என் மலர்

  நீங்கள் தேடியது "krishna"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கிருஷ்ணனின் அவதாரம் பல சிறப்புகளை உள்ளடக்கியது.
  • மூன்று வளைவுகளும் அறம், பொருள், இன்பத்தை குறிப்பதாக சொல்கிறார்கள்.

  கிருஷ்ணனின் அவதாரம் பல சிறப்புகளை உள்ளடக்கியது. கண்ணனுக்கு 'திரிபங்கி லலிதாகரன்' என்ற பெயரும் உண்டு. இதற்கு 'உடலில் மூன்று வளைவுகளைக் கொண்டவன்' என்று பொருள்.

  புல்லாங்குழல் ஊதியபடி கண்ணன் நிற்கும் தோற்றத்தை கண்டவர்கள், அதை நன்றாக பார்த்தால், இந்த மூன்று வளைவுகளைக் காண முடியும்.

  இந்த கோலத்தில் ஒரு காலை நேராக வைத்து, மறு காலை மாற்றி வைத்திருப்பது ஒரு வளைவு. மற்றொரு வளைவாக கருதப்படுவது, அவரது வளைந்து நிற்கும் இடுப்பு. கழுத்தை சாய்த்தபடி கோவிந்தன் புல்லாங்குழல் ஊதுவது மூன்றாவது வளைவு.

  இந்த மூன்று வளைவுகளும் அறம், பொருள், இன்பத்தை குறிப்பதாக சொல்கிறார்கள். கண்ணனின் இந்த தோற்றத்தை வழிபடுபவர்கள், மேற்கண்ட மூன்றையும் அடைந்து இறுதியில், திருமாலின் திருவடியை அடைவார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ‘நான்’, ‘என்னுடையது’ என்பதெல்லாம் அகந்தையின் உருவம்.
  • ‘எல்லாமே இறைவனுடையது’ என்பதே செருக்கை அழிக்கும் சக்தி படைத்தது.

  பாண்டவர்களும், கவுரவர்களும் ஒன்றாக இருந்த காலகட்டம் அது. தன் உறவுகள் கூடியிருந்த அஸ்தினாபுரத்திற்கு வருகை தந்திருந்தார், கிருஷ்ணன். அவரை நகரின் எல்லைக்கே சென்று அழைத்து வர வேண்டும் என்று பலரும் நினைத்தனர். அதனால் அஸ்தினாபுரத்தை நிறுவியவரான பீஷ்மர், பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் பல போர் பயிற்சிகளை வழங்கிய துரோணர், அவரது மகன் அஸ்வத்தாமன், கிருபர், விதுரர் என பெருந்தலைகள் பலரும் சென்று கண்ணனை வரவேற்று அழைத்துக் கொண்டு, ஊர்வலமாக வந்தனர்.

  கிருஷ்ணரை வரவேற்பதற்காக வீதி நெடுகிலும் அலங்கார வளைவுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மக்கள் அனைவரும் சாலையின் இருபுறமும் நின்று பூக்கள் தூவி வரவேற்றனர். பெண்கள் பலரும் கண்ணனுக்கு பூரணகும்ப மரியாதை செலுத்தினர். வரும் வழியிலேயே பீஷ்மர், கண்ணனிடம் "நீங்கள் தங்க ஏதுவான இடத்தை தேர்வு செய்து வைத்துள்ளோம். உங்களுக்கு விருப்பமான இடம் எது என்று சொன்னால் அதை தருவதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என்றார்.

  அப்போது கண்ணபிரான், தன் கண்ணுக்குத் தென்பட்ட ஒரு கட்டிடத்தை சுட்டிக்காட்டி "பச்சை வர்ணம் பூசப்பட்டு, பிரளய காலத்தில் நீரில் மிதந்து வரும் ஆல் இலை போல நிற்கிறதே. அது யாருடைய வீடு?" என்றார்.

  "இறைவா. அது என்னுடைய வீடு" என்று துரோணரிடம் இருந்து பதில் வந்தது.

  கண்ணன் அடுத்ததாக ஒரு கட்டிடத்தை நோக்கி கைநீட்டி, "சிவப்பு நிறம் பூசப்பட்டு, செம்மாந்த கோலத்தோடு கம்பீரமாய் நிற்கும் இது யாருடைய வீடு?" என்று கேட்டார்.

  இப்போது கிருபர் பதில் கூறினார். "மாதவா.. அது என்னுடைய வீடு"

  கண்ணன் மறுபடியும் ஒரு கட்டிடத்தை நோக்கி, "மஞ்சள் வண்ணம் பூசப்பட்டு, மகாமேரு குன்று போல நிற்கும் இது யாருடைய வீடு?" என்றார்.

