search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lawsuit"

    • டிஜிட்டல் வடிவில் சுமார் 9.41 மில்லியன் சந்தாதாரர்கள் கொண்டது நியூயார்க் டைம்ஸ்
    • இத்தீர்ப்பு தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக டிரம்ப் வழக்கறிஞர் தெரிவித்தார்

    1851லிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரை மையமாக கொண்டு செயல்படும் பிரபல தின பத்திரிக்கை, தி நியூயார்க் டைம்ஸ் (The New York Times).

    உலகெங்கிலும் இணைய வடிவில் சுமார் 9.41 மில்லியன் சந்தாதாரர்களும், அச்சு வடிவில் சுமார் 6,70,000 சந்தாதாரர்களும் கொண்டது இந்த தின பத்திரிகை.

    2018ல், சுசன் க்ரெய்க் (Susanne Craig), டேவிட் பார்ஸ்டோ (David Barstow) மற்றும் ரஸ்ஸல் ப்யூட்னர் (Russell Buettner) எனும் அப்பத்திரிகையின் 3 புலனாய்வு செய்தியாளர்கள், அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சொத்துக்கள் மற்றும் வருமான வரி செலுத்துவதில் அவர்கள் பின்பற்றும் வழக்கங்கள் குறித்து ஒரு ஆய்வு கட்டுரையை பதிவிட்டனர்.

    2021ல் இதில் உள்ள கருத்துகள் தவறானவை எனும் புகாருடன் டொனால்ட் டிரம்ப் இந்நிறுவனத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்தார்.

    ஆனால், அந்த 3 பேரையும், தி நியூயார்க் டைம்ஸையும், வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்தது.

    நியூயார்க் நீதிமன்ற நீதிபதி ராபர்ட் ரீட் (Robert Reed) தனது தீர்ப்பில், டிரம்ப் $3,92,638 தொகையை வழக்கறிஞர் கட்டணமாக டிரம்ப் அப்பத்திரிகைக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

    குடும்ப தகராறில் தனது உறவுக்கார பெண் மேரி டிரம்ப், வாக்குறுதியை மீறி, அவர் வசம் வைத்திருந்த தனது வரி விவரங்களை செய்தியாளர்களுக்கு வழங்கியதாக டிரம்ப் குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்தார். மேரி மீதான அந்த வழக்கு விசாரணை, நிலுவையில் உள்ளது.

    இத்தீர்ப்பு குறித்து டிரம்பின் வழக்கறிஞர் அலினா ஹப்பா (Alina Habba), "பத்திரிகையும், அதன் செய்தியாளர்களும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது தங்கள் தரப்பிற்கு அதிர்ச்சி அளிக்கிறது" என தெரிவித்தார்.

    • பாதிக்கப்பட்டவரிடம் போட்டோவை காண்பித்து, அதன்மூலம் கைது நடவடிக்கை
    • கொள்ளையில் ஈடுபட்ட பெண் ஒரு கர்ப்பிணி என, பாதிக்கப்பட்டவர் குறிப்பிடவில்லை என்பதால் சிக்கல் ஏற்பட்டது

    அமெரிக்காவின் மிக்சிகன் மாநிலத்தில் உள்ள நகரம் டெட்ராய்ட்.

    கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி, இப்பகுதியைச் சேர்ந்த ஒரு ஆண், ஒரு பெண்ணுடன் சேர்ந்து தனது காரில் ஒரு பெட்ரோல் நிலையத்திற்கு சென்றிருந்தார். அங்கு அப்பெண் பலருடன் பேசினார்.

    பிறகு அப்பெண்ணும் ஆணும் வேறொரு இடத்திற்கும் சென்றுள்ளனர். அந்த இடத்திற்கு அந்த பெண்ணுடன் பெட்ரோல் நிலையத்தில் அவருடன் பேசிக்கொண்டிருந்தவர்கள் வந்தனர். அங்கு அவர்களும், அப்பெண்ணும், அந்த ஆணை துப்பாக்கி முனையில் மிரட்டி அவரிடமிருந்த பொருட்களையும், பணத்தையும் கொள்ளையடித்தனர்.

    இதனையடுத்து அந்த நபர் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

    இதற்கிடையே அந்த நபரின் செல்போன், அந்த பெட்ரோல் நிலையத்தில் 2 நாட்களுக்கு பிறகு ஒப்படைக்கப்பட்டது.

