search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gold chain"

    • இந்திராணி மற்றும் அவரது மகள்கள் திருடன்.. திருடன்... என கத்தி கூச்சலிட்டனர்.
    • மொத்தம் 7 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கீழவஸ்தா சாவடி நாகா நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்.

    இவரது மனைவி இந்திராணி (வயது 50).

    நேற்று இரவு வீட்டில் இந்திராணி தனது மகள்கள் சுஷ்மிதா (27), ஸ்ருதி (25) ஆகியோருடன் தூங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது வீட்டின் பின்பக்கம் உள்ள கம்பி வேலியை பிரித்துக் கொண்டு மூன்று மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்தனர். திடுக்கிட்டு எழுந்த இந்திராணி மற்றும் அவரது மகள்கள் திருடன்.. திருடன்... என கத்தி கூச்சலிட்டனர்.

    இதையடுத்து அந்த மர்ம நபர்கள் கத்தி, கட்டையை காண்பித்து சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் எனக் கூறி மிரட்டல் விடுத்தனர்.

    பின்னர் கத்தி முனையில் இந்திராணி, சுஷ்மிதா, ஸ்ருதி கழுத்தில் கிடந்த தங்க செயினை பறித்தனர்.

    மொத்தம் 7 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இது குறித்து இந்திராணி தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • டால்மியா போர்டு நல்லி தோட்டம் பகுதியில் உள்ள மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 27-ந் தேதி நடைபெற்றது.
    • கூட்ட நெரிசலை பயன்படுத்தி உமா நந்தினி கழுத்தில் இருந்த 3½ பவுன் தங்கச் செயினை மர்மநபர்கள் பறித்துக் கொண்டனர்.

    சேலம்:

    சேலம் கருப்பூர் அருகே உள்ள டால்மியா போர்டு நல்லி தோட்டம் பகுதியில் உள்ள மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 27-ந் தேதி நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் அதே பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரின் மனைவி உமா நந்தினி(29) கலந்து கொண்டார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி உமா நந்தினி கழுத்தில் இருந்த 3½ பவுன் தங்கச் செயினை மர்மநபர்கள் பறித்துக் கொண்டனர்.

    இதேபோல் அயோத்தியாப்பட்டணம் ஏரிக்காடு பகுதி சேர்ந்த மாதேஸ்வரன் (57) என்பவர் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க சங்கிலியையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து 2 பேரும் கொடுத்த புகாரின் பேரின் கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தஞ்சை புதிய பஸ் நிலையத்திலிருந்து பஸ்ஸில் ஏறி பழைய பஸ் நிலையத்திற்கு சென்றார்.
    • கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை காணாதது கண்டு அதிர்ச்சடைந்தார்.

    தஞ்சாவூர்:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பாலையூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமி.

    இவரது மனைவி வசந்தா (வயது 68) . இவர் பாலையூரில் இருந்து தஞ்சை புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து பஸ்ஸில் ஏறி பழைய பஸ் நிலையத்திற்கு சென்றார்.

    அப்போது தான் கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை காணாதது கண்டு அதிர்ச்சடைந்தார். பலரிடம் கேட்டு பார்த்தும் பயனில்லை.

    இது குறித்து அவர் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கணவன் - மனைவி இருவரும் உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு செல்வதற்காக மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
    • பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் மூதாட்டி அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் வடுகபாளையம் முனியப்பன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது62). இவரது மனைவி ஜானகி(56) . கணவன் - மனைவி இருவரும் உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு செல்வதற்காக நேற்று மாலை மோட்டர் சைக்கிளில் பல்லடம் அருகே உள்ள சாமி கவுண்டம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாமி கவுண்டம்பாளையம் பிரிவு ரோட்டில் செல்லும் போது, இவர்களது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென அருகில் வந்து மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று மறைந்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்து செய்வதறியாது திகைத்து நின்ற தம்பதியினர் பின்னர் இதுகுறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அந்த வாலிபர்களை தேடி வருகின்றனர். கண்காணிப்பு கேமராவில் மோட்டார் சைக்கிளில் வந்து தங்கச் சங்கிலி பறித்து சென்ற வாலிபர்களின் உருவம் பதிவாகி உள்ளது. அதன் மூலம் அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • வீட்டை பூட்டிவிட்டு அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார்
    • வீட்டின் பூட்டை உடைத்து தங்க சங்கிலியை திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மலையாளப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி ஷீலாராணி (வயது 42). கிருஷ்ணமூர்த்தி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    ஷீலாராணி சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டிவிட்டு அருகே உள்ள அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து ஷீலாராணி அளித்த புகாரின் பேரில் அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்."