  அஸ்தினாபுரத்தின் பிதாமகனான பீஷ்மர், "அச்சுதா.. அது என்னுடைய வீடு. அதில் நீங்கள் தாராளமாக தங்கிக்கொள்ளலாம்" என்றார்.

  அதையும் தாண்டிச் சென்ற கண்ணன், "நீல நிறத்தில் கடல் போன்று நீண்டு விரிந்து காட்சியளிக்கும் இது யாருடைய வீடு?" என்று கேட்டார்.

  அதற்கு துரோணரின் மகனான அஸ்வத்தாமன், "பரம்பொருளே, அது என்னுடைய வீடு" என்று பதிலளித்தான்.

  கண்ணன் புன்னகையோடே மீண்டும் நடக்கத் தொடங்கினார். அப்போது அவர் கண்ணின் மற்றொரு கட்டிடம் தென்பட்டது. "சிறிய அளவில் வெள்ளை நிறத்தோடு, பாற்கடலைப் போலவும், கயிலையைப் போலவும் சாத்வீகம் பொருந்தி நிற்கும் இது யாருடைய வீடு?" என்றார்.

  "அன்புக்குரிய கடவுளே.. அது உன்னுடைய வீடு" என்று விதுரரிடம் இருந்து பதில் வந்தது.

  "என்னுடைய வீடா?.. அஸ்தினாபுரத்தில் எனக்கென்று அரையடி மண்கூட இல்லை என்று நினைத்தேன். இத்தனை பெரிய வீடு எனக்கு இருக்கிறபோது, நான் எதற்காக பீஷ்மர், கிருபர், துரோணர் போன்றோரது வீடுகளில் போய் தங்க வேண்டும். நான் என் வீட்டிற்குப் போகிறேன்" என்றபடி, விதுரரின் வீட்டிற்குள் நுழைந்தார் கண்ணன்.