    இந்த வழக்கை லஷான்ஷியா ஆலிவர் (LaShauntia Oliver) எனும் அதிகாரி விசாரித்தார்.

    பெட்ரோல் நிலையத்தில் செல்போனை ஒப்படைத்தது ஒரு பெண் என கண்டறிந்த ஆலிவர், அந்த பெண்ணை கண்டறிய பாதிக்கப்பட்ட நபரிடம், பல பெண்களின் புகைப்படங்களை காண்பித்தார். அதில் அந்த ஆண் ஒரு பெண்ணை அடையாளம் காட்டினார்.

    இதனையடுத்து பிப்ரவரி 16 அன்று, 2 குழந்தைகளுக்கு தாயான போர்ச்சா வுட்ரஃப் (32 வயது)  என்ற ஒரு கர்ப்பிணியை அவரது வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், போர்ச்சா சுமார் ரூ.82 லட்சம் ($1,00,000) ஜாமினில் வெளியே வந்தார்.

    இந்த நடவடிக்கையினால் அவருக்கு உடல் ரீதியான பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொள்ளும்படி நேர்ந்தது.

    பிறகு மார்ச் 6-ல் அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்பதால் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

    எந்த இடத்திலும் பாதிக்கப்பட்ட ஆண், தன்னிடம் கொள்ளையடித்த பெண் ஒரு கர்ப்பிணி என குறிப்பிட்டதாக காவல்துறை அறிக்கையில் இல்லை. எனவே தான் தவறாக கைது செய்யப்பட்டதை உணர்த்த இதுவே போதுமானது என்பதால் அந்த புலனாய்வு அதிகாரி மற்றும் காவல்துறை மீது போர்ச்சா வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

    "இது மிகவும் கவலைக்குரியது" என இது குறித்து டெட்ராய்ட் காவல்துறை தலைவர் தெரிவித்தார்.

    ஆனால், புலனாய்வு அதிகாரி ஆலிவர், இது பற்றி கருத்து எதுவும் கூறவில்லை.

    வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்வதற்கு பதிலாக அவர் பெயர் கொண்ட ஒரு அப்பாவி பெண்ணை போலீசார் கைது செய்ததும், நீண்ட அலைக்கழிப்பிற்கு பிறகு நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டதும் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    • செல்போனில் ஜாடை பேசியதாக நினைத்து மாமியார் மண்டையை மருமகள் உடைத்தார்.
    • உறவுக்கார பெண்கள் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் முத்து–சாமிபுரம் காமராஜர் நக–ரைச் சேர்ந்தவர் செல்வி (வயது 45). இவரது மகன் இளங்கோ, மருமகள் மரு–மகள் பொன்னுபிரியா. திருமணத்திற்கு பிறகு தம்ப–தியினர் அதே பகுதியில் தனிக்குடித்தனம் வசித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே மாமியார், மருமகளுக்கு இடையே அவ்வப்போது சண்டை, சச்சரவு ஏற்பட்டு வந்தது. இதில் அவர்கள் மோதலிலும் ஈடுபட்டு வந்தனர். உறவினர் கள் சமரசம் செய்துவைத்தும் பலனில்லை. இந்த நிலை–யில் சம்பவத்தன்று செல்வி தனது வீட்டு வாசலில் அமர்ந்து செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.

    மேலும் அவர் தன்னைப் பற்றி தான் செல்போனில் ஜாடையாக பேசிக்கொண்டி–ருப்பதாக மருமகள் பொன் னுபிரியா நினைத்தார். இதையடுத்து ஆத்திரம் அடைந்த அவர் மாமியார் என்றும் பாராமல் உடைந்து கிடந்த ஆஸ்பெஸ்டாஸ் ஓட்டால் தலையில் பலமாக அடித்தார். இதில் செல்வி–யின் மண்டை உடைந்தது.

    மேலும் அருகில் வசிக்கும் பொன்னுபிரியாவின் தாய் சுந்தரவள்ளி, உறவினர் ஜெயபிரியா ஆகியோரும் அங்கு வந்து செல்வியை தாக்கியுள்ளனர். இதில் காயடைந்த செல்வி ராஜபா–ளையம் அரசு ஆஸ்பத்திரி–யில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகி–றார்.

