search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "indian meteorological department"

    வருகிற 4-ந்தேதி முதல் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #IMD #TNRains
    சென்னை:

    தமிழக கடலோரப் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் பரவி உள்ளது.

    இதனால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால் வட மாவட்டங்களில் தொடர்ந்து வறண்ட வானிலையே காணப்படுகிறது.

    இந்த நிலையில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலவுகிறது. இது வருகிற 3-ந்தேதி தென் மேற்கு திசையில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை வரை பரவும்.


    இதன் காரணமாக வருகிற 4-ந்தேதி முதல் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இப்போதைக்கு 4, 5-ந்தேதிகளுக்கு மட்டும் வடதமிழகத்துக்கு பெரும்பாலான பகுதிகளுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    11 செ.மீ. அளவில் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு, குறைந்த காற்றழுத்த பகுதியாக உருவாகுமா? என்பதை வானிலை அதிகாரிகள் கணித்து வருகிறார்கள். அதன் பிறகே தொடர்ந்து மழை எச்சரிக்கை விடப்படும்.

    இந்த மழையானது வட மாவட்டங்களில் நிலவும் பற்றாக்குறை மழை அளவை ஓரளவுக்கு ஈடுசெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். #IMD #TNRains
    ×