  'நான்', 'என்னுடையது' என்பதெல்லாம் அகந்தையின் உருவம். 'எல்லாமே இறைவனுடையது' என்பதே செருக்கை அழிக்கும் சக்தி படைத்தது. அந்த ஆணவத்தை அழிக்கும் மனதையே, இறைவன் எப்போதும் விரும்புகிறான். அந்த மனதிற்குள் குடிபுகவே அவன் நினைக்கிறான்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நமக்கு பதினாறு செல்வங்களையும் எளிதாக கொடுக்கக் கூடிய இந்த ஸ்ரீ கிருஷ்ணருடைய 108 போற்றியை தினமும் சொல்லி கிருஷ்ணரை வழிபாடு செய்யவும்.
  ஓம் அனந்த கிருஷ்ணா போற்றி
  ஓம் அரங்கமா நகருளானே போற்றி
  ஓம் அற்புத லீலா போற்றி
  ஓம் அச்சுதனே போற்றி
  ஓம் அமரேறே போற்றி
  ஓம் அரவிந்த லோசனா போற்றி
  ஓம் அர்ஜுனன் தோழா போற்றி
  ஓம் ஆதி மூலமே போற்றி
  ஓம் ஆயர் கொழுந்தே போற்றி
  ஓம் ஆபத்சகாயனே போற்றி
  ஓம் ஆலிலை பாலகா போற்றி
  ஓம் ஆழ்வார் நாயகா போற்றி
  ஓம் ஆண்டாள் பிரியனே போற்றி
  ஓம் ஆனையைக் காத்தாய் போற்றி
  ஓம் ஆனந்த மூர்த்தியே போற்றி
  ஓம் ஆனிரை காத்தவனே போற்றி
  ஓம் இமையோர் தலைவா போற்றி
  ஓம் உம்பர்க்கு அருள்வாய் போற்றி
  ஓம் உடுப்பி உறைபவனே போற்றி
  ஓம் உள்ளம் கவர் கள்வனே போற்றி
  ஓம் உலகம் உண்ட வாயா போற்றி
  ஓம் ஊழி முதல்வனே போற்றி
  ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி
  ஓம் எட்டெழுத்து இறைவா போற்றி
  ஓம் எண் குணத்தானே போற்றி
  ஓம் எழில் ஞானச் சுடரே போற்றி
  ஓம் எழில் மிகுதேவா போற்றி
  ஓம் ஏழைப் பங்காளா போற்றி
  ஓம் ஒளிமணிவண்ணா போற்றி
  ஓம் ஒருத்தி மகனாய் பிறந்தாய் போற்றி
  ஓம் ஒருத்தி மகனாய் வளர்ந்தாய் போற்றி
  ஓம் கலியுக தெய்வமே போற்றி
  ஓம் கண்கண்ட தேவா போற்றி
  ஓம் கம்சனை அழித்தாய் போற்றி
  ஓம் கருட வாகனனே போற்றி
  ஓம் கல்யாண மூர்த்தி போற்றி
  ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
  ஓம் கமலக் கண்ணனே போற்றி
  ஓம் கஸ்துாரி திலகனே போற்றி
  ஓம் காளிங்க நர்த்தனா போற்றி
  ஓம் காயாம்பூ வண்ணனே போற்றி
  ஓம் கிரிதர கோபாலனே போற்றி
  ஓம் கீதையின் நாயகனே போற்றி
  ஓம் குசேலர் நண்பனே போற்றி
  ஓம் குருவாயூர் அப்பனே போற்றி
  ஓம் கோபியர் தலைவனே போற்றி
  ஓம் கோபி கிருஷ்ணனே போற்றி
  ஓம் கோவர்த்தனகிரி தாங்கியவனே போற்றி
  ஓம் கோபால கிருஷ்ணனே போற்றி
  ஓம் கோகுல பாலகனே போற்றி
  ஓம் கோவிந்த ராஜனே போற்றி
  ஓம் சகஸ்ர நாம பிரியனே போற்றி
  ஓம் சங்கு சக்கரத்தானே போற்றி
  ஓம் சந்தான கிருஷ்ணனே போற்றி
  ஓம் சகடாசுரனை அழித்தவனே போற்றி
  ஓம் சர்வ லோக ரட்சகனே போற்றி
  ஓம் சாந்த குணசீலனே போற்றி
  ஓம் சிந்தனைக்கினியவனே போற்றி
  ஓம் சீனிவாச மூர்த்தியே போற்றி
  ஓம் சுந்தரத் தோளுடையானே போற்றி
  ஓம் தாமரைக் கண்ணனே போற்றி
  ஓம் திருமகள் மணாளனே போற்றி
  ஓம் திருத்துழாய் மார்பனே போற்றி
  ஓம் துவாரகை மன்னனே போற்றி
  ஓம் தேவகி செல்வனே போற்றி
  ஓம் நந்த கோபாலனே போற்றி
  ஓம் நந்தகோபன் குமரனே போற்றி
  ஓம் நப்பின்னை மணாளனே போற்றி
  ஓம் நவநீத சோரனே போற்றி
  ஓம் நான்மறை பிரியனே போற்றி
  ஓம் நாராயண மூர்த்தியே போற்றி
  ஓம் பரந்தாமனே போற்றி
  ஓம் பக்த வத்சலனே போற்றி
  ஓம் பலராமர் சோதரனே போற்றி
  ஓம் பவள வாயனே போற்றி
  ஓம் பத்ம நாபனே போற்றி
  ஓம் பார்த்த சாரதியே போற்றி
  ஓம் பாற்கடல் கிடந்தாய் போற்றி
  ஓம் பாண்டவர் துாதனே போற்றி
  ஓம் பாண்டு ரங்கனே போற்றி
  ஓம் பாரதம் நிகழ்த்தினாய் போற்றி
  ஓம் பாஞ்சாலி சகோதரனே போற்றி
  ஓம் பாஞ்சஜன்ய சங்கினாய் போற்றி
  ஓம் பிருந்தாவன பிரியனே போற்றி
  ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி
  ஓம் புருஷோத்தமனே போற்றி
  ஓம் பூபாரம் தீர்த்தவனே போற்றி
  ஓம் பூதனையை கொன்றவனே போற்றி
  ஓம் மதுசூதனனே போற்றி
  ஓம் மண்ணை உண்டவனே போற்றி
  ஓம் மயிற்பீலி அழகனே போற்றி
  ஓம் மாய கிருஷ்ணனே போற்றி
  ஓம் மாயா வினோதனே போற்றி
  ஓம் மீராவின் வாழ்வே போற்றி
  ஓம் முத்து கிருஷ்ணனே போற்றி
  ஓம் முழுமதி வதனா போற்றி
  ஓம் யமுனைத் துறைவனே போற்றி
  ஓம் யசோதை செய்தவமே போற்றி
  ஓம் யதுகுலத் திலகமே போற்றி
  ஓம் ராதையின் நாயகனே போற்றி
  ஓம் வசுதேவர் புதல்வா போற்றி
  ஓம் வெண்ணெய் திருடியவனே போற்றி
  ஓம் வெள்ளை மனத்தானே போற்றி
  ஓம் வேங்கட கிருஷ்ணனே போற்றி
  ஓம் வேதியர் வாழ்வே போற்றி
  ஓம் வேணு கோபாலனே போற்றி
  ஓம் வைகுண்ட வாசனே போற்றி
  ஓம் வையம் காப்பவனே போற்றி போற்றி!
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமாலின் மற்ற அவதாரங்கள், வெவ்வேறு காலகட்டங்களில் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி எடுக்கப்பட்டவை. ஆனால் பலராம அவதாரம், அவரது கிருஷ்ண அவதாரத்துடன் தொடர்புடையது.
  விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் எட்டாவது அவதாரம், பலராம அவதாரம். இது மற்ற அவதாரங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. திருமாலின் மற்ற அவதாரங்கள், வெவ்வேறு காலகட்டங்களில் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி எடுக்கப்பட்டவை. ஆனால் பலராம அவதாரம், அவரது கிருஷ்ண அவதாரத்துடன் தொடர்புடையது.