    • அந்நிறுவனம் அமெரிக்காவின் ராணுவ தளவாடங்கள் சம்பந்தமான வேலைகளை செய்து வருகிறது
    • அனில், வீடியோ காலிங் முறையில் தனது தாய் மொழியான இந்தியில் உறவினருடன் உரையாடினார்

    அமெரிக்க ராணுவத்திற்காக ஏவுகணை சம்பந்தமான ஒப்பந்ததாரராக செயல்படும் நிறுவனம், அமெரிக்காவில் உள்ள பார்ஸன்ஸ் கார்ப்பரேஷன்.

    அந்நிறுவனம் அமெரிக்காவின் ராணுவ தளவாடங்கள் சம்பந்தமான வேலைகளை செய்து வருகிறது. அங்கு பணியாளர்களுக்கு பாதுகாப்பு கட்டுப்பாடுகள் அதிகம். அலுவலகத்தில் முக்கியமான தகவல் பரிமாற்றங்கள் நடைபெறும் போது அலைபேசியில் பேசுவதும், பின்னணியில் நிறுவனத்தின் தகவல்கள் தெரியும் விதமாக வீடியோ காலிங்கில் பேசுவதும் அங்கு தடை செய்யப்பட்டுள்ளது.

    இந்நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பல வருடங்களாக பணி புரிந்து வந்தவர் அனில் வார்ஷ்னி (78).

    நோயுற்றிருந்த இவரது உறவினர் ஒருவர், இறக்கும் தருவாயில் இருந்தார். அவரிடம் இருந்து வந்த ஒரு அலைபேசி அழைப்பை தவிர்க்க விரும்பாத அனில், அலுவலகத்திலேயே வீடியோ காலிங் முறையில் தனது தாய் மொழியான இந்தியில் அவருடன் உரையாடினார்.

    இதனை அவருடன் பணி புரியும் மற்றொரு ஊழியர் கவனித்தார். பாதுகாப்பு கட்டுப்பாடுகளை அனில் மீறுவதாக அந்த ஊழியர் அனிலிடம் கூறி, மேலிடத்திலும் புகார் செய்துள்ளார்.

    இதனையடுத்து வார்ஷ்னி, பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவரது உடைமைகளுடன் உடனே அவர் அலுவலகத்திலிருந்து வெளியேற்றப்பட்டர்.

    தனக்கு நேர்ந்த அவமானத்திற்கு எதிர்வினையாக தன்னை பணியிலிருந்து நீக்கிய நிறுவனத்தின் மீதும், அமெரிக்க ராணுவ செயலர் ஜேம்ஸ் ஆஸ்டின் மீதும் அனில் வார்ஷ்னி வழக்கு தொடர்ந்துள்ளார்.

    தன்னை மீண்டும் பணியில் சேர்த்து, தான் முன்பிருந்த பதவிக்கு நிகரான பணியில் அமர்த்த கோரியும், பழைய சலுகைகளை மீண்டும் வழங்க கோரியும் மற்றும் தனது மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை நீக்கவும் அனில் கோரியுள்ளார். இதற்கு அந்நிறுவனம் சம்மதிக்கவில்லையென்றால், அதற்கு ஈடாக ஒரு தொகையை கோரியுள்ளார்.

    இது மட்டுமல்லாது தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஈடாகவும் ஒரு பெரும் தொகையை நஷ்ட ஈடாகவும் அனில் கோரியுள்ளார்.

    • இளையராஜா (வயது 44). இவர் தனது நிலத்தில் தென்னங்கன்று வைத்து அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மூலம் பராமரித்து வந்தார்.
    • கனகராஜ் மற்றும் 3 நபர்கள் திடீரென்று நிலத்திற்குள் நுழைந்து 30 தென்னங் கன்றுகளை சேதப்படுத்தினர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த நெல்லிக்குப்பத்தை சேர்ந்தவர் இளையராஜா (வயது 44). இவர் தனது நிலத்தில் தென்னங்கன்று வைத்து அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மூலம் பராமரித்து வந்தார். இந்த நிலையில் இளையராஜா, கனகராஜை வேலைக்கு வர வேண்டாம் என நிறுத்திவிட்டார்.   சம்பவத்தன்று கனகராஜ் மற்றும் 3 நபர்கள் திடீரென்று நிலத்திற்குள் நுழைந்து 30 தென்னங் கன்றுகளை சேதப்படுத்தினர். இதனை தட்டிக் கேட்ட இளையராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் கனகராஜ், அருள், வேல் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு நர்சிங் படித்து வரும் மாணவி வேளாங்கண்ணிக்கு சென்றவர் திரும்ப வீட்டிற்கு வரவில்லை.