    • மாவட்ட அளவில் முதலிடத்தை பிடிக்கும் மாணவ -மாணவிகளுக்கு ஒன்றரை பவுன் தங்க செயின் வழங்கப்படும்.
    • 10-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த அமிர்தவல்லி, வர்ஷினி, பரமேஸ்வரி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே அம்மையப்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதன்மைக் கல்வி அலுவலர் தியாகராஜன் தலைமை வைத்தார். தலைமை ஆசிரியர் அருளாளன் வரவேற்று பேசினார். மாணவ -மாணவிகளுக்கு, கலைவாணன் எம்.எல்.ஏ., சைக்கிள்களை வழங்கி பேசும்போது:-

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடத்தை பிடிக்கும் மாணவ -மாணவிகளுக்கு ஒன்றரை பவுன் தங்கச் செயின் வழங்கப்படும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சேகர், ஒன்றிய குழு துணைத் தலைவர் பாலச்சந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர் முருகதாஸ் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஆசிரியர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு பொது தேர்வில் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற அபிநேசா, மாலஸ்ரீ, அட்சயா ஆகியோருக்கும் 10-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த அமிர்தவல்லி, வர்ஷினி, பரமேஸ்வரி ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. முடிவில் உதவி தலைமை ஆசிரியர் ஜான்அருள் நன்றி கூறினார்.

    • பெண்ணிடம் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
    • கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு போலீஸ் சரகம் லெப்பைக்குடிகாட்டை அடுத்த சு.ஆடுதுறை கிராமத்தில் மீனவத்தெருவில் வசித்து வருபவர் பாண்டியன். இவரது மனைவி சாந்தி (வயது 48). நேற்று காலை சாந்தி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று 100 நாள் வேலை திட்டத்தில் மராமத்து பணிக்கு தேவையான உபகரணங்களை எடுத்துக் கொண்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

    அபராத ரட்சகர் கோவில் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் சாந்தியை பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள், திடீெரன சாந்தியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றனர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட சாந்தி சங்கிலியை கைகளால் பற்றிக் கொண்டதால் சங்கிலி அறுந்து 3¼ பவுன் மர்ம நபர்கள் கையில் சிக்கியது.2 பவுன் கீழே விழுந்தது. அதனை சாந்தி எடுத்துக்கொண்டார். இதற்கிடையில் சாந்தியை அந்த மர்ம நபர்கள் கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் சாந்திக்கு காயம் ஏற்பட்டது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்குபதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்தனர்
    • வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வெண்ணவால்கு டி ஊராட்சியை சேர்ந்தவர் துரை மனைவி சுதா (வயது 35) இவர் ஆலங்குடி போலீசில் புகார் கொடுத்தார். அதில், சம்பவத்தன்று வீட்டின் கதவை திறந்து வைத்து எனது கணவருடன் தூங்கிக்கொண்டிருந்தேன். அப்போது சில மர்ம நபர்கள் என் கழுதில் அணிந்திருந்த 4.5 பவுன் சங்கிலியை பறிதுது சென்றனர் என்று தெரிவித்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்கப்பட்டது.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மதுரை

    மதுரை அழகப்பன் நகர், செம்பருத்தி தெருவை சேர்ந்த பொன்னையா மனைவி ஜெயா (வயது 47). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஜெயா சம்பவத்தன்று இரவு வீட்டுக்கு நடந்து சென்றார்.

    அப்போது அவரை ஒரு மோட்டார் சைக்கிள் பின்தொடர்ந்து வந்தது. அதில் 2 பேர் இருந்தனர். ஜெயா வீட்டின் அருகே நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிள் வந்தவர்கள், ஜெயா அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    இதுதொடர்பாக ஜெயா, சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மூதாட்டியிடம் தங்க சங்கிலி திருடிய வழக்கில் 4 பெண்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஜெயங்கொண்டம் கோர்ட்டு நீதிபதி தீர்ப்பளித்தார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள ஆண்டிமடம் விளந்தை சாவடி தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி(வயது 70). இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி காலை 9 மணியளவில் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனது மகள் வீட்டில் பேரக்குழந்தைகளை பார்ப்பதற்காக ஆண்டிமடம் நான்கு ரோட்டில் டவுன் பஸ் ஒன்றில் ஏறிவந்தார். சிறிது தூரம் வந்தபின் டிக்கெட் எடுப்பதற்காக பையை திறக்க குனிந்தபோது அவரது கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்க சங்கிலி திருட்டு போயிருந்தது தெரியவந்தது. 

    உடனடியாக கண்டக்டரிடம் கூறினார். கண்டக்டர் இடையில் நிறுத்தாமல் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் உள்ள போக்குவரத்து போலீசாரிடம் தெரிவித்தார். அப்போது பஸ்சில் ஜெயலட்சுமியிடம் சந்தேகத்திற்கிடமாக இடித்து சென்ற 4 பெண்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். உடனடியாக ஒரு ஆட்டோவில் அந்த 4 பெண்களையும் ஏற்றி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணையில், அவர்கள் ஏர்வாடியை சேர்ந்த ரவி மனைவி சுப்பு(37), ராஜா மனைவிகள் ராணி(25), ரம்யா(36), சுரேஷ் மனைவி இசக்கியம்மாள்(26) ஆகியோர் என்பதும், மேலும் அவர்கள் ஜெயலட்சுமியிடம் நகையை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் தினேஷ்குமார், அறிவழகன் ஆகியோர் அவர்கள் 4 பேரையும் கைது செய்து ஜெயங்கொண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 

    இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மதிவாணன் நகையை திருடிய 4 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
    ×