  வேதத்தைத் திருடிச் சென்ற சோமுன் என்ற அசுரனை அழித்து, வேதத்தை மீட்பதற்காக எடுக்கப்பட்டது மச்ச அவதாரம். தேவர்களுக்கு அமிர்தம் கிடைக்கவேண்டி மேரு மலையை தாங்க எடுக்கப்பட்டது கூர்ம அவதாரம். இரண்யாட்சனை அழித்து கடலுக்கு அடியில் இருந்து பூமியை மீட்க எடுக்கப்பட்டது வராக அவதாரம். தன் பக்தனான பிரகலாதனை காப்பாற்ற எடுக்கப்பட்டது நரசிம்ம அவதாரம். மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்க எடுக்கப்பட்டது வாமன அவதாரம். ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்ற உன்னத தத்துவத்தை உணர்த்த எடுக்கப்பட்டது ராம அவதாரம். தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும், இருப்பினும் மறுபடியும் தர்மமே வெல்லும் என்பதை உணர்த்த எடுக்கப்பட்டது கிருஷ்ண அவதாரம். ஆனால் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வுக்கு உற்ற துணையாக இருந்தவர்களை, உன்னதமாக நினைக்க வேண்டும், மதிக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட அவதாரமே, பலராமர் அவதாரம் ஆகும்.

  திருமாலின் அவதார வரிசை பற்றிய சந்தேகம் நாரதருக்கு ஏற்பட்டது. அப்போது திருமால் கிருஷ்ண அவதாரத்தில் இருந்தார். நேராக அவரிடம் சென்ற நாரதர், “இறைவா! இந்த கிருஷ்ண அவதாரம் உங்களுடைய எத்தனையாவது அவதாரம்?” என்று கேட்டார்.

  அதற்கு கிருஷ்ணர், “இது என்னுடைய ஒன்பதாவது அவதாரம்” என்று பதிலளித்தார்.

  “அப்படியானால் எட்டாவது அவதாரம் எது?” என்ற நாரதரின் கேள்விக்கு, “இப்பிறவியில் எனக்கு அண்ணனாக பிறந்துள்ள பலராமன்தான், என்னுடைய எட்டாவது அவதாரம்” என்றார்.

  குழப்பம் அடைந்த நாரதர், “எப்படி பெருமாளே! தங்களின் படுக்கையாக இருக்கிற ஆதிஷேசன் என்ற நாகம்தானே பலராமனாக பிறந்துள்ளது. அப்படியிருக்க, பலராமன் எப்படி தங்களது அவதார கணக்கில் வர முடியும்?” என்று கேட்டார்.

  “நாரதரே, எனது ராம அவதாரத்தில் எனக்கு தம்பியாக பிறந்து சதா சர்வகாலமும், ‘அண்ணா.. அண்ணா..’ என்று என் காலையே பிடித்து கொண்டிருந்த லட்சுமணனுக்கு, நான் இதுவரை எதுவுமே செய்யவில்லையே. அதனால் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. ஆதிசேஷன் மூலமாக எனது அண்ணனாக அவனை படைத்து, தினமும் அவன் காலில் நான் விழுந்து எனது நன்றிக் கடனை தீர்த்துக் கொள்வதோடு, எனது அவதாரத்தில் ஒரு பங்கையும் அவனுக்கு தந்துள்ளேன்” என்றார் பரந்தாமன்.

  இப்படி திருமாலே உருகி உருவாக்கிய உன்னத அவதாரமே, பலராமர் அவதாரம்.

  கலப்பையை ஆயதமாகக் கொண்ட பலராமர், உறவுமுறையில் கிருஷ்ணரின் சகோதரர், கிருஷ்ணரின் தந்தை வசுதேவரின் முதல் மனைவி ரோகிணியின் வயிற்றில் உதித்தவர். இவரை ‘பலதேவன்’, ‘பலபுத்திரன்’, ‘கதாயுதன்’ என்று போற்றுவர். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. பலராமரின் தங்கை பெயர் சுபத்திரை.

  பலராமர் பிறந்தபோது, அவனுக்கு யதுகுல குருவாகிய கர்கர், சடங்குகள் செய்து ராமன் என்று பெயரிட்டார். மேலும் அந்தக் குழந்தை மிகவும் பலசாலியாக இருந்ததால், ‘பலராமன்’ என்றும் அழைக்கலாம் என்றார்.