    நாகப்பட்டினம்:

    திட்டச்சேரி அடுத்த புலவநல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் காயத்ரி (வயது 19). இவர் நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார். இந்த நிலையில் இவர் வேளாங்கண்ணியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி பெற்று வந்தவர்.

    கடந்த 12-ம் தேதி வேளாங்கண்ணி சென்றவர் திரும்ப வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் காயத்ரியின் பெற்றோர் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து சக்திவேல் திட்டச்சேரி போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ஃபேஸ்புக் நிறுவனம் கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்திற்கு தனிப்பட்ட முறையில் பயனர் விவரங்களை வழங்கிய விவகாரத்தில், அந்நிறுவனம் மீது புதிதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. #Facebook

     

    அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் டொனால்டு டிரம்பிற்காக, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்ற நிறுவனம் ஃபேஸ்புக் நிறுவனத்தின் 5 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்களை திரட்டி, தவறாக பயன்படுத்தியது என குற்றச்சாட்டு எழுந்த விவகாரம் உலகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    இதனால் பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக சர்வதேச அளவில் விமர்சனம் எழுந்த நிலையில், ஃபேஸ்புக் நிறுவனர் சூக்கர்பர்க் நடந்த விவகாரத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டதுடன், இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வோம் என உறுதி அளித்தார்.

    இந்திய அரசியலிலும் இப்பிரச்சனை புயலை ஏற்படுத்தியது. சர்வதேச அளவில் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு இந்த விவகாரம் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தது. 



    இந்த நிலையில், கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரம் பேஸ்புக் நிறுவனத்திற்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. பயனர்களின் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி பகிர்ந்து கொண்டதற்காக அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட அட்டார்னி ஜெனரல் கால் ரேசின் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார். 

    இந்த வழக்கின் மூலம் ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயனர் விவரங்களை அதிக கவனமாக கையாளும் என்பதை உறுதிப்படுத்த முடியும் என தான் நம்புவதாக ரேசின் தெரிவித்தார்.

    இதுகுறித்து ஃபேஸ்புக் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், பயனர் விவரங்களின் பாதுகாப்பு குறித்து வழக்கு தொடுத்திருக்கும் அட்டார்னி ஜெனரல் கால் ரேசின் மற்றும் பல அட்டார்னி ஜெனரல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, அவர்களது குற்றச்சாட்டுகளை பரிசீலனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மாயமான மலேசிய விமானம் எம்எச்370 தொடர்பாக போயிங், மலேசியா ஏர்லைன்ஸ் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #MalaysiaAirlines #MH370 #PlaneMissing #USCourt
    வாஷிங்டன்:

    மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானமான எம்எச்370, மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி சீனாவின் பீஜிங் நகருக்கு புறப்பட்டது. அதில் 227 பயணிகள், 12 ஊழியர்கள் பயணித்தனர். ஆனால், புறப்பட்ட சிறிது நேரத்தில் அது ரேடாரில் இருந்து மறைந்து மாயமானது.

    விமானம் தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் எந்த பகுதியில் விழுந்தது? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. என்ன நடந்தது? என்பதற்கு விசாரணக்குழுவின் அறிக்கையிலும் தெளிவான பதில் இல்லை. நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.



    இந்நிலையில் மலேசிய விமானம் மாயமானது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் 100க்கும் மேற்பட்டோர் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மலேசிய விமான விபத்திற்கு மலேசியா ஏர்லைன்ஸ், போயிங் விமான தயாரிப்பு நிறுவனம் மற்றும் காப்பீட்டு நிறுவனமான அலையன்ஸ் எஸ்இ  ஆகியவை பொறுப்பேற்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.

    இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜேக்சன், வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். மலேசிய விமான நிலையத்தில் இருந்து மலேசியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தால் இயக்கப்பட்ட விமானம் மாயமானது தொடர்பான வழக்கு என்பதால் அமெரிக்காவில் விசாரிப்பது பொருத்தமற்றது என நீதிபதி தெரிவித்தார். #MalaysiaAirlines #MH370 #PlaneMissing #USCourt

    ×