என் மலர்
நீங்கள் தேடியது "Gold Chain"
- மாவட்ட அளவில் முதலிடத்தை பிடிக்கும் மாணவ -மாணவிகளுக்கு ஒன்றரை பவுன் தங்க செயின் வழங்கப்படும்.
- 10-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த அமிர்தவல்லி, வர்ஷினி, பரமேஸ்வரி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
திருவாரூர்:
திருவாரூர் அருகே அம்மையப்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதன்மைக் கல்வி அலுவலர் தியாகராஜன் தலைமை வைத்தார். தலைமை ஆசிரியர் அருளாளன் வரவேற்று பேசினார். மாணவ -மாணவிகளுக்கு, கலைவாணன் எம்.எல்.ஏ., சைக்கிள்களை வழங்கி பேசும்போது:-
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடத்தை பிடிக்கும் மாணவ -மாணவிகளுக்கு ஒன்றரை பவுன் தங்கச் செயின் வழங்கப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சேகர், ஒன்றிய குழு துணைத் தலைவர் பாலச்சந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர் முருகதாஸ் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆசிரியர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு பொது தேர்வில் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற அபிநேசா, மாலஸ்ரீ, அட்சயா ஆகியோருக்கும் 10-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த அமிர்தவல்லி, வர்ஷினி, பரமேஸ்வரி ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. முடிவில் உதவி தலைமை ஆசிரியர் ஜான்அருள் நன்றி கூறினார்.
- பெண்ணிடம் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
- கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு போலீஸ் சரகம் லெப்பைக்குடிகாட்டை அடுத்த சு.ஆடுதுறை கிராமத்தில் மீனவத்தெருவில் வசித்து வருபவர் பாண்டியன். இவரது மனைவி சாந்தி (வயது 48). நேற்று காலை சாந்தி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று 100 நாள் வேலை திட்டத்தில் மராமத்து பணிக்கு தேவையான உபகரணங்களை எடுத்துக் கொண்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
அபராத ரட்சகர் கோவில் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் சாந்தியை பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள், திடீெரன சாந்தியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றனர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட சாந்தி சங்கிலியை கைகளால் பற்றிக் கொண்டதால் சங்கிலி அறுந்து 3¼ பவுன் மர்ம நபர்கள் கையில் சிக்கியது.2 பவுன் கீழே விழுந்தது. அதனை சாந்தி எடுத்துக்கொண்டார். இதற்கிடையில் சாந்தியை அந்த மர்ம நபர்கள் கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் சாந்திக்கு காயம் ஏற்பட்டது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்குபதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்தனர்
- வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வெண்ணவால்கு டி ஊராட்சியை சேர்ந்தவர் துரை மனைவி சுதா (வயது 35) இவர் ஆலங்குடி போலீசில் புகார் கொடுத்தார். அதில், சம்பவத்தன்று வீட்டின் கதவை திறந்து வைத்து எனது கணவருடன் தூங்கிக்கொண்டிருந்தேன். அப்போது சில மர்ம நபர்கள் என் கழுதில் அணிந்திருந்த 4.5 பவுன் சங்கிலியை பறிதுது சென்றனர் என்று தெரிவித்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்கப்பட்டது.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை
மதுரை அழகப்பன் நகர், செம்பருத்தி தெருவை சேர்ந்த பொன்னையா மனைவி ஜெயா (வயது 47). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஜெயா சம்பவத்தன்று இரவு வீட்டுக்கு நடந்து சென்றார்.
அப்போது அவரை ஒரு மோட்டார் சைக்கிள் பின்தொடர்ந்து வந்தது. அதில் 2 பேர் இருந்தனர். ஜெயா வீட்டின் அருகே நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிள் வந்தவர்கள், ஜெயா அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இதுதொடர்பாக ஜெயா, சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