  ரோகிணியின் வயிற்றில் உதித்த பலராமனும், தேவகி வயிற்றில் உதித்த கண்ணனும் இணை பிரியா சகோதரர்கள் ஆயினர். பிருந்தாவனத்திலும், ஆயர்பாடியிலும் இவர்கள் நடத்திய திருவிளையாடல் கொஞ்ச நஞ்சமல்ல. கோவர்த்தனகிரியில் இவர்கள் மாடுமேய்க்கும் காலத்தில், மனித மாமிசத்தை உண்ணும் வழக்கம் கொண்ட கழுதை வடிவிலான தேனுகன் என்பவனையும், வில்வ மரத்தடியின் கீழ் வில்வ பழத்தால் பந்தாடிய காலத்தில் பிரலம்பன் என்பவனையும், நரகாசுரனின் வானரத் தலைவனான துவிதனின் சகோதரன் மயிந்தன் என்பவனையும் இருவரும் சேர்ந்தே அழித்தனர்.

  மகாபாரதத்தில் பலராமர்

  துரியோதனனுக்கு லட்சுமளை என்ற பெண் இருந்தாள். அவளுக்கு திருமணம் செய்ய சுயம்வரம் ஏற்பாடு செய்தான், துரியோதனன். சுயம்வரத்திற்கு வந்த சாம்பன், லட்சுமளையை தூக்கிச் சென்றான். சாம்பன் வேறுயாருமல்ல, கிருஷ்ணருக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்த மகன்தான். தன் மகளை சாம்பன் தூக்கிச் சென்றதும், துரியோதனன் தன் படையோடு வந்து சாம்பனுடன் பேரிட்டான். அவர்களை எதிர்த்து நின்றான் சாம்பன். இருப்பினும் அந்த படையில் பலம் வாய்ந்த பீஷ்மரும், துரோணரும் இருந்ததால், சாம்பன் சிறைபடுத்தப்பட்டான்.

  இதுபற்றி அறிந்ததும் பலராமர், அஸ்தினாபுரம் வந்து துரியோதனனைச் சந்தித்தார். “துரியோதனா! நீ செய்ததில் நியாயம் இல்லை. தனி ஒருவனாக போராடிய சாம்பனை, படையோடு சென்று சிறைபடுத்தியிருக்கிறாய். நாங்கள் உன்னுடைய உறவினர் என்பது மறந்து போயிற்றா? ஏன் எப்பொழுது பார்த்தாலும் எங்களோடு பகைமை பாராட்டிக் கொண்டே இருக்கிறாய்? சாம்பனை விடுவித்து, உன்னுடைய மகளை அவனுக்கு திருமணம் செய்து கொடு” என்றார்.

  ஆனால் அதை கொஞ்சமும் காதில் வாங்கிக் கொள்ளாமல் துரியோதனன், பலராமரையும் அவர் குலத்தையும் இழிவாகப் பேசினான். அதனால் பலராமருக்குக் கோபம் பீறிட்டது.

  “உங்களோடு சண்டை போட்டு ஜெயிக்க வேண்டும் என்ற அவசியமே எனக்கு இல்லை. கணப் பொழுதில் உங்களைக் கூண்டோடு துவம்சம் செய்கிறேன்” என்று கூறி, தன் ஆயுதமான கலப்பையை எடுத்து தரையில் அடித்தார்.

  அடுத்த நொடி அஸ்தினாபுரமே வேரோடு பெயர்ந்து கிளம்புவதுபோல் ஆட்டம் கண்டது. கங்கையில் நதியில், அந்த நகரமே மூழ்கிப் போகுமோ என்ற பயம் அனைவரையும் தொற்றிக்கொண்டது. உடனே துரியோதனன், பலராமர் காலில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். அத்துடன் லட்சு மளையை, சாம்பனுக்கு மணம் முடித்துக் கொடுக்கவும் சம்மதித்தான்.

  அதன்பிறகு, தன் கலப்பையை மீண்டும் தரையில் மோதி ஆட்டம் கண்டு நின்ற அஸ்தினாபுரத்தை முன் இருந்த நிலைக்கு பலராமர் கொண்டுவந்து நிலைப்படுத்தினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கிருஷ்ணரின் மனைவிகளுள் ஒருவர் சத்யபாமா. சத்யபாமாவிற்காக கிருஷ்ண பகவான் கற்பக விருட்சத்தை துவாரகைக்கு கொண்டு வந்த கதையை அறிந்து கொள்ளலாம்.
  கிருஷ்ணரின் மனைவிகளுள் ஒருவர் சத்யபாமா. ஒருமுறை நாரதர், தேவலோகத்தில் இருந்து தான் கொண்டு வந்திருந்த கற்பக விருட்சத்தின் மலர்களை கிருஷ்ணரிடம் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்ட கிருஷ்ணர், அந்த மலர்களை சத்யபாமாவைத் தவிர தன்னுடைய மற்ற மனைவியர்களுக்கு எல்லாம் கொடுத்தார். இதனால் சத்யபாமா வருத்தம் கொண்டாள்.

