search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரவுபதி"

    • அந்த அனாதரட்சகன் உடனே கருணை புரிய, திரவுபதியின் புடவை வளர்ந்து கொண்டே போனது.
    • துச்சாதனன் இழுத்து போட்ட புடவை மலைபோல் கிடக்க அவன் கை ஓய்ந்து, கீழே சாய்ந்தான்.

    பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்றதால் துரியோதனன், திரவுபதியை துகிலுறியுமாறு துச்சாதனிடம் சொன்னான்.

    அந்த துஷ்டனும் சிறிதும் இரக்கமில்லாமல் திரவுபதியின் புடவை தலைப்பை இழுத்து இழுக்கத் தொடங்கினான்.

    சபையில் இருந்தவர்கள் எல்லாம் செயலற்று, வாய்மூடி ஊமைகளாயினர்.

    திரவுபதி இரண்டு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தி, "ஹரி ஹரி கிருஷ்ணா, அபயம்! அபயம்! நீதான் எனக்கு துணை" என ஓல மிட்டாள்.

    அந்த அனாதரட்சகன் உடனே கருணை புரிய, திரவுபதியின் புடவை வளர்ந்து கொண்டே போனது.

    துச்சாதனன் அதைப்பற்றி இழுத்து இழுத்து போட்ட புடவை மலைபோல் கிடக்க அவன் கை ஓய்ந்து, கீழே சாய்ந்தான்.

    பகவானுக்கு சிறிய அளவு நிவேதனம் படைத்தாலும், அவர் பன்மடங்கு அனுக்கிரகம் செய்வார் என்பதையே இது காட்டுகிறது.

    • ஒருநாள் பாண்டவர்களும், கிருஷ்ணரும் தோட்டத்தில் இருந்த குளத்தில் நீராடினர்.
    • திரவுபதி கொடுத்த துணியை இடுப்பில் சுற்றிக் கொண்டு கண்ணன் கரையேறினான்.

    ஒருநாள் பாண்டவர்களும், கிருஷ்ணரும் தோட்டத்தில் இருந்த குளத்தில் நீராடினர்.

    அனைவரும் கரையேறிய பின்பும் கிருஷ்ணர் நீரிலேயே இருந்தார்.

    "கண்ணா, சீக்கிரம் வா!" என்று குரல் கொடுத்துவிட்டு அர்ஜுனன் உலர் ஆடையை அணிந்து கொள்ளப் போய்விட்டான்.

    பெண்கள் பகுதியில் கடைசியாக கரையை அடைந்த திரவுபதி,

    "கண்ணன் இன்னும் ஏன் வெளியே வராமல் நீரிலேயே துலாவிக் கொண்டிருக்கிறான்!" என நின்று யோசித்தாள்.

    "அவன் கட்டியிருந்த உடை நீச்சலடிக்கும்போது நழுவி விழுந்திருக்கும்.

    அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறான்" என யூகம் செய்து புரிந்து கொண்டாள்.

    உடனே தன் புடவையில் ஒரு பகுதியை கிழித்து கண்ணனை நோக்கி வீசிவிட்டு நகர்ந்தாள்.

    திரவுபதி கொடுத்த துணியை இடுப்பில் சுற்றிக் கொண்டு கண்ணன் கரையேறினான்.

    இப்படி கண்ணன் அணிந்து கொள்ள திரவுபதி செய்த உதவியே, துரியோதனன் அவையில் அவளை

    துச்சாதனன் துகிலுரிய முற்பட்டபோது, அவளது மானம் காக்கப்பட பிரதியுபகாரமாக அமைந்தது என சான்றோர்கள் கூறுகின்றனர்.

    • திரவுபதிக்கு பாதுகாப்பாக இருப்பேன் என்று கிருஷ்ணர் வாக்குறுதி அளித்தார்.
    • சூரியன் அஸ்தமன காலத்திற்கு பிறகு ரக்‌ஷாபந்தன் கொண்டாடக்கூடாது

    இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக ரக்ஷாபந்தன், இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களும் கொண்டாடலாம். ரக்ஷாபந்தன் நாளில், சகோதர சகோதரிகள் ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறி, நேசத்தை உறுதி செய்து சகோதரத்துவத்தை கொண்டாடுகிறார்கள்.

    அதன் அடையாளமாக சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் கைகளில் ராக்கி கட்டி, அவர்களின் நெற்றியில் திலகம் பூசிவிடுவார்கள். சகோதரர்கள் தங்கள் சகோதரிகளை பாதுகாப்பதாகவும், அவர்களை நேசிப்பதாகவும் பரிசுப்பொருட்களை கொடுத்து உறுதியளிக்கிறார்கள்.

    மகாபாரதத்தில் ஒருமுறை கிருஷ்ணரின் கையில் இருந்து வழிந்த ரத்தத்தை தடுப்பதற்காக திரெளபதி தனது புடவையை கிழித்து கட்டு போட்டாள். இது கிருஷ்ணரின் மனதை நெகிழச்செய்தது. அன்று முதல் திரெளபதியை தனது சகோதரியாக ஏற்று, எப்போதும் அவளுக்கு பாதுகாப்பாக இருப்பேன் என கிருஷ்ணர் வாக்குறுதி அளித்தார்.

    அதன்படியே கவுரவர்கள் திரௌபதியை துகிலுரிக்க முயன்றபோது அவள் கிருஷ்ணா என குரல் எழுப்ப, அவளது மானத்தை காப்பாற்றினார் கிருஷ்ணர். அதன் நினைவாகவே ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுகிறது.

    நல்ல நேரம்

    பந்தரகல் எனப்படும் முகூர்த்த நேரத்திலேயே சகோதரிகள் தங்களின் சகோதரர்கள் கைகளில் ராக்கி கட்ட வேண்டும். மற்ற நேரங்களில் ராக்கி கட்டுவது அபசகுணமாகக் கருதப்படுகிறது. பந்தரகல் இந்த ஆண்டு ஆகஸ்ட் 30-ந் தேதி இரவு 9.02 மணிக்கே தொடங்குகிறது. அதனால் இந்த சமயத்தில் மட்டுமே ராக்கி அணிவிக்க வேண்டும்.

    அதேபோல் அக்டோபர் 31-ந்தேதி காலை 6.20 மணிமுதல் 7.50 மணிவரையிலான நேரமும், அதன்பிறகு காலை 11.10  மணிமுதல் மாலை 3.50 மணி வரையிலான நேரமும் ராக்கி அணிவிப்பதற்கான நல்ல நேரமாக சொல்லப்பட்டுள்ளது.

    பொதுவாக சூரியன் அஸ்தமன காலத்திற்கு பிறகு ரக்ஷாபந்தன் விழா கொண்டாடக் கூடாது என்பது ஐதீகம். ஒருவேளை இந்த முகூர்த்த நேரத்தில் தங்களின் சகோதரருக்கு ராக்கி அணிவிக்க முடியாதவர்கள் ஆகஸ்ட் 31-ந் தேதி மாலை 5.30 மணிமுதல் 7.05 மணி வரையிலான நேரத்தில் ராக்கி அணிவிக்கலாம். ஆகஸ்ட் 30-ந் தேதி சகோதரர்களுக்கு ராக்கி அணிவிக்க நினைப்பவர்கள் இரவு 9.05 மணி முதல் 10.48 மணி வரையிலான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    ×