், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதேபோல் குமாரபாளையத்தில் நேற்று மாலை 3 மணிக்கு மேல் குமாரபாளையம் நகரில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. மேலும் குமாரபாளையம் சுற்றுப்புற பகுதிகளான எம்.ஜி.ஆர். நகர், சானார்பாளையம், குப்பாண்டபாளையம், குள்ளநாயக்கன்பாளையம், சீராம்பாளையம், ஆல ங்காட்டு வலசு, கல்லாங்காடு வலசு, சத்யா நகர், தட்டான் குட்டை, வேமன் காட்டு வலசு, வளையக்காரனூர், வட்டமலை, சடைய ம்பாளையம், சாமிய ம்பாளையம், கத்தேரி மற்றும் புளியம்பட்டி உள்பட பல பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தனிந்ததையொட்டி பொதுமக்களும் மற்றும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த மழையினால் குமாரபாளையம் நகராட்சி மின் மயானத்திற்கு எதிரே இருந்த நாகராஜன்- லட்சுமி தம்பதிக்கு சொந்தமான ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் தப்பினர். பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நகரில் மின்சாரம் தடைபட்டது. 

    • மேலடுக்கு சுழற்சி காரணமாக கோடை மழை பெய்ய தொடங்கியுள்ளது.
    • வெயிலின் தாக்கம் சற்று குறையத் தொடங்கியுள்ளது.

    தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்தது. 110 டிகிரி வரை தற்போது வெயில் தாக்கி வருகிறது.

    இந்த நிலையில் குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக கோடை மழை பெய்ய தொடங்கியுள்ளது. மலை மாவட்டங்களை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறையத் தொடங்கியுள்ளது.

    இந்நிலையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 11 மாவட்டங்களில் நேற்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில், இன்று அதிகாலையும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வந்தது.

    இதை தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    ×