  தன் தவறை உணர்ந்த கிருஷ்ணர், உடனடியாக சத்யபாமாவை அழைத்துக் கொண்டு தேவலோகத்திற்குச் சென்றார். அங்கு தேவேந்திரனைச் சந்தித்து, கற்பக விருட்ச மலர்களைத் தரும்படி கேட்டார். ஆனால் மலர்களைத் தருவதற்கு இந்திரன் மறுத்துவிட்டான். இதனால் கோபம் கொண்ட கிருஷ்ணரின் வாகனமான கருடன், கற்பக விருட்சத்தை வேருடன் பிடுங்கி எறியத் தயாரானது.

  இந்திரனும் இடியை உருவாக்கி அதனுடன் சண்டையிட்டான். அந்த சண்டையில் இந்திரன் தோற்கடிக்கப்பட்டான். கற்பக விருட்சம் துவாரகைக்கு கொண்டு வரப்பட்டு, சத்யபாமாவின் அரண்மனைக்கு முன்பாக இருந்த நந்தவனத்தில் நட்டுவைக்கப்பட்டது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மன நிம்மதி பெற வேண்டுமா? வாழ்வில் மகிழ்ச்சியும் மன நிறைவும் பெற்று சுகமான வாழ்க்கை பெற வேண்டுமா? முன்னோர் கொடுத்த அருமையான ஸ்லோகம் இருக்கிறது.
  இது கிருஷ்ணனின் துதி. மோஹினியாய் அவதரித்து உலகங்கொண்ட மாயனின் துதி! மோஹினியும் நானே, மோஹம் அளிப்பவனும் நானே, மாயையும் நானே, மாயை விலக்குபவனும் நானே என மாயன் காட்டி நின்ற கோலம்.

  தானே மாயனுமாய் மோஹினியாய் காட்டி நின்ற சம்மோஹன கிருஷ்ண ரூபத்தை தரிசிப்பவர்களுக்கு வாழ்வின் மயக்க நிலை நீங்கும்.

  ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்,
  காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்,
  பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்,
  கோணை பெரிதுடைத் தெம்மானைக் கூறுதலே.

  எம்பெருமானைப் பற்றிச் சொல்லுவதென்றால் அது மிகவும் சிரமமானது. காரணம், அவன் ஆணும் அல்லன், பெண்ணும் அல்லன். அப்படி என்றால் இரண்டும் அல்லாத மூன்றாம் பாலினத்தவனா என்றால், அதுவும் அல்லன்! அவனை எங்கே காட்டென்று சொன்னால் அவன் நம் கண்ணால் காண்பதற்கு இயலாதவன். உள்ளவனா என்றால் அவன் உள்ளவன் அல்லன். அப்படி என்றால் அவன் இல்லையா என்று கேட்டால், அவன் இல்லாதவனும் அல்லன். ஆனால் அடியார் என்ன விரும்புகின்றனரோ அதற்கு ஏற்ப, அவர்கள் விரும்பிய வடிவை உடையவன் ஆவான். அப்படி அல்லாதவனாகவும் இருப்பான். ஆகவேதான் அவனை குறிப்பிட்டு அவன் தன்மையைச் சொல்லுதல் சிரமம் என்றார் நம் ஆழ்வார்.

  ஆயினும் நமக்காக இப்பூவுலகில் அவதரித்து நம்முடனே வாழ்ந்து பக்தியின் பரிணாமத்தை விதைத்த கண்ணன் தன் மாயையினால் தோற்றுவித்த சம்மோஹன வடிவத்தை தியானித்து நலம் பெறலாம்.

  உலக மக்களின் நன்மை கருதி மரீசி மகரிஷி நமக்கு அளித்துள்ள அரிய சக்தி வாய்ந்த சம்மோஹன கிருஷ்ண ஸ்லோகம் இது. நிம்மதி இழந்து தவிக்கும் குடும்பங்களில் மன நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் அருமையான சுலோகம். முக்கியமாக திருமணமான பெண்களுக்கு மகிழ்ச்சியான இல்லற வாழ்வை தரும். திருமணமாகாத பெண்களுக்குத் திருமணத் தடைகள் நீங்கி நல்ல வரன் அளித்தருளும்.

  க்ருஷ்ணம் கமலபத்ராக்ஷம் திவ்யாபரண பூஷிதம்
  த்ரிபங்கீ லலிதாகாரம் அதிஸுந்தர மோஹனம்
  பாகம் தக்ஷிணம் புருஷம் அந்யத் ஸ்திரீ ரூபிணம் ததா
  ஸங்கம் சக்ரம் சாங்கு ஸஞ்ச புஷ்பபாணம்ச பங்கஜம்
  இஷீசாபம் வேணுவாத்தியம் ச தாரயந்தம் புஜாஷ்டகை:
  ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம்
  ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் க்ருஷ்ண மாஸ்ரயே ||

  தாமரை இதழ் போன்ற கண்களும் பலவிதமான திருவாபரணங்களைத் தரித்தவரும் அழகிய வில் போல் வளைந்த திருமேனியும் அழகுக்கு அழகு சேர்க்கும் மன்மத ரூபமுமாகத் திகழ்பவரும் பாதி புருஷாகார சரீரரும் பாதி பெண்மையான சரீரமும் வலது நான்கு இடது நான்கு கரங்களில் – சங்கு, சக்கரம், அங்குசம், கரும்பு வில், புஷ்ப பாணம், தாமரை மலர், இரண்டு கரங்களில் வேணு வாத்தியம் (புல்லாங்குழல்) வாசித்த படி சுகந்த சந்தன திரவியங்களைப் பூசிக் கொண்டும், பலவிதமான மனோகரமான புஷ்பங்களைத் தரித்தவரும் இன்னல் படும் மக்களை அனைத்துத் துன்பங்களிலிருந்தும் காப்பாற்றி இன்பத்தைத் தர வல்லவருமான மோஹன ரூபமாக உள்ளத்தை வசீகரிக்கும் ஸ்ரீகிருஷ்ணனைத் தியானிக்கிறேன்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கழுகு படம் மூலம் மிகவும் பிரபல நடிகர் கிருஷ்ணாவின் முதல் தயாரிப்பில் பிரபல நடிகை ஒருவர் நடித்திருக்கிறார். #Krishna #HighPriestess
  கழுகு படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் கிருஷ்ணா. இப்படத்தை தொடர்ந்து, யாமிருக்க பயமே, வன்மம், யாக்கை, பண்டிகை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அவரது நடிப்பு வாழ்க்கை மிகவும் சுவாரசியமாக இருக்கும் இந்த கட்டத்தில் தற்போது தயாரிப்பாளராக மாறியிருக்கிறார்.

  இது குறித்து நடிகர் மற்றும் தயாரிப்பாளர் கிருஷ்ணா கூறும்போது, ‘நான் நிறைய நல்ல கதைகளை ரசிகர்களுக்கு கொடுக்க விரும்புகிறேன். தெலுங்கில் உருவான என்னுடைய முதல் தயாரிப்பான "High Priestess" என்ற வெப் சீரீஸ் மிகச்சிறப்பாக வந்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த மாதிரி அற்புதமாக வரும் என நானே எதிர்பார்க்கவில்லை. அமலா மேடம் போன்ற ஒரு மாபெரும் கலைஞர் இதில் நடிப்பது ஒரு உண்மையான பேரின்பம் மற்றும் ஆசீர்வாதம். குறிப்பாக, இதனை நாகார்ஜூனா சார் அறிமுகப்படுத்தியது மிகப்பெரிய அளவிற்கு மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது’ என்றார்.   ட்ரைபல் ஹார்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கிருஷ்ணா தயாரிக்க, புஷ்பா இக்னாஷியஸ் இயக்கியிருக்கும் இந்த வெப் சீரீஸ் வரும் ஏப்ரல் 25 முதல் ஒளிபரப்பாகிறது. இதில் நடிகர் கிஷோர், பிரம்மாஜி, வரலக்ஷ்மி சரத்குமார், சுனைனா, விஜயலட்சுமி, ஆதவ் கண்ணதாசன், பிக் பாஸ் நந்தினி ராய், ஜி.வி.பிரகாஷ் குமாரின் சகோதரி பவானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மகா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று கிருஷ்ணன் அவதாரம். விஷ்ணுவின் அவதாரங்களிலேயே லீலைகள் பல நிறைந்தது இந்த அவதாரம் தான்.
  மகா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று கிருஷ்ணன் அவதாரம். விஷ்ணுவின் அவதாரங்களிலேயே லீலைகள் பல நிறைந்தது இந்த அவதாரம் தான்.

  வசுதேவருக்கும்- தேவகிக்கும் சிறைச் சாலைக்குள் பிறந்த கிருஷ்ணர், அன்றே இரவோடு இரவாக கோகுலத்தில் உள்ள யசோதையிடம் சேர்க்கப்பட்டார். அங்கு பல லீலைகள் செய்தபடி வளர்ந்த கிருஷ்ணரை, தேவகியின் சகோதரன் கம்சன் கொல்ல துடித்தான்.

  ஒரு கட்டத்தில் சிறுவனான கிருஷ்ணன், கம்சனை வதம் செய்தார். கிருஷ்ணர், மகாபாரதத்தில் முக்கிய பங்காற்றி இருக்கிறார். தன் உறவினர்களுக்கு எதிராக போர் புரிய தயங்கி, அர்ச்சுனன் செய்வதறியாது நின்றான்.

  அப்போது அவனுக்கு தர்ம அதர்மங்களை விளக்கி, அவன் போர் புரிய வேண்டியதன் அவசியத்தை விளக்கியவர், கிருஷ்ணன். பாண்டவர்கள் அந்த குருசேத்திரப் போரில் வெற்றிபெறவும், கிருஷ்ணன் செய்த சூட்சுமங்களே காரணமாக அமைந்தன.

  குருசேத்திரப் போரில் அர்ச்சுனனுக்கு, கிருஷ்ணர் வழங்கிய அறிவுரைகளே பகவத் கீதையாக புகழ்பெற்று விளங்குகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான கிருஷ்ணா, அடுத்ததாக மலையாள சினிமாவிலும் அறிமுகமாகவிருக்கிறார். #Krishna #PICCASSO
  தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் கிருஷ்ணா. இவர் கடைசியாக தனுஷ் உடன் இணைந்து `மாரி 2' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

  அவரது நடிப்பில் அடுத்ததாக `கழுகு 2' படம் ரிலீசாக இருக்கிறது. இதில் கிருஷ்ணா ஜோடியாக பிந்து மாதவியும், முக்கிய கதாபாத்திரத்தில் காளி வெங்கட்டும் நடித்துள்ளனர்.


  இந்த நிலையில், கிருஷ்ணா அடுத்ததாக மலையாள சினிமாவில் அறிமுகமாகவிருக்கிறார். சுனில் கரியட்டுகரா இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியதாக கிருஷ்ணா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். `பிக்காசோ' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஷேக் அஃப்சல் தயாரிக்கிறார். படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது. #Krishna #PICCASSO

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இத்துதியை திருமணம் ஆக வேண்டிய காளையரும், கன்னியரும் தினமும் நம்பிக்கையுடன் பாராயணம் செய்து வந்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நிச்சயமாகும்.
  தேவக்யா ஸுப்ரஜா கிருஷ்ணருக்மிணீ
  ப்ரியவல்லபவிவாஹம் தேஹிமே
  ஸீக்ரம்வாஸுதேவ நமோஸ்துதே.
  ஸ்ரீக்ருஷ்ண பூஜா கல்பம்

  பொதுப்பொருள்:

  தேவகியின் மைந்தனான கிருஷ்ணா, ருக்மிணிக்குப் பிரியமானவனே, நமஸ்காரம். எனக்கு சீக்கிரம் திருமணம் நிகழ அருள்புரிவாய் வாசுதேவனே! தங்களை வணங்குகிறேன்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா - பிந்து மாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் `கழுகு-2' படத்தில் யாஷிகா ஆனந்த் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். #Kazhugu2 #Krishna
  சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா - பிந்து மாதவி, தம்பி ராமையா, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான `கழுகு' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அதன் இரண்டாவது பாகம் `கழுகு-2' என்ற பெயரில் உருவாகி இருக்கிறது.

  கிருஷ்ணா, பிந்து மாதவி, காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது.  யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திலிருந்து சகலகலா வள்ளி என்ற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாட்டில் நடிகை யாஷிகா ஆனந்த் குத்தாட்டம் போட்டுள்ளார்.

  ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பை கவனிக்கிறார். பிரபல விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. #Kazhugu2 #Krishna #BinduMadhavi #YashikaAannand

  சகலகலா வள்ளி பாடல் வீடியோ:

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா - பிந்து மாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் `கழுகு-2' படத்தின் தணிக்கை சான்றிதழ் வெளியாகி இருக்கிறது. #Kazhugu2 #Krishna
  சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா - பிந்து மாதவி, தம்பி ராமையா, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான `கழுகு' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அதன் இரண்டாவது பாகம் `கழுகு-2' என்ற பெயரில் உருவாகி இருக்கிறது.

  கிருஷ்ணா, பிந்து மாதவி, காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு சான்றிதழ் கிடைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


  யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு கோபி கிருஷ்ணா ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். அண்டை மாநிலத்தின் முதல்வர் ஒருவரின் ஹெலிகாப்டர் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விழுந்து நொறுங்குகிறது. அதனை தேடிக் கண்டுபிடிக்க ராணுவத்துடன் அந்த ஊர் மக்களும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். இதனை மையப்படுத்தி படம் உருவாகி இருக்கிறது. #Kazhugu2 #Krishna #BinduMadhavi